Tag Archives: speech therapy

மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரின் சுயமரியாதை

  அரங்கில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுசார் பலவீனங்கள்(Intellectual Impairment) எனும் குடையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. பொதுவாக சமூகம் “லூசு” என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடும் இந்தப் பட்டியலில் இருக்கும் எண்ணற்ற குறைபாடுகளைப் பற்றி இங்குள்ள நண்பர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கற்றல் குறைபாடு, ஆட்டிசம், … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, அரசியல், கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , | 1 Comment

திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்!

திக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் பள்ளி, தெரு எல்லா இடங்களிலும் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள் பெற்றோர். பதிநான்கு தையல் போட்டு விட்டு, ”பையனுக்கு இனி … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , , , , | 1 Comment

ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் – 2015

*எதற்காக இந்த ஒன்றுகூடல்?* இன்றைய பரபரப்பு மிக்க வாழ்க்கையில் எல்லோருக்குமே மன அழுத்தங்கள் அதிகம். அதிலும் சிறப்புக்குழந்தையின் பெற்றோருக்கு இன்னும் அதிகம். இதுமாதிரியான ஒன்றுகூடல் வழி, மற்ற பல பெற்றோரின் அறிமுகமும், வழிகாட்டுதலும் குழந்தை பற்றிய அச்சத்தை போக்க உதவக்கூடும் என்பதால் இது அவசியப்படுகிறது.  தொடர்ச்சியான இவ்வகை சந்திப்புகளின் மூலம் எதிர்காலத்தில் பெற்றோருக்கான அமைப்பு ஒன்றையும் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், விளம்பரம் | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

நேரம் எங்கே இருக்கு?

  கட்டுரையின் தலைப்பை வார்த்தைகளாக அடிக்கடி (அல்லது எப்போதாவது) உபயோகிப்பவரா நீங்கள்? அல்லது எப்பவுமே சொல்வதில்லை என்பவரா? எந்தப் பிரிவினராக இருந்தாலும் இக்கட்டுரை நிச்சயம் உங்களுக்கு உதவலாம் அல்லது உங்களின் நண்பர்களுக்கு உதவலாம். இன்றைய பொருள் தேடும் அவசர உலகில், நம்மில் பலரும் இல்லத்தில் நேரம் செலவழிப்பதில்லை. அதிலும் இரு பாலருமே ஓடிக் கொண்டிருக்கிறோம். நமது … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , , , , | 2 Comments

ஆட்டிசம் – பெற்றோர்களுக்கான 10 யோசனைகள்

உண்மையை ஒப்புக் கொள்ளுவோம் அனேக பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்று தெரிந்தும், அப்படியெல்லாம் இல்லை. என் பிள்ளைக்கு வெறும் ஹைப்பர்தான், லேர்னிங் டிசபிலிட்டி மட்டுந்தான் என்றெல்லாம் பிறரிடமும், தம் மனதுக்குமே கூட நிறுவ முயற்சிப்பது வேண்டாம். உரக்கச் சொல்வோம் நாமே முன்வந்து பிள்ளையின் குறைபாட்டை வெளிப்படையாக பேசுவது நல்லது. அக்கம் பக்கத்தவர் தொடங்கி, ரயில் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம் | Tagged , , , , , , , , , , , , , , , | 9 Comments