Tag Archives: மும்பை

தெரிந்ததும்.. தெரியாததும்- தாராவி

தாராவி குடிசைப்பகுதியா? மும்பையில் இருந்த சமயங்களில் என்னை அதிகம் கவர்ந்த பகுதிகளில் தாராவியும் ஒன்று. எங்கு பார்த்தாலும் தமிழில் சாயல் முகங்கள்.. வேட்டி, சேலைகளில் மனிதர்கள், மனுசிகள்.., சத்தமாக தேனீர்கடையில் கேட்கும் தமிழ் பாடல்கள், தமிழில் பெரிய பெரிய விளம்பரப் பலகைகள்.. என்று எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டின் ஏதோவோரு நகரத்தை.. பார்ப்பவரின் பார்வைக்கேற்ப காட்டும் பகுதி … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, சமூகம்/ சலிப்பு | Tagged , , | 1 Comment

நகரம் (சிறுகதை)

’எலேய்.. எந்தி நாஷ்டா வேண்டாமா?’ சத்தம் போட்டபடி உலுப்பிய அண்ணாச்சியை கண்ணைத் திறந்து பார்த்தான். கண்கள் திறக்க முடியாமல் எரிச்சலைத் தந்தது. கண்களை கசக்கி விட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான். அண்ணாச்சி குளித்து, முடித்து பளிச்சென்று இருந்தார். கடைக்குப் போகும் முன் இங்கே வந்து எட்டிப் பார்த்துவிட்டு போவது அவரது வழக்கம். அப்படி வந்தவர், தூங்கிகொண்டிருந்தவனை … Continue reading

Posted in சிறுகதை, புனைவு | Tagged , , , , , | 3 Comments

எழுத்துக்கு கிடைக்கும் மரியாதை எழுதியவரின் பெயருக்கானது

கவிதையின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது நண்பர்களால் தான். சிறுவயதிலேயே காமிக்ஸ், அம்புலிமாமா போன்ற கதை புத்தகங்கள் படிக்க தொடங்கி விட்டாலும்,எட்டாவது படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினர் ஆனேன். அங்கும் வாண்டுமாமா, அழ.வள்ளியப்பா, போன்ற எழுத்தாளர்களின் கதைத்தான் படித்து வந்தேன். அப்புறம், மாத நாவல்களின் அறிமுகம் ஏற்பட்டது.  கவிதையின் அறிமுகம் மட்டும் கொஞ்சம் தாமதமாகத்தான் தொடங்கியது. எட்டுக்கும் … Continue reading

Posted in அனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம் | Tagged , , , , , , | 10 Comments

கவாலி பாடல்

மும்பையில் வாழ்ந்த காலங்களில் அதிக நேரத்தை விழுங்கியது, மின் தொடர் வண்டி பயணங்கள் தான். வீட்டில் உறங்கிய பொழுதுகளை விட மின் தொடர் வண்டியில் உறங்கிய நாட்கள் அதிகமாக இருக்கும். அப்படி ஒரு பயணத்தின் போது, முதல்முதலில் கவாலி பாடல் ஒன்றை கேட்டேன். ”நிலவைத்தொடும் மனிதா- கேள் மரத்தின் விந்தையை” என்று தொடங்கும் அந்த பாடல் … Continue reading

Posted in அனுபவம், இசை, வீடியோ | Tagged , , , , , | Leave a comment

கடந்து போதல்.. (சிறுகதை)

பயங்கரமான அந்த அலறலில் உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தேன். எனக்கு முன்னமே கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள் ரேவதி. எத்தனையாவது அலறலில் உறக்கம் கலைந்தது என்பது தெரியாது. ஆனால் ரேவதி முதல் சத்தத்திலேயே எழுந்திருக்க வேண்டும். படுக்கையில் விழுந்த பின் இடையில் நான் எழுவதென்பது நடக்காத காரியம். அவளோ எனக்கு நேரெதிர் இரண்டு முறையாவது எழுந்து விடுவாள். … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | 1 Comment