Apr
08
“என்னங்க, சொன்னது ஞாபகம் இருக்கா?”
தூங்கிக் கொண்டிருந்த தன் மூன்று வயது மகளுக்கு முத்தம் கொடுத்து விட்டு, சட்டை பட்டனை மாட்டிக்கொண்டிருந்த பன்னீர் “ம்”மென்று புரியாதவனைப் போல சரஸ்வதியை பார்த்தான். “உங்களுக்குன்னு எங்கன இருந்துதா இப்படி மறதி வருதோ” என ஆரம்பித்தவளை “விசயத்தை சொல்லுறியா” என இடைமறித்தான்.
“க்கூம், இதுக்கொன்னும் குறச்சலில்ல. ஊர்லேர்ந்து தம்பி ராத்திரிக்கு வந்துரும். அதுக்கு மட்டன் எடுத்துப் போட வேண்டாமா? சேட்டுகிட்ட சொல்லி ‘கர்ச்சா’ வாங்கி வாங்க. முடிஞ்சா நாளைக்கு ‘ச்சுட்டி’யும் கேட்டுப் பாருங்க.
“சரி.. சரி” [...]
Tags: சமூகம், சிறுகதை
சிறுகதை, புனைவு
Jul
27
பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.
சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பதிவர்கள் கலந்து கொண்ட உரையாடல் அமைப்பின் சிறுகதைப் போட்டி முடிவுகள் எதிர்வரும் சனிக்கிழமை வெளியாகும் என பைத்தியக்காரன் சொல்லியிருந்தார். சுட்டி இங்கே!
சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டவர்களின் சிறுகதைகளை வாசிக்க சங்கமம் திரட்டி கொடுத்திருக்கும் வலைப்பக்கத்தின் சுட்டி இங்கே.
வலையுலக சரித்திரத்தில் முதன் முறையாக ரூபாய் முப்பதாயிரத்திற்கான பரிசை வெல்லப் போகும் இருபது பதிவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.
சிவராமண்ணே, இதுக்கு மேல தாங்காது…. முடிவ சனிக்கிழமை அறிவிச்சுடுங்க… அதுக்குத்தான் இந்தப் பதிவு… [...]
Tags: சிறுகதை, பதிவர் சதுரம் ;-))
சிறுகதை, தகவல்கள், பதிவர் சதுரம் ;-))
Jul
18
நான் படித்த தொடக்கப்பள்ளியின் சத்துணவுக்கூடத்தில் விளிம்பு வெடித்த அந்த அலுமினிய குண்டா இன்றும் அப்படியே இருக்கிறது. அதில் கொட்டப்படும் மீதி சோற்றுக்கென.. மதிய வேளைகளில் நாய்களின் கூட்டமொன்று அலைந்தபடியே இருக்கிறது. ஆனால், அந்த குண்டா யாருக்காக வைக்கப்பட்டதோ அவனை இன்றளவும் எதிர்பார்த்தபடியே தான் இருக்கிறார்கள் பள்ளிக்குழந்தைகளும், ஆசிரியர்களும். எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் மட்டும் தான் அவன் போயே போய் விட்டதின் காரணம் தெரியும்.
கோட்டி முத்து. இந்த பெயரைச் சொன்னால் என் ஊரில் தெரியாதவரே இல்லை எனலாம். [...]
Tags: சிறுகதை
சிறுகதை