July 9th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

ப்ளாகர் பயன்படுத்தும் அநேக பதிவர்களின் பதிவுகளில் தேன்கூடு திரட்டியின் பின்னூட்ட நிரலி இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த தளத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன். அதனாலேயே.. பதிவுகளின் தலைப்புக்களை சொடுக்கி.. பின்னூட்டங்களை படிக்க முடியவில்லை. அந்த நிரலியை நீக்கினால் நன்றாக இருக்கும் என நம்ப ரவிசங்கர் பதிவு போட்டிருந்தார். கீழ்காணும் வரிகளை உங்களின் டெம்ளேட்டில் இருந்து நீக்கினால் எளிமையாக பின்னூட்டங்களை படிக்க முடியும்.

—-

<!–thenkoodu-comments-ping-code–>

<b:if cond=’data:blog.pageType = “item”‘>
<b:if cond=’data:post.numComments != 0′>
<script expr:src=’ “http://ping.thenkoodu.com/ping_comments.php?posturl=” + data:post.url + “&postid=” + data:post.id + “&blogurl=” + data:blog.url + “&cmt=” + data:post.numComments’ language=’javascript’ type=’text/javascript’>
</script>
</b:if>
</b:if>

<!–/thenkoodu-comments-ping-code–>
—–

ரவிக்கு நன்றிகள்… எல்லோரின் பார்வையிலும் மீண்டும் படட்டும் என்றே இப்பதிவு எழுதப்பட்டுள்ளது.

June 10th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

தசாவதாரம் படம் வரும் ஜூன் 13ல் ரிலீஸ் ஆகிறது. 8ம் தேதி அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமானது. என் நண்பர் ஒருவர், நல்ல தியேட்டரில்.. டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்து அதிகாலையிலையே அலாரம் வைத்து எழுந்து சத்யம் வலைப்பத்திற்குள் போக முயன்றால்.. போக முடியவில்லை. சி-பானல் பாஸ்வேர்ட்& யூசர் நேம் கேட்டிருக்கிரது தளம். சரி.. ஏதோ வேலை நடக்கிறது என்று நினைத்த நண்பர் கொஞ்ச நேரம் கழித்து போகலாம் என்று திரும்பி வந்துவிட்டார்.

சிறிது நேரம் கழ்ழித்து போய் பார்த்து இருக்கிறார். அப்போதும் சைட்டில் வேலை நடப்பதாக தளம் காட்ட.. குழம்பிய நண்பர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டார். அதன் வரிசை கீழே..!

 

படத்தின் வலது மூலையில் நேரத்தை நீங்கள் பார்க்கலாம்..

 
 

 

இதிலும் நேரத்தை பார்த்துக்கொள்ளுங்கள்!

என்ன நேரத்தைப் பார்த்து என்ன செய்யுறது.. யாருமே நுழைய முடியாமல் இருந்த தளம் திறக்கப்பட்ட போது.. எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து.. ஹவுஸ் புல் போர்ட் போட்டிருக்கிரார்கள். வெறுத்துப் போய்.. தியேட்டர்காரர்களிடம் பேசி இருக்கிறார் நண்பர். சரியான பதில் கிடைக்க வில்லை. சரி.. தியேட்டரில் போய் விசாரிக்கலாம் என்று போனால்.. அங்கே முதல் நாள் காட்சியின் டிக்கெட் ப்ளாக்கில் விற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள். விலை. ரூ 350/-.

இது பற்றி நண்பர்கள் சிலருடம் பேசிய போது எல்லோரும் கார்ப்பரேட் புக்கிங்காக இருக்கலாம் என்றார்கள். ஆனால்.. அப்படி என்றால்.. ப்ளாகில் எப்படி கிடைக்கிறது. கார்ப்பரேட் புக்கிங் எனில் “இத்தனை நாட்களுக்கு கார்ப்பரேட் புக்கிங்” என்று அதை தளத்தில் எழுதி வைப்பதில் என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது.

கவுண்டர் சேல்ஸும் கிடையாது, ஆன் லைன் சேல்ஸும் கிடையாது.. ஆனால்.. ப்ளாக்கில் கிடைகிறது.. இது எப்படி சாத்தியம்..?? தியேட்டருக்கு தெரியாமல் நடக்குமா? பிரபலமான தியேட்டரே இப்படியான கள்ள சந்தையை உருவாக்குகிறார்களோ..என்றும் சந்தேகிக்கிறார் நண்பர். இரண்டு முறை மெயிலும் அனுப்பி வைத்திருக்கிறார். தியேட்டர் நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறதோ?!

May 25th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

பொதுவாக பாரம் (Forum) குறித்த தெளிவான பார்வை என்னிடம் இருந்ததில்லை. அது ஒரு தொல்லையாக மட்டுமே இதுவரை பார்த்து வந்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் எழுதுவது போல அங்கேயும் கதை கவிதை கட்டுரை என்று எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாகத் தோன்றும்.

நம் கருத்துக்களை நம்ம வலைப்பக்கத்தில் சொல்லாமல் இப்படி ஒரு கட்டம் போட்ட சட்டத்துக்குள் சொல்லுறாங்களேன்னு பல நாள் வியந்திருக்கிறேன். இவ்வகை பாரங்களில் மொக்கை போடுபவர்களும் உண்டு! பின்னூட்ட கும்மி போன்ற வகைகளும் கூட உண்டு!

தமிழ், இணையம், கணினி போன்ற எனக்கு தேவையான பலவிசயங்களை அலசும் நுட்பமானவர்களும், வல்லுனர்களும் ஒரே இடத்தில் கூடி பேசினால் என்னவாகும்! என்னைப் போன்ற ‘கணினி கைநாட்டுக்கு’ நிறைய அறிவுத்தீனி கிடைக்கும்.
http://ravidreams.net/forum/

நண்பர் ரவிசங்கர்.. தொடங்கி இருக்கும் பாரம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. உங்களுக்கும் பயன்படலாம். எட்டிப் பார்த்து முடிவு செய்யுங்கள்.

பாஸ்டன்பாலா, ரவி, மயூரேசன், நந்தா போன்ற பலரும் உபயோகமான விசயங்களைப் பற்றி பேசுவதும், சந்தேகங்களுக்கு விடையளிப்பதுமாக இருப்பதை பார்க்கும் போது மகிழ்வாகவும், பாரத்தின் பயன்பாடு குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.