தூக்கு தண்டனையை எதிர்ப்போம்! மனித நேயத்தை காப்போம்..

உலகம் முழுவதும் பல நாடுகளில் தூக்கு தண்டனை என்பது உச்சபட்ச தண்டனையாக இருந்து வருகிறது. அதே சமயம்.. தூக்கு தண்டனைக்கு எதிராக பல பகுதிகளில் இருந்தும் எதிர்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.

சமீபத்தில் பேரரிவாளன் உட்பட மூன்று பேரின் கருணை மனுவை நிகாரித்துள்ளது, ஜனாதிபதி அலுவலகம்.

ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு உதவிய காரணத்திற்காக இத்தண்டனை என்று சொல்லப்படுகின்ற போதும், இதுவரை செய்த குற்றத்தை நிறுவவில்லை அரசு. கட்டாயப்படுத்தியே.. வாக்குமூலம் பெறப்பட்டதாக வருகின்ற செய்திகளை காவல்துறையும் மறுக்க வில்லை.

ஊழல் பெருச்சாளிகளின் முகம் அம்பலப்பட்டு வரும் சமயத்தில் இப்படியான ஒரு செய்தி வெளியே வந்தால்.. ஊழல் விசயஙகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்ற காரணத்தினாலேயே காங்கிரஸ் இப்படி நடந்துகொள்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண அய்யர் அவர்களும் தொடர்ந்து, மரணதண்டனைகளுக்கு எதிராக பேசிவருகிறார் என்பதையும் நாம் நினைவில் கொள்வது நல்லது.

இப்பவும் கூட, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதி இருப்பதாக சொல்கிறார்கள். அக்கடிதத்தின் நகல் இதோ:-

மனித நேயம் மிக்கவர்களே.. ஒன்றுபடுவோம், தூக்கு தண்டனையை ஒழித்துக்கட்டுவோம்.


Comments

One response to “தூக்கு தண்டனையை எதிர்ப்போம்! மனித நேயத்தை காப்போம்..”

  1. saranya Avatar
    saranya

    Dear sir,

    Your thought is not right. Pl read today dinamalar paper headed “RAjiv kolayum solla marndha kadhayum”.

    Very nice article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *