‘தை தை’ என்று குதிக்காமல் வெளியே வரும் பூனைக்குட்டி!

இந்த ஆனந்தவிகடன் ( ஏப்ரல் 16.2008) பக்கம் 52ல் ஹாய் மதன் கேள்விபகுதி பகுதியில் இடம் பிடித்திருக்கும் கேள்வியும், அதற்கான திரு.மதன் அவர்களின் பதிலும் கீழே!

-எம்.சிவகுருநாதன், தஞ்சை.

தை முதல் நாள்தான் இனிதமிழ் வருடப் பிறப்பு என்று தமிழக அரசு சட்டம் கொண்டுவந்திருப்பது குறித்து..?
இந்த மாற்றம் குறித்துப் பல கோணங்களில் யாருமே கேள்விகள் எழுப்பவில்லை. ஆகவே, தமிழக அரசிடம் விளக்கங்கள் எதையும் கேட்க அவசியமில்லாமல் போய்விட்டது. ஏதாவது கேள்விகள் எழுப்பினால், நம்மைத் ‘தமிழினத் துரோகி’ என்று சொல்லிவிடுவார்களோ என்று எல்லோருக்குமே பயம்! அதே சமயம், ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதே அடிப்படையில் தவறு என்று வாதிப்பது சரியில்லை. காரணம், உலக ரீதியில் ‘காலண்டர்’ மாற்றப்பட்டதற்கு இணையாக எதையும் சொல்லமுடியாது. மாதங்கள் மாற்றப்பட்டன. புதிதாகச் சேர்க்கப்பட்டன. ‘செப்டம்பர்’ என்றாலே, ‘ஏழாவது’ என்று அர்த்தம். அதை ஒன்பதாவது மாதமாக மாற்றினார்கள். ‘பிப்ரவரி’யிலிருந்து இரண்டு நாட்கள் ஜூலியஸ் சீசராலும் அகஸ்டஸ் சீசராலும் திருடப்பட்டன. இவர்கள் பெயரில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் பிறந்தன. ஆங்கிலப் புத்தாண்டு ஒரு காலத்தில் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்பட்டது உங்களுக்குத் தெரியுமா? விட்டால், தமிழ் மாதங்களில் ‘கலைஞர் மாதம்’என்று கூட புதிதாக ஒன்றை இப்போது உருவாக்கிவிட முடியும். ஆகவே, இந்தப் புத்தாண்டு மாற்றம் காரணமாக ‘தை தை’ என்று குதிப்பதற்குப் பதிலாக, அதை ஒரு விடுமுறை நாளாகக் கொண்டாடிவிடுவோமாக!

——-
இது அவர் சொன்ன பதில். இதில் நான் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது..

சாரி… மிஸ்டர்.மதன்!

(தலிப்புக்கும் பதிவுக்கும் தொடர்ப்பு இல்லாமலும் போகலாம், இருக்கவும் செய்யலாம். இது உள்குத்து,வெளிகுத்து, சைடு, அப்பர்,லோயர் குத்துக்களிலும் வரலாம்.. அல்லது அபடி இருப்பதாக கற்பனையும் செய்துகொள்ளலாம்.அது உங்கள் பொறுப்பு)

This entry was posted in சமூகம்/ சலிப்பு, வாசிப்பனுபவம், புத்தகங்கள் and tagged , , . Bookmark the permalink.

14 Responses to ‘தை தை’ என்று குதிக்காமல் வெளியே வரும் பூனைக்குட்டி!

 1. //‘தை தை’ என்று குதிக்காமல் வெளியே வரும் பூனைக்குட்டி! //

  நான் ஏதாவது சொல்லப் போக எதிர்தரப்பு மட்டுமன்றி திராவிடர்கள் என்று சொல்லக்கூடிய தரப்பும் கூட லக்கிலுக்கின் சிந்தனை தட்டையான சிந்தனை என்று நிராகரித்துவிடும் வாய்ப்பிருப்பதால் இந்த திரியில் கும்மி மட்டுமே என்னால் அடிக்க முடியும். கும்மி இஸ் அலவ்டு இன் திஸ் போஸ்ட்டு?

 2. எஸ் லக்கி.. பட்.. கூரியர் மாடனிச கும்மிஸ் ஒன்லி!!!

 3. அய்யா சாமி முதல்ல alignment:justify ன்னு இருக்கிறதை எடுத்திட்டு, left ன்னு மாத்துங்க. ஃபயர் ஃபாக்ஸ்ல பார்த்தவுடனே பயந்துட்டேன். என்னடா பாலாவும் சமஸ்கிருதத்திற்கு மாறிட்டாரோன்னு?

 4. பின்நவீனத்துவ கும்மி மட்டும் தான் அலவ்டு என்றால் வெளியே மிதக்கும் அய்யாவை தான் அழைக்க வேண்டும் 🙁

 5. இது உள்குத்து பதிவில்லை கும்மாங்குத்து பதிவு. புரபசனல் குரியர் பழமைவாத கும்மி வேண்டுமா? இல்லை ST குரியர் பழமைவாத கும்மி போதுமா?

 6. senshe says:

  இப்பல்லாம் ஊர்ல இருக்கறவங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா பதிவு எப்ப எழுதறாப்பல ஐடியா :))

 7. bbc says:

  அப்போ நீங்க ஒரு சட்டம் போட்டா யாருமே எதிர்ப்போ கருத்தோ சொல்லக்கூடாது? எங்கடா குறை இருக்கும் அதை போல்டு லெட்டர்ல போட்டு பதிவு போடலாம்னு நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரியவேணாம். உருப்படியா எதாவது எழுதலாமே.

 8. Cyril Alex says:

  தேதியை மாற்றியதால் தமிழகத்தில் திராவிடர்களெல்லாம் ட்ஹலை நிமிர்ந்துவிட்டார்கள் என்கிறீர்கள்.

  நல்ல சாதனைதான். மக்கள் சந்தோஷப்பட்டட சரிதான். நாயகன் ஸ்டைல்ல… நாலுபேர் நல்லாயிருக்கிறாங்கண்ணா எதையும் செய்யலாம்..

  🙂 கலைஞர் மாதத்தை உடனே அறிமுகம் செய்வாராக. கூடவே மதன் வாரம், பாலபாரதி கிழமை, சிறில் அலெக்ஸ் மணி, லக்கிலுக் மணித்துளியெல்லாம் போட்டுவச்சா நாங்களும் சந்தோஷப்படுவோம்ல.

 9. Balaji says:

  —தலிப்புக்கும் பதிவுக்கும் தொடர்ப்பு இல்லாமலும் போகலாம், இருக்கவும் செய்யலாம். இது உள்குத்து,வெளிகுத்து, சைடு, அப்பர்,லோயர் குத்துக்களிலும் வரலாம்.. அல்லது அபடி இருப்பதாக கற்பனையும் செய்துகொள்ளலாம்.அது உங்கள் பொறுப்பு—

  தொடர்பு இருக்கா… இல்லையா? உரிமை துறப்பு என்று மாமுனி கோலத்தை கலைத்து பதில் தருவீராக 🙂

  கலைஞர், சன்… தமிழ் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் இருக்கா இல்லையா?

 10. Pingback: How to name it? - சித்திரை, தை, ஜனவரி: Happy New Year « Snap Judgment

 11. TBCD says:

  பூனை மியாவ் என்று தான் கத்தும்.

  நீங்க வேற எதையோ எதிர்பார்த்தீங்க என்பதற்காக அது மாற்றி கத்துமா.. 😛

 12. தளிர்மா துளிர்க்க முந்திடுமா?

  தையே என்று சொல்லிவிட்டால்
  —- தளிர்மா துளிர்க்க முந்திடுமோ?
  மெய்யும் குளிரும் முன்பனியை
  —- முட்டி உடைக்க இரண்டாமோ?
  வெய்யில் நாளைத் தொடங்குதற்போல்
  —- வேனில் ஆண்டைத் துவக்கிடுமே
  அய்யே என்ன அரசானை
  —- அடியேன் நைந்து நொந்தேனே!

  பார்க்க:

 13. //அப்போ நீங்க ஒரு சட்டம் போட்டா யாருமே எதிர்ப்போ கருத்தோ சொல்லக்கூடாது? எங்கடா குறை இருக்கும் அதை போல்டு லெட்டர்ல போட்டு பதிவு போடலாம்னு நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரியவேணாம். உருப்படியா எதாவது எழுதலாமே.//

  பெங்களூரு அருணு ஸ்டைலு தெரியுதே?

 14. தமிழ் குரல் says:

  சமஸ்கிருதம் கொண்ட தமிழ் புத்தாண்டு எனும் மோசடி ஒழிக்கப்பட்டது ஏன்?

  http://maalaithendral.blogspot.com/2008/04/blog-post_13.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.