விடுபட்டவை » மனிதர்கள்

பார்வதியம்மாளுக்கு ஒரு ராயல் சல்யூட்!
பார்வதி அம்மாள்

“மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா

ருயிர் நீப்பர் மானம் வரின்!” -திருவள்ளுவர்

அதிகாரம்: மானம் குறள் இலக்கம்: 969

மனிதர்கள் – ஆங்கில ஆசிரியர் வால்டர் ஜெயபாலன்
சம்பவம்-1

பன்னாட்டு தனியார் வங்கி ஒன்றில் மார்கெட்டிங் பிரிவில் இருக்கும் ஓர் இளம் பெண் வாரம் ஒருமுறை வந்து இவரை சந்தித்து பேசிவிட்டுப் போகிறார். தமிழ் மீடியத்தில் படித்த அந்த பெண்ணுக்கு ஆங்கிலத்தில்.. பேசவோ, எழுதவோ பெரிய தயக்கம் இருந்து வந்துள்ளது.

அத் தயக்கத்தினை போக்கி ஆங்கிலமும் எளிமையான மொழி தான் என உணர்த்தி, ஆங்கிலம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் இந்த ஆங்கில ஆசிரியர். மெத்தப்படித்தவர்களிடமும் தயக்கமின்றி ஆங்கிலத்தில் உரையாட முடிந்ததால் தான் அந்த வங்கியில் வேலை கிடைத்ததாக அப்பெண் குறிப்பிட்டார் என்னிடம்!

சம்பவம்- 2

இவரிடம் ஆங்கிலம் பயின்ற பலரும் இன்று நல்ல நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனாலும் இவரது உழைப்பு தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. பல புதிய மாணவர்கள் இவரை தேடி வந்த வண்ணம் தான் இருக்கிறார்கள். இவரைத் தேடி இவரது இல்லம் போனபோது, பழைய மாணவர்கள் சிலரையும் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அனைவருமே ஆசிரியர் வால்டர் ஜெயபாலனை புகழ்கின்றனர். பலர் அஞ்சல் அட்டை மூலம் தங்கள் சந்தேகங்களை கேட்டபடி இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்கிறார் இவர்.

வால்டர் ஜெயபாலன் இது தான் அவர் பெயர். 72 வயதாகும் இவரைப்பற்றி நண்பர் ஒருவர் மூலம் அறிந்துகொண்டு தொடர்பு கொண்டேன். பல ஆண்டுகளாக சென்னையில் இருந்தாலும் சென்னைத் தமிழுக்கு மாறாமல் இன்னும் தென்தமிழகத்தின் மொழிநடையில் பேசிய இவரின் பேச்சில் மனசை பறிகொடுத்தேன்.

என் வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவம். நான் ஒன்பதாவது படிக்கும் போது, என் ஆங்கில ஆசிரியர் ஆங்கிலச்சொற்களுக்கு தமிழில் பொருள் கூறிக்கொண்டிருந்தார். ஆளாளுக்கு, பேனா, நோட் புக், டேபிள், சேர் என்று தமிழ்படுத்தி கேட்டுக்கொண்டிருக்க.. நான் மட்டும், “ப்ளாஸ்டிக்- என்றால் தமிழில் என்ன சார்” என்று இயல்பான சந்தேகத்தை கேட்டதும், நான் ஏதோ கிண்டல் செய்வதாக நினைத்து, என்னை குச்சியால் பின்னி எடுத்துவிட்டு, க்ளாஸ் ரூமுக்கு வெளியே முட்டி போட்டு நிற்க வைத்து விட்டார். இப்படியான ஆசிரியர்களையே சந்தித்து வந்திருக்கும் எனக்கு இவரின் இனிமையும், எளிமையாக புரியவைக்கும் மனநிலையும் கண்டு வியந்து போனேன். இவரிடம் பேசப் பேச.. அட.. இப்படி ஒரு ஆங்கில ஆசிரியர் எனக்கு கிடைக்காமல் போய் விட்டாரே என்று வருத்தம் மேலிட்டது மறுக்கவியலாத உண்மை.

வழக்கமான பாணியில் இல்லாமல் ஆங்கிலம் கற்பிப்பதற்கென்றே புதிய முறையையும் கண்டு பிடித்திருக்கிறார் வால்டர் ஜெயபாலன் அவர்கள்.

போனிக்(phonic)-என்று பெயரிடப்பட்ட அம்முறையில் – ஆங்கில உயிர் எழுத்துக்களான AEIOU என்பதை A= அ, E=எ, I=இ, O=ஒ, U=உ என்று குறித்துக்கொண்டு, மற்ற எல்லா ஆங்கில எழுத்துக்களையும் மெய்யெழுத்தாக கொள்ளச்சொல்லுகிறார் இவர்.

இப்படி எடுத்துக்கொண்டு ஆங்கிலத்தை வாசிக்கச்சொல்கிறார். இது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (குறிப்பாக ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு) எளிமையான முறை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

இவரிடம் ஆங்கிலம் கற்றுக்கொண்ட பலர் இன்று பல்வேறு இடங்களில் பணி புரிந்து கொண்டிருந்தாலும், அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இப்போதும் வால்டர் ஜெயபாலனைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுக்கொள்கின்றனர். ஏதாவது சந்தேகம் இருந்தால் ஓர் அஞ்சல் அட்டையில் எழுதினால் கூட நான் பதில் போடுகிறேன் என்று சொல்கிறார்.

இவரின் இரு மகன்களும் தற்போது வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார்கள். 1995ல் அரசு இவருக்கு ஓய்வைக் கொடுத்து விட்ட போதிலும், இன்றும் தன் பணிக்கு ஓய்வு கொடுக்காமல் உழைத்து வருகிறார்.

இன்னொரு முக்கியமான செய்தியைச் சொல்லியாகவேண்டும். கடந்த பதினான்கு ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு ஆங்கில மொழியை மிகவும் எளிமையாக போதித்து வரும் இந்த முன்னாள் ஆசிரியர்,  பணத்திற்காக அல்லாமல் இலவசமாக தொண்டாற்றி வருகிறார்.  இந்த ஆசிரியரைப் பற்றிய ஓரு விஷுவல் செய்தி குறிப்பு:

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="425" height="344" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/J--G79Uccxo&hl=en&fs=1&color1=0x006699&color2=0x54abd6" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="425" height="344" src="http://www.youtube.com/v/J--G79Uccxo&hl=en&fs=1&color1=0x006699&color2=0x54abd6" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

நன்றி:- ஜி தமிழ் தொலைக்காட்சி.

(மீள் பதிவு)

மனிதர்கள் – கமிஷனர் எஸ்.ஆர் ஜாங்கிட்
சம்பவம்-1

பொதுமக்கள் குறைகேட்பு

ஒரு இளம் காதல் ஜோடி அவர்கள். பையன் இந்து மதத்தை சேர்ந்தவர். பெண் இஸ்லாமிய மத்த்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் வீட்டில் தெரிய கடும் எதிர்ப்பு. அதுவும் பெண் குடும்பத்தினர் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் போல. வீட்டின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொள்கின்றனர்.

பெண் வீட்டினர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய அந்த பகுதி காவல் நிலையத்தார், பையனின் அண்ணனை அள்ளிக்கொண்டு வந்து ஸ்டேசனில் வைத்துவிட்டார்கள்.

புதுமணத்தம்பதியினர் தஞ்சம் அடைந்த இடம் புறநகர் காவல் ஆணையாளர் அலுவலகம். தாங்கள் விரும்பி திருமணம் செய்துகொண்டதாகவும், பையனின் அண்ணன் சிறைபட்டிருக்கும் செய்தியையும் புறநகர் கமிஷனரிடம் புகாராக தெரிவிக்கின்றனர். அவர்களின் எதிரிலேயே மைக்கில் (வாக்கி டாக்கி), அந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டரை அழைக்கிறார் கமிஷனர். அவர் இல்லை. உடனடியாக அவரது செல்போனில் தொடர்புகொண்டு, இப்புகார் குறித்து கேட்கிறார். மென்று முழுங்கி எதிரிலிருந்து பதில் வருகிறது.

“மொதல்ல அந்த பையனை அனுப்புங்க.. இனிமேலும் இப்படி தப்பு பண்ணாதீங்க.., இவர்கள் இருவரும் மேஜர். அவர்கள் விரும்பி திருமணம் செய்துகொள்ள சட்ட்த்தில் இடம் இருக்கு. உடனடியாக பிடித்து வைத்திருக்கும் பையனை வெளியே அனுப்புங்க.., இங்கே இருந்து கல்யாணம் செய்துகிட்ட பொண்ணும், பையனும் வருவாங்க அவர்களிடமும் ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு அனுப்பீடுங்க.. இனியும் இப்படி தப்பா ஏதாச்சும் செய்யாதீங்க” என்று கொஞ்சம் கடுமையாகவே சாடுகிறார் கமிஷனர்.

புகார் கொடுக்க வந்தவர்கள் நன்றி சொல்லி திருப்தியுடன் செல்கிறனர்.

சம்பவம்-2.

உடனடி ஆக்‌ஷன் - வாக்கி டாக்கியில் பேசும் கமிஷனர் ஜாங்கிட்

ஒர் அம்மாவும், பையனும் புகார் கொடுக்க வந்திருந்தனர். அவர்களுடன் ஒரு பெண்ணும் வந்திருந்தார். அவர் ஒரு தேசிய கட்சியை சேர்ந்தவர் என்பதை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லி விடமுடியும். அக்கட்சியின் அடையாள அட்டையை கழுத்தில் மாலை மாதிரி தொங்க விட்டிருந்தார். அவர்கள் முறை வந்ததும் அந்த அரசியல்வாதி பெண் கமிஷனரிடம் வந்து, வந்திருந்த அம்மா, பையனின் பிரச்சனைகள் குறித்து விளக்கினார். அவரின் அடையாள அட்டையை கவனித்தவர் கேட்டார்.

‘நீங்க யாரு?’

‘நான்.. —-கட்சியில…’

‘நீங்க அப்படி ஓரமாக போய் உட்காருங்க.. நான் பார்த்துக்கிறேன்.’

அந்த பெண்ணை அனுப்பி விட்டு, அவரை ஏன் அழைத்து வந்தீர்கள்.. உங்க பிரச்சனைக்கு நீங்க வந்தா போதும். சிபாரிசுக்கு யாரையும் அழைத்து வரவேண்டாம்’ என்று அறிவுறுத்தினார் கமிஷனர்.

நன்றி சொல்லும் பெண்கள் கூட்டம்

மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் நான் புறநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் நேரில் பார்த்தவை.

பகுதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் நடவடிக்கை இல்லை எனில் மேல் முறையீடு செய்வதற்கு காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். அப்படி இங்கு வருபவர்களின் பிரச்சனைகள் இரண்டொரு நாளில் தீர்த்துவைக்கப்படுகின்றன. நேரடியாகவே கமிஷனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உத்தரவிடுவதால்.. இது சாத்தியமாகிறது. தினம் குறைந்தது 50 முதல் 100 புகார் மனுக்கள் பெறப்படுகின்றன.

போலீசாரின் நிர்வாக வசதிக்காக சென்னை காவல்துறையை இரண்டாக பிரிக்கிறார் முதல்வர் கருணாநிதி. அப்படி 2008 ஆண்டு சென்னை புறநகர் பகுதியில் உதயமாகிறது சென்னை புறநகர் காவல் ஆணையர் அலுவலகம். அதன் முதல் ஆணையராக பெறுப்பேற்றுக்கொண்டவர் எஸ்.ஆர்.ஜாங்கிட்- ஐபிஎஸ்.

சென்னை புறநகர் காவல் ஆணையர் ஜாங்கிட்

சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்பட்ட பின் 2008ம் ஆண்டு 379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், ஒரு கோடியே 73 லட்சத்து 71 ஆயிரத்து 636 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. அவற்றில் 366 (97 சதவீதம்) வழக்குகள் கண்டறியப் பட்டு, ஒரு கோடியே 55 லட்சத்து 57 ஆயிரத்து 964 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. 2009ம் ஆண்டு 803 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு கோடியே 31 லட்சத்து 76 ஆயிரத்து 348 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. அவற்றில் 747 (81 சதவீதம்) வழக்குகள் கண்டறியப்பட்டு, ஒரு கோடியே 79 லட்சத்து 99 ஆயிரத்து 830 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. (ஆதாரம்- தினமலர். )

சென்னையோடு ஒப்பிடும் போது மீட்கப்பட்ட பெருட்களின் எண்ணிக்கை, கண்டுபிடிக்கப்பட குற்றவாளிகளின் எண்ணிக்கையும் புறநகரில் அதிகம். அதற்கு முக்கிய காரணமே புறநகர் ஆணையர் ஜாங்கிட் தான் என்று சொல்லுகின்றனர் பத்திரிக்கை நண்பர்கள்.

தமிழக காவல் துறையின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கும் கடந்த ஆண்டு அறிக்கை கூட இதனை உறுதி செய்கிறது.

புறநகர் காவல் ஆணையர் ஜாங்கிட்

பொதுமக்களின் குறை நிவர்த்திக்கு அதிக அக்கரை செலுத்தும் இவரை தினமும்(ஞாயிறு நீங்களாக) மதியம் 12.30 முதல் 1.30 மணி வரை சந்திக்கலாம்.

சென்னையை விட புறநகர் பெரிய பகுதி, அதிலும் மக்கள் தொகை அதிகம் நிறைந்த ஏரியாக்கள் கொண்ட பகுதி இதில் இவ்வளவு சிறப்பாக பணியாற்றி வரும் ஆணையர் ஜாங்கிட்-க்கு ஒரு ராயல் சல்யூட்! புறநகர் வாசியா நீங்கள்.. காவல் நிலையத்தில் உங்கள் புகார் மீது நடவடிக்கை இல்லையா.. புறப்படுங்கள் சென்னை புறநகர் காவல் ஆணையர் ஜாங்கிட் -ஐ பார்ப்பதற்கு!

விடுபட்டவை 03-03-2010
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நாள் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி, பத்திரிக்கைகளின் செய்தி பிரிவுகளுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. பார்சலை திறந்து பார்க்கும் வரை யாருக்கும் தெரியாது.. அது இவ்வளவு பெரிய சமாச்சாரம் என்பது. நான்கு பக்க கடிதமும், கூடவே ஒரு சிடியும் இருந்தன அதில். கடித வரிகளை வைத்து அதை எழுதியவர் ஒரு பெண் என்பதை யூகிக்க முடிந்தது. கூடவே சிடியில் இருந்தது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய அறைக்காட்சிகள். அதில் இருந்த சாமியாரும், தமிழ் திரைப்பட& சீரியல் நடிகையுமானவரும் தமிழகத்திற்கு மிகவும் அறிமுகமான முகங்கள்.

நம்ம அண்ணன் நித்தியானந்த சுவாமிகள்

’கதவை திற காற்று வரட்டும்னு’ சொன்ன.. சாமியார் நித்தியானந்தா கதவைத் திறந்து வைத்துக் கொண்டே குஜாலாக இருந்து விட்டார் போல   சாமியாரின் குஜால் வேலைகளில் வெறுப்புற்ற  யாரோ ஒரு பெண் பக்தர் சாமியார் நித்தியானந்தாவை ”க்ளோசா” வாட்ச் செய்து, படமாக்கி இருக்கிறார். செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கிறார்.

நன்றி தினகரன் நாளிதழ்

இதனை எப்படி வெளிக்கொண்டு வருவது.. என எல்லா நிறுவனங்களும் யோசித்துக்கொண்டிருந்த  நேரத்தில் முதலில் இறங்கி காரியத்தில் வெற்றி பெற்று விட்டது சன் டிவியின் நியூஸ் சானல்!

எது எப்படியோ.. பிரேமானந்தா, திரிவேதி, ஜெயேந்திரன் என தொடரும் பட்டியலில்.. இப்போது நித்தியானந்தா. அடுத்து யாரோ.. நாமும் காத்திருப்போம்.!

இது குறித்த

ரவியின் வீடியோ பதிவு இங்கே!

வால்பையன் எழுதிய பதிவு மிகவும் பிடித்திருந்தது. அதன் சுட்டி இங்கே!

போன வாரம் ரன்(RANN) என்ற இந்தி படம் பார்த்தேன். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பு. செய்தி சானல்கள் பற்றிய கதை. அவை GRP மற்றும் TRP போன்றவற்றிற்காக என்னவெல்லாம் செய்கின்றன என்பதை சொல்லும் கதை. செய்தி ஊடகங்களில் அரசியல் பின்னனி பற்றியும் அதில் வெளிவரும் பிரேக்@ பிளாஷ் நியூஸுக்கு பின்னால் இருக்கும் செய்திபற்றியும் தைரியமாக பேசுகிறது படம். அமிதாப் தான் பிரதான கேரட்டர். மனிதர் என்னமாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். செய்தி சானல்களில் செய்திகளை நிர்ணையிப்பவை விளம்பரங்கள் தான் என்ற உண்மையை சொல்லி இருப்பதாலேயே இப்படம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

சாதாரண மக்கள் செய்திகளை வெளிக்கொண்டு வரும் ஊடகங்களில் பணி ஏதோ சமூக சேவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சானல்கள் டாப் ஒன்னாக வர என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கிறது என்பதையும் இப்படம் கோடிட்டு காட்டுகிறது. மேலும் விளம்பரங்களே.. செய்திகளின் தன்மையையும் செய்தி நிகழ்ச்சிகளின் தலைப்பையும் தீர்மானிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.  என்னதான் எடிட்டர், சப்-எடிட்டர்.. ரிப்போர்ட்டர் என ஊடகவியலாளர்கள் இருந்தாலும், ஊடகவியல் படித்திருந்தாலும் செய்திகளை தீர்மானிப்பது அவர்கள் அல்ல.. எம்.பி.ஏ படித்த மார்கெட்டிங் மனிதர்களே! முதலாளிகளுக்கு வருமானம் தரும் இன்னொரு வேலை தான் செய்தி சானல்கள்.

படம் பற்றிய ஆங்கில விமர்சம் இங்கே!

படத்தின் டிரைலர்.. இங்கே!! இதில் பின்னால் பாடப்படும் பாடலை கவனமாக கேளுங்கள்..

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="560" height="340" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/7jYlb_orVnc&hl=en_US&fs=1&" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="560" height="340" src="http://www.youtube.com/v/7jYlb_orVnc&hl=en_US&fs=1&" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

கடைகளில் கிரெடிட்கார்டு பயன்படுத்துபவரா.. நீங்கள்! கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளிநாடுகளைப் போல இங்கேயும் கிரெடிட் கார்டு திருடர்கள் அதிகரித்து விட்டனர். ஸ்வைப் செய்ய கொடுக்கும் போது உங்கள் கண் எதிரிலேயே கார்டை பயன்படுத்துமாறு கவனித்துக்கொள்ளுங்கள்.. உங்கள் டேட்டா திருடப்பட்டு வேறு எங்கோ உங்களில் கார்டு பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இது பற்றிய வீடியோ செய்தி ஒன்றை விரைவில் வலையேற்றுகிறேன்.

அருணா-வை கருணைக் கொலை செய்ய உதவுங்கள் பதிவர்களே..
37 ஆண்டுகளுக்கு முன் நடந்த அருணாவின் சோகக் கதை தான் இந்த பதிவு முன்னமே இது பற்றி வலைப்பதிவில் எழுதி இருக்கிறேன்.

‘உங்களுக்கு மேரி டிரின்டிக்னன்டை தெரியுமா….?’

“தெரியாது…”

‘எலிசபெத் ராட்-க்ரானெஜ்-ஐ…?’

“தெரியாதுங்களே…”

‘என்னங்க… இவங்களை எல்லாம் தெரியாதுங்கிறீங்க… இவங்கலெல்லாம் பெண் விடுதலைக்காக குரல்  கொடுத்த வெளிநாட்டுக்காரங்க…’ என்று விடை சொன்னவரின் கையில் வார இதழ் ஒன்று இருந்தது.

“அப்படியா… எனக்கு வெளிநாட்டுக்காரங்கள பத்தியெல்லாம் தெரியாதுங்க… அதுவும் பெண்விடுதலைக்காக  குரல் கொடுத்தவங்களை சுத்தமா தெரியாது. ஆனா… இவை பற்றி எல்லாம் பேசுற நம்ம நாட்டுல பெண்கள் நெலமை எப்படி இருக்குன்னு மட்டும் தெரியும்க…”

‘அவங்களுக்கு என்னங்க… நல்லா தானே இருக்காங்க…?’ என்று ஆதங்கத்துடன் சொன்னவரிடம்… நான் மும்பையில் பத்திரிக்கையாளனாய் பணியாற்றிய போது எழுத முடியாமல் போன ஒரு அபலைப் பெண்ணின் கதையை சொல்லத் தொடங்கினேன்.

சாதாரண மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்தவர் அருணா ஷான்பாக். இவருக்கு மூத்தவரும் சகோதரி தான். மரபு மீறா பழமைவாதக் குடும்பம் அது. ஆனால்… காலத்தின் கட்டாயத்தால் வீட்டுப் பெண்களை வேலைக்கு அனுப்ப சம்மதித்தது குடும்பம்.

சிறுவயது முதல் சமூக சேவையில் ஆர்வம் கொண்ட அருணா நர்ஸ் படிப்பை தேர்வு செய்தார்.  நன்கு படித்து தேறியவுடன் மும்பையின் ‘கிங் எட்வர்ட் மெமோரியல்’(கே.ஈ.எம்) மருத்துவமணையில் டிரைனிங் நர்ஸாக வேலைக்கு சேர அழைப்பு வந்தது. ஏகப்பட்ட கனவுடன் கர்நாடக மாநிலத்திலிருக்கும் சிமோகா (இது தான் இவரின் சொந்த ஊர்)-வை விட்டு மும்பைக்கு ரயிலேறினார் அருணா.

தனது இருபத்தியோராவது வயதில்(1966-ல்) கே.ஈ.எம் மருத்துவ மனையில் பயிற்சி நர்ஸாக சேர்த்துக் கொள்ளப்பட்டவரின் ஒழுங்கு, சுறுசுறுப்பு, நோயாளிகளிடத்து கனிவுடன் சேவையாற்றும் பாங்கு… என எல்லாவற்றையும் கண்ட நிர்வாகம் தேர்வு மூலம் நிரந்தர பணியாளராக்கிக் கொண்டது.

கருப்பு-வெள்ளை படங்களில் நடித்த டி.ஆர். ராஜகுமாரி போன்ற முகச் சாயலில் மிக மிக அழகாய்த் தோன்றியவர் அருணா. ‘சுண்டினால் ரத்தம் வரும்’ என்பார்களே அப்படியான சிவப்பு நிறம். எப்போதும் உதட்டோரம் புன்னகையுடன் வலம் வரும் அருணாவுக்கு கே.ஈ.எம்-ல் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. சில வருடங்களிலேயே மராட்டி மொழியில் சரளமாக பேசவும், படிக்கவும் கற்று தேறி விட்டார்.

நோயாளிகள் முதல் மருத்துவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமானவராகிப் போன அருணாவிடம் ஏதோவொரு காந்த சக்தி இருந்ததாகவே எல்லோரும் நம்பினார்கள். அடம் பிடிக்கும் குழந்தைகள் முதல் அடாவடி பண்ணும் பெரியவர்கள் வரை இவரின் புன்னகைக்கு முன் மண்டியிட்டனர்.

அருணாவின் அழகிலும், அறிவிலும் மயங்கி தனது மனதை பறிகொடுத்தார் டாக்டர். சந்திப் தேசாய் என்பவர். இவரும் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட… அருணாவின் குடும்பத்தினரோ எதிர்ப்பை காட்டினர். அதனால் பதிவுத் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டது இந்த காதல் ஜோடி.

ஆனால் அருணாவின் மகிழ்ச்சியும் கனவுகளும் நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை. ஆம்… அந்த சமயத்தில் ஒட்டு மொத்த இந்தியாவையும்… அதிரச்செய்த அக்கொடுமையான சம்பவம் நடந்தேறியது.

எத்தனை கனவுகளோடு கே.ஈ.எம் மருத்துவமணைக்குள் அடி எடுத்து வைத்திருப்பாரோ… அதே மருத்துவ மனையின் கீழ் தளத்தில்(பேஸ்மெண்ட்) ‘சோகன்லால் பார்த வால்மீகி’ என்பவனால் 1973-நவம்பர்-27 மாலை 4.50-க்கும், 5.50க்கும் இடைப்பட்ட காலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகிறார் அருணா. இந்த வால்மீகியின் தந்தை இதே மருத்துவமனையில் ‘முக்கதம்’ (மேற்பார்வையாளர்) ஆக வேலை பார்த்து வந்தார். அவரின் சிபாரிசின் பேரிலேயே தற்காலிக பணியாளனாக சேர்த்துக்கொள்ளப்பட்டவன் தான் சோகன்லால் பார்த வால்மீகி. இவனின் வெறிக்கு இரையான அருணா மயக்கமடைந்தார். அந்நிலையிலும் அவரைவிடாமல் பலமுறை தின்று தீர்த்து, பின் அங்கிருந்து ஓடி விட்டது அந்த மிருகம்.

மறுநாள் காலை 7 மணிக்கு வேலைக்கு வந்த செக்யூரிட்டி தான் முதலில் அருணாவை பார்த்திருக்கிறார். அதுவும் ஒட்டுத்துணி கூட இல்லாமல்… இடுப்பு பிரதேசம் முழுவதும் ரத்தமான ரத்தமாய் காட்சியளிக்க… உதடு, மார்பு, வயிறு என பல இடங்களில் நகக்கீறலும், பற்களின் தடங்களுமாய் அருணா கிடந்த கோலம் ஒருகணம் அவரை உலுக்கியிருக்கிறது.

அருணா இறந்து விட்டார் என்றெண்ணிய அந்த செக்யூரிட்டி, மேலதிகாரிகளுக்கு தகவல் தர… அவர்கள் வந்து பார்க்க… உயிர் இருப்பதைப் பார்த்ததும், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டார்.

கிட்ட தட்ட பதினைந்து மணி நேரம் சுயநினைவின்றி…. ஏகப்பட்ட ரத்தப் போக்கும் சேர்ந்து ஏற்பட்டதன் விளைவு… நினைவு மீண்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் நினைவிழந்து கோமா நிலைக்குப் போனார் அருணா. அந்த நினைவு மீண்ட தருணங்களில் வால்மீகி பற்றியும் சொல்லியிருக்கிறார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் வெளியே செய்தி கசிந்து விடாமல் பார்த்துக்கொண்டது.

ஆனாலும், எப்படியோ செய்தி வெளியே கசிந்து.. நவம்பர் 29ம் தேதி எல்லா மும்பை பத்திரிக்கைகளின் எட்டுகால செய்தியானது. அருணா பலாத்காரத்திற்கு பலியாகிப் போனார் என்று தெரிந்தவுடன் அவரின் குடும்பம் கையை விரித்தது. அவரை தங்களின் மகளே இல்லையென தலை மூழ்கியது. குடும்பமே தலை மூழ்கிய பின் மருத்துவ நிர்வாகமும் காவல்துறையில் இக்கொடுஞ்செயலை வழக்காக பதிவு செய்ய வில்லை.

காக்கி உடுப்புக்குள்ளும் நல்ல மனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ‘லஷ்மண்-நாயக்’ ஓர் உதாரணம். இவர் அப்பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளர். பத்திரிக்கைகளின் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு இவரே வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினார். இவர் விசாரணையில் ஆர்வம் காட்டுவது கண்டு, இவருக்கு தேவையான உதவிகளை செய்ய முன் வந்தார் ‘பிங்கி விரானி’ என்ற பத்திரிக்கையாளர்.

இவ்விருவரின் கூட்டு முயற்சியால் ‘சோகன் லால் பார்த வால்மீகி’ கைது செய்யப் பட்டான்.  அவனது அடையாளமே தன் பெயரை கையில் பச்சை குத்தி இருப்பது தான். சாட்சியங்களின் மூலமும், விசாரணைகளின் வெப்பத்திலும் இவன் உண்மையை ஒப்புக்கொள்ள, குற்றவாளி என்பது நிரூபணமாகிறது. ஏழாண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது.

1973ல் நடந்த இக்கொடுமையான சம்பவத்திற்கு காரணமான ‘சோகன் லால் பார்த வால்மீகி’ தண்டனைக்காலம் முடிந்து.. வெளியே வந்து… மும்பையின் ஜனத்திரளில் கரைந்து போய் விட்டான்.  ஆனால் அருணா….?

இன்றும் படுக்கையில் கிடக்கிறார். பணியாற்றிய அதே மருத்துவமனையில் இருக்கிறார். ஆசியாவிலேயே மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் மிகப்பெரிய மருத்துவமனை என்ற பெருமை வாய்ந்த கே.ஈ.எம். மருத்துவமனை, நீதி மன்ற உத்தரவின் பேரிலேயே இன்றும் கவனித்து வருகிறது.

இருபத்தி ஐந்தாவது வயதில் வீழ்ந்த அருணாவுக்கு இன்று வயது அறுபத்தி இரண்டு!

கிட்டதட்ட முப்பத்தி ஏழு ஆண்டுகள்…… எல்லா உறவுகளும் உதறித்தள்ளிய நிலை…. படுத்த நிலையிலேயே ‘எல்லா’ கடன்களையும் கழிக்கும் அவலம்….. உடலில் ஆங்காங்கே… புரையோடிய புண்கள் என தனது மீதி வாழ்க்கையைப் படுக்கையிலேயே கழித்து வருகிறார் அருணா.

பொதுவாக கோமாவில் போனவர்களின் உடலுறுப்புகள் அசையுறாது என்பார்கள். அவர்களுக்கு பசி, உறக்கம் போன்ற எதுவும் தெரியாத நிலையில் இருப்பார்கள். ஆனால் அவர்களின் இதயம் மட்டும் இயங்கி வரும். அருணாவின் விழிகளின் ஓரத்திலிருந்து இன்றும் கண்ணீர் வடிந்த படி இருக்கிறது.  அக்கண்ணீர் சொல்லும் கலைந்த கதைகள் நமக்குத் தெரியும்.

படுக்கையில் வீழ்ந்துவிட்ட அருணா இனியும் கண்ணீர் வடிக்க வேண்டுமா? ஆண்டாண்டு காலமாய் மருத்துவம் படிக்கும் புதியவர்களுக்கு சோதனைக்கூடமாக அருணா பயண்பட வேண்டுமா? எல்லாவற்றையும் இழந்து அருணா வடிக்கும் கண்ணீர் நிற்க… ஒரே வழிதான் உண்டு!

மனித உரிமை ஆர்வலர்கள் கொடி பிடித்து கோஷம் போடலாம்… பரவாயில்லை.

அவர்களுக்கு மனதின் வலி பற்றி தெரியாது. நீங்களும் படித்து விட்டு அமையாக போக மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

அருணாவின் கண்ணீர்க்கு தீர்வு :- கருணைக் கொலை மட்டுமே!

இதனை வாசித்த உங்களுக்கும் இம்முடிவு சரியெனப் பட்டால் 50பைசா அஞ்சலட்டையில் “கே.ஈ.ம்- அருணாவின் கருணைக் கொலைக்கு உத்தரவிடுக!” என்று ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டீல் எழுதுங்கள்… ஆன் லைன் வழியாக கூட  வேண்டுகோள் வைக்க முடியும்.. http://helpline.rb.nic.in/

நன்றி:-

2005 ஆண்டு இக்கட்டுரையை பிரசுரித்த மும்பை தமிழ் டைம்ஸ்-தினசரிக்கு!