உண்மையிலேயே விடுபட்டவை எழுதி ரொம்ப நாளாச்சு. ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமாச்சாரங்கள் எளிதில் எனக்கு பிடிபடாததால்.. கூகிள்காரன் விட்ட பஸ்ஸுலயே அதிகம் நேரத்தை ஓட்டியாச்சு. பதிவு பக்கம் வர முடியல. இனியாச்சும் இந்த பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்க்கனும். (எட்டிப்பார்த்தா மட்டும்.. படிக்க ஆளு வேணும்ல.. ஹிஹி)

செர்னோபிள் தொடங்கி ஃபுகுசிமா வரைக்கும் அணு உலைகளினால் ஏற்பட்ட ஆபத்தை பார்த்த பிறகும் இங்கே கூடங்குளத்தில் அணு உலை தொடங்கியே தீருவேன்னு மத்திய அரசு பிடிவாதம் பிடிக்கிறதும், அதற்கு ஆதரவாக பலரை களம் இறங்கி விடுவதும் ஏன் என்று தான் தெரியவில்லை. மக்களின் சந்தேகத்தை சரியான படிக்கு போக்குவதற்கு வழியைக் காணாம். அங்கே உண்டாகும் கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்று சூழலியல்வாதிகள் கேட்பதற்கும் பதில் இல்லை. இப்போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பது தான் என் ஆசை. இப்போராட்டம் ஏதோ நேற்று தொடங்கியது போல அரசு தரப்பு சித்தரிப்பது இன்னும் கொடுமையானது. அப்பகுதி மக்கள் முன்பே போராட்டாங்கள் எல்லாம் நடத்தியதாக அறிகிறேன். ஆனால் அப்போது எல்லாம் ஊடகப்பார்வை அங்கே விழாததால்.. அச்செய்தி பரவலாக அறியப்படாமல் போய் இருக்கிறது.

கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக அப்துல்கலாம் எழுதிய நீண்ட கட்டுரையை யாராவது படித்தீர்களா.. என்னால் பாதிக்கு மேலே போக முடியவில்லை. அவ்வளவு கொடுமையான நடையாக இருக்கிறது. யாராவது ஆள் வைத்து எழுதி அவர் இக்கட்டுரையை இருக்கலாமோ என்றும் தோன்றுவதை தடுக்க முடியவில்லை. அதெல்லாம் சரி.. கலாம் கூடம்குளம் அணு உலை பற்றி கருத்துச்சொன்னதும், அவரை அணுவிஞ்ஞானி என்று சில/பல ஊடகங்கள் எழுதியதும், சொல்லியதும் தான் செம காமெடி..!

//கூடங்குளம் அணுமின் நிலையதிற்கு எதிராக பேசுபவர்கள் நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்கள். அவர்கள்மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-// என்று கலாம் மிரட்டல் வேறு விடுகிறார். சும்மாவே இருந்திருக்கலாம். கனவு காணுங்கள்.. கையில பிடிங்கள்ன்னு எதையாவதை சொல்லிகிட்டு இருந்திருக்கலாம். இருந்த கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சி இருக்கும். (அப்துல் கலாம் Aerospace engineer என்று தான் விக்கி பக்கம் சொல்கிறது.)


ஆட்டிசம் (AUTISM) என்று சொல்லப்படுகின்ற தன்முனைதல் குறைபாடு உடைய குழந்தைகள் எண்ணிக்கை நம் நாட்டில் கொஞ்சம் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இதில் ஒரு வகையான PDD என்ற குறைபாடு பற்றியும் குழந்தைகள் பற்றி ஒரு நிகழ்ச்சிக்காக சமீபத்தில் குழந்தை மனநல மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொல்ல தகவல் தான் அது. மேல் நாட்டில் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் 100 குழந்தைகளில் ஒரு குழந்தை தன்முனைதல் குறைபாட்டுடன் பிறக்கின்றன. அங்கே அது பற்றிய விழிப்புணர்வு இருப்பதால்.. அக்குறைகளை எளிதாக போக்கி விடுகின்றனர். இது நோய் அல்ல. ஒரு வகை குறைபாடு தான் போதிய பயிற்சி கொடுத்தால் சரியாகிவிடும் என்கிறார். தன் முப்பது வருட சர்வீஸில் சமீபத்தில் தான் (கடந்த 8 ஆண்டுகளில்) இங்கேயும் அப்படியான குழந்தைகள் இருப்பதை கண்டுகொண்டாராம். அரசு போதிய கவனம் செலுத்தி, கணக்கெடுப்பு நடத்தி, இக்குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்புகள் அரசு மருத்துவமணைகளியே கிடைக்க வழி செய்யவேண்டும் என்றும் ஆதங்கத்துடன் சொன்னார்.


Comments

4 responses to “விடுபட்டவை 7-11-11”

  1. சொந்த ஊர்க்காரரான கலாமுடனேயே மோதத் துணிந்துவிட்ட பாலாண்ணாவுக்கு எனது வீரவணக்கங்கள் 🙂

  2. புத்திசாலிங்க எல்லாமே கொஞ்சம் தான் பேசுவாங்க. கொஞ்சூண்டு தான் எழுதுவாங்கன்னு சொல்றது உண்மையா தலைவரே?

  3. என்னது வீரவணக்கமா.. அவ்வ்வ்வ்.. லக்கி, ஏனிந்த கொல வெறி?! :))

  4. ஜோதிஜி- யாரோ கிளப்பிய வந்தியை நம்பாதீங்க. :))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *