Archive for the 'பதிவர் சதுரம் ;-))' Category

Aug 17

சீவக சிந்தாமணி- நாவல்- வாசிப்பனுபவம்

எத்தனையோ புத்தகங்கள் படித்திருப்போம். சினிமாக்கள் பார்த்திருப்போம். சிலருக்கு மன்னர் கால கதைகள் என்றால் கொள்ளைப் பிரியமாய் இருக்கும். அதிலும் திருப்பங்கள் நிறைந்து, சஸ்பென்ஸ் வேறு இருந்துவிட்டால்.. கேட்கவே வேண்டாம். இன்றும் கூட பொன்னியின் செல்வன் சக்கை போடு போடுவதற்காக அடிப்படையே நமக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கதைக்கான ஏக்கங்களின் வெளிப்பாடு என்று தான் நான் கூறுவேன்.
புகைப்படங்களே இல்லாத அந்த பழங்காலத்திற்கு நாம் செல்ல முடியாத ஏக்கம் ஒரு புறம் என்றால்.. பண்டைய மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது [...]

Aug 10

இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…

ஆள்பாதி ஆடை மீதி

க்ளோஸ் அப்ல ஒரு போட்டோ. அல்லது பேனா கொண்டு மூக்கை குத்துவது போலவோ, கண்ணத்தில் கை வைத்து மோட்டு வளையை பார்த்த மேனிக்கோ, ஒருவாரமோ, ஒரு மாசமோ மழிக்காத தாடி மீசையுடன் இருந்தால் சிறப்பு.
பிரதி மட்டுமே மிச்சம். ஆசிரியன் செத்துவிட்டான்னு சொல்லிகிட்டாலும் நாளைக்கு நீங்க புத்தகம் போடும் போது கடைசி அட்டையில போட்டோ போட இதுமாதிரி புகைப்படங்கள் உதவும். பேண்ட் சட்டை எல்லாம் வேலைக்கு ஆவாது. அதனால.. நல்லதா நாலு ஜோடி ஜிப்பா வாங்கி [...]

Aug 05

பஸ்ஸு தொல்லைகள்

வயது வந்தோர்க்கான எழுத்துக்கள்
கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது.
நண்பரின் வீட்டினர் எவராவது எனக்கு பின்னால் வந்து நின்று நான் படிக்கும் வலைப்பதிவுகளில் (புதிய நண்பர்கள் பலரின் [...]

Older Entries »

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly