About

முக்கிய அறிவிப்பு:- ”இங்கு எழுதப்படுபவை அனைத்தும் என் சொந்த கருத்துக்களே.. இங்கு எழுதப்படுபவைகளுக்கும் நான் பணியாற்றும் இடத்திற்கும் யாதொரு தொடர்புமில்லை. தொடர்பு படுத்தி பார்க்கவும் முடியாது”

இனி.. என்னைப்பற்றி…

“கவிதை எழுதுவதிலுள்ள கவுரவம்
நிலத்தை உழுவதிலும் இருக்கிறது என்பதை
உணர்ந்து கொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது” என்று சொன்ன புக்கார் வாஷிங்டன் கருத்தோடு ஒத்துப் போகிற ஆசாமி நான்.

ஈ.வே.ராமசாமி என்ற மனிதரைப் பற்றி.. வியந்து கொண்டே இருக்கும் சராசரி நான்.

அதன்படியே வாழ்வையும் அமைத்துக்கொள்ள முனைந்து வருகிறேன்.
படிப்பது மிகவும் பிடித்த காரியங்களில் ஒன்று. அதை விட பேசுவது மிகவும் பிடிக்கும். எழுத்தை நேசிக்கத் தெரிந்த அளவுக்கு எழுதத்தெரியாதவன் எழுத்து ஏழை.

ஒவ்வொருவருக்கும் தன் எதிர்காலம் குறித்த கனவுகள் இருக்கும். ஆனால் எனக்கு அப்படி சொல்லிக்கொள்ளும் படி ஏதும் இல்லை. மரணம் என்னை நெருங்கும் வரை எம்மக்களின் சுயத்தினை அவர்களுக்கு அடையாளம் காட்டுவது தவிர.. வேறெந்த ஆசைகளும் கிடையாது.

ஒவ்வொரு மனிதனும் வாழ் நாளில் தான் வாழும் சமூகத்தில், தன்னோடு வாழும் மக்களுக்காக “ஏதாவது” செய்து விட்டுப் போகவேண்டுமென்பது அடியேனின் ஆசை. அதற்கான முயற்சிகளில் இருப்பவன்.

பெரும் பாறாங்கல்லை புரட்ட நெம்புகோல் அவசியம்… அந்த நெம்புகோலுக்கு கீழ் வைக்கும் சிறு அடைப்புக் கல்லாகவாவது என்னால் சமூக மாற்றத்தில் பங்கு பெற வேண்டிமென்பது என் ஆசை!

பெருசா சொல்லிக்கொள்ளும் படி ஒன்னுமில்லைனாலும்..,

தகவலுக்காக:- கடல் சூழ்ந்த ராமேஸ்வரம் எனது சொந்த மண்.

தற்போது சென்னை வாசி. ஊடகவியலாளனாக பணியாற்றி வருகிறேன்.

இது தவிர சொல்லிக்கொள்ளும் படி பெரிய ஆள் கிடையாதுங்க!

வலைப்பதிவுகளை பாருங்க.. என் ஜாதகமே தெரியுமுங்க!!

பேச: +91-9940203132 (காலை 9 மணி முதல் 12மணிவரை இரவு 8மணி முதல் 09மணி வரை)

மின்னஞ்சல்:- yesbalabharathi AT gmail DOT com



—–

என்னை பற்றி அண்ணன் மா.சிவக்குமார்

http://masivakumar.blogspot.com/2009/01/blog-post_06.html

சிந்தாநதி எடுத்த பேட்டி..

http://valaimozhi.blogspirit.com/archive/2007/03/21/bala.html

Popularity: 4% [?]

Comments are closed.

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly