விடுபட்டவை » சிறுகதை

தூறலாய் வலுக்கத் தொடங்கிய மழை; எப்படியும் சில நாட்களுக்கு விடாது பெய்யும்.. (சிறுகதை)
“என்னங்க, சொன்னது ஞாபகம் இருக்கா?”

தூங்கிக் கொண்டிருந்த தன் மூன்று வயது மகளுக்கு முத்தம் கொடுத்து விட்டு, சட்டை பட்டனை மாட்டிக்கொண்டிருந்த பன்னீர் “ம்”மென்று புரியாதவனைப் போல சரஸ்வதியை பார்த்தான். “உங்களுக்குன்னு எங்கன இருந்துதா இப்படி மறதி வருதோ” என ஆரம்பித்தவளை “விசயத்தை சொல்லுறியா” என இடைமறித்தான்.

“க்கூம், இதுக்கொன்னும் குறச்சலில்ல. ஊர்லேர்ந்து தம்பி ராத்திரிக்கு வந்துரும். அதுக்கு மட்டன் எடுத்துப் போட வேண்டாமா? சேட்டுகிட்ட சொல்லி ‘கர்ச்சா’ வாங்கி வாங்க. முடிஞ்சா நாளைக்கு ‘ச்சுட்டி’யும் கேட்டுப் பாருங்க.

“சரி.. சரி” என்றபடியே வீட்டை விட்டு வெளியேறி, தொன்னூறடி சாலையை அடைந்தான்.

பெயருக்குத்தான் தொன்னூறடி சாலை, புழக்கத்திலிருப்பது என்னவோ முப்பதடிதான் இருக்கும். சாலையோரக் கடைகளும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும் சேர்ந்து மீதிச் சாலையை விழுங்கி இருந்தன. தாராவியின் ட்ரான்ஸிட் கேம்ப் வழியாக குறுக்கே விழுந்து போனால் இருபது நிமிடத்தில் சயான் சர்க்கிளை அடைந்துவிட முடியும். அங்குதான் பன்னீர் வேலை செய்யும் ஜவுளிக்கடை இருக்கிறது. சாலை வழியாக சுற்றிக் கொண்டு போகும் பஸ்ஸில் ஏறினால், போகவர தண்டமாய் பன்னிரெண்டு ரூபாய் ஆகுமென்பதால் இவனது தினப்படி வழி இதுதான்.

அந்தக் கடையில் இவன் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. முன்பு பிரபலாமாக இருந்த கூரியர் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தான். தினம் தாராவியிலிருந்து தாதரில் இருக்கும் மெயின் அலுவலகம் போய், தயாராய் இருக்கும் ‘விரார்’ பகுதிகளுக்கான தபால்களையும், பார்சல்களையும் மின் தொடர் வண்டி மூலம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். பின் அங்கிருக்கும் சில லோக்கல் ஏரியாக்களில் தபால் பட்டுவாடா செய்ய வேண்டியதிருக்கும். பெரும்பாலும் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே பட்டுவாடாக்கள் முடிந்துவிடும். பின் அலுவலகத்துக்குள்ளேயே கதியாய் கிடந்து மாலை ஐந்து மணிக்கு முதல் லோடை எடுத்துத் திரும்பவும் தாதர் அலுவலகத்தில் சேர்த்து விட்டால் இவன் வேலை முடிந்து விடும்.

சம்பளம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், லோடு சுமந்து செல்லும் பணியிலிருப்பதால் தினமும் தொன்னூறு ரூபாய் வரை தனியாகக் கிடைக்கும். லக்கேஜ், டிக்கெட் எடுக்க எனத் தனியாகக் கிடைக்கும் பணமும் பல சமயங்களில் இவன் பாக்கெட்டிலேயே தங்கி விடுவதால், ஏகபோகமாய் வாழ்கை அதன் போக்கில் ஓடிக் கொண்டிருந்தது. வாரத்தின் இரண்டு மூன்று நாட்கள் சோமபானத்திற்கும், சைனீஸ் உணவு வகைகளுக்கும் செலவு செய்யாவிட்டால் இவனுக்குத் தலை வெடித்துவிடும். வசிக்கும் வீடு மும்பையை காலி செய்து போன சரஸ்வதியின் தம்பி முருகனுடையது என்பதால் வாடகை தொல்லை எதுவும் இருக்கவில்லை.

இந்த சமயத்தில்தான் திடீரென ஆட்குறைப்பு செய்து… பன்னீர் போன்ற தற்காலிக ஊழியர்கள் பலரை கூரியர் நிறுவனம் வீட்டுக்கு அனுப்பியது. யூனியன் மூலமாக வழக்கும் தொடுத்தார்கள். ஆனால் வழக்கு முதல் விசாரணைக்கு வரவே மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதுவரை ஏதோ அப்படியிப்படியாக சரசுவின் சேமிப்பில் குடும்பம் ஓடியது. வழக்கு முடிந்து தீர்ப்பு வர ஒரு வருடத்துக்கு மேலாகும் என்று பலரும் சொன்னதால்.. அதுவரையும் வீட்டிலிருக்க முடியாது என்றுதான் ஜவுளிக்கடையில் வேலைக்கு வந்தான்.

இதுவும் இவனுக்கு சொல்லிக் கொள்வது போல இல்லைதான். ஆனால் தினமும் சும்மா ஆறு மணி நேரம் இடதும் வலதுமாக லாத்திக் கொண்டிருந்தால் போதும். அதற்கு தினமும் எண்பது ரூபாய் என கணக்கிட்டு மாசக் கடைசியில் மொத்தமாகக் கொடுத்துவிடுவார்கள். கடன் வாங்கி வயிற்றை நிரப்புவதை விட இது தேவலாம் என்றுதான் போகத் தொடங்கினான்.

ரப்பர் போன்ற பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட பெரிய கரடி பொம்மை இருக்கும். தலை முதல் கால் வரை ஒரே பாகமாக செய்யப்பட்டிருக்கும். இடுப்பிலிருந்து கழுத்து வரை பெரிய பற்களால் ஆன ஜிப் வைக்கப் பட்டிருக்கும். அதனைத் திறந்து அதை மாட்டிக் கொள்ள வேண்டும். அதனுள் அதிகமாக வியர்க்கும் என்பதால், உள் நுழைபவன் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து கொள்வான். பொம்மையை அணிந்து கொள்வதற்கென்றே கடையினுள் தனி அறை இருந்தது. அந்த கரடி பொம்மையின் ஆடையை அணிந்து கொண்டு கடைவாசலுக்கு வந்தவுடன் அதன் கழுத்துப் பகுதியில் இருக்கும் வால்வு மூலம் அதனுள் காற்று நிரப்பப்படும். காற்று நிரம்பியவுடன் அந்த பொம்மை விஸ்வரூபம் எடுத்தது போல எட்டடி உயரமாகிவிடும். அதனுள் இருக்கும் நபர் மூச்சுவிடுவதற்கென்றே அதன் மார்புப் பகுதியில் பிரத்யேகமான துவாரம் வைத்து தயாரிக்கப் பட்டிருக்கும்.

அதற்குள் இருந்து கொண்டு, கடைவாசலுக்கு வருவோர் போவோரை மகிழ்விப்பதுதான் பன்னீரின் வேலை. எப்போதும் அவனைச் சுற்றி குழந்தைகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சில குழந்தைகள் அமைதியாய் வேடிக்கை பார்க்கும். சில சுட்டிக் குழந்தைகல் பொம்மையை அடிப்பதும், உதைப்பதும் என சீண்டிப் பார்க்கும். அப்போதெல்லாம் இவன் அக்குழந்தைகளைப் பிடிப்பது போல பாவனை செய்வான். அவை அலறியபடி ஓடும். பிறகு திரும்பவும் வந்து தொல்லை கொடுக்கும்.

சில சமயங்களில் பொம்மையை அருகில் பார்த்த மாத்திரத்திலேயே வீறிட்டு அலறும் குழந்தைகளும் உண்டு. அப்படித்தான் ஒரு சமயம்…இவனைப் பார்த்தே ஆக வேண்டுமென்று இவனது குழந்தை அழுது ஆர்பாட்டம் பண்ண… ஏதேதோ சமாதானங்கள் சொல்லிப் பார்த்தும் குழந்தை அடங்குவதாகத் தெரியவில்லை. செய்வதறியாது குழந்தையுடன் ஜவுளிக்கடைக்கே வந்துவிட்டாள் சரசு. தன் குழந்தையைப் பார்த்த சந்தோஷத்தில் இவன் அருகில் போனதுமே… அது வீறிடத்த் தொடங்கியது.

“இது அப்பாதான்” என சரசுவும், “நாந்தாண்டா” என்று பொம்மைக்குள்ளிருந்து கத்த, எதையுமே கேட்கும் நிலையில் குழந்தை இல்லை. வேறு வழியின்றி பொம்மையின் நெஞ்சுப் பகுதியை திறந்து, குழந்தைக்கு முகத்தை காட்டினான். தலை ஒட்டிப் போய், வியர்த்துப் போன இவனது முகத்தை சில நிமிடங்கள் பார்த்தபின் தான் குழந்தை சுயநிலைக்கு வந்தது. சரசுவின் கையிலிருந்து குழந்தையை வாங்கி கொஞ்சினான். வியர்த்துப் போன உடம்பில் கை வைத்துப் பார்த்தது குழந்தை. இதனை தூரத்திலிருந்து பார்த்துவிட்ட ஒரு போட்டோகிராபர் படம் பிடிக்க, பன்னீர், சரசு, குழந்தை என மொத்தக் குடும்பத்தின் படமும் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் வந்தது. கடையில் பிஸியாக இருந்த சேட்டுக்கு இவ்விஷயம் பத்திரிக்கையில் வரும் வரை தெரியாது. அதற்காகவே நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டது தனி விஷயம்.

ஜவுளிக்கடையின் முன் விளக்குகள் அணைக்கப்பட்டதும், பொம்மைக்குள்ளிருந்து வெளிவந்தான் பன்னீர். சில்லென்று காற்று முகத்தில் அறைந்தது. மூச்சை ஆழமாக ஒரு முறை உள்ளிழுத்துக் கொண்டான். கொஞ்சம் தெம்பு வந்தது மாதிரி இருந்தது. ஆடைகளை சரி செய்தபடி கல்லாவின் ஓரமாகப் போய் நின்றான். மற்ற சிப்பந்திகள் துணிகளை மடித்துக் கொண்டும், துணி அடுக்கப்பட்ட பெரிய சைஸ் ரேக்குகளை திரைபோட்டு மூடிக் கொண்டும் இருந்தார்கள். சேட்டு கம்ப்யூட்டரில் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் உயரமான நாற்காலிக்கு வலது பக்கம் தரையில் அமர்ந்து கணக்குப் பிள்ளையும், சேட்டின் மூத்த மகனும் ஐநூறு, நூறு, ஐம்பது என பணத்தை தனித் தனியாகப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். கம்ப்யூட்டர் திரையிலிருந்து பார்வையை விலக்கி இவனை வெறித்தார் சேட்டு. அவரின் பார்வைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பன்னீர் தரையைப் பார்த்தான்.

“ம்… க்யா சாயியே போலோ ஜல்தி” பெரிய சேட் குரல். பணத்தை பிரித்துக் கொண்டிருந்த அவரது மகன் நிமிர்ந்து பார்த்துவிட்டு… மீண்டும் தன் வேலையில் மூழ்கினான்.

“கொஞ்சம் கர்ச்சா வேணும்”

“எதுக்கு?”

“கொழந்தைக்கு முடியல. டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும்.” உண்மையைச் சொன்னால் சேட்டு பணம் தரமாட்டார். அதனால் சரளமாகப் பொய்யை அவிழ்த்து விட்டான்.

“எவ்வளவு வேணும்?”

“ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தேவலாம்” என்றான் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு. ஆனால் சேட்டின் முகம் மாறியது. “என்ன பொய் சொல்றியா?” என்றார் கோபமாக.

“இல்ல சேட்ஜி… நிஜமாவே கொழந்தைக்கு முடியல”

“தாராவியில எந்த டாக்டர்பா முப்பது ரூபாய்க்கு மேல வாங்கறான்? உன்னோட ஏரியா பத்தி எனக்குத் தெரியாதுன்னு நெனச்சிட்டயா? பொய் சொல்லாதே…”

“இல்ல சேட்ஜி… நிஜமாத்தான் சொல்றேன்.”

“இன்னிக்கு கலெக்ஷன் கம்மி. நாளைக்கு வாங்கிக்கோ.”

“ஐநூறாவது இன்னிக்கு கொடுங்க சேட்ஜி”

“கலெக்ஷனே இல்லைன்றேன். போ…. போ… நாளைக்கு வாங்கிக்கோ.”

“இல்ல…சேட்ஜி, எப்படியாச்சும்…” என்று இவன் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே செக்யூரிட்டியைத் தள்ளிக் கொண்டு அந்த கும்பல் கடைக்குள் நுழைந்தது. வெள்ளை சட்டை, பேன்ட்டில் வந்திருந்த எல்லோரின் நெற்றியிலும் நீளவாக்கில் குங்கும நாமம் இட்டிருந்தார்கள். தலையில் ஆரஞ்சு வர்ண ரிப்பன் கட்டியிருந்தார்கள். அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து போனது அவர்கள் பிரபல அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது.

“எ…என்ன வேணும்?” தடுமாறினார் சேட்டு. இருபதிற்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக வருவதைப் பார்த்ததும், எல்லோரும் வேலைகளை விட்டுவிட்டு அவர்களையே பார்த்தார்கள்.

“படா சாப்புக்கு பிறந்த நாள் வருது. அத பெரிய லெவலில் கொண்டாடலாமுன்னு கட்சி சார்பில் முடிவு எடுத்திருக்கோம். டெல்லியிலிருந்து மத்த கட்சித் தலைவர்களும் வராங்க… அதனால் வசூல் கொஞ்சம் தீவிரப் படுத்துறதா திட்டம். போன வருஷமே நீங்க எதும் பண்ணல. அதுனால் உங்க சார்பா ‘மூணு பெட்டி’ தர்றீங்க.” என்றான் அந்த கும்பலின் தலைவன் போல காட்சி அளித்த தாடிக்காரன்.

“மூணு பெட்டியா? அவ்வளவெல்லாம் முடியாது. ஏற்கனவே வியாபாரம் ரொம்ப டல்லடிக்குது. பிளாட்பாரத்துலயே ரெடிமேட்ஸ் வந்துட்டதால வியாபாரமே இல்லை.” என்று சேட்டு சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாடிக்காரனால் இடை மறிக்கப்பட்டார்.

“சுப்… உம்மட்ட கத கேக்குறதுக்கு வரல. மூணு பெட்டின்னா மூணு பெட்டிதான். ரொம்ப பேசின, தேவை இல்லாத தொந்தரவுக்கு ஆளாகிருவ.”

“இல்ல… நா என்ன சொல்ல வர்ரேன்னா…”

“அரே யார்…. என்ன கத கேட்டுகிட்டு… கவுண்டருக்கு அந்தப் பக்கம் போய்… பணத்தை எடுங்கடா…”என்று தாடிக்காரன் சொன்னதும் இரண்டு பேர் உள்பக்கமாய் குதித்து, கீழே பண்டல் போடப்பட்டிருந்த பணக்கட்டுகளை எடுத்து கவுண்டரின் மீது வைத்தார்கள்.

“எவ்வளவு இருக்கு?”

“ரெண்டு பெட்டி தேறும்.”

“அப்ப சரி சேட்… நாளைக்கு இதே நேரத்துல எங்க ஆளு ஒருத்தன் வருவான். மீதி ஒரு பெட்டிய கொடுத்து விட்டுடு…! உனக்கும் பிஸினஸ் பாதிக்கக் கூடாதுன்னுதான் ராத்திரியில வந்திருக்கோம்…” என்று சொல்லியபடியே பணக் கட்டுகளை பிளாஸ்டிக் பையில் வைத்து பின்னாலிருந்தவனிடம் கொடுத்தான் தாடிக்காரன். அவனிடம் ஏற்கனவே இரண்டு, மூன்று பைகள் இருந்தன. சேட்டு பையனின் முகத்தில் தட்டிக் கொடுத்துவிட்டு வெளியேறினான் தாடி. அவன் பின்னாலேயே கும்பலும் வெளியேறியது. சேட்டையும், அவர் மகனையும் தவிர மற்றவர்கள் அவரவர் வேலையில் ஈடுபடத் துவங்கினார்கள்.

இனியும் நின்று பிரயோஜனமில்லை என்று உணர்ந்த பன்னீர் கடையை விட்டு வெளியே வந்தான். சாலை விளக்குகள் மஞ்சள் ஒளியை உமிழ்ந்தபடி இருந்தன. பெருவாரியான கடைகள் அடைக்கப்பட்டு… அதன் இருள்படிந்த வாசலில்… வயதான பிச்சைக்காரர்கள் படுக்கையை விரித்துக் கொண்டிருந்தார்கள்.

திடீரென ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. மச்சினன் இந்நேரம் வந்து இறங்கியிருப்பான். அவனுக்கு மட்டன் ஆக்கிப் போட குழந்தையின் கம்மலைத்தான் அடகு வைக்க வேண்டும். யோசனையில் நடந்தவனுக்கு ‘ச்சுட்டி’ கேட்காதது நினைவுக்கு வந்தது. தாம்தூமென்று குதிப்பாளே… என்ன சொல்லி சமாதானப்படுத்துவது…. சரசுவை சமாளிப்பது குறித்த திட்டமிடலுக்கு இவன் மாறியதும், வானத்திலிருந்து தூறலாய் மழை வலுக்கத் தொடங்கியது. அம்மழை எப்படியும் ரெண்டு, மூணு நாட்களுக்கு விடாது பெய்யும்.

குறிப்புகள்:

கர்ச்சா – சம்பளத்தில் பெறப்படும் முன்பணம்,

ச்சுட்டி – விடுமுறை,

ஒரு பெட்டி – லட்ச ரூபாய்.

இக்கதை மும்பை சிறுகதைகள் தொகுப்பிற்காக 2005ம் ஆண்டு எழுதியது.

வலையுலக சரித்திரத்தில் முதல் முறையாக…
பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.

சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பதிவர்கள் கலந்து கொண்ட உரையாடல் அமைப்பின் சிறுகதைப் போட்டி முடிவுகள் எதிர்வரும் சனிக்கிழமை வெளியாகும் என பைத்தியக்காரன் சொல்லியிருந்தார். சுட்டி இங்கே!

சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டவர்களின் சிறுகதைகளை வாசிக்க சங்கமம் திரட்டி கொடுத்திருக்கும் வலைப்பக்கத்தின் சுட்டி இங்கே.

வலையுலக சரித்திரத்தில் முதன் முறையாக ரூபாய் முப்பதாயிரத்திற்கான பரிசை வெல்லப் போகும் இருபது பதிவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

சிவராமண்ணே, இதுக்கு மேல தாங்காது…. முடிவ சனிக்கிழமை அறிவிச்சுடுங்க… அதுக்குத்தான் இந்தப் பதிவு…

கோட்டி முத்து
நான் படித்த தொடக்கப்பள்ளியின் சத்துணவுக்கூடத்தில் விளிம்பு வெடித்த அந்த அலுமினிய குண்டா இன்றும் அப்படியே இருக்கிறது. அதில் கொட்டப்படும் மீதி சோற்றுக்கென.. மதிய வேளைகளில் நாய்களின் கூட்டமொன்று அலைந்தபடியே இருக்கிறது. ஆனால், அந்த குண்டா யாருக்காக வைக்கப்பட்டதோ அவனை இன்றளவும் எதிர்பார்த்தபடியே தான் இருக்கிறார்கள் பள்ளிக்குழந்தைகளும், ஆசிரியர்களும். எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் மட்டும் தான் அவன் போயே போய் விட்டதின் காரணம் தெரியும்.

கோட்டி முத்து. இந்த பெயரைச் சொன்னால் என் ஊரில் தெரியாதவரே இல்லை எனலாம். வெற்றிலைக்குச் சுண்ணாம்பு வாங்குவதிலிருந்து, ஊரில் இருக்கும் ஒரே பள்ளிக்கூடத்தின் சத்துணவுக்கு அடுத்த ஊரில் இருந்து காய்கறி வாங்கி வருவது வரை, ஊரில் எல்லோரின் தேவைக்கும் கோட்டி முத்து தேவைப்படுவான். தனியாக சம்பளம் என்று ஏதும் கொடுக்க வேண்டாம். ஒரு வேளை சோறு போட்டால் போதும். போடாவிட்டாலும் குத்தமில்லை. எதுவும் சொல்லாமல் போய் விடுவான்.

தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும், ஏன் உலகின் எல்லா ஊர்களிலும் கோட்டி பிடித்த மனிதர்கள் யாராவது இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை உதாசினப்படுத்தவோ, சிறுவர்கள் கல் கொண்டு தாக்குவதோ, அழும் குழந்தையை மேலும் பயம் கொள்ள கோட்டிக்காரனிடம் பிடித்துக்கொடுத்துவிடுவதாக சொல்லும் அம்மாக்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ஆனால் எங்கள் ஊரில் எல்லாமே தலைகீழ்.

பள்ளி செல்லும் சிறுமிகளின் புத்தக மூட்டையை சுமப்பது முதல், வீதியில் அழுது அடம் பிடிக்கும் குழந்தையின் முன்னால் மண்டியிட்டு ஆனை விளையாட்டு காட்டி, சவாரி ஏற்றிக்கொள்ளுவது, குரங்கு போல பல்டி அடிப்பது என்று எல்லா சேட்டைகளும் செய்து அவர்களை சமாதானப்படுத்தி விடுவதிலும் அவன் கில்லாடி. இதனாலேயே எங்களூர் குழந்தைகளின் செல்லத் தோழனாகிப் போனான் கோட்டி முத்து.

பையன்கள் ‘தரவை’ பக்கம் கிரிக்கெட் விளையாட போகும் போது பந்து எடுத்துப்போட இவனைத்தான் அழைத்துப்போவார்கள். மளிகை கடை வைத்திருக்கும் சுரேஷ் அண்ணாச்சி தான் ‘கோட்டிமுத்து’ வென முதலில் விளித்ததாய் அப்பா சொல்லி கேட்டிருக்கிறேன். அவனது நிஜப்பெயர் குறித்து யாரும் ஆர்வப்படவில்லை. அவன் எந்த ஊரில் இருந்து வந்தவன் என்பது கூட எவருக்கும் தெரியாது. “கோட்டிமுத்தூ…” என்று சத்தம் போட்டு முடிக்கும் முன் சிட்டாய் பறந்து வந்து நிற்பான்.

அடர்ந்து கருத்திருந்த அவனது தலை மயிர்களில் காதோரம் தொடங்கி பின் கழுத்து வரை வெள்ளி மயிர்கள் தலை காட்டத்தொடங்கி இருந்தன. முகம் வட்டமாக இருந்தாலும் ஒழுங்கு செய்யப்படாத தாடியால் பொலிவை இழந்திருந்தான். ஆறடிக்கும் குறைவில்லாத உயரம். கருத்த நிறம். திடகாத்திரமான உடல்வாகு. மேல் பட்டனை கழட்டி விட்ட சாயம் போன சட்டை, காலுக்கும் முட்டிக்கும் இடைப்பட்ட உயரத்தில் பேண்ட். இவை தான் கோட்டி முத்துவின் அடையாளங்கள்.

ஊரணியில் தினம் அதிகாலையிலேயே குளித்து விடுவான். தன் ஆடைகளை தினம் கழுவி, ஈரத்துடன் போட்டுக்கொண்டு திரிவான். ஆடைகள் கிழிந்து போனால் யாரிடமும் கேட்க மாட்டான். சுடுகாட்டு மண்டபத்தில் படுத்துக்கொள்ளுவான். அவனின் தேவையை ஊரில் யாராவது நிறைவேற்றியபின் தான் ஊருக்குள் உலா வருவான். ஊருக்குள் உலாவினாலும் எந்த தொல்லையும் கிடையாது. பசிக்கிறது என்றும் எவர் வீட்டு வாசலிலும் நின்றதும் கிடையாது. உமையனன் வாத்தியார் தான் சத்துணவுக்கூடத்தில் கோட்டி முத்துவுக்கென அந்த அலுமினிய குண்டாவை வைத்தார். பள்ளிக்குழந்தைகள் சாப்பிட முடியாமல் போன சோற்றை அதில் கொட்டி விடுவார்கள். அதைத்தான் மதியம், இரவுக்கும் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொண்டான்.

கோவில் வாசலின் தான் படுத்துக்கிடப்பான் என்றாலும் அவன் உறங்கி யாரும் பார்த்தது கிடையாது. ஊரின் எல்லாத் தெருக்களிலும் போட்டிருக்கின்ற செருப்புத்தேய வலம் வருவான். அச்சமேற்படுத்தும் தோற்றம் என்ற போதிலும் தெருநாய்கள் அவனைக் கண்டு குறைத்ததில்லை. அவனைப் பழகிப் போய் இருந்தன அவை.

ஒவ்வொரு ஆடி மாதத்திலும் மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும். அலங்கார விளக்கு அமைக்கவும், உட்சுவர் முதல் கோபுரம் வரை வெள்ளை அடிக்கவும் கூட இவன் பங்கு இருக்கும். பத்து நாட்கள் விழாவில், கடைசி நாளன்று திரைகட்டி சினிமா காண்பிப்பார்கள். டவுண்காரர்கள் அதனைச் செய்வதால் இவனை அண்ட விட மாட்டார்கள்.

மாரியம்மன் கோவிலின் அருகில் இருக்கும் வேப்ப மரத்தைச் சுற்றிலும் ஒன்பது நாளுக்கு இரவில் ஒயில் விளையாட்டு நடக்கும். ஓரத்தில் முளைப்பாரி கொட்டகைக்குள் இருக்கும். கடைசி நாளன்று விடியற்காலை நாலு மணிவரை கூட ஓயில் விளையாட்டு நடக்கும். அன்று மட்டும் அடுத்தடுத்த தெருவில் இருந்து எல்லாம் எங்கள் தெருவுக்கு விளையாட வருவார்கள். இரவை பகலாக்கும் முயற்சியில் பளபளப்பாக காட்சி தரும் எங்கள் ஏரியா.

விடியவிடிய ஆடி விட்டு எல்லோரும் களைத்து தூங்கினாலும் இவன் மட்டும் கண்ணசர மாட்டான். காரணம் கடைசி நாளன்று தான் மொத்த ஊரும் திரண்டு வந்து கோவிலில் சாமி கும்பிடும். அனேக வீடுகளில் அன்று கறி தான். கோவிலின் வலது பக்க சுவரோரம் இருபதிற்கும் குறையாக கிடாய் நிற்கும். ஆத்தாளுக்கு பலி போட்டு…., சிறு சிறு துண்டுகளாக்கி ப்ளாஸ்டிக் பையில் போட்டு, வரி பிரித்த எல்லா வீடுகளுக்கு கறி பிரசாதம் கொடுத்து விடுவார்கள். சொந்தமாக வாங்கி வைத்திருக்கும் கறியுடன் இந்த பிரசாதத்தையும் சேர்த்து தான் சமைக்கத் தொடங்குவார்கள். வீடுகளுக்கு கறி கொடுக்கும் வேலையையும் கோட்டி முத்து தான் செய்வான்.

கறி போட்டு வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைகளை இடது கையில் பிடித்துக்கொண்டு, வலது கையை விசுக்விசுக்கென அவன் வீசி நடக்கும் அழகே தனி. ஆத்தாளின் பிரதிநிதியாக வலம் வருகிறோம் என்ற நினைப்போ என்னவோ, அப்போது மட்டும் ராஜநடை போட்டுத்தான் நடப்பான்.

“வரிக்கறி..அம்மா”வென ஒவ்வொரு வீட்டின் முன்பாக நின்று குரல் கொடுப்பான். உடனடியாக வீட்டுக்காரர்வந்து வாங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் வரத்தாமதமானால்.. வீட்டுத்திண்ணையிலேயே கறியை வைத்து விட்டு, அடுத்த வீடு நோக்கி நடையை கட்டி விடுவான்.

கறிப்பிரசாதம் இவன் கையில் வந்தவுடன் இவன் முதலில் கொண்டுவந்து கொடுப்பது எங்கள் வீட்டில் தான். அதற்கு காரணமும் இருந்தது. மற்ற வீடுகளுக்கு அவன் கொடுத்து விட்டு திரும்புவதற்குள் கல்யாணியக்கா சமையல் செய்து வைத்து விடுவாள். என் அம்மா போன பின் அந்த குறையே தெரியாமல் என்னை வளர்த்தெடுத்தவள் கல்யாணியக்காதான். கோட்டி முத்து திரும்பி வந்து எங்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டு, “அக்கா சோறு” என்று குரலெழுப்புவான். கல்யாணியக்கா அவனுக்கு சோறிடுவாள். என் அம்மா ஏற்படுத்திய வழக்கம். அவள் போன பின்னும் அக்காவால் தொடரப்படுகிறது. அவனுக்கு இந்த வித்தியாசங்கள் ஏதும் தெரியாது. அவனுக்கு அம்மாவும் அக்கா தான்; மகளும் அக்கா தான்.

அன்று திருவிழாவின் கடைசி நாள். எங்கள் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவனை எங்கள் படை சூழ்ந்தது. படை என்றால்.., என்னோடு ஒரே வகுப்பில் படித்துக்கொண்டிருந்த தெருச் சிறுவர்கள். விரல்களில் ஒட்டி இருந்த பருக்கைகளுக்காக விரல் சுப்பிக்கொண்டிருந்த போது எங்களைப் பார்த்தான்.

“கோட்டிமுத்தூ…, எங்களுக்காவ ஒரு காரியஞ்செய்வியா?” என்று கேட்டான் கோணக்குஞ்சான்.

அப்படியே சில நிமிடங்கள் எங்களைப் பார்த்து விட்டு மீண்டும் விரல்களை சுத்தப்படுத்துவதில் தீவிரமானான்.

“இல்ல.. ஒனக்குத் தா மைக் செட்டுக்காரர.. நல்லா தெரியுமே.. எங்களுக்கு ஒரு சிரியல் பல்பு வாங்கித்தாரியா..”

காலியான சாப்பாட்டு இலையை மூடிவிட்டு, கையை கழுவி, கோவிலை நோக்கிப் போனான். நாங்களும் இடைவெளி விட்டு பின் தொடர்ந்தோம். மைக் செட்டுக்காரர் அருகில் போய் இவன் நின்றதும், அவர் ஏதோ சொல்ல, இவன் ஏதோ சொல்ல…, பதிலுக்கு அவர் வேகமாய் மறுத்து தலையாட்டினார். கொஞ்ச நேரம் அவரையே பார்த்தபடி நின்றான். அவர் இவனைக் கண்டுகொள்ளவே இல்லை. அவன் திரும்பி வந்து உதட்டை பிதுக்கி விட்டு போய் விட்டான்.

இரவு எட்டரை மணிக்கெல்லாம் தெருவில் திரைகட்டி படம் தொடங்கி விட்டார்கள். மூன்று படங்களில் முதலில் போட்டது சாமிப்படம். எங்கள் வீட்டுக்கு சற்றுத்தள்ளித் தான் திரை கட்டியிருந்தார்கள் என்பதால் நாங்கள் மொட்டை மாடியில் இருந்து படம் பார்த்துக்கொண்டிருந்தோம். சிலர் அவரவர் வீட்டு வாசலியேலே பெஞ்சு,கட்டில் போன்றவற்றைப் போட்டு படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. கோவில் வாசலில் வைக்கப்பட்டிருந்த அலங்கார அம்மன் சாரத்திலிருந்து யாரோ கீழே விழுந்தார்கள். அவ்வளவு உயரத்திலிருந்து அலறலோடு கீழே அந்த நபர் விழும்போது சிரியல் பல்புகள் உடைந்து சிதறின.

மொத்தமக்களும் கோவில் வாசலுக்கு ஓடினார்கள். நானும் அக்காவோடு ஓடினேன். உடனடியாக மின்சாரம் தடை செய்யப்பட்டது.

அங்கே… ரத்த வெள்ளத்தில் கிடந்தான் கோட்டி முத்து. ஒரு பக்கமாய் நிலை குத்தியிருந்தன அவனது விழிகள். ‘பெட்ரோமேக்ஸ்’ வெளிச்சத்தில் அவனை அருகில் பார்த்தேன். பாதி மூடி இருந்த அவனது இடது கைக்குள் வயரோடு சில சீரியல் பல்புகள் இருந்தன.

இது மீள் பதிவு:- http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_07.html

பூங்காவின் 9வது வாரத்திலும் தேர்வு செய்யப்பட்டது :- http://poongaa.com/content/view/581/30/

பாரதியின் ஒரு பாட்டு
ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிரியர்தின விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்த லிபர்டி கார்டன் முனிசிபல் பள்ளி, மும்பையிலிருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பள்ளிகளில் இதுவும் ஒன்று. இருபாலரும் படிக்கும்  இதில் பத்தாம் வகுப்பு வரை இருப்பது கூடுதல் சிறப்பு.

ஆசிரியர் தினத்தன்று பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, நாடகங்கள், நடனம் போன்ற நிகழ்சிகளுடன் ஆசிரியர்களுக்கு மியூசிக்கல் சேர், வினாடி வினா போன்ற போட்டிகளையும் மாணவர்கள் நடத்துவார்கள். வகுப்பறையில் அன்றைய தினம் பாடம் நடத்துவது கூட மாணவர்களோ, மாணவியரோதான். வாழ்த்து அட்டைகள், மலர்க் கொத்துகள் பரிசுப் பொருட்கள் என ஆசிரியர்கள் வீடு திரும்பும் போது அள்ளிக் கொண்டுதான் போவார்கள்.

அடுத்த வாரம் வரவுள்ள ஆசிரியர் தின விழாவின் கலை நிகழ்சிகளுக்கு  ஆசிரியர்கள் சிலர் பொறுப்பேற்று இருந்தார்கள். ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியரின் நாட்டிய நாடகத்துக்கு வழி நடத்துபவராக கல்யாணி மிஸ் இருந்தார். அந்நாடகத்தில் உள்ளவர்களில் ஜெயாவும் ஒருத்தி. இவள் அதே பள்ளியில் ஆரம்ப வகுப்பு முதல் படித்து வருவதால், அநேக ஆசிரியர்களுக்கு அறிமுகமானவள். கடந்த ஒரு வாரமாக இவர்களின் நாட்டிய நாடகத்திற்கு ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது.

புது மாதிரியான நிகழ்சி அது. பாரதியின் பாப்பா பாடலை ஜெயா மேடையில் பாட வேண்டும். பாடலின் வரிகளுக்கு ஏற்ப குழுவில் மற்றவர்கள் நடிக்க வேண்டும். ஜெயாவின் குரல் இனிமையாக இருக்கும். தவிர பலமுறை பாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்றவள் என்பதால் இப்பொறுப்புக்கு அவளைத் தேர்வு செய்திருந்தார் மிஸ்.

உறங்கும் போது தவிர மற்ற நேரங்களில் பாடலை மனப்பாடம் செய்வதிலேயே கவனமாக இருந்தாள் ஜெயா.ஒத்திகை தொடங்கியதிலிருந்தே விளையாட்டு, தொலைக்காட்சி என எதிலுமே இவள் கவனம் போகவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனிமையான பொழுதுகளில் பாப்பா பாட்டை வாய்விட்டுப் பாடியபடியே இருந்தாள்.

ஓடி விளையாடு பாப்பா – நீ

ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.

கூடி விளையாடு பாப்பா – ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

ஆனால் பாடல் முழுவதையும் உள்வாங்கிய பின்னும் அவளுக்கு ஒரு விஷயம் மட்டும் விளங்கவேயில்லை. இந்தப் பாடலில் ஒரு இடத்தில்,

தமிழ்த்திருநாடு

தன்னைப் பெற்ற – எங்கள்

தாயென்று கும்பிடடி பாப்பா.

என்று எழுதியிருக்கிறார் பாரதி.

ஆனால் அவரேதான் வேறொரு சந்தர்ப்பத்தில் ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ என்ற பாடலில்

‘தந்தையர் நாடென்னும் போதினிலே

ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே…’

என்றும் எழுதியிருக்கிறார்.

ஒருவரே… ஒரு பாடலில் தாய்நாடு என்றும், மற்றொரு பாடலில் தந்தையர் நாடு என்றும் ஏன் எழுதினார்? அது அவளின் சிந்தனைக்குள் பிடிபடவேயில்லை. கல்யாணி மிஸ்ஸிடம் கேட்க நினைத்திருந்தாள். ஆசிரியர் தினம் அருகில் வர வர இவளுக்கு பயமும், பதட்டமும் கூடியது. இந்தக் குழப்பத்தில் அவளது கவனம் முழுதும் பாடல் மீதும், அபினயம் பிடிக்கும் சக மாணவர்களின் மீதும் மட்டுமே இருந்ததால் இந்தக் கேள்வியை மறந்து போனாள்.

அந்த நாட்டிய நாடகத்தில் நடிக்கும் மூன்று பேருக்கு மட்டும் உடல் வளைய மறுத்தது. இவள் பாடலைத் திரும்பத் திரும்பப் பாடினாள். அவர்களுக்குப் பொறுமையோடு சொல்லிக் கொடுத்தார் மிஸ். அவர்களுக்கு அபினயம் வருகிறதோ இல்லையோ இவளுக்கு பாடல் தலைகீழாக மனப்பாடம் ஆகிவிட்டது.

ஜெயாவின் வீடு மாகாளி நகரில் இருக்கிறது. தினம் பள்ளிக்கு நடந்துதான் வருவாள். மகாராஷ்டிரா அரசு மணவர்களுக்கென பஸ் பாஸ் கொடுத்திருந்தும், அந்த டிக்கெட்டைக் கூட எடுத்துக் கொடுக்காதவர் ஜெயாவின் அப்பா சிகாமணி. அவருக்கு இவளை பள்ளிக்கு அனுப்புவதில் விருப்பமில்லை. இவள் பூப்பெய்தியவுடனேயே திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. ஆனால் ஜெயாவின் பள்ளி ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு வரையாவது படிக்கட்டும் என்று வற்புறுத்தியதால்தான் பள்ளிக்கு அனுப்ப சம்மதித்தார். இருந்தும் கூடுதல் செலவுகளைக் குறைத்து நகை பண்ணத் தொடங்கி விட்டார்.

சிகாமணி சைக்கிளில் இட்லி வியாபாரம் செய்து வருபவர். தினமும் காலை ஏழு மணிக்கு வண்டியை எடுத்தாரெனில் அநேகமாய் வீடு திரும்பும் முன் எல்லா இட்லிகளையும் விற்றிருப்பார். அவருக்கு மதிய உணவு கூட இட்லிதான் தினமும்.  செலவுகள் போக 150லிருந்து 200 ரூபாய் வரை தினமும் கிடைக்கும். இதில்தான் சிகாமணி, அவரின் மனைவி, ஜெயா, இவளின் தங்கை என நால்வரைக் கொண்ட இவர்கள் குடும்பம் நடக்கிறது.

தமிழகம் போல அல்ல இங்குள்ள பள்ளிகளின் நேரம். காலை ஏழு மணி முதல் மாலை ஐந்தரை வரை இரண்டு பிரிவுகளாக வகுப்புகள் நடக்கும். இவளூக்கு காலை ஏழு மணி முதல் பன்னிரெண்டரை வரை பள்ளி என்பதால் காலை சீக்கிரமே எழுந்து சாயா போட்டுக் குடித்துவிட்டு, கை கால் முகம் கழுவி ஆடை மாற்றி பள்ளி செல்லுவாள். மதியம் வீடு வந்தபின் குளித்து, தண்ணீர் பிடித்து வைத்துவிட்டுத்தான் சாப்பிடுவாள். பின் சிறு உறக்கம் – மாலையில் படிப்பு, தொலைக்காட்சிகளில் சீரியல், இரவு உணவு- உறக்கம். இப்படியாக நகரும் அவளின் அன்றாடப் பொழுதுகள்.

வீட்டிலிருக்கும் நேரங்களில் சட்டையும் பாவாடையுமாக இருப்பாள். கோவிலுக்கோ, தாராவியிலிருக்கும் உறவினர் வீடுகளுக்கோ குடும்பத்துடன் போகையில் பட்டுப் பாவாடை தாவணியில் செல்வாள். புடவை கட்டக் கூடிய உடல்வாகுதான் என்றாலும், அவளூக்கு அதில் விருப்பமில்லை. அப்படியே கட்டினால்… பார்ப்பவர்கள் சத்தியமே செய்ய முடியும் இவள் ஒன்பதாவது படிப்பவள் இல்லையென்று. படிப்பில் சுட்டி என்பதாலும், ஒரு முறை விஷயத்தை கூறினால் அப்படியே கிரகித்துக் கொள்ளக் கூடியவள் என்பதாலும் மும்பையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி என எங்கே எது நடந்தாலும் முதல் மூன்று இடங்களில் ஒரு பரிசைத் தட்டிக் கொண்டு வந்துவிடுவாள் என்பதாலும் பள்ளி ஆசிரியர்களுக்கு இவளை மிகவும் பிடிக்கும்.

மாகாளி நகர், மும்பையிலிருக்கும் பெரிய குடிசைப் பகுதிகளில் இதுவும் ஒன்று. சின்னச் சின்ன சந்துகள் நிறைந்தது. சூரியக் கதிர்கள் கூட புக முடியாதபடி நெருக்கமான சந்துகளூம் உண்டு. குறைவாகத் தமிழர்களும், உ.பியைச் சேர்ந்த பையாக்களூம் அதிகம் வசிக்கும் பகுதி அது.

வீட்டிலிருந்து கிளம்பி சாலையில் எப்போதும் வலது பக்கமாகத்தான் செல்வாள். மாகாளி நகரும், அவளது பள்ளியும் சாலையின் வலது பக்கத்திலேயே இருந்ததால் சாலையின் குறுக்கே கடக்கும் தொல்லையில்லை. மிட்சௌக்கி சிக்னலைத் தாண்டி செல்வது மட்டும் சற்று சிரமமாக இருக்கும். அதையும் கடந்து…. தொடர்ந்து அதே பக்கமாகவே சென்றால் பள்ளி வந்துவிடும். ஓர்லத்தில் இவளுக்காக உடன் படிக்கும் மற்ற மாணவிகள் சிலர் சர்ச் வாசலில் நிற்பார்கள். பின் அந்த சின்ன பட்டாம்பூச்சிகளின் ஊர்வலம் தொடரும்.

ஜெயா படிப்பதில் மட்டுமல்லா கோபப்படுவதிலும் முன்னணியிலிருந்தாள். இவளின் தைரிய சுபாவத்துக்காகவே நிறைய தோழிகள் உண்டு. அப்படித்தான் ஒரு நாள் காலை பள்ளி செல்லும்போது இரண்டு பையா வாலிபர்கள் சார்க்கோப் நாக்காவில் எதிர்பட்டார்கள். மாகாளி நகரில் பால்கடையில் வேலை பார்ப்பவர்கள். அந்த பால் கடையைத் தாண்டித்தான் இவள் வீட்டிற்குப் போக வேண்டும்.

அந்த இருவரில் ஒருவன் ‘க்யா அயிட்டமேயார்… லெகின் அமே பாவ் நை தேத்தி ஹே’ என்றான் அருகிலிருந்தவனிடம். இவள் காதில் விழாதது போல் நடக்க, அவனோ ‘ஏய்! கஹா இத்னி ஜல்தி…. சல்னா அமாரே சாத்’ என்று இவளின் கையைப் பிடித்தான். அடக்கியிருந்த கோபத்தையெல்லாம் சேர்த்து கையிலிருந்த புத்தகப் பையை சுழற்றி ஓங்கி ஒரு அடி கொடுத்தாள். அவன் நிலை தடுமாறியவுடன், அவன் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு பொறியத் தொடங்கினாள்.

‘சாலா! கர்மே மா… பேஹன் நையே க்யா? உஸ்கோ புளனா ஓ…. ஆய்கி துமாரே சாத்… மாதர் சோத்!’ என்றவாறே புத்தகப் பையால் மேலும் இரண்டு அடி கொடுத்தாள். இந்தக் களேபரத்தில் அருகிலிருந்த இன்னொருவனைக் காணவில்ல்லை. ஓடியிருக்க வேண்டும். ‘ஸாம்கோ கர்பே ஆக்கே திக்காயகா…’ என்று சத்தமிட்டுவிட்டுப் பள்ளிக்கு விரைந்தாள். இந்த சம்பவத்தை பள்ளியிலோ, வீட்டிலோ யாரிடமும் சொல்லவில்லை. அடிக்கடி இப்படி ஏதாவது நிகழ்வதும், அதனை எதிர்கொள்வதும் இவளுக்கு பழகிவிட்டதாலும் இருக்கலாம்.

சனிக்கிழமை இரவு நெடுநேரம் விழித்திருந்து கேபிளில் புதுப்படம் பார்த்ததன் விளைவு, மறுநாள் காலை தாமதமாக எழுந்திருக்கும்படி ஆனது. அம்மாவைத் தேடினாள். பின் கட்டுப் பக்கம் பாத்திரம் தேய்க்கும் சத்தம் வர பின்னால் போனாள் ஜெயா. மாவரைத்த பெரிய பெரிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் அவள் அம்மா. அருகில் அலுமினிய வாளி நிறைய ஊறவைத்த துணியும் இருந்தது.

‘ஏம்மா, இன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொன்னேன்ல…. சீக்கிரமே எழுப்பியிருக்கலாமில்ல? இப்ப பாரு லேட்டாகிப் போச்சு’ என்றாள் கோபமாக.

‘ராத்திரி புதுப் பிக்சர் போட்டவுடனேயே வாயத் தொறந்துகிட்டு பாக்கறப்பவே யோசிச்சிருக்கணும், ஜல்தியா எழும்பணும்னு… இப்ப கத்தி என்ன பண்றது? போ, போய் குளிச்சுட்டுக் கிளம்பற வழியப் பாரு!’ என்று அம்மாவும் பதிலுக்கு கத்தினாள்.

அதுவும் சரியாகத்தான் பட்டது. படம் பார்த்திருக்கக் கூடாதுதான். ஆனால் வகுப்பில் எல்லாம் மாணவிகளும் படம் பார்த்துவிட்டு அது பற்றி ‘கலந்துரையாடும்’ போது இவள் மட்டும் பார்க்காமல் அவர்களின் வாயைப் பார்த்தபடியே உட்காருவது பல முறை நிகழ்ந்திருக்கிறது. அதனாலேயே நேற்று படம் முடியும் வரை பார்த்துவிட்டுத்தான் தூங்கினாள்.

மோரியில் பல் துலக்கி, குளித்து, ஆடை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தாள். ஸ்டவ் மேலிருந்த பாத்திரத்தின் மூடியைத் திறந்து பார்த்தாள். தேனீர் ஆறிப்போய் இருந்தது. கிளாஸில் ஊற்றி அப்படியே குடித்து விட்டு, பாரதியார் கவிதைகள் நூலையும், நோட்டுப் புத்தகத்தையும், பேனாவையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்துக் கொண்டு கிளம்பினாள். நாடகத்திற்கான ஒத்திகைக்கு எல்லோரையும் அழைத்திருந்தார்கள். பாடலின் வரிகளை முணுமுணுத்தபடியே நடந்தாள்.

‘கொத்தித் திரியுமந்தக் கோழி-

அதைக் கூட்டி

விளையாடு பாப்பா…’

வெயில் நன்கு உரைத்தது. அனேகமாக மும்பையில் மட்டும்தான் பருவகால மாற்றங்கள் ஒழுங்காகத் தொடர்கிறது. வெயில், மழை, பனி, குளிர் என இயற்கை அதனதன் இயல்பில் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது. இங்கு இயந்திரமாகிப் போன மனிதர்களும் அவரவர்கள் இயல்பில் இயங்குகிறார்கள்.

‘… மாலை முழுவதும்

விளையாட்டு – என்று

வழக்கப் படுத்திக்கொள்ளு

பாப்பா…’

மிட்சௌக்கி வருவதற்குள் வியர்வையில் தெப்பலாக நனைந்து போனாள். இரண்டு மூன்று நாட்கள் மழைக்குப் அப்புறம் இன்றைய வெயில் என்பதால்… சுள்ளென்று உறைத்தது. வியர்வையின் கசகசப்பும், ஆடையின் நெருக்கமும் உடலை ஒருவித சிரமத்திற்கு உள்ளாக்குவதாய் உணர்ந்தாள் ஜெயா. என்ன உணர்ந்து, என்ன பயன்? ஸ்கர்ட், டீ சர்ட், ஜீன்ஸ்,  மிடி என எத்தனை வகையான ஆடைகள் இருந்தாலும் இவளுக்கு விதிக்கப் படுவது மட்டும் வெளியில் சுடிதார், தாவணி – வீட்டில் பாவாடை, சட்டை மட்டுமே. ஏதாவது கேட்டால் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு என்றெல்லாம் கூச்சல் போடுவார் சிகாமணி. ஆனால் எல்லாவித அடையாளங்களையும் தொலைத்து விட்டுத்தான் இங்கு வாழ்கிறோம் என்பதை உணராமல்.

‘… பொய் சொல்லக் கூடாது

பாப்பா – என்றும்

புறஞ்சொல்ல லாகாது

பாப்பா!..’

மிட்சௌக்கி சிக்னலை கடக்கக் காத்திருக்கும்போதுதான் அவரை கவனித்தாள் ஜெயா. எப்படியும் அவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும். மெலிந்த தேகம். கையில் தடியின் உதவியுடன் நின்றிருந்தார். அவரை பார்க்கும்போது இவளுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது – தனியாக சாலையைக் கடந்துவிடுவாரா? பாவமாக இருந்தது ஜெயாவுக்கு.

‘தாதா ஆப் அக்கேலே ரோட் க்ராஸ் கரேகா… நை மே மதக்கருண்’ என்று அவரிடம் கேட்டாள்.

‘மதத்கியாதோ அச்சாஹே’ என்றார் பெரியவர்.

அவரின் வலது கையைத் தன் இடது தோளின் மேல் வைக்கச் சொல்லிக் காத்திருந்தாள்.

‘…தெய்வம் நமக்குத்

துணை பாப்பா – ஒரு

தீங்குவர மாட்டாது பாப்பா…’

சிக்னல் மாறியதும், மெதுவாக சாலையில் இறங்கினாள். தோளில் கை வைத்தபடி அவரும் உடன் நகர்ந்தார். இரண்டும் அகலமான சாலை என்பதால் தனது நடையில் கொஞ்சம் வேகம் காட்டினாள். நடுவில் வரும் போது பெரியவரின் கை அவளின் தோளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னிறங்கியது. நெஞ்சிலிருந்த கையைத் தட்டிவிட்டு விட்டு…

‘சாலே… மர்ஜா’ என்றபடி கிழவனின் கைத்தடியைப் பிடுங்கி அவனைக் தள்ளி விட்டுவிட்டு… மீறிவரும் அழுகையை அடக்கியபடி சாலையைக் கடந்தாள். சிக்னல் மாறியது. வண்டிகளின் ஹாரன் ஒலி காதைக் கிழித்தது. விட்டுப் போன பாடலை மனதுள் சொல்லிப் பார்த்தபடியே நடந்தாள் ஜெயா.

‘பாதகம் செய்பவரைக்

கண்டால் – நாம்

பயங்கொள்ளலாகாது பாப்பா!

மோதி மிதித்துவிடு பாப்பா -

அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு

பாப்பா!’

பி.கு:  குயில்தோப்பு குழந்தைகள் சிறப்பிதழ் (நவம்பர் 2000 – பிப்ரவரி 2001)-ல் வெளி வந்த எனது சிறுகதை.

சுமை – உரையாடல் போட்டிக்காக..
”இப்பயெல்லாம் யாருடா சாதி பார்க்குறா?”

“டேய்.. என்ன பேசுறோம்னு யோசிச்சுத்தான் பேசுறியா? இல்ல..”

“இதுல.. என்னடா யோசிக்க வேண்டி இருக்கு, மெட்ராஸுல பார்க்குறத தாண்டா சொல்லுறேன்”

“என்ன பார்த்த.. என்னத்த சொல்லுறியோ.. சொமக்குறவனுக்குத்தாண்டா.. சொமையோட வலி தெரியும். போகப்போக.. நீயே தெரிஞ்சுக்குவ..”

“அதையே தான் நானும் சொல்லுறேன். கண்ணைத்திறந்து உலகத்தை பாருங்கடா”

”போடா இவனே..நீயே இப்படி பேசிகிட்டு இருக்குறது சரியா படல. கடைசியா கேக்குறேன், நாங்க ஆரம்பிச்சு இருக்குற  அம்பேத்கர் மன்றத்துல சேர்ந்துக்கிற ஐடியா இருக்கா, இல்லையா.. அத மட்டுமாச்சும் சொல்லு”

”சாரிடா, நான் இருக்குறதோ மெட்ராஸுல, இங்க சங்கத்துல சேர்ந்து என்ன செய்யப்போறேன். அதனால நான் வரலைடா?”

“தெரியும்டா.. நீ இப்படித்தான் பேசுவான்னு தெரியும், நல்ல நெலமைக்கு வந்த பின்னாடி.. நீங்களும் மாறித்தான் போயிடுறீங்க, பழசை மறந்து தான் போயிடுறீங்க..”

“நீங்க என்ன வேணும்னா சொல்லுங்கப்பா.. நான் என்னோட கருத்த சொல்லீட்டேன். நான் கிளம்புறேன்.. இதுக்கு மேலையும் இப்படி ஒக்காந்து பேசிகிட்டு இருந்தேன்னா.. எங்க ஆத்தா.. கொண்ணுப்புடும்.”

யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் நடையைக்கட்டினேன். பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னோடு ஒன்றாக படித்தவர்கள். எல்லொரும் பாதியிலேயே படிப்பை கைவிட்டு, ஊரிலேயே தங்கிவிட்டவர்கள். நான் மட்டும் எப்படியோ படித்து முடித்து, சென்னையில் வேலையில் இருக்கிறேன்.

நகரம். மாநகரம். பலதரப்பட்ட மக்கள் நிறைந்த இடம். நான் வேலைக்குச் செல்லும் அலுவலகத்திலோ, தங்கி இருக்கும் மேன்சனிலோ எங்குமே எவருமே என் சாதி குறித்து விசாரித்ததில்லை.

இன்னும் சொல்லப்போனால், உடன் பணியாற்றும் உயர்சாதியினர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கூட போட்டிருக்கிறார்கள். யதார்த்தம் இப்படி இருக்க.. இன்னும் சாதிய வேறுபாடுகள் பார்க்கப்படுகிறது என்று இவர்கள் சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

முனிசிபாலிட்டியில் வேலை பார்க்கும் என் அப்பவுக்கு வேண்டுமானால் இந்த விவகாரங்கள் புரியாமல் போகலாம். அவர் பழைய மனிதர். ஆனால் இவர்கள் இந்தகால இளைஞர்களாக இருந்தும் இப்படி சாதிய எண்ணத்துடன் இருப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

நான்கு வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் ஊருக்கு திரும்பி வந்திருக்கிறேன். அதுவும் ஆடி மாத கோவில் திருவிழா சமயம் என்பதால் இரண்டு நாள் விடுப்பில் இன்று காலையில் தான் வந்து இறங்கினேன்.

எங்கள் ஊரில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாத திருவிழா மிகவும் விசேசமானது. கடற்கரையை ஒட்டி இருக்கும் உஜ்ஜய்னி மகாகாளி கோவில் வாசலில் தீமிதிப்பதற்காக விறகுகளை அடுக்கி வைத்திருப்பார்கள். ஊரில் இருக்கும் அத்தனை காவல் தெய்வங்களும் ஊர்வலமாக சென்று தீ மிதிப்பதை பூக்குழி இறங்குவது என்று சொல்லுவோம்.

சாதி வித்தியாசம் பார்க்காமல் அத்தனை சாமியாடிகளும் எல்லா ஏரியாவுக்குள்ளும் புகுந்து ஊர்வலம் போகும். உஜ்ஜய்னி கோவில் பூசாரி சங்கரன் பிள்ளை முதலில் கிளம்புவார். வடக்கு தெருவில் இருக்கும் வீரபத்திரன் கோவில் பூசாரி நடராஜன் சேர்வை, தெற்கு கரையோரம் இருக்கும் முனியசாமி கோவில் பூசாரி சதாசிவ பிள்ளை, பேச்சியம்மன் கோவில் பூசாரி சிகாமணி நாடார் என எல்லா சாதி சாமியாடிகளையும் அழைத்துக்கொண்டு எங்கள் சேரிக்கும் வரும், அங்கே இருந்து நொண்டிகருப்பன் கோவிலின் பூசாரியையும் அழைத்துக்கொண்டு, ஊர்வலம்  கிளம்பி உஜ்ஜய்னி கோவில் வாசலை அடையும். பின்னர் ஒவ்வொரு சாமியாக குறி சொல்லி, தீக்குள் இறங்கி, மறுபக்கத்தை அடைவார்கள்.

எல்லா சாமியும் இறங்கிய பின் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் ஒன்றை தொடுவார் உஜ்ஜய்னி கோவில் சாமியாடி. அந்த பெட்டிக்குள் இருக்கும் வண்ண பட்டாடையைப் பொறுத்து, எதிர்வரும் ஆண்டு எப்படி இருக்கும் என்ற ஆரூடம் சொல்லப்படுவது தான் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வு.

மற்ற கோவில்கள் போல, எங்கள் கோவிலுக்கு நிரந்தர சாமியாடி கிடையாது. இரண்டு தமிழ் மாதத்திற்கு ஒரு குடும்பம் என்று சுழல் வடிவில் அந்த பொறுப்பு சுற்றி வரும். இம்முறை திருவிழாவுக்கு  சாமியாடியாக  இருக்கும் வாய்ப்பு எங்கள் குடும்பத்திற்கு வாய்த்திருக்கிறது. அதனாலேயே ஆத்தாளுக்கு தலைகால் புரியவில்லை.  கட்டிக்கொடுத்த அக்காவையும் திருவிழாவுக்கு அழைத்திருந்தாள். இருக்காதா பின்னே.. பல வருடங்களுக்கு பிறகு எங்கள் குடும்பத்திற்கு இந்த வாய்ப்பு வந்திருக்கிறது.

வீட்டு வாசலை அடைந்ததும் ஓடி வந்து காலைக் கட்டிக்கொண்டது அக்காவின் நான்கு வயது பெண். அவளைத் தூக்கி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன்.

“ராசா.. வந்துட்டியாப்பா.., ஒன்னையத்தேடி வரணுமோன்னு நெனைச்சேன்.. நல்லவேள வந்துட்ட.. பின்னாடி போய் சீக்கரம் குளிச்சுட்டு, புது உடுப்பு எடுத்து வச்சிருக்கேன், அதை போட்டுட்டு ரெடியாகு, ஒங்க அப்பா இப்ப வந்திருவாரு..” பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும் அம்மாவின் பரபரப்பு. நான் பின் கட்டுப்பக்கம் போய் குளித்து முடித்துவிட்டு வீட்டினுள் வருவதற்கும், அப்பா வரவும் சரியாக இருந்தது.

வழக்கத்துக்கு மாறாக மெலிந்து போய் இருந்தார். சாமியாடி என்பதால், தீமிதிக்க நாற்பது நாள் விரதம் இருந்திருப்பார் போல. கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக்கொண்டிருக்கும் போதே.. குளித்துமுடித்து, மஞ்சள் வண்ணத்தில் வேட்டியுடன் உள்ளே வந்தார்.

“அடியே.. நான் கோவிலுக்கு போறேன். நீங்க எல்லாம் பின்னாடியே வந்திருங்க” என்றபடியே ஓட்டம் பிடித்தார்.

அம்மா, அக்கா, அத்தான், குழந்தை சகிதமாக நாங்கள் கோவிலை அடைந்த போது, எங்கள் காமராஜர் நகர் முழுவதும் குழுமி இருந்தது. பூசாரியின் குடும்பமே தாமதமாக வந்ததை வினோதமாகப் பார்த்தார்கள்.

தோளுக்கு இரண்டு பக்கமாக மாலை போட்டிருந்தார் அப்பா.. கையில் வெள்ளி பூன் போட்ட பிரம்பு ஒன்று இருந்தது. பறை சத்தம் பலமாக இருந்தது.

டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்…டின்..டின்..

கொட்டுசத்தத்துக்கு ஏற்றவாறு அப்பா ஆடிக்கொண்டிருந்தார். பெண்கள் வரிசையாக வந்து நின்று குடம் குடமாக நீரை ஆடிக்கொண்டிருந்த அப்பாவின் காலில் ஊற்றினார்கள். இடுப்பில் இருந்த சுருக்கு பையிலிருந்து அவர் திருநீறு பூசும் போது, மூக்கில் மேல் கைவைத்து பவ்வியமாக  பூசிக்கொண்டார்கள். ஆட்டமும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்.

காலனிக்குள் மற்ற சாமியாடிகள் கொட்டு சத்தத்துடன் பிரவேசிக்கத் தொடங்கியபோது, பறையின் வேகம் கூடியது. எங்கும் பறையெலி எதிரொலித்தது.

உஜ்ஜய்னி சாமியாடி முதலில் வந்து நின்றார். ஒர் அடி இடைவெளியில் எட்டுக்கும் மேற்பட்ட சாமியாடிகள் ஆடிக்கொண்டிருந்தார்கள். நொண்டிகருப்பு சிலையைப் பார்த்தபடியே.. நின்ற உஜ்ஜய்னி சாமியாடி.. மெதுவாக முன்னும் பின்னும் அசந்தபடி இருந்தார்.

டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்.

டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்…டின்..டின்..

டண்டக்கும்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்…டின்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்.. டின்.. டண்டக்கும்..

பறையொலியின் வேகம் கூடக்கூட உஜ்ஜய்னி சாமியாடி.. வேகமாக ஆடத்தொடங்கினார். அவர் ஆட்டம் அதிகமானதும் அத்தனை சாமியாடிகளும் வேகமாக ஆடத்தொடங்கினார்கள்.

“ம்..ர்ர்ர்ம்ம்ம்ம்.. சூ..ம்ர்ம்ர்ம்ர்ம்ர்ம்ர்” என்று வினேதமாக ஓசை எழுப்பியபடி நாக்கை வெளி நீட்டி உள்ளுக்கும் மடித்து, செந்தூரம் பூசப்பட்ட முகத்திலிருந்து விழிகளை பிதுக்கி உடலை அப்படியும் இப்படியுமாக முறுக்கி குதித்தார் உஜ்ஜய்னி சாமியாடி.

கோவிலை ஒரு சுற்று சுற்றி வந்து, வேகமாக நடக்கத்தொடங்கியது சாமி. பின்னாடியே எல்லா சாமிகளும்.. வேகமெடுத்தன. அப்பாவும், தலையில் கரகத்துடன் பின் தொடர.. நாங்களும் கூட்டமாக தொடர்ந்தோம்.

காலணிக்கு வெளியே வரும் வரை இருந்த வேகம், வெளியே வந்ததும், குறைந்தது. கடற்கரை நோக்கி போகவேண்டுமென்றால்.. கள்ளர் தெருவாழியாக போய், மறவர் தெருவை அடைந்து, இட்டிப்பிள்ளை சந்துவழியாக கிழக்குத்தெருவையும் கடந்து விட்டால்.. அடுத்து கோவில் இருக்கும் சன்னதி தெரு வந்து விடும்.

ஒவ்வொரு தெரு வழியாக போகும் போதும், பெண்கள் குடம் குடமாக தண்ணிர் ஊற்றி, ஒவ்வொரு சாமியாடியிடமும், திருநீறு பூசிக்கொண்டார்கள். காலில் தண்ணீர் ஊற்றும் போது மட்டும் சாமியாடிகள் ஆடாமல், ஒரே இடத்தில் நின்று, முன்னும் பின்னுமாக அசைவார்கள். திருநீறு பூசிக்கொள்ளும் சமயங்களில் சிலருக்கு குறி சொல்லுவதும் நடந்தது.

நான்கு தெருக்களை கடந்து, கடைசியாக சன்னதி தெருக்குள் நுழையும் போது தான் கவனித்தேன். எல்லா சாமியாடிகளின் கால்களிலும் ஈரமிருந்தது. அப்பாவின் காலில் மட்டும் ஈரமில்லை. தூசுகளால் நிறைந்திருந்தது. இடுப்பில் இருந்த சுருக்கு பை கூட பிரிக்கப்படாமலேயே இருந்தது.

உரையாடல் போட்டிக்காக..

பேய் வீடு
உங்களுக்கு பேய்கள் பற்றிய பயமுண்டா.. அது பற்றிய கதைகள் கேட்டு இருக்கிறீர்களா.. சிறுவயது முதல் விதவிதமான பேய்கள், வித்தியாசமான கதைகள் எதற்கும் பஞ்சம் இருந்ததில்லை. அல்லது இருப்பதில்லை. இன்னும் கூட பெருநகரவாசனை அறிந்திடாத ஊர்களில் இவை உயிர் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் என் அக்காவின் குழந்தைகள் எங்கள் ஊருக்கு வந்துவிட்டுப் போகும் போது நிறைய பேய்கதைகளை விரும்பி கேட்டுவிட்டுத்தான் போவார்கள். அவர்களின் ஊருக்குப் போனதும் சகமாணவர்களிடம் இது பற்றி சொல்லி, அவர்களை வாய்பிளக்கச்செய்வார்களாய் இருக்கும்.

ஆனால் எனக்கு அவை பற்றிய பயம் (நம்பிக்கை) இப்போது இல்லை. பயம் தெளிந்திற்கு காரணம் என் பாண்டி சித்தப்பா. நானும் பயந்த காலம் ஒன்று இருந்தது. கொஞ்சம் இருட்டினாலே.. கொல்லைப் பக்கம் போக துணைக்கு ஆள் தேடியதெல்லம் இப்போதும் நினைவில் இருக்கிறது. கனவு கண்டு பயந்து நடு இரவில் எழுந்து அம்மாவின் கதகதப்பான கைகளுக்குள் சுருண்டு தூங்கிய நாட்கள் இப்போதும் நினைத்தாலும் சுகமானவை. அந்த அன்பான கைகளைத்தாடி.. ஒரு பேய்யும் கனவில் கூட வந்ததில்லை என்பது விளங்காத ஆச்சரியம்.

எங்களூரில் கிழக்குத்தெரு, சரஸ்வதி துவக்கப்பள்ளியில் தொடங்கி கடற்கரையில் போய் முடியும். அந்த தெருவின் கடைசில் கடற்கரையை ஒட்டினார்ப் போல ஒரு பாழடைந்த பங்களா ஒன்று இருந்தது. பாதியாய் சாத்திக்கிடக்கும் பெரிய மரக்கதவு. அதன் மீது விதவிதமான வேலைப்படுகள் செய்யப்பட்டிருக்கும். அது போல வேலைப்படுகளை கோவில் கதவில் மட்டுமே பார்க்க முடியும். தனி வீட்டின் அப்படியான ஒரு வேலைப்படுகள்

நிறைந்த கதவைப் பார்க்கும் போது பிரம்மிப்பு தோன்றும். அந்த நாட்களில் எல்லா வீட்டுத் திண்ணைகளும் திறந்து தான் இருக்கும்.(இப்போது திண்ணைகளே இல்லை என்பது வேறு விசயம்) தெருவில் வருவோர் போவோர் என யார் வேண்டுமென்றாலும் அமர்ந்து இளைப்பாறிச் செல்லலாம். ஆனால் அந்த பங்களா வீட்டைச் சுற்றிலும் ஆளுயரத்திற்கு கோட்டைச்சுவர் கட்டி வைத்திருந்தார்கள். அங்கு திண்ணை கிடையாது. கோட்டைச் சுவற்றைத் தாண்டி சிறிது தூரத்தில் வீடு ஆரம்பித்து விடும். கோட்டைச் சுவறின் வாசலில் இரும்பு கிரில் கேட் போட்டு சாத்தி வைத்திருந்தார்கள்.

எனக்கு விபரம் தெரிந்து அந்த வீட்டில் யாரும் வசித்ததாக நினைவு இல்லை. அந்த வீட்டைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. அதில் ஒன்று தான். ஜமீந்தாரின் அந்த வீட்டை வடநாட்டு பணக்காரர் வாங்கி குடி வந்ததாகவும், குழந்தைகள் இல்லாத அவரும் அவர் மனைவியும் அடிக்கடி புரியாத மொழியில் சண்டை போட்டுக்கொள்ளுவார்களாம், ஒரு நாள் அந்த பெண் தீயில் எரிந்தபடி தெருமுழுக்க ஓடி செத்து விழுந்ததாகவும், அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்றும், அந்த பணக்கரர் கொலை செய்து விட்டார் என்றும், வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி அந்த பணக்காரர் இறந்து போனதாகவும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதன் பின் அந்த வீட்டில் அவர்களின் பேய் உலாவுவதாக எல்லோரும் பேசத்தொடங்கினார்கள்.

தம்பி, தங்கச்சியை பயப்படுத்த நானே கூட பேய்கதைகள் சொல்லி இருக்கிறேன். சிறுவயதில் வீட்டின் பெரிய திண்ணையில் அமர்ந்து மின்சாரம் தடைபட்ட இரவில் தன் கணீர் குரலுடன் எங்களுக்கெல்லாம் பாண்டி சித்தப்பா பேய் கதை சொல்லுவார். அகண்ட கண்களும், கன்னத்தை மறைக்கும் பெரிய மீசையுமாய் லாந்தர் ஒளியில் அவரே பயங்கரமாகத் தெரிவார். பாண்டி சித்தப்பாவின் அனேக பேய் கதைகளின் களம் அந்த பங்களா வீட்டைச் சுற்றிதான் இருக்கும். அவர் வேலைக்குப் போய் வந்த பிறகு தெருக்குழந்தைகளை எல்லாம் அழைத்து திண்ணையில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பிப்பார். கதை முடிவதற்குள் பலர் வீட்டிற்கு ஓடிவிடுவார்கள். சிலரை அம்மாக்கள் வந்து அழைத்துப் போய் விடுவார்கள். நானும் என் சின்ன அண்ணனும் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டபடியே கதை கேட்டுக் கொண்டிருப்போம். பல நாட்களில் பாண்டி சித்தப்பாவின் கதை கனவில் வந்து பயந்து அலறி இருக்கிறேன். அப்போதெல்லாம் அம்மா சித்தப்பாவை வைது கொண்டே துருநீரு போட்டு தூங்க வைப்பாள். அடுத்த நாள் சித்தப்பா எங்கள் வீட்டுக்கு வரும் போது, சேர்த்து வைத்த கோபத்தை எல்லாம் கொட்டித்தீர்த்திடுவாள் அம்மா. அவரும் சிரித்துக்கொண்டே இனி பேய் கதை சொல்லமாட்டேன் என்று போய் விடுவார். ஆனாலும் மாலையே வந்துவிடுவர்.. திரும்பவும் கதை சொல்ல!

ஊரே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த்து. அந்த பங்களா வீட்டுப்பக்கம் என்னைப் போன்ற சிறுவர்கள் யாருமே போவதில்ல. அதுவும் சுட்டெரிக்கும் மதிய வேலையிலும், மாலையில் விளக்கு ஏற்றிய பின்னரும் பெரியவர்கள் கூட அந்த பக்கம் போய் வருவதில்லை. குறுக்குச் சந்தின் வழி அடுத்த தெருவுக்குள் போய் அந்த பக்கமாகத்தான் கடற்கரைக்கு போய் வந்தார்கள். பங்களாவின் பல பகுதிகளில் காரை பெயர்ந்து விழுந்து, சுண்ணாம்புச் சுவர் தெரிந்தது. கதவு இல்லாத சன்னல்கள் வழியே உள்ளே பார்க்கும் போதே அச்சம் ஏற்படுத்தும் அந்த பங்களாவின் இருட்டு. ஆளுயரம் வளர்ந்த எருக்கச்செடிகளும் பங்களாவினுள் இருக்கும் பறவைகளின் கூடும் கூடுதலான அச்சத்தை ஏற்படுத்தி இருந்தன.

பள்ளியில் எழுதாத சட்டமே இருந்தது. யாரும் அந்த பங்களாவின் பக்கம் போகக்கூடாது என்று. பங்களாவைப் பற்றிய கதைகள் ஊர் முழுக்க பலரால் பல விதத்தில் பரப்பப்பட்டு இருந்த்து. எல்லா வாலிபர்களுக்கும் வயசாலிகளுக்கும் அந்த பங்களா குறித்து, சண்டை போடுவது மாதிரி காரசாரமாக பேசிக்கொள்ளுவார்கள்.

சைக்கிள் ஓட்டிப் பழகிய ஒரு மாலைப் பொழுதில் இடம் கவனிக்காது பங்களாவின் பக்கம் வந்துவிட்டேன். நாடகம் நடிக்க வந்த பட்டிணத்துக்காரி ஒருத்தியுடன் பாண்டிச்சித்தப்பா பதுக்கியதைப் பார்த்ததிலிருந்து எனக்கு அந்த பேய் பங்களாவின் மீது பயமற்றுப் போனது.

துரைப்பாண்டி
இது கதையல்ல! ஆனால் அந்த வடிவத்தில் சொல்லப்பட்ட முயற்சி!
என்வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களில் அடி மனதில் படிந்துபோயிருப்பவர்களில்… இந்த துரைப்பாண்டியும் ஒருவன். எதிர்ப்படும் எல்லா பணியிடச் சிறுவர்களுக்குள்ளும் ஒவ்வொரு விதத்தில் அவனை நான் பார்த்து வருகிறேன். இனி.. நீங்களும் அவனைத் தேடலாம். என்னைப்போலவே!

அன்று வீடு மாற்றியாக வேண்டிய நாள். அதனால் எல்லா பொருட்களையும் அட்டைப் பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு டைரிக்குள் இருந்து சில கடிதங்கள் விழுந்தன. அவற்றை எடுத்துப் பார்த்தேன். ஒன்று என் அம்மா அனுப்பிய பழைய கடிதம். நான் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, மும்பையில் படுக்கையில் விழுந்தபோது, ஊருக்கே வந்துவிடும்படி அன்பொழுக கேட்டுக்கொண்ட கடிதம். அம்மா அதிகம் படிக்காதவள். ஆனாலும் அவளின் கையெழுத்து குண்டுகுண்டாக அழகாய் இருக்கும். பழைய தமிழில் இருந்த எழுத்துக்களை மீண்டும் படித்தபோது, தாய் மேலான காதல் இன்னும் அதிகமானது. இன்னொன்றும் அம்மாவுக்கான கடிதம் தான், எழுதியவன் நான். ஆனால் என் அம்மாவுக்கு அல்ல! அது துரைப்பாண்டியின் அம்மாவுக்கான கடிதம்.

துரைப்பாண்டி. உங்களில் பலரும் கூட இவனைப் பார்த்திருக்க கூடும். பதினோரு வயது நிரம்பியவன்(1999-ல்). கட்டையான உருவம், மெலிந்த தேகம், ஏக்கம் வழியும் கண்களுடையவன். பெரிய அலுமினியப்பாத்திரத்தில் இட்லிகளைச் சுமந்து விற்பனை செய்பவன். நான் அவனை முதலில் பார்த்தது மாகிம் தொடர்வண்டி நிலையத்தின் அருகில். பால் முகம் மாறா அவனது பருவமும்,உருவமும் என்னை ஏதோ செய்ய… அவனை அழைத்தேன். அருகில் வந்தவன் நிமிர்ந்து பார்த்தான்.

“க்யா சையே…?” என்றன்.

“அடேய்.. நா தமிழ்காரண்டா…”

“என்ன வேணும்ண்ணே… இட்லியா.. தோசயா?”

“அதெல்லாம் இருக்கட்டும்.. ஓம் பேரென்னப்பா..?”

‘என்னத்துக்கு கேக்குறீங்க?’

“சும்மாத்தான்… சொல்லேன்..”

‘தொறப்பாண்டி’

“எந்த ஊரூப்பா…?”

‘சும்மா.. தொணத்தொணங்காதண்ணே…யாவரத்துக்கு போவனும்..’ என்று நழுவப்பார்த்தவனைத் தடுத்து, ‘ரெண்டு ரூவாயிக்கு இட்லி கொடு’ என்றேன்.

வழவழப்பான ஆங்கிலப் பத்திரிக்கையின் இரண்டு காகிதத்தை ஒன்றன் மீது ஒன்றாய் வைத்து, இட்லிவைத்து, சட்டினியையும் சாம்பாரையும் ஒன்றாய் ஊற்றி நீட்டினான். அதுவரை அப்படி சாப்பிட்டதில்லை நான். அவனிடம் பேச வேண்டுமென்பதற்காக… தோளில் கிடந்த பையை சரி செய்தபடி, இரு கையாலும் பெற்று கொண்டேன்.

இட்லி காகிதத்தை இடது கைக்குள் அடக்கி, வலது கையால் ஒரு இட்லியை விண்டு வாயில் போட்டபடியே கேட்டேன்.

“ம்… இப்போ சொல்லு?”

‘மதுர..’

“மதுரயில..”

‘மேலூருக்கு பக்கம்’

“அதா(ன்) எங்க…”

‘என்னத்துக்கு இவ்ளோ கேக்குறீங்க… நீங்க ஆரூ?’ என்றன் சற்றே எரிச்சலுடன்.

”அடேய்ய்ய்… நானும் மதுரக்காரந்தா(ன்)… இங்கென ஒரு பத்திரிக்கையில வேல பாக்குறேன்.”

‘பத்திரிக்கையினா…’

“பேப்பர்ரா.. நீயூஸ் பேப்பர்! நம்ம ஊரூல தந்தி பேப்பர் வரும்ல… அது மாதிரி…”

பேப்பர் காரைய்ங்களா நீங்க… அய்யய்யோ… ஆள விடுன்னே… எங்க சேட்டு யாரு கூடயும் பேசக்கூடாதுன்னு சொல்லி இருக்காரு! சீக்கரம் துண்ணுட்டு காசு காசு கொடுத்துரூங்க.. நா போயிறேன்’ என்றபடி வேறு பக்கம் பார்க்கத் தொடங்கினான்.

“தொரப்பாண்டி.. உன்னய பத்தியெல்லாம் எழுத மாட்டேண்டா… எழுதினாலும் எங்க எடிட்டர் போட மாட்டார்… சும்மா தாண்டா கேட்டேன்.”

‘எடிட்டர்னா…?’

“ம்… எனக்கு சேட்டு மாதிரி..! அத வுடு தெனம் இங்கிட்டுதா வருவியா..?”

‘ஆமா… என்னத்துக்கு கேக்குறீங்க…’

“தெனம் இட்லி திண்ணலாம்னு தான்”

காலியான காகிதத்தை கசக்கி வீசிவிட்டு, அவனிடமே… வேறு காகிதம் வாங்கி… கைகளைத் துடைத்துகொண்டேன். காசை வாங்கிக்கொண்டவன் பாத்திரத்தைத் தலைக்கு ஏற்றி… சிட்டாய்ப் பறந்து விட்டான். அதன்பின் அவனிடம் ரோட்டு ஓரத்திலேயே இட்லி சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. நான்கு மாதங்கள் தொடர்ந்து அவனிடம் சாப்பிடத் தொடங்கியதில் நெருக்கமானவனாகிப் போனேன் அவனுக்கு.

வீடியோ தியேட்டர்களில் பார்த்த புதுப்படம், டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டியது, சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காத போலீஸ்காரர்கள், தலையைத் தட்டி பாக்கெட்டைக் காலி செய்த மராட்டியர்கள் என்று பேச ஏகப்பட்ட விஷயங்கள் அவனுக்கிருந்தது. ஆனால் அவற்றை காது கொடுத்து கேட்க அவனுக்கு நான் மட்டுமே இருந்தேன்.

வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவனைச் சந்திப்பது கிடையாது. மற்ற நாட்களில் எனக்காக அவனோ.., அவனுக்காக நானோ காத்திருந்து சந்தித்து விட்டுப் போவது வாடிக்கையாகியிருந்தது. சந்தித்ததும் அருகிலிருக்கும் தேனீர்கடைக்கு போய் தேனீர் குடிப்பதும் எங்களது வாடிக்கையாகியிருந்தது. அந்த ’பையா’க்காரனின் கடை எங்களது மீட்டிங் பாய்ண்ட் ஆனது. சந்திக்க முடியாத தருணங்களில் கடைக்காரனிடம் செய்தி சொல்லிப் போவோம்.

எப்போதும் அவன் பேசும் போது அவனது கண்கள் இங்குமங்குமாய் அலை பாய்ந்து கொண்டே தானிருக்கும். ஒரு முறை காரணம் கேட்டதற்கு, “எங்க சேட்டு கிட்ட எட்டு பசங்க இருக்காய்ங்கண்னே… நா இப்டி ஒங்க கூட பேசுறத பாத்துப்புட்டா… அவருகிட்ட சொல்லீடுவாய்ங்கண்னே…அதா சுத்தி முத்தி பாக்க வேண்டியதாயிருக்கு..”என்றான்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் குடும்பத்தைபத்திச் சொல்லுவான்… கூலி வேலை பார்த்து வந்த அப்பாவின் மரணத்திற்குபின் அம்மா கூலி வேலைக்கு போய்வருவதை… அக்காவைத் தாய்மாமனுக்கு மணம்முடித்து கொடுத்ததை.. மூன்றாவது படிக்கும் தங்கையை நன்கு படிக்க வைக்க வேண்டுமென்ற தனது கனவு பற்றி… என எல்லா கதைகளையும் சொல்லுவான். அக்காவின் திருமணத்திற்கு கடன் கொடுத்த தூரத்து உறவுனர் மூலமே மும்பைக்கு அழைத்து வரப்பட்டிருந்தான். சம்பளம் எவ்வளவு என்பதே தெரியாமல் தினம் பதினாறு முதல் பதினெட்டு மணி நேரம் வேலை பார்த்து வந்தான். வீட்டுக்கடன் தன்னுடைய வேலை மூலம் அடைபட்டு வருவதாகவும் சொன்னான். ஐந்தாவதுடன் தனது படிப்பு நின்று போனது குறித்து அதிகம் கவலை இல்லை அவனிடம். ஆனால்… பள்ளி நண்பர்கள், உறவுக்காரர்களின் பிரிவு, தெருவில் விளையாடுவது என்பது போன்றவற்றை இழந்ததில் ஏக வருத்தமுண்டு அவனுக்கு. அது பற்றிச் சொல்லும்போதே அவனது ஏக்கம் கண்களின் வழி நீராய் வழிந்தோடும்.

ஒரு சனிக்கிழமை தாமதமாய்ப் போய் சேர்ந்ததினால் துரைப்பாண்டியை சந்திக்க முடியாமல் போனது. தேனீர்க்கடை’பையா’விடம் மறுநாள் கண்டிப்பாய் சந்திக்கும் வரும்படி சொல்லி இருந்தான்.

ஞாயிற்றுக்கிழமை அவனை சந்திக்க காலையிலேயே கிளம்பினேன். எனக்காகக் காத்திருந்தான். என்னைப்பர்த்ததும் அவனது முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் பரவத்தொடங்கின.

“அப்படி என்னப்பூ… அவசரம் சண்டே வரச்சொல்லியிருக்க..?”

சில நிமிட மவுனத்திற்குப் பின் தழுதழுத்த குரலில் சொன்னான்… ‘நா… ஊருக்கு…போறேண்னே…’

“ஏண்டா..?” என்றதுமே… பொலபொலவென அழுது விட்டான். அழுது முடிக்கட்டுமென காத்திருந்தேன். விசும்பியபடி.. அவனே தொடர்ந்தான்… ‘ரொம்ப அடிக்கிறாய்ங்கண்னே… முந்தா நாத்து கூட சூடு வெச்சுட்டாய்ங்கண்னே…’ என்று தேம்பியவை தேற்றினேன்.

“நா டிக்கெட்டு எடுத்து தரவாடா…”

“ம்…ஹூம்… வேணாம்னே…. ஆத்தாலுக்கு லெட்டர் போட்டா… மாமா வந்து கூட்டிகிட்டு போயிருவாருண்னே…நீங்க லெட்டர் எழுதித்தாங்க போதும்…” என்றான் கண்களை துடைத்தபடி… எங்கள் பேச்சின் பொருள் புரியாவிட்டாலும்.. துரைப்பாண்டியின் துயரத்தை உணர்ந்தவன் போல, ரெண்டு தேனீர் கிளாஸை நீட்டினான் கடைக்காரன். நாங்கள் எடுத்துக்கொண்டதும்… துரைப்பாண்டியின் தலையில் தடவிக்கொடுத்தபடி உள்ளே போய் விட்டான். தோள்பையைத் திறந்து வெள்ளைக் காகிதத்தை எடுத்து… அவன் சொல்லச் சொல்ல… எனக்கு என்னவோ செய்தது. அழுது விடக்கூடாது. அது அவனையும் பாதிக்கும் என்பதால் கட்டுப்படுத்திக்கொண்டு, அவனது வார்த்தைகளை எழுத்துக்களாக உருமாற்றினேன்..!

அன்புள்ள ஆத்தவுக்கு..
பாண்டி எழுதுவது! எப்டி ஆரம்பிக்கிறதுனே தெரியல… அன்னக்கிளி பாப்பா எப்டி இருக்கு? ஸ்கூலுக்கு போவுதா? அக்காவும், மாமாவும் நம்ம வூட்டுக்கெல்லாம் வாராகளா…
ஆத்தா… எனக்கு இங்கென இருக்கவே பிடிக்கல.. ராவுல படுக்க லேட்டாவுது ரவைக்கு வெரசா எழ வேண்டி இருக்கு.. அவனவ(ன்) பொற மண்டையில தா தட்டுறாய்ங்க..! எல்லாத்தையும் விட நா சின்னவனா இருக்குறதுநாள என்னையவே அதிகமா வேல வாங்குறாய்ங்க…
ஏ..ஆத்தா.. கடனே வாங்காம நாமொல்லாம் வாழ முடியாதா…? சித்தப்பூன்னு சொல்லித்தானே.. இவரு கூட இவரு கூட அனுப்பிச்ச.. இங்கன அவர எல்லோருமே ‘சேட்டு’ன்னு தா சொல்லுறேம்… சின்னமாவும் சரியில்ல..எப்பவும் வஞ்சுகிட்டே இருக்குது… ரெண்டு நாளக்கி முந்தி ரவைக்கு எழ லேட்டாகிடுச்சுன்னு சூடு வச்சுட்டய்ங்க..!

வேணாந்தா…இந்த ஊரு வேணா…

நம்ம ஊருக்கு வரணும்போல இருக்குது… மாமாவை அனுப்பிச்சி..என்னய..கூட்டிக்க ஆத்தா… இனி நா ஓங்கிட்ட சுடு சோறு கேக்க மாட்டேன்… பாலு மாமா பட்டறய்க்கே போறேன்… நீ எது ஊத்தினாலும் அதையே குடிக்கிறேந்தா.. என்னைய கூட்டிக்க..ஆத்தா…

அன்னக்கிளி பாப்பா, அக்கா, மாமா, உன்னையனுட்டு..எல்லாத்தையும் பாக்க ஆச ஆசயா இருக்குத்தா… என்னய கூப்பிட்டுக்கத்தா…’’

அன்பு மகன்
துரைப்பாண்டி

எழுதி முடித்ததும் வாசித்து காட்டினேன். முகத்தில் சற்று தெளிவு தெரிந்தது…தான் எப்படியும் மீட்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கை அவன் கண்களில் தெரிந்தது.

“முகவரிய.. அதா… அட்ரஸ..சொல்றா தம்பீ”

‘ம்.. அம்மா பேரு நம்புத்தாய்ண்னே…’ என்று அவன் ஆரம்பிக்கும் போதே… ‘இங்கன என்னடா பண்ற…?’ என்று வந்து நின்றான் பதினெட்டு வயதில் ஓர் இளைஞன். அவன் தலையிலும் இட்லி பாத்திரமிருந்தது. அவனைப் பார்த்ததும் உதறல் எடுத்தது… துரைப்பாண்டிக்கு…, ‘இவரு மதுரக்காரர்ணே… தெனம் எங்கிட்ட தா சாப்பிடுவாரு… அதா…. பேசிக்கிட்டு இருந்தேன்… அப்ப..வரேன் சார்..’ என்றபடியே இட்லி பாத்திரத்தோடு கிளம்பி, அந்த இளைஞனோடு நடக்கத்தொடங்கினான். அவனோ… என்னை விசித்திரமாய் பார்த்தபடியே.. போனான்.

அன்றுதான் துரைப்பாண்டியை கடைசியாக பார்த்தது. அதன்பின் சந்திக்கவேயில்லை. அவனது அம்மாவுக்காக எழுதிய கடிதமும் சேரும் முகவரியற்று.. என்னிடமே இருக்கிறது. ‘’இப்போது… எப்படி(?) இருப்பான்..? ‘’ என்ற கேள்வி மட்டும் இன்றும் குடைந்து கொண்டே இருக்கிறது என்னுள்.

நினைவுக்கு:

1. “க்யா சையே…?”= என்ன வேணும்?

2. சேட்/ சேட்டு = முதலாளி

3. பையா = உ.பி மாநிலத்தவரை மும்பையில் குறிப்பிடும் சொல்.

பிரசுரம் ஆனது தான் என்றாலும், கோப்புக்காக வலையேற்றி உள்ளேன்.

தண்ணீர் தேசம்
ஒன்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் சொந்த மண்ணை மிதிப்பதில் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது. குதிரை வண்டிகளும் மிதி ரிக்ஷாக்களும் நிறைந்திருந்த ரயில் நிலையத்தில் இப்போது ஆட்டோக்கள் வரிசை கட்டி நின்றிருந்தன. எஸ். எஸ். கலைவாணர் வீதியில் நிறைந்திருந்த குடிசைகளில் பல கட்டிடங்களாக உருமாறியிருந்தன.

மீன்பிடித் தொழில் மட்டுமே பிரதானமாயிருந்த ஊரில், துணிக்கடை, மருந்துக்கடை போல தெருக்கொரு டாஸ்மார்க் கடையின் போர்டுகளைப் பார்க்க முடிந்தது. சைக்கிள் குறைந்து ஸ்கூட்டரிலும், ஹீரோ ஹோண்டாவிலும் பறந்தபடி இருந்தார்கள் இளைஞர்கள். சைக்கிளின் பின்புறம் கேன் கட்டி வலம் வரும் பால்காரர்கள், எம்-80இல் போய்க் கொண்டிருந்தார்கள்.

புராண புண்ணியதலமாக மட்டுமே அறியப்பட்டிருந்த ஊர், முதல்முறையாக, அறிவியல்பூர்வமாகவும் தன் பெயரைப் பதிவு செய்துகொண்டது, அப்துல் கலாம் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகுதான்.

கடைவீதியில் டீக் குடிக்க நின்ற போது சூடாக போட்டுக் கொண்டிருந்த சுவிங்கத்தை எடுத்துத் தின்றேன். பழைய சுவை மாறாமலிருந்தது.
ஊர் மாறிப் போனது போலவே வீடும் மாறிப் போய் இருந்தது. கலர் டீவி, ப்ரிஜ், மெத்தையுடன் கட்டில், பச்சை வண்ண தொலைபேசி.. குளித்து சாப்பிட்டுவிட்டு, வழக்கமாக நண்பர்கள் கூடும் லாலா மிட்டாய்க்கடைக்குப் போகலாம் என்று கிளம்பினேன். மருதுபாண்டியர் சிலையைக் கடந்து நடந்து போய்க் கொண்டிருக்கும்போது எதிரில் வந்த டேங்கர் லாரி ஒன்று மோதுவது போல் வந்து நின்றது.

“டே(ய்).. சுந்தரம்…”

“பங்கா.. எப்படா வந்த?”

“நேத்திக்கு..”

“ஒரு போன் கூட பண்ணலியேடா… அதுசரி.. இப்ப எங்கடா போற..”

“சும்மா அப்படியே வந்தேன்டா”

“அப்ப சரி.. வண்டியில் ஏறிக்கோ, ‘ஓலைக்குடா’ வர போய்ட்டு வந்திடுவோம்”

ஏறிக் கொண்டேன்.

ராமேஸ்வரத்தைச் சுற்றி இருக்கும் பல மீனவ கிராமங்களில் ஓலைக்குடாவும் ஒன்று. ஊரின் வட கிழக்குப் பகுதியில் கடற்கரையை ஒட்டினாற் போலிருக்கும் கிராமம். முன்னூறுக்கும் குறையாத குடிசைகள். ஒரு தொடக்கப் பள்ளி, சின்ன தேவாலயம், மினி தபால் நிலையம் மட்டுமே கொண்ட சிற்றூர். மருத்துவ வசதிகளுக்கு கிராம மக்கள், ராமேஸ்வரத்திற்குத் தான் வருவார்கள்.

மருத்துவ தேவைகளுக்காக மட்டுமன்றி அவர்கள் ராமேஸ்வரத்துக்கு வருவதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அது நல்ல தண்ணீருக்காக. நாடு பொன்விழா கண்ட பின்னும்கூட ‘ஓலைக்குடா’ போல பல கிராமங்களுக்கும் குடிதண்ணீர் வசதி மட்டும் ஏனோ வாய்க்கவில்லை. பல வருடங்களாக மக்கள் ஆறு கிலோமீட்டர் நடந்து வந்து, ஊருக்குள்ளிருந்துதான் குடிதண்ணீர் தூக்கிச் செல்வார்கள். சில சமயங்களில் சைக்கிளின் கேரியரில் இரண்டுபுறமும் குடம் கட்டிச் செல்லும் பெண்களையும் பார்க்கமுடியும். வறட்சிக்குப் பெயர்போன ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓலைக்குடா போன்று பல கிராமங்கள் உள்ளன.

“ஏண்டா.. இன்னுமா அங்ஙன தண்ணிப் பிரச்சனை தீரல?”

“ஆமாண்டா.. வர்றவனுங்க எல்லாம் இத முடிச்சிட்டுத் தான் மறுவேல பார்ப்பானுங்க.. போடா…”

“ஏண்டா சலிச்சுக்கிற.. உனக்குத்தான் பணம் கெடைக்குமில்ல?”

“டே.. எனக்கு வெறும் சம்பளம் தாண்டா.. தண்ணி வித்து காசு பார்க்கிறவங்க வேற ஆளுங்கடா..”

“ஒலகம் முழுக்க தண்ணி விக்கறாங்க.. நம்மூர்ல விக்கிறது புதுசு இல்லடா.. ஆமா! ஓலக்குடா இன்னும் அப்படியேதா இருக்கா”

“ம்ம்.. நீ போனப்ப இருந்த ஊரு இல்லடா இப்ப.. ரொம்ப மாறிப்போச்சு.. ஊருக்குள்ளாற டெலிபோன் வசதியெல்லாம் வந்திருச்சு. தார் ரோடு போட்டுடாய்ங்க.! ரெண்டு மூணு பெரிய ஸ்டோர்ஸ் எல்லாம் வந்துடுச்சுடா..”

“ஆனா, குடிக்க தண்ணி மட்டும் இன்னும் சொமக்குறாய்ங்கன்னு சொல்லு”

“அடப் போடா இவனே.. ! தண்ணிய சொமக்குற காலமெல்லாம் மலையேறிப் போச்சுடா.. தேவைக்கு ஒரு போன்! தண்ணி சப்ளைக்குன்னே ஊருக்குள்ளாற ஏழு டேங்கர் ஓடுது”

எங்கள் பேச்சினிடையே கிராமத்தில் நுழைந்துவிட்டோம். முதலில் இருந்த வீடுகளில் இருந்து குடத்துடன் பெண்கள் காத்திருந்தார்கள். டேங்கர் லாரி நின்றதும் நாகசுந்தரம், கிளீனருடன் நானும் கீழே இறங்கினேன்.

முதல் வீட்டிலிருந்து ஒரு கட்டையானவர் வந்து டேங்கரின் பைப் அருகில் நின்று கொண்டு குடத்துக்கு இரண்டு ரூபாய் வசூலித்து தண்ணீர் விடத் தொடங்கினார். அவர்தான் தண்ணீர் ஏற்பாடு செய்துதருபவராக இருக்கலாம். டேங்கருக்கு மொத்தமாக பணம் கொடுத்து, கிராமத்தில் சில்லரையாக வசூலித்துப் பணம் பண்ணும் சின்ன முதலாளி!

கிளீனரை மட்டும் விட்டு விட்டு வண்டியின் முன்பக்கம் வந்தோம். சட்டைப் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை நீட்டியபடியே நாகசுந்தரம் கேட்டான். “விட்டுட்டியா?”

“நா விட்டுட்டேன்.. அது தான் விட மாட்டேங்குது..” என்றபடி எடுத்து பற்ற வைத்தேன்.

“மாப்ளே கிறிஸ்டோபரைப் பார்க்கலாம்னு நெனைக்கிறேன். வர்றியா?”

“இல்லடா.. வண்டிய ஓட்டணும். நீ வேணா அவே வீட்லேயே ஒக்கார்ந்து பேசிகிட்டிரு.. நா வண்டியோட வர்றேன்”

கிறிஸ்டோபரின் வீடு ஊரின் கடைசியில் இருந்தது. அவனும் எங்களோடு படித்தவன் தான். நான் ஊரை விட்டு போன சில மாதங்களிலேயே, மணவிழா பத்திரிக்கை அனுப்பி இருந்தான். வாழ்த்துத் தந்தி கூட அனுப்ப முடியாமல் போய்விட்டது.

நடக்க.. நடக்க.. நிறைய மாற்றங்களைக் கிராமத்தில் பார்க்க முடிந்தது. குடிசையாக இருந்த துவக்கப் பள்ளி காங்கிரீட் கட்டிடமாக வளர்ந்திருந்தது. பல வீடுகள் மாடி வைத்து கட்டப் பட்டிருந்தன. தேவாலயத்தின் மேல் நியான் விளக்கில் சிலுவை செய்திருந்தார்கள். எல்லா வீட்டு வாசலிலும் குடத்துடன் பெண்கள் காத்துக் கிடந்தார்கள்.

பல வீடுகள் தங்களை மாற்றிக் கொண்ட போதும், கிறிஸ்டோபரின் வீட்டை அடையாளம் காண்பது சிரமமாக இல்லை. பழைய குடிசை மாறாமல், அப்படியே இருந்தது. வேலி மட்டையைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

“கிறிஸ்டோபா..”

“ஆரது..?” ஆண்குரல்.

“வெளியில வர்றது!”

சிறிது நேரத்துக்குப் பின் வெற்றுடம்புடன் துண்டு மட்டும் கட்டியபடி வெளியில் வந்தார் கிறிஸ்டோபரின் அப்பா. ஒன்பது வருடங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தார். கண்களை இடுக்கிக் கொண்டு என்னைப் பார்த்தார்.

“ஆரப்பு… அடையாளந்தெரியலயே..”

“நாந்தாப்பா..” என்னை அடையாளப்படுத்திக் கொண்டதும் சட்டென உணர்ந்து கொண்டவராய்..”வாப்பூ.. நல்லாருக்கியா ராசா?” என்று கைகளைப் பற்றித் திண்ணையில் அமரச் சொன்னார்.

சிறிது நேரம் பழக்கம் பேசிக் கொண்டிருந்தோம். கிறிஸ்டோபர் கடலுக்குப் போயிருப்பதாகவும், அவன் மனைவி தண்ணீர் பிடிக்கப் போயிருப்பதாகச் சொன்னவர், ‘சென்னீ’ என்று உள் நோக்கிக் குரல் கொடுத்தார். ஐந்து வயதில் ஒரு சிறுமி ஓடி வந்தது.

“ஓடிப் போய்.. பால்ராசு கடையில் சித்தப்பூக்கு ஒரு கலர் வாங்கியா..” என அக்குழந்தையை விரட்டினார்..

“அய்யய்யோ.. அதெல்லாம் வேணாம்பா.. சொம்புல தண்ணி கொடுங்க போதும்” என்றேன் நான்.

“ஒரு சொட்டு தண்ணீ கூட இல்லப்பூ. இருந்ததுல ஒல வச்சிருக்கா.. மருமக எடுத்துட்டு வந்தாத் தான் தண்ணியே! நம்ம ஊருக்குள்ளார பெரிய கடையெல்லாம் வந்தாச்சுப்பூ..ஏ.. ஓடு.!” என்று ஜென்னியை முடுக்கிவிட, அது ஓடிவிட்டது.

பல வருடங்கள் கழித்து.. மணமான நண்பனைப் பார்க்க வெறுங்கையோடு வந்தது மனதை உறுத்தியது. பழக்கம் பேசிக் கொண்டிருக்கும்போதே.. குழந்தை ஜென்னி வந்து நின்றாள்.
அவள் கையில் வியர்த்து வழிந்தபடி இருந்தது “லெஹர் பெப்ஸி” பாட்டில்!

கோப்பு:- முதல் பூங்கா இதழில் தேர்வாகி உள்ளது.

சிறுகதை : கடந்து போதல்
இந்த மாத(ஏப்-1-15) புதிய பார்வை இதழில் வெளியான என் சிறுகதை இது.

கடந்து போதல்…

பயங்கரமான அந்த அலறலில் உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தேன். எனக்கு முன்னமே கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள் ரேவதி.

எத்தனையாவது அலறலில் உறக்கம் கலைந்தது என்பது தெரியாது. னால் ரேவதி முதல் சத்தத்திலேயே எழுந்திருக்க வேண்டும். படுக்கையில் விழுந்த பின் இடையில் நான் எழுவதென்பது நடக்காத காரியம். அவளோ எனக்கு நேரெதிர் இரண்டு முறையாவது எழுந்து விடுவாள். பல முறை கனவுகளினால் பயந்து போய் என்னை எழுப்பி,எழுப்பி சோர்ந்து போய் படுத்திருக்கிறாள். இதை காலையில் அவளே சொல்லும் வரை எனக்கு தெரியாது. இப்படியான நானே எழுந்திரித்திருக்கேன் என்றால் அந்த அலறலை உங்களின் கற்பனைக்கே விடுகிறேன்.

புனேயில் பணியாற்றிக்கொண்டிருந்த எனக்கு பதவி உயர்வோடு மும்பைக்கு மாற்ரல் என்றவுடன் முதலில் திக்கு முக்காடிப் போனோம். எங்களது காதல் திருமணம் கூட அங்குதான் நடந்தது. ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வருகிறோம் என்பதால் என் மாற்றத்துடன், அவளுக்கும் பணி மாற்றல் உடனே கொடுத்து விட்டார்கள்.

பொதுவாக பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் அண்டை வீட்டு மனிதர்களிடம் அறிமுகமாகிக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு மும்பையும் தப்பவில்லை. பெரும்பாலும் எல்லா வீடுகளின் கத்வுகளுமே தாழிடப்பட்டே காட்சியளித்தன. அது உட்பக்கமாகவும் இருக்கலாம், வெளிப்பக்கமாகவும் இருக்கலாம்.

ஒருவாரகால ஓட்டல் வாசத்திற்கு பின் ஓர் அடுக்கு மாடி குடியிருப்பின் இரண்டாம் தளத்தில் ஒரு வீடு வாடகைக்கு கிடைத்தது. வீட்டின் உரிமையாளர் தமிழர் என்பதால் கூடுதல் முன் பண தொல்லைகளின்றி எளிதாக குடியேறிவிட்டோம். வீட்டின் உரிமையாளரான திருநெல்வேலி அண்ணாச்சிக்கு றுவீடுகளும், இரண்டு மளிகை கடைகளும் இருந்தன. வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களையும் அவரிடமே வாங்கி(பற்றில் தான்!) சமையலறையை நிறைத்து விட்டோம். கடைப் பையனே வந்து காலையில் பால் பாக்கெட்டையும் கொடுத்துவிடுவான் என்பதால் ஏக வசதியாக உணர்ந்தோம்.

ஐந்து மாடிகள் கொண்ட, நான்கு கட்டிடங்களை கொண்ட குடியிருப்பு அது. ஒரு தளத்திற்கு நான்கு வீடுகள் என் மொத்தம் இருபது வீடுகளை கொண்டிருந்தது ஒரு கட்டிடம். எல்லோருமே வீட்டின் சொந்தக்காரர்கள் தான். வெளி ட்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது என்று சொஸைட்டி மூலம் முடிவு செய்திருப்பதால், எங்களை சொந்த மச்சினன் என்றி சொல்லித்தான் வீட்டுச்சாவியை கொடுத்தார் அண்ணாச்சி.

இரண்டு அறை, த்னி சமையலறை கொண்ட வீடு அது. எங்களிருவருக்கும் சற்று அதிகமாகவே இருந்தது அது. மும்பைக்கும், இந்த புதிய வீட்டுக்கும் நாங்கள் வந்து நேற்றோடு நான்கு மாதங்கள் முடிந்துவிட்டது.

“என்னம்மா.. எப்போ எழுந்திருச்ச..?”

“எங்கே.. தூங்கினாத்தானே.. எழுந்திருக்க முடியும்?”

“என்னாடா.. சொல்றே..”

ஆமாம்ப்பா.. சாப்ட உடனே நீங்க வந்து படுத்துட்டீங்க.., சமையல் கட்டுல எல்லா வேலய முடிச்சுட்டு, பாத்ரூம் போய்ட்டு வந்து, படுக்கையில சாஞ்சதுமே இந்த சத்தம் ரம்பமாயிடுச்சு” என்று சொல்லும் போதே கொட்டாவி வந்தது அவளுக்கு.

மணியை பார்த்தேன். இரண்டு நாற்பது. என்ன சத்தமது என்பதை அறிந்து கொள்ள.. சட்டையை மாட்டி வாசல் கதவை திறந்து பார்த்தேன். நடை பாதை விளக்குகள் தவிர வேறு வெளிச்சம் ஏதுமில்லை. எல்லா வீடுகளின் கதவுகளுமே உட்பூட்டியிருந்தன. எங்களிருவரின் தூக்கத்தை கெடுத்த அந்த அலறல் மற்றவர்களை பாதிக்காதது ச்சரியத்தை தந்தாலும், ஒரு வேளை இது பிரமையாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்த போதே.. “யா….அல்லா……. ச்சோட்தே.. முஜே.. ச்சோட்தே..” என்ற சத்தம் நிஜத்தை உறைத்தது.

அரவமற்ற இரவு. வேகமாய் வீசிய குளிர்காற்று உடம்பில் பட்டதும் முடிகள் எல்லாம் குத்திட்டு நின்றன. மீண்டும் அமைதி நிலவியது. பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன். எந்த சத்தமுமில்லை. சில்வண்டுகளின் இரைச்சலைத்தவிர.

அப்படியே நடந்து பால்கனி வழியே சொஸைட்டியின் வாசலை எட்டிப் பார்த்தேன். எதையுமே உணராதவனாக வாட்ச்மேன் ராம்லால் தம்பாக்கூ(1) தட்டிக்கொண்டிருந்தான். திரும்பி வீட்டின் வாசற்கதவை தொட்டதும் மீண்டும் அதே சத்தம்.

இப்போது தெளிவாக உணர முடிந்தது. அந்த சத்தம் கட்டிடத்தின் பின் புறத்திலிருந்து தான் வந்தது. நடுநிசியில் போய் பார்ப்பதை விட , காலையில் பார்த்துக்கொள்ளலாம்.. என்ற யோசனையில் வீட்டுக்குள் வந்து,கதவை பூட்டிவிட்டு உள்ளறைக்குள் போனேன்.

“என்னகச்சு?’’

“ஒருபயலும் கதவ தெறக்கல.. வாட்சுமேனும் தேமேனு உக்காந்துருக்கான். நாம பில்ல்டிங் பின்னாடி தான் சத்தம் வருதுன்னு நெனக்கிறேன். காலயில பாத்துக்கலாம். பயப்படாம தூங்கு..”

விளக்கை அணைத்துவிட்டு கட்டுலில் விழுந்தேன். போர்வையை தலையோடு போர்த்திய ரேவதி, துணைக்கு என் வலது கையையும் உள்ளிழுத்துக்கொண்டாள்.

காலையில் இருவரும் அலுவலகம் செல்லும் அவசரகதியில் இருந்தோம். வாட்சுமேனையும் காணாததால் மாலையில் திரும்பும்போது கேட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பினோம்.

சர்ச் கேட்டின் நான்காவது பிளாட் பாரத்திலிருந்து விரார் பாஸ்ட் மின்தொடர் வண்டி பிடித்து, நாளசோப்ரா வந்திறங்கியபோது மணி எட்டு கியிருந்தது. இது தான் எங்களிருவரின் நேரம். எட்டு மணி நேர வேலைக்கு போகவரயென நான்கு மணி நேரத்திற்கு அதிகமாய் தின்று கொண்டது மும்பை வாழ்க்கை.

டூரவு சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு, பேசியபடியே சொஸைட்டியை அடைந்தோம். வாசலில் ராம் லாலை காணோம்.

“ரேவா.. நீ ரூமுக்கு போ.. நான் வாட்சுமேன பாத்துட்டு வாரேன்” என்றபடி அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி நடந்தேன்.

உள்ளே பம்ன் ஸ்டவின் சத்தம் கேட்டது.

‘ராம் லால்..’

மீண்டும் சற்றே உரக்க சத்தமிட்டேன்.

‘ஹா.. சாப்!’ என்றபடி கதவை திறந்து எட்டிப் பார்த்தான்.

“உன்னால ஒரு வேல வனுமே” என்று இந்தியில் சொன்னேன்.

‘தோ.. ரொண்டு நிமிஷத்துல வரேன் சாப்! இன்னும் ஒரு விசில் வந்துடுச்சுன்னா.. ஸ்டவ்வை அணச்சுட்டு வந்துடுவேன்’

அவன் வருவதற்குள் ஒரு சிகரெட்டை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் பற்ற வைத்தேன். பாதி கரைவதற்குள்ளாகவே வந்து சேர்ந்தான் ராம் லால்.

டார்ச் லைட்டை எடுத்துக் கொள்ளும் படி கூறிவிட்டு, சொஸைட்டியின் வாயிற்கதவு நேக்கி நடக்கலானேன். பின்னாலேயே லைட்டுடன் ஓடிவந்தான் அவன்.

‘என்னாச்சு சாப்?’

நம்ம பில்டிங் பின்னாடி கொஞ்சம் பாக்கனும். வா.. சொல்றேன்” என்றபடி நான் சொஸைட்டியின் வெளிமதிற் சுவரை ஒட்டினார் போல நடக்கலானேன். டார்ச்சை உயிர்பித்து பின்னாடி அடியோற்றினான் ரான்லால்.

இடுப்பு உயரம் வளர்ந்த செடிகளைத்தள்ளி ஒதுக்கி விட்ட படி நடந்தோம். குப்பைகள்…, குப்பைகள்.. சிதறிக்கிடந்த குப்பைகள், பிளாஷ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட குப்பைகள், மது புட்டிகள் தவிர காய்ந்த சில நாப்கின்கள்.. வேறு எதுவுமில்லை. அங்கு யாரும் வந்து போன தற்கான அடையாளங்கூட இல்லை. ‘பின் எங்கிருந்து சத்தம் வந்திருக்கும்?’ யோசனையுடனே.. கீழிருந்து எனது ரூமை பார்த்தேன். வீட்டின் உள்ளறை தெரிந்தது.

‘ஏதுனாச்சும் விழுந்துடுச்சா.. சாப்?’

‘ஒன்னுமில்லப்பா’ இவனிடம் சொல்லி விடலாம் தான். னால் நமக்கு மட்டுமே தோன்றிய பிரமையா இருந்தால்.. நகைப்புக்கு ளாக வேண்டியிருக்குமென்பதால் சொல்ல வில்லை.

‘போலாம் வா’ என்றபடியே நான் திரும்பினேன். என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, திரும்பி நடக்கலானான். டூப்போது அவன் மு போக நான் பின் தொடர்ந்தேன். சொஸைட்டியின் வாசலை அடைந்தவுடன் மீந்தும் கேட்டான், ‘என்ன ச்சு சாப்?’

‘ஒன்னுமில்லப்பா.. பொறவு சொல்றேன்’ என்று அவனை அனுப்பி விட்டு மாடிப்படிகளில் ஏறினேன்.வீட்டுக்குள் நுளைந்ததுமே, ‘என்னப்பா ச்சு?’ என்று கேட்டபடி தேனீரை நீட்டினாள்.

‘பில்டிங் பின்னாடி யாரையும் காணோம். யாரும் வந்து போனதுக்கான அடயாளங்கூட இல்ல’

‘அப்டீனா.. அந்த சத்தம்..’

‘அதுதா எனக்கும் புரியல.. ஒரு வேல ஏதாவது பிரமையா இருக்குமோ?’

‘அதெப்படிப்பா.. பிரமையா இருந்தா ஒருத்தருக்கு இருக்கலாம். நாம ரெண்டு பேருக்குமே எப்படி ஒரே சமயத்துல..? எனக்கென்னமோ பயமாயிருக்குப்பா… வேற வீடு பாக்கலாமே?’

‘என்ன பேசற நீ… நெனச்சவுடனே வீடு மாறதுன்னா.. வுற காரியமா? மொல்ல பாத்துக்கலாம்’

‘ஒங்களுக்கென்ன மாசத்துல பத்துநாளு பார்டீங்கள பாக்கப் போற சாக்குல வெளீயூர் கெளம்பிடுறீங்க.. இங்க தனிய கெடந்து பயந்து சாகுறது நாந்தானே..’

என்னமோ நா விரும்மி ஊர்சுத்துற மாதிரி சொல்றீயே.. பூனாவுல இருந்தப்பையும் இப்படிதானே போய்கிட்டு இருந்தேன்..! இப்ப என்ன செய்யனுங்கிற?’

‘வீட்டுக்கார அண்ணாச்சிகிட்ட வெவரத்த சொல்லுவோம். வாங்க இப்பவே..’
பிணக்கத்தில் முடிய வேண்டிய பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. இருவரும் அண்ணாச்சியின் கடையை நோக்கி போனோம். இரண்டொரு வாடிக்கையாளர்கள் நின்று கொண்டிருக்கா.. கடைப் பையன்-கள் இருவரும் பம்பரமாக சுழன்று கொண்டிந்தார்கள். அண்ணாச்சி யாருடனோ தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு.., தன் பேச்சைத் தொடர்ந்தார். அவர் பேசி முடிக்கட்டுமென நாங்கள் காத்திருந்தோம்.

பத்து நிமிடத்தில் தனது பேச்சை முடித்துக்கொண்டவர், “ என்ன தம்பீ.. ஏதுனாச்சும் அயத்துடீங்களா?” என்று கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னுமில்லங்க அண்னாச்சி.. ஒங்கட்டதா ஒரு வெசயம் பேசனும்”

“டேய்.. கடய பாத்துக்க.. “ என்று சற்று வளர்ந்த கடைப் பையனிடம் சொல்லிவிட்டு, கடையிலிருந்து வெளியேறி, எங்களிடத்து வந்தார்.
“சொஸைட்டியில ஏதனாச்சும் சொல்லுதாய்ங்களா…?”

“அதொல்லாமில்லங்க… கொஞ்ச நாள வீட்டுல தூங்க முடியல அண்ணாச்சி..” என்று தொடங்கினாள் ரேவதி.

“என்னம்மா.. ச்சு.. எவனாவது ஜகடா பண்றாய்ங்களா?”

“அய்யையோ.. அதொல்லாஉ ஒண்ணுமில்ல”

“பின்ன..”

“ராத்திரி பூரா ஒரே சத்தமா கேக்குது.. பில்டிங் பின்னாடி-யிருந்து தா வருதுன்னு நெனைக்கேன். உள்ளறையில படுத்தொறங்க முடியலை.. காதுக்குள்ளார வந்து கத்துற மாதிரி இருக்கு”

“ப்பூ.. இவ்வளவுதானா..”

“என்ன அண்ணாச்சி இப்படி சொல்லீட்டிய?” என்றோம் நாங்களிருவரும் அதிர்ச்சியில்!

“அது.. பயப்படுற மாதிரி ஒன்னுமில்லைங்க.. நம்ம பிளாட்டுக்கு நேர் கீழ் வீட்டுல.. ஒரு கோட்டிக்காரன் இருக்கான். அவந்தான் கத்தியிருப்பான். யனா ஸ்பத்திரியில இருந்தே அவன் அனுப்புட்-சுட்டாய்ங்க.. வயசான ளு வேற.. நீங்களே சொல்லீடுங்க.. அவிய்ங்க பாத்துப்பாய்ங்க.. நா வேண்னா நாளக்கி காலயில சொல்லிகிருதேன்” சொல்லிவிட்டு கடைக்குள் போய் விட்டார்.

ஒருவரையோருவர் பார்த்துக்கொண்டோம். திருமபவும் சொஸைட்டியை பார்த்து நடக்கத் தொடங்கினோம். எங்களின் தூக்கத்தை தின்ற அந்த சத்தத்திற்கு ஏன் மற்ற எவரும் எழுந்திரிக்க வில்லை? எதையுமே கேட்காதது போல வாட்ச் மேன் தம்பாக்கூ தட்டிக் கொண்டி ருந்தது.. போன்ற எல்லா சந்தேகங்களும் பளிச்சென புரிந்தது. அவர்கள் அந்தக் குரலை பழகிப் போய் இருந்தார்கள்.

முதல் தளத்தில் அந்த வீட்டு வாசலில் இருந்த காலிங்பெலை அழுத்திவிட்டு சில நிமிடங்கள் காத்திருந்தோம். ஓர் இளம் பெண் கதவைத் திறந்து சிறிய இடைவெளி வழியாக எங்களைப் பார்த்தார். அவருக்கு பின்னால் சுவற்றில் பெரிய மெக்கா மசூதியின் படம் மாட்டப்பட்டிருந்தது.

‘என்ன வேணும்?’ – இந்தியில் கேட்டார்.

“நாங்க உங்க வீட்டுக்கு மேல் வீட்டுக்காரங்க.. உங்க கூட கொஞ்சம் பேசனும்.”

‘ஒரு நிமிசம்’ என்று கதவை சாத்திவிடார்.

மீண்டும் கதவு திறந்தது. இம்முறை கதவைத் திறந்தது முப்பது வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞன். தலையில் குள்ளா, மீசை மழித்த முகத்தில் தாடி.

‘ப்ளீஸ்.. கம் இன்..!’

நாங்கள் உள்ளே சொன்று ஓரத்தில் போடப் பட்டிருந்த சோபாவில் அமர்ந்தோம்.

‘சொல்லுங்க.. என்ன உதவி செய்யட்டும்?’ என்று அந்த இளைஞன் அழகான தன் இந்தியில் பேச்சை தொடங்கினான்.

“இல்ல.. அது.. வந்து..”

‘அட.. சும்மா.. சொல்லுங்க.. அதுசரி, மொதல்ல தண்ணிய எடுத்துக்குங்க.. டீ, குளிர் பானமா.. எது குடிப்பீங்க…?’

“பரவாயில்லங்க..”

‘ச்சே..ச்சே.. அப்படி சொல்லக்கூடாது. எது வேணும்னு சொல்லுங்க..’

“டீ போதும்”

‘நூர்.. சாயா மண்ணுமா’ என்று உள்ளறையை நோக்கி குரல் கொடுத்தான். வீட்டின் சுவர் முழுக்க உருது மொழியிலான பலகைகளும், விதவிதமான மசூதியின் படங்களும் மாட்டப் பட்டிருந்தன. பரஸ்பர அறிமுகத்தோடு பேச்சு தொடங்கியது.

தேனீர் வந்தது, கூடவே ஒரு தட்டு நிறைய காரியும். தேனீரை சுவைத்த படியே விஷயத்திற்கு வந்தேன் நான்.

“கொஞ்ச நாள… வீட்டுல தூங்க முடியல.. என் மணைவி ரொம்ப பயப்பறா..மாசத்துல பாதி நாளு பீஸ் வேலயா வெளியீலயே தங்கீருவேன்… இவ தனியாவேற இருக்கிறதாலா… ரொம்பவே பயப்பறா… நா என்ன சொல்ல வாரேன்னு புரியுதுங்களா…?”

‘இல்ல…சார்.. நீங்களே.. முழுசா பேசிடுங்களேன்…’ என்ற அவன் முகத்தில் ஏதோவொரு கலவர ரேகை படரத்தொடங்கியது.

“சரி.. நேரடியாவே விஷயத்துக்கு வந்துற்றேன்… உங்க வீட்டுல யாருக்கோ மனநிலை சரியில்லையாம்.. அவரு போடுற சத்தம் தான் எங்க தூக்கத்த கெடுக்குது. அவர ஏதவது நல்ல மருத்துவ மனையில சேர்துடலாமே…?”

‘ஒரு நிமிசம் ரொண்டு பேரும் உள்ளறை வரைக்கும் வர முடியுமா..?’ என்றபடி எழுத்தான் அவன். என் கைகளைப் பற்றி வேண்டாம் என்பது போல தடுத்தாள் ரேவதி.

‘பயப்படாதீங்க.. ஒன்னும் காது..’ ரேவாவின் கை மொழியை உணர்ந்தவன் போல பேசினான். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே போனோம்.

பெரிய அறை. ஒரு கட்டில் தென்பட்டது. போதிய வெளிச்சமில்லை. நீலக்கலரில் ஒரு ஜீரோ வாட்ஸ் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. மின் விசிறி சுழலும் சப்தம் கேட்டலும் புழுக்கத்தை வாசனையாலும் உணர முடிந்தது. அறைக்குள்ளும் ஹாலில் பார்த்தது போலவே சுவர் முழுக்க படங்கள்.

மெத்தை போடப்பட்ட கட்டிலில் ஒரு உருவம் சுருண்டு படுத்துக் கிடந்தது. அந்த உருவத்தை மெல்ல நெருங்கினான் அவன். ‘வாப்பா..’ என்று மெதுவாய் அவன் அழைத்தௌம் சுருண்டு கிடந்த உருவம் அசைவது தெரிந்தது.

‘நூர் அந்த லைட்ட போடு’ என்று அவன் சொன்னதும், எங்களுக்கு பின்னால் எஇன்றிருந்த அந்த மென் சுட்சை தட்டி விட, அறைக்குள் குழல் விளக்கின் வெளிச்சம் பரவியது. அந்த இளைஞனின் கைகளைப் பற்றியிருந்த அந்த பெரியவருக்கு அறுபது வயது இருக்கலாம்.
முகமே தெரியாத அளவுக்கு தாடி வளர்த்திருந்தார். அவர்கையில் பச்சை கலரில் ஒரு மாலையும் இருந்தது.

வெளிச்சத்தில் எங்களைப் பார்த்ததும் அவரின் முகம் மாறத்தொடங்கியது. அவ்விளைஞனின் கையை உதறி விட்டு, அவனையும் தள்லிவிட்டு, கட்டிலுக்கு கீழே ஒளிந்து கொண்டார். அந்த இளைஞன் குனிந்து…, ‘வாப்பா’ என்று ஏதோ சொல்ல எத்தனிப்பதற்குள் அவர் கத்தத் தொடங்கினார். வீடே அதிரும் படி அலரதொடங்கிய குரல் சுவர்களில் பட்டு அந்த அறைக்குள்ளேயே சுற்றியது.

‘ச்சோட்தே.. ச்சோட்தே.. யா.. அல்லாலாலாலா.. முஜே பச்சாவ்வ்வ்’ என்று மீண்டும் மீண்டும் அதையே சொன்னார். கூப்பிய அவரது கைகள் கட்டிலின் கீழ் தெரிந்தது. நான் திரும்பி ரேவதியை பார்த்தேன். வியர்த்துப் போன அவள் முகத்தில் அருளேயில்லை.

நாங்கள் குழப்பத்துடன் அந்த இளைஞனை பார்க்க.. அவன் எங்களுடன் ஹாலுக்கு வந்தான். அந்த பெண் மட்டும் பெரியவரை சமாதனப் படுத்தும் படி பேசிக்கொண்டிருந்தது கேட்டது.

“யாரிவர்.. என்ன ச்சு?”

அவரு என் மனைவி நூர்ஜானோட அப்பா.. சொந்தமா பெரிய செருப்புக் கட வச்சிருந்தாரு. அவருக்கு அஞ்சு பொண்னுங்கலும், ரெண்டு பையனுமா இருந்த அமைதியான குடும்பம் சார் அது. தொன்னூத்தி மூனுல நடந்த மதக்கலவரத்துல பாதிக்கப்பட்டவங்கள்ல.. எங்க குடும்பமும் ஒன்னு. கண் எதிரிலேயே மனைவி புள்ளைங்கன்னு எல்லோரையும் இவரு பலி கொடுத்துட்டுட்டாரு. அப்போ நூர்க்கு பதினாலு வயசு.. இவங்களோட பக்கத்து வீடு என்னோடது. என்னோட குடும்பமும் அந்த கலவரத்துல தான் பலியாகிடுச்சு. அப்ப நா உறவினர் வீட்டு விசேசத்துக்காக ஹைத்ராபாத்துல இருந்தேன்.

அந்த கலவரத்துல எல்லாத்தையும் எல்லாரையும் இழந்து, மனநிலை சரியில்லாத அப்பாவோட நூர் தனியா இருந்தா.. எனக்கும் யாரும் இல்ல. அவளுக்கும் யாருமில்லாதனால.. அவள நிக்காக் பண்ணிக்கிட்டேன். அவருக்கு சரியாகுறவரைக்கும் கொழந்த ஏதும் வேணம்னு முடிவு பண்ணி இருக்கோம்.

அவருக்கு எங்க ளுங்களத் த்விர வேறு யாரப் பாத்தாலும்.. அந்த கலவர சம்பவம் நினைவுக்கு வந்திடும். உயிர் பயத்துல அவர் கத்துரது வாடிக்கையாகிப் போச்சு சார்.

பூனாவுல தான் இத்தன நால் வச்சிருந்தோம்.. அங்கேயும் கைய விரிச்சுட்டாங்க.. அதோட அவருக்கு கேன்சர் வேற இருக்குறது நாள.. ரொம்ப நாளக்கி இல்லனு சொல்லிட்டாங்க.. கடசிகாலத்தையாவது எங்க கூட அவரு இருக்கட்டுமேன்னுதா கொந்து வந்துட்டோம். ப்ளீஸ்..சார்.. அவர் எங்க கூட கடசி காலத்தயாவது கழிக்கட்டுமே… சொஸைட்டியில எல்லோருக்கும் இந்தசத்தமும் பழகிப் போனது நாள அவங்க எல்லோரும் ஒத்துகிட்டாங்க..

இன்னும் கொஞ்ச காலம் தா சார்.. ப்ளீஸ்.. நீங்களும் ஒத்துகிட்டா எங்களுக்கு ஒரு மனசுக்கும் றுதல் கிடைக்கும்..’ என்று அவ்விளைஞன் கைகள் கூப்பி தொழ.. தரவாய்.. அவனது கூப்பிய கைகளை இறுகப் பற்றி விடைபெற்று வெளியே வந்தோம். மெல்லிய சாரல் காற்று ஒருவித மனநிலையை சமன் செய்து இருந்தது.