Tag: புத்தக வாசிப்பு

  • எழுத்துக்கு கிடைக்கும் மரியாதை எழுதியவரின் பெயருக்கானது

    கவிதையின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது நண்பர்களால் தான். சிறுவயதிலேயே காமிக்ஸ், அம்புலிமாமா போன்ற கதை புத்தகங்கள் படிக்க தொடங்கி விட்டாலும்,எட்டாவது படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினர் ஆனேன். அங்கும் வாண்டுமாமா, à®…à®´.வள்ளியப்பா, போன்ற எழுத்தாளர்களின் கதைத்தான் படித்து வந்தேன். அப்புறம், மாத நாவல்களின் அறிமுகம் ஏற்பட்டது.  கவிதையின் அறிமுகம் மட்டும் கொஞ்சம் தாமதமாகத்தான் தொடங்கியது. எட்டுக்கும் மேற்பட்ட நண்பர்கள் குழாம் அரட்டையில் ஈடுபடும்போது, எங்களின் பேச்சில் அனேகமாக இலக்கியமும், அரசியலுமே மையமாக இருக்கும். கம்பனிடம் ஒரு கேள்வி…

  • பெரியாருடன் ஒரு பயணம்

    பெரியார் தனது சிந்தனைகளை பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார். பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும்…

  • சீவக சிந்தாமணி- நாவல்- வாசிப்பனுபவம்

    எத்தனையோ புத்தகங்கள் படித்திருப்போம். சினிமாக்கள் பார்த்திருப்போம். சிலருக்கு மன்னர் கால கதைகள் என்றால் கொள்ளைப் பிரியமாய் இருக்கும். அதிலும் திருப்பங்கள் நிறைந்து, சஸ்பென்ஸ் வேறு இருந்துவிட்டால்.. கேட்கவே வேண்டாம். இன்றும் கூட பொன்னியின் செல்வன் சக்கை போடு போடுவதற்காக அடிப்படையே நமக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கதைக்கான ஏக்கங்களின் வெளிப்பாடு என்று தான் நான் கூறுவேன். புகைப்படங்களே இல்லாத அந்த பழங்காலத்திற்கு நாம் செல்ல முடியாத ஏக்கம் ஒரு புறம் என்றால்.. பண்டைய மக்களின் வாழ்க்கை எப்படி…

  • விடுபட்டவை 28.மே.2008

    சென்னையில் ஆர். எஸ்.எஸ் அலுவலகத்தின் குண்டு வைத்து பலியான தீவைரவாதி ஒருவனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தும் அடையாளம் தெரியாததால்.. அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக 28மே 2008 ம் தேதி தினத்தந்தி 11ம் பக்கத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது. அதே தேதியில் வந்திருக்கும் தினகரன் 5ம் பக்கத்தில் அடையாளம் தெரிந்ததால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதே போல.. கால்டாக்ஸி டிரைவர் தனசேகர் என்பவனி காவல்துறை கது செய்திருக்கிறது. அவன்…