கருணாநிதி என்ற மனிதர்..

எப்போதுமே முரண்பாடுகள் இன்றி வாழ்வதென்பது சாத்தியமில்லாத ஒன்று. முரண்பாடுகளின் மூட்டை தான் வாழ்க்கை. தி.மு.கழகத்துடன் எனக்கு சில இடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், பல இடங்களில் ஒத்துப்போவது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.

அதுபோலத்தான்.. அதன் தலைவர் மு.கருணாநிதி மீதும் தி.மு.கழகத்தின் மீதும் பல சமயங்களில் விமர்சனம் வைத்திருக்கிறேன். அதற்காக சில/பல நல்ல காரியங்களைச் செய்யும் போது பாராட்டாமல்  இருக்க, நான் ஒன்றும் ஜெயலலிதா அல்ல! 🙂

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நம்மில் பலரும் வாசித்திருப்போம். இன்று அவர் மிகவும் துன்பத்தில் உலன்றுகொண்டிருக்கிறார். அவரின் எழுத்துக்களை தமிழக அரசு நாட்டுடமையக்கி, அவருக்கு பரிவுத் தொகையாக ரூ. மூன்று லட்சம் கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

எனக்குத்தெரிந்து உயிரோடு இருக்கும் ஒருவரின் எழுத்துக்கள் நாட்டுடமையக்கப்படுவது இப்போது தான் என்று நினைக்கிறேன்(எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனே கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த நடவடிக்கை). உண்மையில் இச்செயல் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதால் இப்பதிவு.

அது பற்றிய அரசு செய்தி இங்கே

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் குறித்த கானா பிரபாவின் பதிவு இங்கே

This entry was posted in அனுபவம், அரசியல், தகவல்கள், வாசிப்பனுபவம், புத்தகங்கள். Bookmark the permalink.

13 Responses to கருணாநிதி என்ற மனிதர்..

 1. இப்பொழுது இந்த கட்டுரையையும் வாசிக்க வேண்டுகிறேன்

  http://www.payanangal.in/2009/02/blog-post_18.html

 2. அந்த செய்தியை மறுபடியும் வாசியுங்கள்

  இந்த ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் படைப்புகள் அரசுடைமையாக்கப்படுமென அறிவிக்கப்பட்ட 28 தமிழறிஞர்களில் எஞ்சிய 7 தமிழறிஞர்களில் கவியரசு கண்ணதாசன், டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, லட்சுமி ஆகிய 5 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதற்கு அவர்களுடைய மரபுரிமையர்கள் இசைவு அளிக்கவில்லை. ஜெ.ஆர்.ரங்கராஜூ, ஜமத்கனி ஆகிய இருவரின் மரபுரிமையர்களிடம் சான்றாவணம் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  இதில் சாண்டில்யன், லட்சுமி, மு.வ ஆகியோரின் வாரிசுகள் கடைபிடித்த வழிமுறைக்கும் பிற இருவரின் வாரிசுகள் செய்ததற்கும் வேறுபாடு தெரிகிறதா 🙂 🙂

  இதைத்தான் நான் http://www.payanangal.in/2009/02/blog-post_18.html எழுதினேன்.

 3. http://www.payanangal.in/2009/02/blog-post_18.html பதிவில் சில அறிவாளிகள் கூறியபடி அரசு நடைமுறையை மாற்றினால் ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களுக்கு இந்த தொகை அடுத்த வருடம் தான் கிடைக்கும்

  இப்பொழுது கூறுங்கள் – அரசு நடைமுறை சரியா, தவறா ??

 4. ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த குறுகிய காலத்தில் இந்த தொகை கிடைக்க காரணமான இருவரின் வாரிசுகளுக்கு மனமார்ந்த நன்றி 🙂 🙂 🙂

  (இந்த வாசகம் புரிந்தவர்கள் சிரித்து கொள்ளுங்கள். புரியாதவர்கள் http://www.payanangal.in/2009/02/blog-post_18.html மறுமுறை படியுங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் கண்களை மட்டும் திறக்காமல், மனதையும் திறந்து இந்த விஷயத்தை படியுங்கள்)

 5. கானா பிரபா says:

  ராஜம் கிருஷ்ணனின் படைப்புக்கள் நாட்டுடமை ஆக்குவது போன்ற பணிகள் தவிர்த்து அவருக்கான நல்ல புகலிடம் அமைய வழியேற்படுத்த வேண்டும். வாழும்போதே புறக்கணிக்கப்படும் எழுத்தாளர் வரிசையில் அவரும் இருக்க கூடாது.

 6. அபிஅப்பா says:

  அப்படித்தான் நைசா உள்ள வரனும் தல! மெதுவா கைதாங்கலா வாங்க! வாசல் படியில தான்ன் நிக்கிறேன். நான் தோள் கொடுத்து அழைத்து உள்ளே போகிறேன்!

 7. இது குறித்த விரிவான இடுகை : http://www.payanangal.in/2009/05/blog-post_31.html 🙂 🙂

  தல பாலாவின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன் 🙂 🙂

 8. //அபிஅப்பா
  அப்படித்தான் நைசா உள்ள வரனும் தல! மெதுவா கைதாங்கலா வாங்க! வாசல் படியில தான்ன் நிக்கிறேன். நான் தோள் கொடுத்து அழைத்து உள்ளே போகிறேன்!//

  repeateyyy

 9. //அபிஅப்பா May 31st, 2009 at 4:12 pm
  அப்படித்தான் நைசா உள்ள வரனும் தல! மெதுவா கைதாங்கலா வாங்க! வாசல் படியில தான்ன் நிக்கிறேன். நான் தோள் கொடுத்து அழைத்து உள்ளே போகிறேன்!
  //
  அப்படியே உள்ள வந்துட்டாலும் உடனடியா எம்.பி, எம்.எல்.ஏ ஆக அவரென்னா ஆண்டு ஆண்டுகாலமா கட்சிக்கு உழைச்ச ரித்தீஷா இல்ல அழகிரியா.. மிஞ்சி போனா ரெண்டு போஸ்டர் அடிக்க முடியும் இல்லாட்டி அடிச்சி காயபோட்ட‌ அழகிரின்னு குடுத்த காசுக்கு மேல கூவினு இருக்க முடியும்.. அம்முட்டு தான்..

 10. surveysan says:

  unrelated comment.

  i was vacationing in europe. While roaming in paris went to a place called la chappelle. ஈழத் தமிழர்கள் பலரும் வாழும் இடம் அது. ரெண்டு மூணு தெருமுழுக்க, தமிழில் பெயர் பலகைகள் கொண்ட பல கடைகள். ‘புத்தகக் கடை’ ஒன்றில், உங்களின், ‘அவன் – அது = அவள்’ விற்பனையில் இருந்தது.

  சந்தோஷம் தந்த விஷயம். congrats. 🙂

 11. unmaitamilan says:

  //அப்படித்தான் நைசா உள்ள வரனும் தல! மெதுவா கைதாங்கலா வாங்க! வாசல் படியில தான்ன் நிக்கிறேன். நான் தோள் கொடுத்து அழைத்து உள்ளே போகிறேன்!//

  :))

 12. tamilnathy says:

  நூலகங்களுக்குச் செல்லும்போது (சிறுவயதில்) ராஜம் கிருஷ்ணனின் பெயரைக் கண்டால் அந்தப் புத்தகத்தை எடுத்துவிட்டுத்தான் மற்றவேலை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களைத்தான் நூலகங்களி்ல் இரவல் தருவார்கள். (இது இலங்கையில்) அப்படி வாசிப்புப் பழக்கத்திற்கும் ஓரளவு எழுதக்கூடியதாக இருப்பதற்கும் உந்துதலாக இருந்த ராஜம் கிருஷ்ணன் யாருமற்றவராக முதியோர் காப்பகத்திலும் பின்னர் வைத்தியசாலையிலும் இருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது மிக மனவருத்தமாக இருந்தது. அவருக்கு இந்தப் பணம் நிச்சயமாக மிகப்பெரிய உதவியாக இருக்கும். கானா பிரபா குறிப்பிட்டிருப்பதுபோல அவருக்கு வாழ்விடம் ஒன்றையும் ஏற்படுத்தித் தருவதும் இப்போது முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.