June 10th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

தசாவதாரம் படம் வரும் ஜூன் 13ல் ரிலீஸ் ஆகிறது. 8ம் தேதி அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமானது. என் நண்பர் ஒருவர், நல்ல தியேட்டரில்.. டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்து அதிகாலையிலையே அலாரம் வைத்து எழுந்து சத்யம் வலைப்பத்திற்குள் போக முயன்றால்.. போக முடியவில்லை. சி-பானல் பாஸ்வேர்ட்& யூசர் நேம் கேட்டிருக்கிரது தளம். சரி.. ஏதோ வேலை நடக்கிறது என்று நினைத்த நண்பர் கொஞ்ச நேரம் கழித்து போகலாம் என்று திரும்பி வந்துவிட்டார்.

சிறிது நேரம் கழ்ழித்து போய் பார்த்து இருக்கிறார். அப்போதும் சைட்டில் வேலை நடப்பதாக தளம் காட்ட.. குழம்பிய நண்பர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டார். அதன் வரிசை கீழே..!

 

படத்தின் வலது மூலையில் நேரத்தை நீங்கள் பார்க்கலாம்..

 
 

 

இதிலும் நேரத்தை பார்த்துக்கொள்ளுங்கள்!

என்ன நேரத்தைப் பார்த்து என்ன செய்யுறது.. யாருமே நுழைய முடியாமல் இருந்த தளம் திறக்கப்பட்ட போது.. எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து.. ஹவுஸ் புல் போர்ட் போட்டிருக்கிரார்கள். வெறுத்துப் போய்.. தியேட்டர்காரர்களிடம் பேசி இருக்கிறார் நண்பர். சரியான பதில் கிடைக்க வில்லை. சரி.. தியேட்டரில் போய் விசாரிக்கலாம் என்று போனால்.. அங்கே முதல் நாள் காட்சியின் டிக்கெட் ப்ளாக்கில் விற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள். விலை. ரூ 350/-.

இது பற்றி நண்பர்கள் சிலருடம் பேசிய போது எல்லோரும் கார்ப்பரேட் புக்கிங்காக இருக்கலாம் என்றார்கள். ஆனால்.. அப்படி என்றால்.. ப்ளாகில் எப்படி கிடைக்கிறது. கார்ப்பரேட் புக்கிங் எனில் “இத்தனை நாட்களுக்கு கார்ப்பரேட் புக்கிங்” என்று அதை தளத்தில் எழுதி வைப்பதில் என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது.

கவுண்டர் சேல்ஸும் கிடையாது, ஆன் லைன் சேல்ஸும் கிடையாது.. ஆனால்.. ப்ளாக்கில் கிடைகிறது.. இது எப்படி சாத்தியம்..?? தியேட்டருக்கு தெரியாமல் நடக்குமா? பிரபலமான தியேட்டரே இப்படியான கள்ள சந்தையை உருவாக்குகிறார்களோ..என்றும் சந்தேகிக்கிறார் நண்பர். இரண்டு முறை மெயிலும் அனுப்பி வைத்திருக்கிறார். தியேட்டர் நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறதோ?!

June 16th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

ரஜினி தலையில் கிழிக்கப்பட்ட டிக்கேட்

பொதுவாகவே ரஜினி படங்களில் லாஜிக் பார்ப்பது கிடையாது. கொடுக்கும் காசுக்கு விறுவிறுப்பான ஒரு தமிழ்படம் பார்க்க முடியும். அதுவும் சில வித்தியாசமான மேனரிசங்களை ரசிக்க முடியும் அவ்வளவு தான். சிவாஜி படத்தின் கதையை பலரும் இங்கு அலசி காயப்போட்டு விட்டதால்.. அது பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.
படத்தில் எனக்கு ஒவ்வாத காட்சிகளைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

* தமிழ்ச்செல்வி என்று நாமகரம் சூட்டப்பெற்ற நாயகி ஸ்ரேயா எல்லா பாடல்காட்சிகளிலும் மேலாடையின்றி, பாலிவுட் நடிகை மல்லிகாஷெராவத்தை நினைவு படுத்தியபடியே இருந்தார். ஏண்டாப்பா… கோடிகளில் எடுத்ததாக சொல்லிக்கிறாங்களே.. ஸ்ரேயாவுக்கு ஒரு துப்பட்டாவுக்கு கொஞ்சம் சேர்த்து பட்ஜெட் ஒதுக்கக்கூடாதே!

* பழைய படங்களில் வரும் பாடல் காட்சிகளில் ஆடும் நாயகன் காலில் செருப்பு அணிந்திருக்க, நாயகி வெற்றுக்காலுடன் ஆடுவார். அதே போல முதல் பாடலில் நடிகை நயந்தாரா வெற்றுக்காலுடன் ஆடி இருக்கிறார். (ஸ்டார் போட்ட முதல் பாராவில் இருக்கும் கடைசி வரிகளை கொஞ்சம் மாற்றி வாசித்துக்கொள்ளவும்.. ரிபீட்டே)

*அங்கவை-சங்கவை என்று இரண்டு பெண்பாத்திரங்கள். இவர்கள் படத்தின் படி சாலமன் பாப்பையாவின் வாரிசுகள். முகத்தில் கருப்பு சாயம் அடிக்கப்பட்டு.. நகைச்சுவை என்ற பெயரில் ஷங்கர் செய்திருக்கும் வேலையை ரசிக்க முடியவில்லை. கருப்பு நடிகருக்கு சிகப்புச்சாயம் பூசி அழகு பார்த்த ஷங்கரின் அழுக்கு மனம் இங்கேயும் வெளிப்பட்டது.

* கதை நாயகன் கருப்பு ரஜினி கொள்ளை அடித்த வில்லன்களின் கருப்பு பணத்தை வெளுப்பாக்க, இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த மக்களை காட்டி தன் அழுக்கு மனதின் மதவெறியையும் காட்டி விட்டார்கள் படக்குழுவினர். நம் நாட்டைப் பொருத்த அளவில் ஹவாலா மாதிரியான காரியங்களில் அதிக அளவில் ஈடுபட்டு வருவது மார்வாடிகள். அதற்கு பின் குஜராத்திகள், ஜெயின் ஷாக்கள். (இஸ்லாமியர்களின் பங்கு இவர்களை விட குறைவே!)

* பல ஆண்டுகாலமாக பாலியல் உரிமை மறுக்கப்பட்டு வந்த ஒரு சமூகம் இப்போது தான் கொஞ்சமேனும் தன் உரிமைகளை மீட்டு எடுத்து வருகிறது. திருநங்கைகள் தொடர்ச்சியாக திரைப்படங்களில் கொச்சை படுத்தப்பட்டு வருகிறார்கள். அதற்கு எதிராக சில குரல்களே ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த படத்திலும் கூட..,

ரஜினி வெளிநாட்டில் இருந்து வந்த பின் அவருக்கென பெண்களை கேட்வாக் நடத்தி அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பார் விவேக். அப்போது ஒரு பெண்ணை பார்த்து, ‘ஹாய் முன்ஸ்’ என்று அழைப்பார் விவேக். ‘என்னது முன்ஸா..?’ என்று ரஜினி கேட்க, ‘ஆமா.. இவன் முனுசாமி, நம்ம பையன் தான். போன வாரம் தான் அப்ரேசன் செய்துகிட்டான்.’ என்று ஆப்ரேசன் செய்துகொண்ட ஒருவரை ஆண் விகுதியிலேயே அழைப்பார்.

அட! நாதாரிகளா… ஒங்களுக்கு எத்தன தடவை சொன்னாலும் ஏண்டா புரிய மாட்டேங்குது. எப்போதுமே சிறுபான்மையினரையும், விளிம்புநிலை மக்களையும் ஏண்டா இப்படியே காட்டுறீங்க.. நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீங்க!? த்துத்தெரி!!!!