Tag Archives: குழந்தை

தோல்வி நிலையென நினைத்தால்..

  சமீபத்தில் நீங்கள் தோல்வியடைந்தது எப்போது?! நினைவு இருக்கிறதா? இந்தத் தோல்வி என்பது சின்னதாகக்கூட இருக்கலாம். பேருந்தை பிடிக்க முயன்று, முடியாமல் போனது, அலுவல் பணியைத் திட்டமிட்டபடி முடிக்காமல், மேலதிகாரியிடம் டின் வாங்கிக்கொண்டது இப்படி எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால்.. புலப்படும். அப்படியே நமது கடந்த காலத்திற்குப் பயணமாகி சந்தித்த தோல்விகளைச் சிந்தித்துப்பாருங்கள். வரிசையாக அவை … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , , , , , , , , , , , | 1 Comment

ஆட்டிசம் என்னும் பளிங்கு அறை

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அதில் ஒரு காட்சி.. மணிமேகலையை அடையும் எண்ணத்துடன் சோழ இளவரசன் துரத்தி வருகிறான். அவனிடமிருந்து தப்ப பூஞ்சோலையில் இருந்த ஒரு பளிங்கு மண்டபத்தில் ஒளிந்துகொள்கிறாள் மணிமேகலை. அந்தப் பளிங்கு அறை தனக்குள்ளே இருப்பவர்களை மறைத்து, அவர்களை வெவ்வேறுவிதமான ஓவியங்களாக வெளியே காட்டுமாம். அந்த ஓவியங்களைப் பார்த்து மனம் மாறி இளவரசன் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் – 2015

*எதற்காக இந்த ஒன்றுகூடல்?* இன்றைய பரபரப்பு மிக்க வாழ்க்கையில் எல்லோருக்குமே மன அழுத்தங்கள் அதிகம். அதிலும் சிறப்புக்குழந்தையின் பெற்றோருக்கு இன்னும் அதிகம். இதுமாதிரியான ஒன்றுகூடல் வழி, மற்ற பல பெற்றோரின் அறிமுகமும், வழிகாட்டுதலும் குழந்தை பற்றிய அச்சத்தை போக்க உதவக்கூடும் என்பதால் இது அவசியப்படுகிறது.  தொடர்ச்சியான இவ்வகை சந்திப்புகளின் மூலம் எதிர்காலத்தில் பெற்றோருக்கான அமைப்பு ஒன்றையும் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், விளம்பரம் | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

கிட்டப்பார்வைக்கு என்ன லென்ஸ்?

ஞாபக மறதி என்பது, எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான். அதனால் உங்கள் வீட்டுப்பிள்ளையும் அப்படி இருந்தால், பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. சிறுவயது விஷயங்களைப் படம்பிடித்தாற்போல நினைவுபடுத்திச் சொல்லி அசத்துபவர்களை, தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம். ஆனால் நேற்று நிகழ்ந்த ஒரு சம்பவத்தை, சிலருக்கு நினைவுபடுத்தினாலும்கூட ஞாபகம் வராது. ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது போலவே நினைவாற்றலைப் பெருக்கிக்கொள்ள, … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , , , , | 2 Comments

அட்வைஸ் பண்ணி அறுக்காதீங்க..!

  இன்றைய தேதியில் குழந்தைகளை வைத்துப் பட்டிமன்றம் நடத்தினால், அதற்கு அவர்கள் தேர்வு செய்யும் பொருத்தமான தலைப்பு என்னவாக இருக்கும் தெரியுமா? ‘அதிகமாக அட்வைஸ் பண்ணுவது அம்மாவா அப்பாவா?’ என்பதைத்தான் தேர்வு செய்வார்கள். அந்த அளவுக்கு அட்வைஸ் என்ற குளம் வெட்டி, குழந்தைகளை அதில் அமிழ்த்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம். அறிவுரைகளினாலேயே பல வீடுகளில் பிள்ளைகளின் பார்வைக்குப் … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , , , , , | Leave a comment