Tag Archives: சிறார் இலக்கியம்

தாத்தா பயந்த கதை

தாத்தா பயந்த கதை கோடை விடுமுறையில் கிராமத்திற்கு வந்திருந்தான் ஆதவன். அவன் தாத்தாவும், அம்மாச்சியும் மற்ற கிராம மக்கள் போலவே விவசாயம் செய்துவந்தனர். பகலில் வயலுக்குச்செல்லும்போது ஆதவனையும் உடன் அழைத்துச்செல்வர். மாலையில் வீடு திரும்பியதும், முன் வாசல் பக்கம் அமர்ந்துகொண்டு, தினம் தினம் கதை கேட்பது இவனின் வழக்கம். அம்மாச்சி ரத்தினமோ, தாத்தா மாரிமுத்துவோ இருவரில் … Continue reading

Posted in சிறுகதை, சிறுவர் இலக்கியம் | Tagged , | Leave a comment

சிறார் இலக்கியம் செழிக்க முற்போக்காளர்களின் பங்கு!

என்னுடைய பால்யத்தை வண்ணமிக்கதாக மாற்றியவர்கள் அப்போதைய சிறார் எழுத்தாளர்கள்தான். திக்குவாய் குறைபாடும், கற்றல்குறைபாடும் சேர்ந்து இருந்த ஒரு மாணவன் நான். இக்குறைபாடுகளினால் பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் எப்படி எல்லாம் ஆட்பட்டுப் போயிருப்பேன் என்பதை இதனை வாசிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். பிறரின் கேலிக்கு ஆட்படும்போதெல்லாம் உள்ளுக்குள் உடைந்து அழுவேன். இதன் காரணமாகவே தனித்து இருக்கத் தொடங்கினேன். அந்த … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சிறுவர் இலக்கியம் | Tagged , , , , , , , | Leave a comment

ஆமை காட்டிய அற்புத உலகம் 3ஆம் பதிப்பு

இது சிறுவர் இலக்கியத்தில் எனது முதல் நூல். 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்பதிப்பு வெளியானது. அப்போதே பரவலான கவனத்தை இந்த நூல் பெற்றது என்றுதான் சொல்லவேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் மட்டுமல்லாது பல சிறுவர்களும் வாசித்து மகிழ்ந்த நூல் இது. வெளியான காலத்தில் அதுவரை வெளிவந்துகொண்டிருந்த சிறார் நூல்களில் இருந்து இது வேறு ஒரு புதிய … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , , , , | Leave a comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு -பாலசாகித்ய புரஸ்கார்

மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நான் எழுதிய சிறுவர் நாவல். 2018ஆம் ஆண்டு வெளியானது. குழந்தைகளின் மீது நிகழ்த்தபப்டும் பாலியல் அத்துமீறலை எதிர்த்து குரல்கொடுக்க, பிள்ளைகளை ஊக்கப்படுத்தும் கதைக்களம். பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டுக்குச் செல்லும் ஷாலினி என்னும் சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. அந்த பொம்மை உயிர்பெற்று ஷாலினியோடு பேசுகிறது. அவளின் தோழி … Continue reading

Posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து, விடுபட்டவை | Tagged , , , , , | 1 Comment

பூமிக்கு அடியில் ஒரு மர்மம் – சிறார் நாவலுக்கான முன்னுரை.

புதியகதையுடன் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி! இக்கதையின் களம் நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் நடைபெறுகிறது. சிலஇடங்கள் நிஜத்தில் உள்ளவை. மற்றவை வழக்கம்போலக் கற்பனையானவை. இதுவொரு சாகச, த்ரில்லர், சஸ்பென்ஸ் வகைக்கதை. எனது முந்தைய கதைகளைப் போலவே இதுவும் பதின்பருவத்தினருக்கான கதைதான். இதில்சில நண்பர்கள் சேர்ந்து, ஒரு சுரங்கத்தைக் கண்டறிகின்றனர். அதன் உள்ளே இருப்பதை … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம், புனைவு | Tagged , , | Leave a comment