♗யெஸ்.பாலபாரதி ♗ on October 9th, 2008

பார்வைகள்
கத்தியின் பிடிகளை
ஆராய்கிறாய் நீ
அது
பட்டுப்போய்
வந்திருக்குமா
பச்சையாய்
வந்திருக்குமாவென
யோசிக்கிறதென் மனம்.
~~~~
இருப்பு
மடக்கிய குடையுடன்
பேசியபடியடைந்தோம்
மரத்தடியை
மழை
இப்போது தூறலாய்.
~~~
அடையாளம்
தூசுகளால் நிறைந்த
கண்ணாடி கதவில்
பெயரெழுதிச் செல்கிறது
கோடைச்சாரல்.
~~~
இலக்கு
உனக்கும் எனக்குமான
பாதை ஒன்றுதான்
ஆனால்
எதிரெதிர் திசைகளில்
போய்க்கொண்டிருக்கிறோம்
நான் வாருவதற்குள்ளாக நீயும்
நீ வருவதற்குள்ளாக நானுமென
என்றாவதொரு நாள்
நேரெதிராய் சந்திக்க
நேரும் போது
ஒரே திசையை நோக்கியிருக்கும்
நம் பயணம்.
~~~
சொற்களற்ற சூன்யவெளியில்..
ஒருபோதும் சோர்ந்து போனதில்லை
மனிதர்களிடம் பேசும் பொழுதுகளில்
சோகங்கள்
துரோகங்கள்
வருத்தம்
மகிழ்ச்சி
என எதுபற்றியேனும்
பேசிக்கொள்ள நேர்ந்திருக்கிறது
பல சமயங்களில்
முன் சிரித்து
பின் கூறு போடுபவர்கள்
இருக்கின்ற போதிலும்
இவர்களை ஒதுக்கிவிட
தோன்றியதில்லை
பூனை,நாய்,கிளி
ஏன் கடவுள்களே கூட
பதில் பேசாமலிருக்கையில்
ஏதாவது பேசும்
மனிதர்களை புறந்தள்ள முடிவதில்லை.
~~~
ங்கொய்யால…
கூட்டம் போடு
பழந்தமிழ்
இலக்கியங்களில்
புளங்காகிதமடை
கூட்டத்தில் கலகம் செய்
குழுசேர்ந்து
குசுகுசுத்துக்கொள்
புலியை விரட்டிய
மறத்தியின்
பால் குடித்தவனென
மார் தட்டிக்கொள்
யதார்த்தம்
மாயா- யதார்த்தம்
நவீனம்
பின்-நவீனம்
அரசியல் பேசு
அலோவென
கை குலுக்கிக்கொள்
எழுது
பிரதி அழி
நாவறளப்பேசு
கொன்றுகுவி
அடையாளம்
தொலைத்ததறியாமல்
கூச்சலிடு
தமிழனென்று
குப்பிகளுடைய
கோப்பையை காலி செய்
மசுரு
சோற்றுக்கு
வழியில்லாமல்
சாகிறான் விவசாயி.
~~~
சிரங்குகள்
உடலெங்கும் சிரங்குகள்
அவ்வப்போது
சொறிந்து [...]

Continue reading about இதெல்லாம் கொஞ்சம் பழசு..

♗யெஸ்.பாலபாரதி ♗ on May 21st, 2008

படம் நன்றி :- நண்பர் இளவஞ்சி
இங்கேயும் போகலாம்..
நீ நான் மற்றும் வெட்கம்
நீ நான் மற்றும் முத்தம்
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Continue reading about நீ நான் மற்றும் கடவுள்

♗யெஸ்.பாலபாரதி ♗ on May 16th, 2008

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Continue reading about நீ நான் மற்றும்…