Tag: குழந்தை வளர்ப்பு and tagged Autisam

  • படுக்கையை நனைத்தல் குற்றமல்ல!

    இன்று அனேக வீடுகளில் பெற்றோர் சந்திக்கும் சங்கடங்களில் ஒன்று, படுக்கையில் குழந்தை சிறுநீர் கழித்தல். இதைச் செய்யும் குழந்தையிடம் பல பெற்றோர் நடந்துகொள்ளும் விதம், கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கிறது. ஆனால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதென்பது, குழந்தைப் பருவத்தில் பல குழந்தைகள் செய்யும் காரியம்தான். இது இயல்பான ஒன்றுதான்! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், உறங்கச் செல்லும்போதே, இன்று படுக்கையை நனைத்துவிட்டுத்தான் மறு வேலை என்று எந்தக் குழந்தையும் முடிவு கட்டிக்கொண்டு வருவதில்லை. படுக்கையை ஈரமாக்கும் குழந்தைக்கு, ஒருவித குற்ற…

  • பாலா ஹாப்பி அண்ணாச்சி..

    ஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்.. ஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். ஆனால் அவர்கள் பகிரத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் இங்கே விஷயம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த பல பெற்றோரிடமும் சலிக்காமல் இந்த என் எண்ணத்தை வெளிப்படுத்தி…

  • 19. ஆட்டிசம்- சில பத்திய உணவுகள்

    ஆட்டிசம் தொடர்பான முந்தைய கட்டுரைகளில் ஒன்றில் இக்குழந்தைகளுக்கான பத்தியமும் ஒவ்வாமையும் பற்றி எழுதியிருந்தேன். இவர்களுக்கு முக்கியமான பலன் அளிக்கக் கூடிய சில உணவு வகைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். இக்குழந்தைகளின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று அதீத துறுதுறுப்பு (Hyper Activity). ஆட்டிசக் குழந்தைகள் மட்டுமல்ல இன்றைய குழந்தைகளில் பெரும்பாலானோர் இப்பிரச்சனை உடையவர்களாகவே இருக்கிறார்கள். ஹைப்பரைக் குறைப்பதில் சிவப்பு அரிசி முக்கியப் பங்கு வகிப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். முழுமுற்றாக சிவப்பரிசி உணவுக்கு மாறிய பின் ஹைப்பர் குறைவதை கண்…