July 9th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
ப்ளாகர் பயன்படுத்தும் அநேக பதிவர்களின் பதிவுகளில் தேன்கூடு திரட்டியின் பின்னூட்ட நிரலி இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த தளத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன். அதனாலேயே.. பதிவுகளின் தலைப்புக்களை சொடுக்கி.. பின்னூட்டங்களை படிக்க முடியவில்லை. அந்த நிரலியை நீக்கினால் நன்றாக இருக்கும் என நம்ப ரவிசங்கர் பதிவு போட்டிருந்தார். கீழ்காணும் வரிகளை உங்களின் டெம்ளேட்டில் இருந்து நீக்கினால் எளிமையாக பின்னூட்டங்களை படிக்க முடியும்.
—-
<!–thenkoodu-comments-ping-code–>
<b:if cond=’data:blog.pageType = “item”‘>
<b:if cond=’data:post.numComments != 0′>
<script expr:src=’ “http://ping.thenkoodu.com/ping_comments.php?posturl=” + data:post.url + “&postid=” + data:post.id + “&blogurl=” + data:blog.url + “&cmt=” + data:post.numComments’ language=’javascript’ type=’text/javascript’>
</script>
</b:if>
</b:if>
<!–/thenkoodu-comments-ping-code–>
—–
ரவிக்கு நன்றிகள்… எல்லோரின் பார்வையிலும் மீண்டும் படட்டும் என்றே இப்பதிவு எழுதப்பட்டுள்ளது.
June 15th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
தமிழ்மணப் பதிவர்களுடன், நிர்வாகிகளின் சந்திப்பு இனிமையாக நடந்து முடிந்தது. எதிர்பார்த்ததை விட.. அதிகமான பதிவர்கள் வந்திருந்தார்கள். ஆசிப் அண்ணாச்சியின் வருகை இன்ப அதிர்ச்சி..! நன்கு நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை நம்மவர்கள் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். அலுவலக வேலை அதிகமாகி விட்டது. பதிவுகளை படிக்கவோ.. எழுதவோ கூட பழையபடி நேரமில்லாமல் போய் விட்டது வருந்தமளிக்கிறது. (நண்பர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜன் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியாமல் போனது அதை விட வருத்தமான விசயம். நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போதெல்லாம் நினைப்பது எல்லாம் செய்து முடிக்க முடிவதில்லை என்ற குற்ற உணர்ச்சி அதிகமாகி வருகிறது.)
-oOo-
கடந்த வாரம் நடிகர் கார்த்திக் அரசியல் கட்சி தொடங்குகிறார். விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு வர.. நிறுவனத்தின் சார்பில்.. போய் இறங்கினோம். 4.30க்கு என்று சொல்லி இருந்தார்கள். சினிமா படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது போலவே தாமதமாக 5 மணிக்கு வந்து சேர்ந்தார். தொடக்கத்தில்.. பேசினார்.. பேசினார்… பேசினார்! என்னென்னமொ பேசினார். ஏகப்பட்ட கைத்தடிகளின் கூட்டம் வேறு. அத்தனை பேரும் மப்பில் இருந்தார்கள். தேவர் சாதி கட்சி போல தோற்றம். நிறைய கைதட்டலும் விழுந்துகொண்டே இருந்தது. நிறைய பேசிய பின் “அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி” என்று தம் கட்சிக்கு பெயர் வைத்திருப்பதாக அறிவித்தார். அதன் பின் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். மஞ்சள்+வெள்ளை+சிகப்பு நிறங்களைக் கொண்ட.. கொடியின் நடுவில் முத்துராமலிங்கனார் படம் போட்டிருந்தார்கள். கொடி அறிமுகம் செய்யப்பட்டவுடன் எல்லா புகைப்படக்காரர்களும் கார்த்திக்கின் தலைக்கு மேல்(பின்னால்) பிடித்திருந்த கொடியை படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். விடியோ கேமரா மேன்களும் கார்த்திக்குடன்.. கொடியை கவர் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது.. கார்த்தின் அசராமல்.. சொன்னார்.., “நல்லா.. பார்த்துக்கிடுங்க.. இது தான் கொடி.. ஆனா.. இன்னும் ஃப்பைனலைஸ் ஆகலை..” படம் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோருக்கும்.. ஒரு மாதிரியாகிவிட்டது. அய்யா சாமீ.. மொதல்ல.. ஒரு முடிவுக்கு வாங்க.. அப்புறம் கூட்டம் போட்டு அறிவிப்பு கொடுங்கப்பா… மக்கள் பாவம்..!
-OoO-
நடிகர் சரத்குமார் தன் கட்சியின் சார்பில்.. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடத்தவிருக்கும்.. ஆர்ப்பாட்டம் பற்றி அறிவிக்க.. அழைத்திருந்த.. செய்தியாளர் சந்திப்பு அது. ”யாருடனாவது.. கூட்டன்ிசேர்வீர்களா?” என்ற கேள்விக்கு, “இன்றைய முதல்வர்.. முந்தைய முதல்வருடன் நிச்சயம் கூட்டனி இல்லை”என்று சொன்னார் சரத். குறும்புக்கார.. ஒரு செய்தியாளர்.. அப்போ.. ”வருங்கால முதல்வருடன் சேருவீர்களா?”என்று அறிவுஜீவித்தனமாக கேட்க.., சரத்குமார் புரியாமல் விளித்தார். “விஜயகாந்துடன் சேர்வீர்களா?”ன்னு கேட்டேன் சார்.. என்றார் அந்த செய்தியாளர். கடுப்பாகிப் போன.. சரத், “நாங்களே.. அடுத்த முதல்வர்ன்னு சொல்லிகிட்டு இருக்கும் போது இப்படி பேசுவது சரியா?” என்று நொந்துகொண்டது பார்க்க பரிதாபமாக இருந்தது.
-oOo-
”தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்” என்ற ஓர் அமைப்பை டாக்டர் ராமதாஸ் நேற்று தொடங்கி வைத்தார். அந்த அமைப்பின் அனேக பொறுப்புக்களில் இருப்பவர்கள் எல்லோரும் வன்னியர்கள். இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மற்றவர்கள். சாதிய அமைப்புகள் நேரடியாக சாதி பெயரை பயன்படுத்தாமல் இப்பொதெல்லாம் ‘தமிழ்’ பெயரை பயன்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டது ஆபத்தான காரியமாகப்படுகிறது. எழுத்தாளர்களுக்குள் தான் நேரடியான சாதிய அணுகுமுறை இருப்பதில்லை என்று நம்பி இருந்தேன். அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் என்பது இப்போது தான் தெரியவந்தது. அடப்போங்கப்பா..!
-oOo-
June 10th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
தசாவதாரம் படம் வரும் ஜூன் 13ல் ரிலீஸ் ஆகிறது. 8ம் தேதி அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமானது. என் நண்பர் ஒருவர், நல்ல தியேட்டரில்.. டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்து அதிகாலையிலையே அலாரம் வைத்து எழுந்து சத்யம் வலைப்பத்திற்குள் போக முயன்றால்.. போக முடியவில்லை. சி-பானல் பாஸ்வேர்ட்& யூசர் நேம் கேட்டிருக்கிரது தளம். சரி.. ஏதோ வேலை நடக்கிறது என்று நினைத்த நண்பர் கொஞ்ச நேரம் கழித்து போகலாம் என்று திரும்பி வந்துவிட்டார்.
சிறிது நேரம் கழ்ழித்து போய் பார்த்து இருக்கிறார். அப்போதும் சைட்டில் வேலை நடப்பதாக தளம் காட்ட.. குழம்பிய நண்பர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டார். அதன் வரிசை கீழே..!

படத்தின் வலது மூலையில் நேரத்தை நீங்கள் பார்க்கலாம்..

இதிலும் நேரத்தை பார்த்துக்கொள்ளுங்கள்!
என்ன நேரத்தைப் பார்த்து என்ன செய்யுறது.. யாருமே நுழைய முடியாமல் இருந்த தளம் திறக்கப்பட்ட போது.. எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து.. ஹவுஸ் புல் போர்ட் போட்டிருக்கிரார்கள். வெறுத்துப் போய்.. தியேட்டர்காரர்களிடம் பேசி இருக்கிறார் நண்பர். சரியான பதில் கிடைக்க வில்லை. சரி.. தியேட்டரில் போய் விசாரிக்கலாம் என்று போனால்.. அங்கே முதல் நாள் காட்சியின் டிக்கெட் ப்ளாக்கில் விற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள். விலை. ரூ 350/-.
இது பற்றி நண்பர்கள் சிலருடம் பேசிய போது எல்லோரும் கார்ப்பரேட் புக்கிங்காக இருக்கலாம் என்றார்கள். ஆனால்.. அப்படி என்றால்.. ப்ளாகில் எப்படி கிடைக்கிறது. கார்ப்பரேட் புக்கிங் எனில் “இத்தனை நாட்களுக்கு கார்ப்பரேட் புக்கிங்” என்று அதை தளத்தில் எழுதி வைப்பதில் என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது.
கவுண்டர் சேல்ஸும் கிடையாது, ஆன் லைன் சேல்ஸும் கிடையாது.. ஆனால்.. ப்ளாக்கில் கிடைகிறது.. இது எப்படி சாத்தியம்..?? தியேட்டருக்கு தெரியாமல் நடக்குமா? பிரபலமான தியேட்டரே இப்படியான கள்ள சந்தையை உருவாக்குகிறார்களோ..என்றும் சந்தேகிக்கிறார் நண்பர். இரண்டு முறை மெயிலும் அனுப்பி வைத்திருக்கிறார். தியேட்டர் நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறதோ?!