விடுபட்டவை

விடுபட்டவை 05.10.08
சர்ச்பார்க் பள்ளியைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஜெயலலிதா படித்த கான்வெண்ட். சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் இருக்கிறது. அதன் நூற்றாண்டு விழா சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக அப்துல்கலாம் கலந்துகொண்டார். பயங்கர கெடுபிடி. ஏகப்பட்ட விஐபிகள், விவிஐபிகள் என்று ஏக கூட்டம். சூப்பர்ஸ்டாருக்கு என்ன கைதட்டல் கிடைக்குமோ.. அதைவிட அதிகமாக கைதட்டல் குழந்தைகளிடமிருந்து கலாமுக்கு கிடைத்தது. வழமைபோல கலாம் மேடையில் உறையாற்றும் போது குழந்தைகளை உறுதிமொழி எடுத்துக்கொள்ளச்சொன்னார். அது பெண் குழந்தைகளுக்கான பள்ளி என்பதால்.. உறுதிமொழியில் வரதட்சனை கொடுக்கமாட்டேன் போன்றவைகளும் இடம் பெற்றிருந்தது.

நேருவுக்கு பிறகு குழந்தைகளிடம் அதிகம் அன்பு காட்டும் தலைவர் இவர் தான். அதிகமாக பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளை பார்த்து பேசுகிறார்- என்று அருகில் இருந்த ஒருவர் சொன்னார். நேரு காலம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால்.. கலாம் ஜனாதி பதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது டெல்லியில் இருந்தேன். அதனால் கொஞ்சம் நெருக்கமாக அவரின் குழந்தைகள் அன்பு விசயத்தை பார்த்திருக்கிறேன். ஆனாலும் ஒரு நெருடல் இருக்கிறது. இதுவரை இவர் சென்று வந்த பள்ளிகளின் மொத்த எண்ணிக்கையில் பத்து சதம் கூட தேறாது.. அரசு பள்ளிக்கு அடித்த விசிட்! அத்தனையும் தனியார் பள்ளிகள் தாம். அப்போ.. அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள்… குழந்தைகள் இல்லையா?! கனவு காணவும் அதில் வெற்றி பெறவும் தனியார் பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் தான் உரிமை உள்ளதா..!

என் வாகனம் புதிது என்பதால்.. 1500 கி.மீட்டர் வரைக்கும் 30 முதல் 40 கி.மீட்டருக்கு மேல் வேகம் கூடாது என்று சொல்லி அனுப்பினார்கள். அதற்கு மேல் வேகம் போனால் வாகனம் தினறுகிறது. சரி என்று நானும் அவர்கள் சொன்னவிதமே போனால்.. சைக்கிளில் போகிறவன் என்னை ஓவர் டேக் செய்து போகிறான். ஆட்டோக்காரன் கிண்டலாக சைடு கொடுத்து இம்சிக்கிறான். எவனையுமே கண்டுகொள்ளாமல் நான் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். லக்கி பலமுறை சொல்லி இருக்கிறான். சென்னை நகருக்குள் இரு சக்கரவாகனத்தின் வேகம் 40 கி.மீ. அதன் படி போனால் தேவையில்லாமல் எந்த சிக்னலிலும் காத்திருக்க வேண்டியதிருக்காது என்று. அது உண்மை தான். முப்பதிலிருந்து நாற்பதற்குள் போவதால் ரெட் சிக்னலில் மாட்டுக்கொள்வதில்லை. எங்காவது மாட்டிக்கொண்டாலும் கூட சில நிமிடங்களுக்கு மேல் காத்திருந்ததில்லை. சென்னைக்குள் பாதுகாப்பான பயணத்திற்கு இரு சக்கர ஓட்டிகள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் வண்டி ஓட்டினால் நல்லது. என்ன சில நேரங்களில்  கைக்கிளில் போகிறவரும் நடந்து போகிறவரும் நம்மைக் கடந்து போகக்கூடும்.

ஜே.கே ரித்தீஷ் நடித்த ‘நாயகன்’ பார்த்தேன். உண்மையில் படம் நன்றாக இருக்கிறது. நடிப்பதற்கு அவர் நன்றாக முயற்சி செய்கிறார். படத்தை ஜாலியாக ரசிக்க முடிகிறது. ராஜேந்தர், விஜயகாந்த், சரத், ரஜினி, கமல் போன்றவர்கள் எல்லாம் டூயட் பாடி ஆடும் போது நிச்சயம் ரித்தீஷும் ஆடலாம். கொஞ்சம் கொஞ்சமாக நான் ரித்தீஷின் ரசிகனாக மாறிக்கொண்டிருக்கிறேன்.

பதிவர் சந்திப்புக்கு நிறைய புதுப்பதிவர்கள் வந்திருந்தார்கள். நேரம் ஆறு மணி என்று குறிப்பிட்டிருந்ததாலோ என்னவோ.. நம்மவர்கள் கொஞ்சம் லேட்டாக வர இருட்டில் பலரின் முகம் மனதில் பதிவாகவே இல்லை. இனிமேல் கொஞ்சம் வெளிச்சம் இருக்கும் போதே சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம். திடீரென சந்திப்புக்கு ஞாநி வந்தது.. தொடர்ந்து தமிழ்ப்பதிவுகளை கவனித்துக்கொண்டு இருக்கிறார் என்பதைக்காட்டுகிறது. அவரைப் பற்றி நம்மவர்கள் எழுதும் பதிவுகளையும் படிப்பார் என்றே நம்புகிறேன்.

விடுபட்டவை 29.09.08
கொஞ்ச நாளாக முன்னை மாதிரி வலைப்பதிவுகள் பக்கம் தலைகாட்டவோ எழுதவோ முடிவதில்லை. நிறைய புதிய பதிவர்கள் வந்து கொண்டிருப்பது தமிழ்மணத்தை பார்க்கும் போது அறிய முடிகிறது. இதில் இன்னொன்றும் முக்கியமானதாக படுகிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரையிலும்

//இனி இட்லிவடை பதிவு படிக்க விரும்புவோர் நேராக இங்கே வந்து பதிவு இருந்தால் படித்துக்கொள்ளுங்கள். இனி எந்த திரட்டிகளிலும் பதிவுகள் வராது. பிகு: இட்லிவடையில் செய்தி இல்லை என்றால் ஜெயா டிவி பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்  உங்களுக்கு விருப்பம் இருந்தால் கீழே செய்தியோடை இருக்கு //

என்று தனது வலைப்பதிவின் சைட் பாரில் எழுதி வைத்திருந்த இட்லி வடை தமிழ்மணத்தில் மீண்டும் வரத்தொடங்கி இருக்கிறது. திரட்டியில் பதிவுகள் வராது என்று அதுவே சொல்லிய பின்னும் எப்படி பதிவுகள் மட்டும் தமிழ்மணத்தில் வருகின்றன என்பது மட்டும் விளங்கவில்லை. தமிழ்மணமே விரும்பி திரட்டிக்கொள்கிறதா..? என்ற தகவலும் தெரியவில்லை. சசி வந்து பதில் கொடுத்தால் புண்ணியமாகப் போகும்.

http://bp0.blogger.com/_QxpmZtfzoIU/R4spyrgpQUI/AAAAAAAABE0/ykfwG7YHFpQ/s1600-h/honda_aviator_04.jpg

என் நீண்ட நாள் ஆசையான சொந்த வாகனம் வாங்குவது சனிக்கிழமையன்று நிறைவேறியது. புதிதாக வாங்கியிருக்கும்  இருசக்கர வாகனம் ஹோண்டா ஏவியேட்டர். இது ஹோண்டா ஆக்டிவாவின் அடுத்த வெர்சன் எனக்கொள்ளலாம். நேற்று தங்கமணியுடன் நண்பர் ப்ரியன் வீட்டில் மதியம் உணவருந்த போயிருந்தேன். கென், அகிலன், ப்ரேம் குமார், (மற்ற இருவரின் பெயர்கள் நினைவில்லை) போன்ற நண்பர்கள் எங்களுக்கு முன்பே காத்திருந்தனர். நாங்கள் போனதும் சிறிது நேரத்திலேயே பந்திக்கு போய்விட்டோம் எல்லோரும். சைவத்துக்கு ஒரு வரிசை, அசைவத்துக்கு ஒரு வரிசை என ஒதுக்கப் பட்டிருந்தது. வழக்கம் போல நானும் தங்கமணியும் எதிரெதிர் கோஷ்டியில் சேர்ந்து கொண்டோம்.  சாப்பாடும் நன்றாக இருந்தது. காதல் கவிஞன் ப்ரியன் விழுந்து விழுந்து விருந்துபசாரம் செய்தார். தம்பி கென் வழக்கம்போல புலம்ப ஆரம்பித்து விட்டான். யாராவது அவனுக்கு பெண் பார்த்துகொடுத்தால்.. உங்கள் பெயரைச்சொல்லி அவனுக்கு நான் மொட்டை போட்டு விடுகிறேன். கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க சாமீ!

அதிமுக தலைவி ஜெயலலிதா சமீபகாலமாக புள்ளியை தவிர்த்து வருகிறார். புரியவில்லையா.. ஜெ.ஜெயலலிதா என்று எழுதி வந்த அவரது பெயரை ரத்தத்தின் ரத்தங்கள் ஜெ (ஸ்பேஸ்) ஜெயலலிதா  என்றே எழுதுகின்றனர். அவரின் இஃப்தார் விருந்து அழைப்பதிலில் கூட இந்த மாற்றத்தைக்காண முடியும். எந்த சோதிடன் சொல்லிக்கொடுத்தானோ.. தெரியவைல்லை. தங்குதடையின்றி பயணத்துக்கு புள்ளி கூட தடையாகி விடும் என்று எவனாவது சொல்லி இருப்பானோ..?!!

தலீவர் புர்ச்சி கலீஞ்சர்.. விஜயகாந்த் கொஞ்ச நாட்கள் முன்பு வரை திமுக-வின் குடும்ப அரசியலை கடுமையாக சாடி வந்தார். ஆனால் சமீபத்தில் தொடங்கப்பட்ட தேமுதிக-வின் இளைஞர் பாசறையின் மாநில செயலர் யார் தெரியுமா..? தனது மைத்துனர் சுதீஷைத்தான் நியமித்து இருக்கிறார். ஊருக்குத்தான் உபதேசம் என்பது புர்ச்சி கலீஞ்சர் விசயத்திலுமா? கவுத்தீடியே கேப்டன்

11. ஈ.வெ.ராமசாமி் நிர்வகித்த கோவில் பணி
வெங்கட்டரின் வரத்து குறைந்தது ஒரு வகையில் ஈ.வெ.ராவுக்கு நிம்மதியாக இருந்தது. சாதி, மத வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லாப் பிரிவினருடனும் கலந்து பழகுவதற்கு ஏதுவாக இருந்தது. எப்பொழுதும் கடையில் பத்துக்கும் குறையாத நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களின் புகை, மது போன்ற மேலாதிக்க பழக்கங்களுக்கு ஈ.வெ.ராவே புரவலராக விளங்கி வந்தார்.

ஈரோட்டில் எவ்வகுப்பினர் வீட்டிலும் நன்மை தீமை நடைபெற்றாலும் முதலில் இவரை அங்கு காணலாம். எல்லோரும் இவருக்கு தகவல் தந்து விடுவார்கள். சில இடங்களில் அழைப்பு இல்லாமலேயே நண்பர்களுடன் அந்த மாதிரி இடங்களுக்குப் போவதும் உண்டு. இவரின் தாராள உதவும் குணம் ஊர் முழுக்க இவரது புகழைப் பரப்பியது. குடும்ப விவகாரங்கள், வியாபார தகராறுகள், சண்டை சச்சரவுகள் எல்லாவற்றையும் தீர்க்கும் பொறுப்பும் இவரிடம் வந்து சேர்ந்தது. சில சமயங்களில் கோர்ட் விவகாரங்களும் இவரது தீர்ப்புக்கு வருவதுண்டு. கௌவரவ நீதிபதியாக பன்னிரெண்டு ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் பிளேக் நோய் பரவி பெரும் பீதியேற்பட்டிருந்த நேரம். மக்கள் நகரங்களை காலி செய்து தங்களின் வசதிக்கேற்ப வேறு இடம் மாறிக் கொண்டிருந்தார்கள். ஏழை மக்கள் போக வழியின்றி உள்ளூருக்குள்ளேயே பயத்துடன் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். பிளேக் நோயினால் இறந்தவர் வீட்டில் எல்லோரும் சடலம் உட்பட மற்ற எதையும் தொடாமல் வீட்டையே கொளுத்தி தெருவில் நின்று கொண்டிருந்த அவலமும் நிகழ்ந்தது. இந்த சமயத்தில் தான் துளியும் அஞ்சாமல் இறந்தவரின் சடலத்தை தோளில் தூக்கி சுடுகாட்டிற்கு கொண்டு போய் எரியூட்டி, ஈமச்சடங்குகளை இவரே முன்னின்று செய்தார்.

இப்படி பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட பலருக்கு இவர் செய்த உதவிகளினால் ஈ.வெ.ராவின் புகழ் மேலும் பரவியது. வாரம், பத்து நாட்களுக்கு மேலாக பிளேக் நோய் பாதிக்கப்பட்டவர்களோடு ஈ.வெ.ரா நேரம் செலவழிப்பதை கண்டு அஞ்சிய தேவையற்ற நண்பர்கள் எல்லோரும் விலகி ஓடினார்கள்.

ஈ.வெ.ராமசாமி, எத்தனையோ சமூகம் மறுத்த, தீய பழக்கமுடைய நண்பர்களோடு நெருக்கமாகத் தொடர்பிலிருந்த போதும், மது அருந்துதல் என்ற பழக்கத்திற்கு மட்டும் அடிமையாகவே இல்லை. எப்போதாவது வெற்றிலை பாக்கு போடுவதுண்டு. புகைபிடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. இவற்றையும் கூட தனது நாற்பதாவது வயதில், அறவே நிறுத்தினார். நல்ல பண்பாளர்கள் அறிவாளிகளின் உறவுகள் வந்து சேரத் தொடங்கியது இச்சமயத்தில்தான். பா.வே.மாணிக்கனார், கரூர் பெரும்புலவர் மருதையா, கைவல்ய சாமியார் ஆகியோரின் நட்புகள் வளரத் தொடங்கியது.

புலவர் மருதையா புராண புரட்டுக்களை பிரித்து மேய்வதில் வல்லவர். எதிர்காலத்தில் ஈ.வெ.ராவின் திடமான கொள்கைக்கு அடித்தளமாக அமைந்தது இவரது நட்பு. கைவல்யம் என்னும் வேதாந்த நூலை நன்கு கற்றுத் தேறியவர் என்பதால் கைவல்ய சாமியார் என்று பெயர் பெற்றவர், பார்ப்பனீயத்துக்கு பரம விரோதியாய் இருந்தார். ஈ.வெ.ரா காங்கிரஸ்காரராய் இருந்த போது அவரை கடுமையாகக் கண்டித்தவர்களில், இவரும் முக்கியமானவர். பார்ப்பனர் அல்லாதவர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்ற கைவல்ய சாமியாரின் எண்ணமும் பெரியாருக்கு பிற்காலத்தில் உறுதுணையாக இருந்தது.

தேடிச் சென்று காவாலித்தனம் செய்து கொண்டிருந்த ஈ.வெ.ரா தன் அரிசி மண்டியை விட்டு அதிகம் வெளியே போவதை குறைத்துக் கொண்டார். அப்படியே எங்காவது போவதாக இருந்தாலும் கடை அடைத்தபின் போய்விட்டு, காலையில் கடை திறக்க வந்துவிடுவார். பொது காரியங்களில் இவரின் ஈடுபாடு, தொழிலில் இவரது பக்தியை ஆகியவற்றைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருந்த வெங்கட்டர் ஊர்ப் பொதுக் கோவில்கள், சர்க்கார் தேவஸ்தான தொடர்பான காரியங்கள், உற்சவங்கள் முதலிவற்றில் தாம் விலகிக் கொண்டு இவரை முன்னிறுத்தினார். ஊர் பெருமை சேர்க்கும் விஷயங்களான இவற்றில் பெரும் புகழ் பெற்ற வெங்கட்டர்

தாமிருக்கும் போதே ஈ.வெ.ராவை முன்னிறுத்தியதால் இவரின் பெயரும் கோவில் காரியங்களிலும் வல்லவர் என்று பரவத் தொடங்கியது. தமக்கு கொடுக்கப்பட்ட பதவிகளை பொறுப்புக்களாய் உணர்ந்து சரிவர கடமையாற்றினார். அநேகக் காரியங்களில் இவரின் ஈடுபாடு இப்படியே இருந்தது. அதனாலேயே நம்பிக்கையில்லா காரியங்களில் கூட அதிக கவனமாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டார்.

ஈரோடு மாவட்ட தேவஸ்தான கமிட்டியின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ஈ.வெ.ரா. உருவ வழிபாட்டு எதிர்ப்பாளர், கோவில்களில் நம்பிக்கையில்லாதவர், திருவிழாக்கள் வீண் செலவு என்பவர், இவை எல்லாம் மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கவே செய்கின்றன என்பதை உறுதியுடன் நம்பியவர் - தேவஸ்தான கமிட்டியின் தலைவரானதும், தமது பொறுப்புணர்ந்து கமிட்டிக்குட்பட்ட பல கோவில்களை புணரமைத்தார். மகனின் செயல்பாடுகளினால் உள்ளம் குளிந்தார் வெங்கட்டர். காலியாகிவிடுவானோ என்று பயந்த மகன் இவ்வளைவு பொறுப்பானவனாக மாறியதைப் பார்த்தால் எந்த தந்தைக்குத்தான் மகிழ்ச்சி ஏற்படாது.

கோவில் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்கப் பட்டன. கோவில் நிலங்களின் குத்தகைத் தொகையை ஏற்றினார். கோவிலுக்குப் பழுது வராமல் புதுப்பித்தல், கும்பாபிஷேகம் செய்வது போன்ற திருப்பணிகளை தொய்வின்றி செய்து வந்தார். இவர் பொறுப்பேற்கும் போது கடனிலிருந்த கமிட்டியை தலை நிமிரச் செய்தார். பல ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டு அப்பதவிகளில் இருந்து நீங்கும் போது சுமார் நாற்பத்தியையாயிரம் ரூபாய் தேவஸ்தான கமிட்டிக்கு என சேர்த்து வைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் நாற்பத்தியையாரம் ரூபாயெனில் இன்றைய மதிப்புக்கு கற்பனை செய்து கொள்ளவும்.

இந்த சமயத்தில்தான் ஈரோடு நகர பாதுகாப்புக் கழகத் தலைவராகவும் ஆனார். 1919ல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கும் வரையிலும் சேர்மன் பதவியில் இருந்தார். அதற்கு முன் கௌரவ நீதிபதி, தாலுக்கா போர்டு உபதலைவர், வியாபாரிகள் சங்கத் தலைவர், ஜில்லா போர்டு மெம்பர் என பல பதவிகளை வகித்தாலும் ஈ.வெ.ரா ஈரோடு நகராட்சித்தலைவராக இருந்து ஆற்றியுள்ள சேவையே நேரடி அரசியலில் இறங்குவதற்கு முன்பான அவரது வாழ்வில் அதிகபட்ச புகழை பெற்றுத்தந்தது.

(தொடரும்)

விடுபட்டவை 17 செப் 08
இந்த தளத்தின் பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்க முடியாமல் போனதால்.. சில பதிவுகளை.. இங்கே பதிவு செய்திருந்தேன். அதனை பார்க்காத பலர் போனில் பதிவு எழுதுவதில்லையா என்று கேட்டார்கள். அவர்களைன் பார்வைக்காகவே இதனை எழுதுகிறேன். அதில் விடுபட்டவை 12 செப் 08 என்று கூட ஒரு பதிவு எழுதிவிட்டேன். தகவல் தராமல் அங்கே போய் பதிவு போட்டமைக்கு மன்னிக்கவும். அவ்வப்போது அங்கேயும் கும்மிகள் தொடரலாம்!!

-=000=-

அரசு இயந்திரம் தாமதமாக செயல்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால்.. அந்த தாமதத்தினால்.. எத்தனை பேர் அவதிக்குள்ளாகிறார்கள் என்று நேரடியான அனுபவம் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழக அரசு ஓர் ஆணை பிறப்பித்ததாக செய்தி வெளியானது. வெளியூரில் இருந்த தால் உடனடியாக செயலில் இறங்க முடியவில்லை. இன்று சமயம் கிடைத்தது. இண்டேன், பாரத் கியாஸ் இரண்டு ஏஜென்ஸிகளுக்கும் போய் பார்த்து விட்டேன். ரேஷன் கார்டு இல்லாமல் கியாஸ் கிடையாது என்றார்கள். அரசின் ஆணை குறித்து கேட்ட போது, “ அரசாங்கம் ஆயிரம் சட்டம் போடும் சார், எங்க மேலிடத்திலிருந்து(IOC) எந்த தகவலும் இல்லாமல் நாங்க புக்கிங் செய்யமுடியாது” என்று விரட்டியடித்து விட்டார்கள். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணிக்கேட்டால்.. நாங்க ஆடர் பாஸ் பண்ணிவிட்டோம். சீக்கரம் அவங்களும் பாஸ் பண்ணுவாங்கன்னு நெனைக்கிறோம்னு பதில் கிடைத்தது.

இரண்டு ஏஜென்ஸியிலும் மக்க்கள் கூட்டம் அலை மோதுகிறது, தினமும் புதிதுபுதிதாக வந்து விசாரித்து விட்டுப் போகிறார்கள். சரி.. நிலைமை இப்படி என்றால்.., ரேஷன் அலுவலகம் போனால் கார்டு கிடைக்க குறைந்தது 45 நாட்கள் ஆகும் என்கிறார்கள். சைடில் பணம் கொடுத்தால் விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்யலாம் என்று சிலர் அலைகிறார்கள். வரும் போது வரட்டும் என்று வந்து விட்டேன். ஊழல் அதிகரிப்பது இப்படித்தான் போலும்.

எனக்கு ரேஷனில் கொடுக்கும் எந்த பொருளும் தேவையில்லை. குடிமகன் அடையாளத்திற்கு மட்டும் போதும். அது இருந்தால் தான் என்னால் கியாஸ், வங்கிகணக்கு, டிரைவிங் லைசன்ஸ் போன்ற மற்ற எல்லா காரியங்களையும் செய்ய முடியும். இதற்கு வழி இருக்கிறதா தெரியவில்லை. கடந்த ஆட்சியில் “H-முத்திரை” கார்டு என்று ஒன்று இருந்தது. இப்போது இருக்கிறதா தெரியவில்லை. யாராவது தகவல் சொன்னால் மகிழ்வேன்.

=-000-=

நம்ம ஆளுங்க செய்ற அலும்புக்கு அலவே இல்லாம போயிடுச்சி.. கே.வி. தங்கபாலுவை தலைவராக்கினதுக்கு சென்னையின் பல இடங்களில் நன்றி தெரிவிச்சு.. சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு, இன்னும் அப்படியே இருக்கு. அதில் ஒண்ணு தான் இது.  திருமதி. சோனியாகாந்தி எப்போது தியாகத்தலைவி ஆனாங்க? பிரதமர் பதவிக்கு நேரடியாக அமரவில்லை என்பதற்காக.. தியாகத் தலைவின்னு சொல்லுறது எல்லாம் கொஞ்சம் ஓவரத்தெரியலை.

-=000=-

ஏதாவது பிரச்சனையா 100க்கு கால்பண்ணு! சேதாரமா 102க்கு கால் பண்ணு! விபத்தா 103க்கு கால் பண்ணு! என்று காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத் துறை போன்றவற்றுக்கு தனித்தனியா எண்கள் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது  அரசு எல்லாவற்றுக்கும் சேர்த்து “108” என்ற  என்ற எண்ணை அறிமுகம் செய்திருக்கிறது. இனி.. எல்லோரும் இந்த எண்ணை நினைவில் வைத்திருங்கள்.

அது போல ரயில் பயணம் செய்யும் போது (தமிழகத்திற்குள்) எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு போன் செய்தால் போதும், உங்கள் வண்டி அடுத்த நிறுத்தத்தில் நிற்கும் போது ரயில்வே காவலர்கள் உதவிக்கு வந்து நிற்பார்கள். இந்த எண்ணை அறிமுகம் செய்து வைத பின், முக்கியமான குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனக்குத்தெரிந்த சிலர் இச்சேவையை பயன்படுத்தி பார்த்துவிட்டு ரயில்வே போலீசை புகழ்ந்து தள்ளினார்கள். நீங்களும் எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் எப்போதாவது உதவலாம்..! Rail Help:- 9962 500 500

=-000-=

கூகிள் குரோம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது போல.. மைக்ரோசாப்ட் தனது CODE-ஐ குரோமில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். விபரத்திற்கு இங்கே போகவும்!

ஒரு முக்கிய அறிவிப்பு
நண்பர்களே!

வலையுலகம் கண்டிராத ஒரு புதுமையான தொடர்பதிவு இது. இருவர் மட்டுமே பங்குபெற முடிந்த, இத்தொடரின் முதல் பகுதி இங்கே. கடைசியாக(துவக்கமாக!) என் வாழ்க்கையிலும் திருமணம் என்ற சடங்கு நடந்தேறி விட்டது.

ஏகப்பட்ட மனவருத்தங்களிருந்தாலும் பெற்றவர்களின் ஆசியுடன் 20.08.08 அன்று நானும் தோழி லக்ஷ்மி அவர்களும் வாழ்கையை இணைந்து துவக்கி விட்டோம். சென்னை வந்தபிறகு செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில்… வாழ்க்கைத் துணை அறிமுகமும் தேநீர் விருந்தும் வைப்பது  என முடிவு செய்திருக்கிறோம். இடமும் தேதியும் உறுதி செய்யப்பட்டபின் இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்.

முன்பே விஷயம் தெரிந்தும் எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி நாங்களாக அறிவிக்கும் வரை ரகசியம் காத்த நண்பர்களுக்கு நன்றி. ஜிடாக்,மெயில், போன் என முடிந்த வகையிலெல்லாம் செய்தியைப் பரப்பிய நண்பர்களுக்கும் ஸ்பெஷல் நன்றி. :)

எங்களின் உறுதிக்கு உரமளித்த அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்.

எனது பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதிலிருக்கும் சிக்கல் இன்னமும் நீடிப்பதால் இப்பதிவைப் படிக்கும் நண்பர்கள் என் நிஜமானத் திருமணச் செய்தியை உங்களது மற்ற(எங்களை அறிந்த) நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அவன் - அது = அவள்! - அவசியம் வாங்க!!
வலைப்பதிவு தோழர்களை நான் முறையாக வெத்தலைப்பாக்கு வைத்து தான் அழைக்க வேண்டும் என்பதில்லை. நான் அழைக்காமலேயே கலந்துகொள்வார்கள் என்றாலும், நிகழ்ச்சி எங்கே, எப்போது நடக்கிறது என்று தெரியப்படுத்துவதற்காக இந்த அழைப்பிதழ்!

நூல் வெளியிடுபவர் :

தோழர் ஆர்.நல்லக்கண்ணு

நூலினை பெற்றுக்கொள்பவர் :

தோழி ரேவதி, திருநங்கை

வாழ்த்துரை :

தோழர் ஆதவன் தீட்சண்யா

தோழர் பாட்டாளி

ஏற்புரை :

அடியேன்

நாள் : 31-08-2008, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி

இடம் : ஸ்ரீபார்வதி மினி ஹால்,

28/160, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

(மியூசிக் வேர்ல்டு அருகில், கிழக்கு பதிப்பகம் எதிரில்)

அவசியம் வாங்க! அன்போடு அழைக்கிறேன்!!

பணிநிமித்தம் நான் வெளியூரில் இருப்பதால் நண்பர்களின் தொலைபேசி அழைப்பை எடுக்க இயலாத நிலையில் இருக்கலாம். எனவே இந்த விழா தொடர்பாக ஏதாவது பேசுவதாக இருந்தால் என் தம்பி லக்கிலுக்கிடம் 9841354308 என்ற தொடர்பு எண்ணில் பேசலாம்.

தோழமையுடன்

யெஸ். பாலபாரதி.

அமைச்சர் ஆற்காட்டாரே இது நியாயமா
இன்று மாலை துரைசாமி சாலை- வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் திறக்கப்படுகிறது. தமிழக முதல்வர் மு.கருணாநிதி திறந்து வைக்கிறார்.

நேற்று மாலை முதல் பாலத்திலும், அதனை சுற்றிய இரண்டு பகுதிகளிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஒரு ஜங்சன் பாக்ஸ்( டிராண்பார்மர்) இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்கத்தில் தொடர்ந்து மின்வெட்டுக்கள் நடந்து வரும் சூழ் நிலையில்.. இப்படி மின்சாரத்தை வீணடிப்பது அவசியமா..?!

(கடந்த ஆட்சியில்.. அதற்கு முந்தைய ஆட்சியில்.. வெள்ளைக்காரன் ஆட்சியில்…… இப்படி எல்லாம் நடக்க வில்லையா என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்)

விடுபட்டவை 09-ஆகஸ்ட்-08
சின்னத்திரை மற்றும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. 22 சின்னத்திரை விருதுகள். 36 சினிமா தேர்வாகி இருந்தது, தரமான படம் என்று. இதை தேர்வு செய்தவர்கள்.. இரு நீதிபதிகள் என்பது காமெடி. அதில் கலைஞர் வசனம் எழுதிய படங்களும் அடக்கம். அதை விட சோகம்.. சில கிளு கிளு படங்களுக்கும் விருது வழங்கப்பட்டது தான். அதில் ஒரு படத்தின் பெயர்.. சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு! (பா.ம.க-வின் இலக்கணம் படம் தேர்வாகி இருந்தும் யாரும் விருது பெற வராமல் விருதை புறக்கணித்தனர். இப்படத்தை பரிசீலிக்கும் படி முதல்வர் கருணாநிதியை படத்தயாரிப்பாளருடன் ஜி.கே.மணியும் சந்தித்தார் என்பது குறிப்பிட தக்கது)

“மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் தராமல் காலம் தாழ்த்துகிறீர்கள். இதுதான் உங்கள் போக்கு என்றால் முதல்வரும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகட்டும். அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நாங்கள் வாரண்ட் பிறப்பிக்கிறோம். இதுபோன்ற சம்பவம் நீதிமன்றத்தில் நடக்க வேண்டுமா? இது வெறுக்கத்தக்கச் செயல்’ என்று கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி உச்சநீதி மன்றம்  தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  ஆனால்.. தமிழக முதல்வரோ.. தமிழக அரசுக்கு தகவல் சொல்லவில்லை என்று கூறி, அரசு வழக்கறிஞர்களை பணி நீக்கம் செய்திருக்கிறார். எது உண்மையோ..! கண்ணை கட்டுது சாமி!

பாலபாரதியாகிய நான் மிகுந்த தலை கணத்துடன் நடந்து கொள்வதாய்.. எல்லோருக்கும் பாசமிகு அண்ணன் ஒருவர் புலம்பி வருகிறார். உண்மையில்.. அவரின் வயதுக்கும், அனுபவத்திற்கும் நிறைய மதிப்பு கொடுத்தே வந்திருக்கிறேன் நான். என்ன.. அவரோடு உட்கார்ந்து, அவரைப் போல எதிர்படும் பெண்கள் பற்றி மோசமாக கமெண்ட் அடிப்பதில்லை. அவரோடு இருந்து எந்த சீன் படங்களும் பார்ப்பதில்லை என்பதால் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். ஆனாலும்.. எனக்கு ஆவாததை நான் எப்படி செய்ய முடியும்.  எல்லாத்தையும் அந்த சுப்பையா பார்த்துக்கொள்ளுவான் என்ற நம்பிக்கையில் ஓடுகிறது வாழ்க்கை!

என்னமோ தெரிய நண்பர்களே.. இந்த வருடம் இதுவரை எனக்கு நல்ல வருடமாகவே போய்க்கொண்டிருக்கிறது. இரண்டு வருடமாக எழுதிக்கொண்டிருந்த நெடுங்கதையை முடித்து அச்சுக்கு கொண்டு வந்து விட்டேன். விறபனையும் பரவாயில்லை என்றே சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது உண்மை!

இனி மோட்டு வளையை வெறிக்க வேண்டியதிருக்காது.. யார் இருக்கா.. என்று தெரு முழுக்க அலைந்து நடுநிசி வீடு திரும்ப வேண்டியதிருக்காது.. கை ஒடிந்தாலோ, உடம்பு முடியாமல் போனாலோ.. தனிமை குறித்து வருந்தி தலையணை நனைக்க வேண்டியதிருக்காது. இனி கொஞ்சம் பொறுப்புடன் நானும் நடந்து கொள்ள வேண்டும். என்னையும் மனிதனாக மதித்து.. வீட்டு காரியங்கள், விசேசங்கள் என்று எல்லா நிகழ்வுக்கும் அழைப்பார்கள். ஆம் நண்பர்களே..  இவ்வருட இறுதிக்குள் வாழ்க்கைத் துணை ஒருவரை முடிவு செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

இந்த கவிதைக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கலாம்..
சில ஆண்டுகளுக்கு முன் காவிரி பிரச்சனையை முன்னிருத்தி திரை உலகினர் நெய்வேலியில் பெரிய பேரணியை நடத்தி, கர்நாடகத்திற்கு எதிரான தங்களின் நிலையை காட்டினார்கள். அப்போது நம்ப சூஊஊஊஊஊஊப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனித்து, உண்ணாவிரதம் இருந்து தனி ஆவர்த்தனம் நடத்தினார். (இதன் அரசியல் உணராத திரை உலக அறிவுஜீவிகள் நெய்வேலி பங்சன் முடித்து இங்கேயும் வந்து வாழ்த்திவிட்டுப் போனது சோகமான காமெடி) அப்போது மும்பையில் இருந்த நான் ஒரு சிறு பத்திரிக்கைக்கு எழுதிய குறுங்கவிதை இது.

ஒரு துளி வியர்வைக்கு

ஒரு பவுன் தங்கக்காசு

ஏமாளித் தமிழன்

இப்போது நினைவுக்கு வந்ததற்கு காரணம் இந்த செய்தி தட்ஸ்தமிழ்டாட்காம்

உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்க! அல்லது யாரிடமாவது பேசுங்க!!

விடுபட்டவை 31 ஜூலை 08
சரியோ, தப்போ.. எனக்கு தெரிந்தவற்றை, தேடி சேகரித்தவைகளை கதை போல சொல்ல முயன்று இருக்கிறேன். தோழமை பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் என் நெடுங்கதை நூலின் பெயர் “அவன் -அது = அவள்”. திருநங்கைகளின் வாழ்வில் இருக்கும் அவல நிலையை எழுத்தில் கொண்டு வர முயன்று இருக்கிறேன். சென்னையில் பிரபலமான அனேக கடைகளில் கிடைக்கிறது. ஆன் லைன் வியாபாரத்திற்கு எனி- இந்தியன் தளத்தினை நம்பி இருந்தது பயன் தரவில்லை. அவர்கள் கைக்கு நூல் கிடைத்து பதினைந்து நாட்களாகியும் அப் டேட் செய்யமுடியாமல் அவதிப்படுகிறார்கள். ஹரனிடம் போனில் பேசியும் வழியைக்காணோம்.  நண்பர் ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்த போது தான், உடுமலை டாக் காம் பற்றி தகவலைச் சொன்னார். பதிப்பகரிடம் சொல்லி இருக்கிறேன். விற்பனைக்கு ஆன் லைனில் ஏற்றப்பட்டவுடன் அதன் சுட்டியை தருகிறேன்.

-OoO-

சென்னையில் நடந்த தொடர் கொலைகளுக்கான பரபரப்பு இப்போது வேறு பக்கம் திரும்பி இருக்கிறது. மக்கள் கவனத்தில் இப்போது குண்டு வெடிப்பு குறித்தான அச்சமும், பீதியும் ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ச்சியாக திவிரவாதிகள் என சிலரின் கைதும் அதை அதிகரிக்கச் செய்திருக்கிறது. சைக்கோ கொலைகாரனை சுட்டாவது பிடிப்போம் என்று காவல் துறை சொன்னதாக சில செய்தித்தாள்களில் செய்தி வந்த பின் எந்த கொலையும் நிகழவில்லை. (சைக்கோ.. பேப்பர் படிக்கிற ஆசாமி போல..!) தொடர்கொலைகள் முடிவுக்கு வந்திருப்பதாக தோன்றுகிறது. ஆயினும்.. காவல் துறையின் அலட்சியப்போக்கு மாநகரவாசிகளின் உறக்கத்தை கெடுத்திருப்பது உண்மை.

-oOo-

நான் புதியதாக வாங்கிய சோனி எரிக்சன் K790i யில் எடுக்கப்படும் படங்களை அப்படியே ப்ளாக் செய்யமுடியும் என்று அறிந்து கடந்த வாரத்தில் கைபேசியில் இணைய இணைப்பு பெற்று போகிற இடங்களில் எல்லாம் எடுக்கும் படங்களை  http://balafotos.blogspot.com என்ற முகவரியில் வலையேற்றி வந்தேன். அப்புறம் போர் அடிக்க, அதனை விட்டு விட்டேன். விரைவில் இதனை தொடர்வேன். ஆங்கிலத்தில் தலப்பு வைப்பது தான் செம கடியாக இருக்கிறது.

-OoO-

ஏகப்பட்ட குழப்பங்கள். பொருள் தேடி, நிம்மதி தேடி, தோழமை தேடி, பணிச்சுமைகளுக்கு ஊடே ஓடிக்கொண்டிருக்கிறேன். நேரம் தவறி சாப்பிடுவது, உறங்குவதற்கும் எழுவதற்குமான நேரங்களின் ஒழுங்கின்மை என வாழ்க்கை அதன் போக்கில் என்னை இழுத்துக் கொண்டு ஓடுகிறது. நேரம், தேதி, கிழமை, மாதம் என எல்லாவற்றையும் கடந்தவனாய் வாழ்வது போன்ற ஒரு உணர்வு.  அதனாலோ என்னவோ தலைப்பில் குளறுபடி. வழக்கம் போல மன்னிக்க…!