Oct 14
FLASH NEWS:- ஈழத்தமிழர் பாதுகாப்பு..மத்திய அரசுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
இன்று மாலை தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இங்கே!
தீ ர் மா ன ம் 1.
இலங்கையில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிற இனப் படுகொலைக் கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக் கணக்கான தமிழ்க் குடும்பங்களில் பூவும் பிஞ்சும் போன்ற குழந்தைகள் கூட கொல்லப்பட்டு பூண்டற்றுப் போகிற அளவுக்கு நிலைமை; நாளுக்கு நாள் பெருகி வருவதால் ஏற்கனவே கண்ணீர்க் கடலில் மிதக்கும் இலங்கைத் தமிழர்கள்; சிங்கள இராணு வத்தின் தாக்குதலையும் கண்டு; எங்களுக்கு அபயமளித்துக் காப்பாற்ற இந்த உலகில் நாதியே கிடையாதா? என்ற கவலையில், வாடி வதங்கி, இதற்கோர் விடிவு எப்போது ஏற்படும் என்று விழி கலங்கி வழி பார்த்து நிற்கின்றனர். இந்தப் போர் நிறுத்தப்பட்டு ஈழத்தில் அமைதியும் சக வாழ்வும் திரும்புவதற்கேற்ற நடவடிக்கைகளை இந்தியப் பேரரசு உடனடியாக எடுத்து அதனை நிறைவேற்றிட வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீ ர் மா ன ம் 2.
இந்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடு என்ற முறை யில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய அரசால் வழங்கப்படும் இவ்வகை உதவிகள் - இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தி தமிழர்களை அழித்திடவே - இலங்கை அரசால் பயன்படுத்தப்படு வதால் அவற்றை மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டுமென்று இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீ ர் மா ன ம் 3.
இந்தத் தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவும் இலங்கையில் இரண்டு வாரக் காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வரா விட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்பதை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.
தீ ர் மா ன ம் 4.
போர் நிறுத்தம் செய்யப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக இடம் பெயர்ந்து வாழ்வதற்கும், உணவு, உறையுள், மருந்து போன்றவற்றை வழங்குவதோடு, மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கும் மத்திய அரசு முன் வரவேண்டுமென்று இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீ ர் மா ன ம் 5.
மனிதாபிமான முறையில் பல்வேறு உதவிகளை வழங்க முன் வரும் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் வேறு வழிகளில் திருப்பி விடப்படாமல், பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாகச் சென்றடைவதற்கு ஏற்ற வகையில் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வ தேச அமைப்புகளின் துணையினை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீ ர் மா ன ம் 6.
வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களை - இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குவதும், சிறைப்பிடித்து மனித நேயமற்ற முறையில் நடத்துவதும், கருணை துளியுமின்றி சுட்டுக் கொல்வதுமான கொடுமைகள் - தொடர்ந்து நடைபெற்று வருவதை அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் மிகவும் கண்டிப்பதோடு; மனித நாகரிகமற்ற, மனித உரிமைகளை முழுவதுமாக மீறுகின்ற இச்செயல்களுக்கு மத்திய அரசு உடனடியாக நீடித்த நிலையான தீர்வொன்றை எட்டி, நடைமுறைப்படுத்திட வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறது.
***
Popularity: 1% [?]
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
19 responses so far சமூகம்/ சலிப்பு

Write in Indian Languages..
பொன்ஸ்
கலைஞருன்னா சும்மாவா
//வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களை – இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குவதும், சிறைப்பிடித்து மனித நேயமற்ற முறையில் நடத்துவதும், கருணை துளியுமின்றி சுட்டுக் கொல்வதுமான கொடுமைகள் – தொடர்ந்து நடைபெற்று வருவதை அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் மிகவும் கண்டிப்பதோடு; மனித நாகரிகமற்ற, மனித உரிமைகளை முழுவதுமாக மீறுகின்ற இச்செயல்களுக்கு மத்திய அரசு உடனடியாக நீடித்த நிலையான தீர்வொன்றை எட்டி, நடைமுறைப்படுத்திட வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறது.//
இந்த தீர்மானம் மட்டும் தான் தேவையான ஒன்று. இலங்கை பிரச்சனை தமிழ்நாட்டுக்கு என்றும் தேவை இல்லாத ஒன்று. ஏற்கனவே பட்டது போதும்.
படித்தவுடனே தோன்றும் கருத்தை லேபிளில் கொடுத்துள்ளீர்கள் பாலா.. வேறென்ன சொல்ல?
அமைதி ஏற்பட இறைவனை வேண்டுவதைத் தவிர என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை.. செய்ய இயலுபவர்கள் செய்யத் துணிவதில்லை.. மனம் வருந்துகிறது பாலா..
\\
Filed under : சமூகம்/ சலிப்பு
\\
இது தான் நிஜம்……..
என்னத்துக்காக இவ்வளவு நாள் யுத்தம் நடக்குது என்பதில் கூட தெளிவில்லை இலங்கைல இருக்கிறவர்களுக்கு பிறகெப்படி மற்றவர்கள் அதனை தீர்க்க முடியும்
தமிழக அரசியலை ஒதுக்கிவிட்டு,தமிழ் இனப் படு கொலையைக் கண்டித்து,அதற்கு முற்றுப் புள்ளி வைக்க எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
கூடி வாழ முடியாதவர்கள் பிரிந்து வாழ வேண்டியது தான் என்பதை உலகெங்கும் பார்க்க முடிகிறது.சிங்கள இன வாதம் இந்தியாவிற்கு எதிராகத்தான் இது வறை நடந்துள்ளது என்பது புரியாததா?
தமிழக மீனவர்களையே கொல்லும் சிங்களம் அப்பாவித் தமிழர்களை எப்படியெல்லாம் துன்புறுத்திக் கொன்று வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் மனித இதயம் படைத்தவர்கள் தானா?
தங்கள் குடும்பத்திற்கு இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வார்கள்/
இந்தியாவே விழித்தெழு.பொய் சொல்லாதே! மனித நேயத்தை நாடு.
நல்ல முடிவுகள். எங்கேயோ உள்ள பாலஸ்தீனர்களுக்காக குரல் கொடுக்கும் இந்தியா, அருகில் உள்ள ஈழத்தவர்களுக்கு குரல் கொடுக்க மறுப்பது தவறு. பாலஸ்தீனர்கள் என்ன அகிம்ஷா வாதிகளா? . பாதிக்கப்படுவது யாராக இருந்தாலும் குரல் கொடுப்பதுதான் தர்மம்.
புள்ளிராஜா
வாழ்க கலைஞர்!
வளர்க அவரது புகழ்!
தீ ர் மா ன ம் 6. இது மட்டும் தான் தேவையானதும் நியாயமானதும்.
தீர்மானங்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு
அதை செயல்படுத்தும் போதுதான் கவனம் தேவை.
முன்பொரு தடவை இந்திய இராணுவம் இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்கள் இன்னும் மறக்கக் கூடியதல்ல.
அதுபோல் எதுவும் நடந்து விடக் கூடாது.
உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருப்பதே நல்லது,
வணக்கம்.
ஈழத்தமிழர் இன்னல் தீரட்டும்!
தமிழக அரசின் செயல் பாராட்டிற்குரியது.
வெல்க தமிழ்! வாழ்க தமிழர்!
தோழமையுடன்
மா.தமிழ்ப்பரிதி
http://thamizhagam.net/
http://chiefguide.net/
புலிகளைக் காப்பாற்ற கருணாநிதி முயல்கிறார்: கனிமொழியின் ராஜிநாமா நடவடிக்கை வடிகட்டிய மோசடி நாடகம்
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா
சென்னை, அக். 15: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று கோருவதன் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
“2 வாரங்களுக்குள் போர் நிறுத்தம் வர நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா என்று ஒரு தீர்மானத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றி உள்ளனர். இதன் மூலம் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முதல்வர் முயல்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கையில் இப்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.
இலங்கையில் இப்போது நடப்பது விடுதலைப் புலிகள் எனும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இதில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவிடாமல், அவர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன. இது உடனே நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துச் செல்ல விடுதலைப் புலிகள் தடை செய்யக் கூடாது என்று விடுதலைப்புலி நண்பர்கள் மூலம் கருணாநிதி வலியுறுத்தி இருக்கலாம்.
மத்திய அரசுக்கு 2 வார அவகாசம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பது மிகப் பெரிய மோசடி நாடகம்.
மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் 6 மாதங்களில் முடியவுள்ளது. அதனால் பெரிய நஷ்டமில்லை என கருணாநிதி கருதுகிறார் போலும். ஆனால், மத்திய அமைச்சர்களைப் பற்றி தீர்மானத்தில் ஏதும் குறிப்பிடவில்லை.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, இலங்கைத் தமிழர்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியையே ராஜிநாமா செய்ததாகச் சொல்லும் கருணாநிதி, இன்னும் 30 மாதங்கள் பதவிக் காலம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வோம் என ஏன் சொல்லவில்லை? மாநில அரசே பதவி விலகும் என ஏன் அறிவிக்கவில்லை?
கருணாநிதி சொன்னதை செய்யக் கூடிய மத்திய அரசு இருக்கிறது. எனவே, கருணாநிதி வேண்டுகோளை ஏற்று, பிரதமர் தொலைபேசியில் இலங்கை அதிபரை தொடர்புகொண்டு பேசுவார் அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை இலங்கைக்கு அனுப்பி இந்தியாவின் கவலையை தெரிவிக்கச் சொல்வார். பின்னர் “”மத்திய அரசு சரியான பாதையில் செல்கிறது” என்று அறிக்கைவிட்டு, தனக்கு வெற்றி கிடைத்ததாக கருணாநிதி சொல்வார். இதுதான் அவர் நடத்தப்போகும் நாடகம்.
தமிழக மக்களவை உறுப்பினர்கள் ராஜிநாமா செய்தாலும், பிரதமரை அறிக்கை விடச் செய்து அமைச்சர்கள் பதவியில் நீடிக்க வைக்க தேவையான ஏற்பாட்டினை கருணாநிதி செய்வார்.
இதுபோன்ற கண்துடைப்பு நாடகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
உண்மையில் இலங்கைத் தமிழர் மீது அக்கறை இருந்தால் அமைச்சரவையில் இருந்து திமுக விலகுவதாக உடனே அறிவிக்க வேண்டும். அனைத்து தமிழக மக்களவை உறுப்பினர்களும் அரசுக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் திமுக அரசு பதவி விலக முன்வர வேண்டும்’ என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, அக். 15: கனிமொழியின் ராஜிநாமா நடவடிக்கை வடிகட்டிய மோசடி நாடகம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக கருணாநிதியின் மகள் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்து விட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது கனிமொழிக்கு அக்கறை இருந்தால், மாநிலங்களவைத் தலைவரிடம் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை இன்றைய தேதியிட்டு கொடுத்திருக்க வேண்டும். தன் தந்தையிடம் பின் தேதியிட்டு கொடுத்துள்ளார். கனிமொழியின் ராஜிநாமாவுக்கு அது எழுதப்பட்டிருக்கும் காகிதத்தின் மதிப்புக் கூட கிடையாது. இது வடிகட்டிய மோசடி நாடகம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
http://www.thenee.com/html/161008-3.html
கால் நூற்றாண்டுகளாய் ஈழத்தில் ஓடும் ரத்த ஆற்றுக்கு தடுப்பணையை ஏற்படுத்தும் தமிழக அனைத்துக் கட்சி கூட்டம் என்ற நம்பிக்கையுடன் சக தமிழன். – இரா. நாகராஜன்.
thank very well
அன்பின் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களே, சகோதர சகோதரிகளே, மாணவமணிகளே,
உங்கள் தொப்புள் கொடி உறவு பற்றிய உணர்வுகளை மதிக்கிறேன்,அதற்காகக் கடமையும் பட்டுள்ளேன்,எமது நாடான இலங்கையில் நடப்பதை உங்களால் மாற்ற முடியுமானால் அதைச்செய்வதற் முன்வந்ததையிட்டுப் தமிழன் என்றமுறையில் மிக்க நன்றியுடையேன். ஜனநாயகமென்றால் என்ன? பேச்சில்முடிவதா இல்லை கொலையில் முடிவதா? என் கொள்கையை என்னால் பேசமுடியாது என்றால் அதற்குப் பெயர் ஜனநாயகமென்றால் அது எந்த அகராதியிலுள்ளது என்று எடுத்துக்காட்டமுடியுமா? மற்றவர் விரும்பினால் கேட்கட்டும் அல்லாது விடட்டும்
அப்படிப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும். உங்கள் அன்பு என்றென்றைக்கும் எமக்குத்தேவை. தற்போதைய நிலையில் உங்களால் முடிந்தவரை ஈழத் தமிழருக்கு அமைதியென்னும் ஒரு வழியும், ஈழத்தில் எந்தப்பகுதியில் சென்றாலும் ஜனநாயகச் சுவாசக் காற்றை அனுபவிக்கும் உரிமையும் வேண்டும்.
சிங்கள இனமும்,தமிழினமும்,இஸ்லாமிய இனமும், மற்று இலங்கையில் வாழும் எல்லா மக்களும் இந்தியர் இந்தியாவில் வாழ்வதுபோல் ஒரு சம அரசை ஆக்கித்தர முடியுமா? அதை மத்திய அரசாங்கத்திடம் சொல்லி இலங்கை அரசை அதற்குச்சாதகமாக செயல் படச்செய்யமுடியுமா? செய்தபின் உங்கள் முன்னிலையில் ஒரு ஜனநாயகத்தேர்தலை நடாத்தி மக்களின் பிரதிநிதிகளை எம்மிடம் தந்துவிட்டுப் போகமுடியுமா? அதற்கு புலிகள் சம்மதிப்பார்களா?
முன்பு இந்திய அரசர்கள், இலங்கைக்கு வந்து போர் தொடுத்து பொலநறுவை வரை சென்று வந்தார்க்ளெனக் கேள்விப்பட்டோம்,ஆனால் அவர்கள் திரும்பிச்சென்றுவிட்டார்கள். இப்படிப் பல முறை வென்றதும் திரும்பிச் சென்றதுமாகவே செயல் பட்டுக்கொண்டுள்ளார்கள். இலங்கையில் தமிழர் சனத்தொகை ஏறியதாக்ச் சரித்திரமில்லை. எப்பவும் அடங்காப்பற்றில் தான் அடங்கியுள்ளனர். தற்பொழுதுமதே நிலை.
சகோதரங்களே, பசியை பற்றி ஏழையிடம் கேளுங்கள், செமிபாட்டிலுள்ளோரைக் கேட்டால் அவர் சொல்லும் பதில் ஏட்டுச்சுரக்காய்தான் கறிக்குதவாதே. ஈழத்தை கொடிய நேரங்களில் வந்து பார்த்தோர் ஆடு குழை மேய்ந்த்துபோல்தான்.சொல்வதை இருந்து கேட்டு அதை உடணடியாக வந்து தெரிந்த ஊடகத்தில் போட்டு தமக்குப் பெருமை தேடிக்கொள்வர் .சுதந்திரமாக நடந்தோ அல்லது தன்னிச்சையாய் காரிலோ,துவிச்சக்கரவண்டியிலோ சென்று பார்த்து நோகாமல் மக்களிடம் பேசி வந்தபின் ஊடகங்களுக்குப் பேட்டிகொடுக்கலாமே.
இப்போது போர் நடைபெறுகிறது, மக்கள் அல்லோ,கல்லோலப் படுகிறார்கள், இருக்கப் படுக்க இடமின்றித் தவிக்கிறார்கள், மரநிழலில் தங்கள் வீடமைக்கிறார்கள், பாம்பு,பூச்சியென்று சொல்லவொண்ணாத்துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். இது ஒரு புறமிருக்க அவர்களை சரியான பக்கம் போ என்று திசை காட்ட உதவியில்லை. இந்நேரத்தில் அவர்க்கு உங்கள் உதவி அவர்களை அங்கிருந்து பயனுள்ள இடத்திற்குப் போகச்சொல்லல். அவர்கள் குடும்பத்துடன் போகும் நேரம் அவர்களை யாரும் சச்சரவு செய்யாமை மிகவும் முக்கியம்.அந்நேரம் மட்டும் போர் இல்லாமல் தடுக்கும் முறை பேனுதல் வேண்டும்.அவர்கள் வந்தபின் அவர்களைப் பாதுகாக்கவும் அவர்கட்குத்தேவையான உதவியைச் செய்தல் போன்றன நிறைவேற்றப்படல் வேண்டும்.
பின்பு போராசை கொண்டவர் தொடரட்டும் அல்லது போரை ஒரேயடியாக நிறுத்தி அழுத்தமான பேச்சைத்தொடரட்டும்.போராடுபவர்களை நிறுத்தினால் அது நிரந்தரமாகவிருக்க வேண்டும் இல்லையேல் விட்டு விட்டுப் பெய்யும் மழை போல் நாட்டை அழித்து விடுவார்கள்.மக்கள் அழிவு கூடுமேயொழிய வேறொன்றுமில்லை.
இறப்பதோ போவதோ இலங்கையர்தான் அதுவும் கூடுதலாகத் தமிழரே. போராட்டம் ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை இழந்த்து கூடுதலாகத் தமிழரைத்தான் அப்படியே தமிழர் இறந்துகொண்டுபோவதை தொப்புக்கொடி உறவுகளே விரும்புகிறீர்களா?
சரியான தீர்க்கமான முடிவை எடுத்து உங்கள்போராட்டத்தைத் தொடருங்கள், இந்திய மத்திய அரசுடன்
பேசுங்கள்.தயவு செய்து ஈழமக்களை வைத்து உங்கள் அரசியல் நடத்தாதீர்கள். சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுத்த்துபோல் இருத்தலாகாது, நாங்கள் உங்கள் தொப்புள்கொடி உறவுகளே.
ஈழத்து நிறைகுடம்
http://www.theneeweb.de/html/171008-1.html
Sankily அவர்களுக்கு,
செயலலிதாவுக்கு எப்பொழுதும் தமிழ், தமிழர் என்றாலே பிடிக்காது.
உலகறிந்த உண்மை இது.
அதற்கான அடிப்படைக் காரணம் உண்டு.
செயலலிதாவுக்குக் கட்சி சாராத தமிழுணர்வாளர் கூற விரும்புவது இதுதான்:
சொல்லொணாத் துனப துயரத்துக்காளாகியிருக்கும் இலங்கைத்
தமிழர்க்காக இதுவரை எதுவும் உருப்படியாகச் செய்யாத கருணாநிதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகுதான் செயல்படத் தொடங்கியுள்ளார்.
இப்போது செயலலிதா குறுக்குசால் ஓட்டுகிறார்.
இலங்கைத் தமிழ்மக்களுக்குக் கொஞ்சநஞ்ச உதவியும் கிடைத்துவிடக் கூடாதென்று எண்ணுகிறார்.
அரசியல் பண்ணுவதற்கு ஆயிரம் செய்திகள் உள்ளன. அதையெல்லாம் விட்டு ஈழத்தமிழர் வாழ்வோடு செயல்லிதா விளையாடுவது நல்லதன்று.
சிக்கலைத் திசைதிருப்புகிறார் செயலலிதா.
வரலாற்றில் பழி சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
“நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்”
கடந்த வாரம் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அரசு உட்பட இலங்கையை ஆட்சி செய்த சகல அரசுகளும் புலிகள் இயக்கத்தை ஜனநாயக வழிக்கு கொண்டுவர பல பிரயத்தனங்களை மேற்கொண்ட போதும் அவர்கள் அதற்கு எந்த காலகட்டத்திலும் இணங்கவில்லை என்றும் இலங்கையில் எதிர்வரும் காலங்களில் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்றும் இலங்கைத்தீவில் புரையோடிப்போய் இருக்கும் இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு அரசியல் தீர்வே என்றும் அது பயங்கரவாதம் ஒழிக்கப்படும் சமநேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மறுபுறத்தில் இன்று இந்திய தமிழ் நாட்டு அரசியல் வாதிகளில் ஒருபகுதியினர் இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் முகமாக பல்வேறுபட்ட போராட்டங்களிலும் ஒன்று கூடல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விடயங்களில் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவது என்ன? என்ற கேள்விக்கு பதில், ஒன்றும் இல்லை என்றே வருகின்றது. ஆக செய்வதறியாது திகைப்படைந்து நிற்கும் பாமர மக்கள் ஏமாற்றப் படுகின்றார்கள் என்பது ஒன்று மட்டுமே உண்மை. இந்தியாவிலே பாரிய போராட்டங்கள் இடம் பெறுகின்றன, தமிழ்நாட்டு அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றது. அன்று போல் இலங்கையின் இறையாண்மையை மீறி இந்திய அரசு இலங்கையின் எல்லையினுள் நுழைந்து எமக்கு சாப்பாட்டுபார்சல் தன்னும் போடும் என எதிர்பார்க்கும் மக்கள் ஏமாற்றமடைய இருக்கின்றார்கள்.
ஜெயலலிதா பூரண எதிர்ப்பு!
இங்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் என்று கூறும் போது அங்கு தனக்கென ஓர் தனி இடத்தை வைத்துக்கொண்டுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவி செல்வி. ஜெயலலிதா, இந்திய பிரதமரை படுகொலை செய்த குற்றத்திற்காக பயங்கரவாத இயக்கம் என தடைசெய்யப்பட்டுள்ள இயக்கத்தினது தலைவரும் இந்தியாவின் அதியுயர் மதிப்புக்குரிய உயர் நீதிமன்றத்தினால் குற்றாவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முதல்தர பயங்கரவாதியுமாகிய பிரபாகரனது யுத்தத்தை எந்த விதத்திலும் ஆதரிக்க முடியாதென்றும் இங்குள்ள அரசியல்வாதிகள் பிரபாகரனக்கு ஆதரவாக செயல்படுவார்களேயானால், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் மறுபுறத்தில் அங்கு தமிழர்கள் அனாவசியாமான முறையில் பாதிப்புகளுக்கு உள்ளாவது கவலை தருகின்றது என்றும், தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டியது எமது கடமை என்றும் அதேநேரம் பயங்கரவாதத்திற்கு துணைபோவது உசிதமானதல்ல என்றும் தனது தீர்க்கமான முடிவை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ள நிலையில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் இலங்கை ஒர் இறையாண்மை உள்ள நாடு என்பதை மட்டும் தமிழக அரசு மறந்து விடக்கூடாது என கூறியிருப்பதானது தமிழக அரசுக்கான ஒரு சொல்லில் பதிலாகவே அமைந்துள்ளது. (One word Answer) அதாவது இலங்கை என்பது ஓர் இறையாண்மை உள்ள நாடு அவர்களது உள்வீட்டு விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கு தலையிட எந்த அதிகாரமும் கிடையாது. அந்த வகையில் தமிழக அரசினது நாடகங்களுக்காக நாம் எமது எல்லையை மீறி பிறிதொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்பதே அவர் கூறியுள்ள கருத்தாகும்.
இலங்கையின் இறையாண்மையில் பிறர் தலையிட முடியாது என்பதையே தமிழ்ச்செல்வனும் கூறியிருந்தார்.
இந்த இடத்தில் அன்றைய புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான தமிழச்செல்வன் அவர்கள் புலிகளியக்கத்தை ஐரோப்பிய யூனியன் தடை செய்ய முயன்ற போது “எம்மைத் தடை செய்ய ஐரோப்பிய யூனியனுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது” என கேட்டிருந்த அந்த கேள்வியை எடுத்து நோக்குவோம். அந்த இடத்தில் இருந்து நாம் சிந்திப்போமாக இருந்தால் அன்று அவர் எதைக் கூறியிருந்தார்? இலங்கை ஓர் இறைமையுள்ள நாடு. தனி இறைமையுள்ள ஒர் நாட்டின் பிரஜைகள் நாம். இங்கே ஓர் உள்நாட்டு போர் இடம்பெறுகின்றது. நாம் பயங்கரவாத செயல்பாடுகளை இந்த நாட்டில் மேற்கொள்ளலாம். அது எமக்கும் எமது அரசிற்கும் இடையேயான பிணக்கு. நாம் எமது நாட்டிலே மேற்கொள்கின்ற தீண்டத்தகாத நடவடிக்கைகளுக்கு எமது அரசே எம்மைத் தண்டிக்க முடியும் இது ஏனைய நாடுகளுக்கு அப்பாற்பட்ட விடயம். அவ்வாறு அவர்கள் தங்களது மூக்கை இங்கு நுழைக்கும் போது அது இலங்கையினுடைய இறைமையை மீறுகின்ற செயலாகும் என்பதே அவர் கூறிய கருத்தாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்திருந்தார்.
தமிழக அரசியல்வாதிகளின் எதிர்வரும் தேர்தலை ஒட்டிய நாடகம்.
இன்று தமிழக அரசியல்வாதிகள் எதிர்வரும் தேர்தலில் இந்திய பாமர மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பற்காக இலங்கை பிரச்சினையை துருப்புச் சீட்டாக எடுக்க முனைவது இங்குள்ள மக்களை மேலும் சிக்கலுக்குள் தள்ளும். காரணம் புலிகளின் சகல நயவஞ்சகத்தனங்களையும் உணர்ந்தவர்களாக புலிகளின் இரும்புப் பிடியில் உள்ள மக்கள் புலிகளின் கொடூரங்களில் இருந்து விடுபடுவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதுடன் தொடர்ச்சியாக அம்மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
புலிகள் தனிமைப் படுத்தப்படுவது நிச்சயமானதாகி விட்டநிலையில் புலிகளின் ஆயுத பலத்தால் பாரளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு என தம்மைக் கூறிக்கொள்வோர் தமது இருப்பை தக்க வைத்தக் கொள்ளும் நோக்குடன் புலிகளை காப்பாற்ற எடுக்கும் முயற்ச்சி இந்திய அரசியல்வாதிகளை பிழையான வழிக்கு இழுத்துச் செல்கின்றது. இந்திய அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என தம்மைக் கூறிக்கொள்வோரினதும் சுய ரூபங்களை புரிந்து கொள்ள எத்தனிக்க வேண்டும்.
புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் இருந்து திட்டமிட்டே வெளியேறினார்கள்.
புலிகள் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு கிடைக்க இருந்த அனைத்து தீர்வுகளையும் புறக்கணித்து வந்தது மட்டுமல்ல தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கக் கூடிய இலங்கை இந்திய ஒப்பந்தத்தை, அதனூடாக உருவாக்கப்பட்ட இணைந்த வட-கிழக்கு மாகாண சபையை தமது ஆயத பலம் கொண்டு கலைத்தெறிந்தார்கள். இலங்கை அரசு பேச்சுக்கு அழைத்திருந்த காலகட்டங்களில் ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை திட்டமிட்டபடியே முன்வைத்து அவற்றில் இருந்து விலகி வந்திருக்கின்றார்கள்.
இறுதியாக இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இலங்கை அரசு மிகவும் இதயசுத்தியுடன் செயல்பட்டுள்ளது என்பதற்கு நியாயமான சான்றுகள் உள்ளன. ஊதாரணத்திற்கு எடுத்து கொள்வோமேயானல் பேச்சுவார்த்தைகளில் ஓர் முடிவை எட்டியிராத போதிலும் இராணுவ முகாம்களை வாபஸ்பெறுவது மிகவும் எச்சரிக்கத்தக்க விடயமாக இருந்தும் அரசு வட-கிழக்கு பிரதேசத்தில் இருந்த பல முகாம்களை வாபஸ்பெற்றிருந்தது. பாதுகாப்பு வலயங்களாக பிரகடணப்படுத்தியிருந்த ஏராளமான கடல்பரப்பை மக்களின், மீனவர்களின் வரையறையற்ற பாவனைக்கு அனுமதி வழங்கியிருந்தது. கட்டம் கட்டமாக புலியுறுப்பினர்களை அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களினுள் நுழைய அனுமதி வழங்கியிருந்தது. இவை யாவும் முற்றிலும் இராணுவத்தினருக்கு அச்சுறத்தலான விடயமாக இருந்த போதிலும் அரசு விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராகவே இருந்து வந்தது. மறுபுறத்தில் சமஸ்டி முறையிலான தீர்வொன்றிற்கு உடன் பட்டிருந்த அரசு அமைப்பொன்றை நிறுவியதுடன் புலிகள் அவ்நிறுவனத்தினூடாக பல வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்தும் நேரடியாக நிதியுதவியைப் பெற அனுமதியையும் வழங்கியிருந்ததுடன் ஏகப்பட்ட விட்டுக்கொடுப்புகளுக்கு இணங்கியிருந்தது.
ஆனால் புலிகள் மக்களின் தேவைகளில் அக்கறை கொள்ளாமல் தமது இராணுவ பலத்தை பெருக்குவதிலேயே முனைப்புடன் செயல்ப்பட்டார்கள். மீனவர்களின் மக்களின் நடமாட்டத்திற்காக அரசு விலக்கிக் கொண்ட பாதுகாப்பு வலயங்களின் ஊடாக ஆயத தளபாடங்களையும் வெடிமருந்துகளையும் கொண்டு வந்து குவித்ததுடன் அரசினால் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை முன்வைத்தார்கள்.
புலிகள் முன்வைத்த நிபந்தனைகளில் சிலவற்றைத் தருகின்றேன்.
1. வடகிழக்கு கடல்பரப்பில் தரையிலிருந்து 3 கிலோமீற்றர் தூரத்தினுள் புலிகளை சுயமாக ஆயதங்களுடன் நடமாட அனுமதிக்க வேண்டும்
2. வடகிழக்கின் சகல பிரதேசங்களிலும் குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் புலிகளை ஆயதங்களுடன் நடமாட அனுமதிக்க வேண்டும்.
3. யாழ்ப்பாணத்தில் உள்ள ஈபிடிபி யினரை அங்கிருந்து வெளியேற்றுவதுடன் அங்கு அவ்வியக்கத்தின் செயல்ப்பாடுகளுக்க தடைவிதிக்க வேண்டும்.
4. ஏனைய இயக்கங்களின் ஆயதங்களைக் களைய வேண்டும். (இந் நிபந்தனையை அரசு நிறைவேற்றி இருந்தது.)
5. தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அரசு பிரகடணம் செய்ய வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள நிபந்தனைகளில் தமிழ் மக்களுக்கு கிடைக்க கூடிய தீர்வுகள் அல்லது இலாபங்கள் யாது? ஆக புலிகள் காலாகாலமா தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன் தம்மை இராணுவ ரீதியாக பலப்படுத்திக் கொள்ள முனைந்துள்ளார்களே தவிர தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயன்றது கிடையாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதயம் தமிழ் மக்களில் சுதந்திர அரசியலுக்கு விழுந்த பலத்த அடி.
கடந்த போர் நிறுத்த ஓப்பந்தத்தை தமது இராணுவத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்திய புலிகள் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களினுள் நுழைந்து மாற்று இயக்க போராளிகளையும் அவ்விக்கத்திற்கு எதிராக தீவிரமாக செயல்ப்பட்ட இராணுவப் புலனாய்வாளர்களையும் அதன் அதிகாரிகளையும் கொண்றொழித்தார்கள். மக்களை அரசிற்கெதிரான கோஷங்களில் இறக்கினார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் ஓர் போலிக் கூத்தைமைப்பை உருவாக்கினார்கள். இக் கூட்டமைப்பின் உருவாக்கமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு விழுந்த முதலாவது அடி எனலாம். தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரம் புலிகளின் ஆயுத பலத்தினுள் முடக்கப்பட்டது.
யார் இந்தக் கூட்டமைப்பினர்? எதற்காக இக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது? எவ்வாறு உருவாக்கப்பட்டது? என சற்று விரிவாகப் பார்போம். புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக இருக்கும் நோக்கத்துடனேயே ஆயுதங்களை கொண்டு மக்களை அடக்கி வைத்திருக்கின்றார். அதேநேரம் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் தனது கட்டப்பாட்டினுள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமது ஆயுத பலத்தின் மூலம் மக்களின் வாக்குகளை அபகரித்து தனது கைப்பொம்மைகளை பாரளுமன்றம் அனுப்பி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அபகரித்துக் கொண்டார். தனது கபட நோக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சிறு குழுவிற்கு தேசியக் கூட்டமைப்பு என்றும் பெயர். இக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஈபிஆர்எல்எப் என்கின்ற அணியை எடுத்துக்கொள்வோம். அவ்வமைப்பு சட்டரீதியாக ஈபிடிபி யாக, ஈபிஆர்எல்எப் (வரதர் அணி) யாக, ஈபிஆர்எல்எப் (நாபா அணி) ஈபிஆர்எல்எப (சுரேஸ் அணி) யாக நான்கு பிரிவுகளாக பிளவு பட்டு அதன் ஒரு அங்கமே இன்று இந்த கூட்டமைப்புடன் புலிகளை ஆதரித்து நிற்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியை எடுத்துக் கொள்வோமேயானால் அது இரண்டு பிரிவுகளாக பிரிந்து அதன் தலைவர் ஆனந்தசங்கரி புலிகளுக்கு எதிரான கருத்துக்களை பலமாக முன்வைத்து வருகின்றார். தமிழீழ விடுதலை இயக்கம் என்கின்ற ரெலோவை எடுத்துக் கொள்வோமேயானால் அது இரு பிரிவுகளாக செயல்ப்பட்டு வருவதுடன் இன்று புலிகளுடன் இணைந்திருந்து தம்மை ரெலோ என அடையாளப்படுத்தி கொள்ளும் சிவாஜிங்கம் செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் ரெலோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் அவர்கள் புலிளால் ரெலோவினுள் புகுத்தப்பட்ட புலிகள் எனவும் அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்கள் கூறிவருகின்றனர்.
மேற்படி இந்த நபர்கள் தமிழ் மக்களால் காலம் காலமாக நிராகரிக்கப்பட்டிந்தவர்கள். இவர்கள் இன்று புலிகளின் ஆயுத பலம் கொண்டு பாராளுமன்றம் சென்றுள்ளதுடன் தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் மகுடம் சூடி உள்ளனர். இவர்கள் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக முடியும் இக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கின்ற தமிழ் அமைப்புக்களின் எண்ணிக்கையை ஒரு முறை பார்த்தால் இவர்களின் தேசியத்தில் உள்ள பாசிசம் புரியும். ஓட்டுமொத்தத்தில் புலிகளின் பாசிச செல்பாடுகளுக்கு அரசியல் அங்கீகாரம் பெறுவதற்காக ஆயுத முனையில் மக்களின் வாக்குகளை அபகரித்து பாராளுமன்றம் சென்ற இவர்கள் புலிகளின் ஆயுத கலாச்சாரம் முடிவுக்கு வரும்போது தமது அரசியல் வாழ்வும் முடிவுக்கு வரும் என்ற பயத்தினால் புலிகளைக் காப்பாற்ற இன்று தமிழக அரசியல்வாதிகளை பிழையான வழிக்கு திசை திருப்புகின்றனர்.
தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் செய்யவேண்டியது.
இலங்கைத் தீவிலே இடம் பெறுகின்ற யுத்தங்களின்போது தமிழர் தரப்பினர் மிகுந்த இழப்புகளுக்கு முகம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் என்ற வரிசையில் முதலிடத்தில் இருக்கின்றார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் இவ்யுத்தத்தினால் தமிழர் தரப்புக்கு மாத்திரமே பாதிப்பு என்ற விவாதத்திற்கே இடமில்லை. சிங்கள மக்கள் என்றுமே அச்சத்தில் வாழ்கின்றார்கள். தென்பகுதி பாடசாலை மாணவர்கள் குண்டுப்பீதியுடன் வாழ்கின்றார்கள், வடகிழக்கு பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ள முப்படையினரதும் குடும்ப அங்கத்தவர்கள் எந்த நிமிடத்திலும் மரணச்செய்தி ஒன்று வரலாம் என்ற ஏக்கத்துடன் தமது வாழ்நாட்களைக் போக்குகின்றார்கள். எனவே இலங்கைத் தீவில் இன ஐக்யமும் சாந்தியும் சாமாதனமும் வேண்டும் என இதய சுத்தியுடன் விரும்பும் மனிதர்கள் பக்கசார்பில்லாமல் இருதரப்பினருக்கும் ஓர் தீர்வை நோக்கி நகர வேண்டி அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
புலிகளது ஆயுதங்கள் என்பது சிங்கள அரசிற்கு அச்சுறுத்துலாக அமையாவிட்டாலும் அது தமிழ் மக்களின் இயல்பு வாழ்விற்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்துலானது. எனவே தமிழக அரசில்வாதிகள் புலிகள் தமது ஆயதங்கைளை கைவிட வேண்டும் என அழுத்தங்களைக் கொடுப்பதுடன் இலங்கையிலே அதன் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து கட்சி மாநாட்டில் பங்குபற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கேட்டுக்கொள்ள வேண்டும்.
இலங்கையிலே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் செயல் வேகம் மிக குறைவாக இருந்தாலும் அதற்கான 50 விழுக்காடு பொறுப்புகள் தமிழ் கூட்டமைப்பையே சாரும். தம்மை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனக் கூறிக் கொள்வோர் இவ்வமர்வுகளில் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் அங்கு என்ன விதமான தீர்வுகள் எமது மக்களுக்கு பொருத்தமானதென்பதை இவர்களால் முன்மொழிய முடியும் என்பதுடன் இலங்கை அரசு எவ்வித தீர்வையும் தமிழ் மக்களுக்கு தர முன்வராது எனும் பிரபாகரனின் மந்திரத்தை இவர்களும் ஓதுவதானது தீர்வுகளை இழுத்தடிக்க முயலும் தீய சக்கிகளுக்கு உறுதுணையாக அமையும். எனவே தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் புலிகள் மீதும் தமிழ் கூட்டமைப்பு மீதும் தகுந்த அழுத்தத்தை பிரயோகிப்பது இந்நிலையில் பொருத்தமானதாகும்.
விருகோதரன்
Sankily ,அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் .நன்றி.
ஊதாரணத்திற்கு எடுத்து கொள்வோமேயானல் பேச்சுவார்த்தைகளில் ஓர் முடிவை எட்டியிராத போதிலும் இராணுவ முகாம்களை வாபஸ்பெறுவது மிகவும் எச்சரிக்கத்தக்க விடயமாக இருந்தும் அரசு வட-கிழக்கு பிரதேசத்தில் இருந்த பல முகாம்களை வாபஸ்பெற்றிருந்தது.//
இது எப்ப..
ஒருவேளை ஆனையிறவை சொல்றாரோ ?
பேச்சுக்களின் போக்கில் உரசலை கொண்டு வந்ததே மக்களின் வாழிடங்களான கோயில் பாடசாலை வீடு கிராமங்கள் முதலானவற்றை ஆக்கிரமித்து அவற்றில் படை முகாம்களை அமைத்து உயர் பாதுகாப்பு வலயங்கள் ஆக்கி மக்களை அங்கிருந்து விரட்டியடித்து அகதி முகாம்களில் 10 வருடத்திற்கும் மேலாக வாழச் செய்த -
அத்தகைய பாதுகாப்பு வலய பிரதேசங்களில் இருந்து இராணுவத்தை பின்னகர்த்தி முகாம்களுக்குள் போகச் செய்து மக்களை மீள குடியேற்றும் நடைமுறையினை 90 நாட்களுக்குள் அமுல்படுத்துவதென்ற இணக்கம் இராணுவத்தால் மீறப்பட்டதுதான். கடைசிவரை இராணுவம் முகாம்களுக்குள் பின்னகரவில்லை.
அவ்வாறு பின்னகர்ந்திருந்தால் தகவலறியும் பொருட்டு அறியத்தரவும்.
கட்டம் கட்டமாக புலியுறுப்பினர்களை அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களினுள் நுழைய அனுமதி வழங்கியிருந்தது.//
இது புலிகளுக்காக மட்டும் வழங்கப்பட்ட விசேட சலுகையல்ல. ஒப்பந்தத்தின் பிரகாரம் –
இராணுவ கட்டபாட்டு பகுதியில் புலிகளும் புலிகளின் கட்டுபாட்டு பகுதியில் இராணுவமும் ஆயுதம் தரிக்காத இராணுவ சீருடை தரிக்காத நிலையில் பயணிக்கலாம். உலாவலாம் என்பது இருதரப்பு இணக்கம். அதற்கேற்ப புலிகளின் அரசியற் பிரிவினர் யாழ்ப்பாணம் திருகோணமலை பிரதேசங்களில் இராணுவ கட்டுபாட்டு பகுதிகளில் பிரசன்னமாயிருந்தனர்.
வடகிழக்கின் சகல பிரதேசங்களிலும் குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் புலிகளை ஆயதங்களுடன் நடமாட அனுமதிக்க வேண்டும்.//
இதுவும் எப்போ.. ?
பெண்போராளிகள் இடுப்பில் அணியும் பட்டி இராணுவ பட்டி என்பதை காரணம் காட்டி அவ்வாறு தமது கட்டுபாட்டு பகுதிகளில் வரவேண்டாம் என இராணும் சொல்லியிருந்தது. அதைதான் சொல்கிறாரா..இவர்?
கூட்டமைப்பு கூத்தமைப்பாகவே இருக்கட்டும். அதனை புலிகள் பாராளுமன்றம் அனுப்பவில்லையே. ஓட்டுபோட்டது புலிகள் இல்லையே.. 90 சதவீதமான மக்களின் ஓட்டு அவர்களுக்கு கிடைத்ததே.. சரி உங்கள் ஆசைக்கு 40 சதவீதத்தை கள்ள ஓட்டு என்றே வைத்துக் கொள்ளுங்களே.. நீங்கள் விளக்கும் ஜனநாயகம் 50 வீதத்தையும் பெரும்பான்மை என்று தானே சொல்கிறது.
சமஸ்டி… ?
ரணில் அரசுடனான பேச்சுகளின் போது புலிகள் தாமாக ஒரு இடைக்கால தீர்வு திட்டத்தை வரைந்து அதை அரசுக்கு சமர்பித்து – அது குறித்து பேசலாம் என்றவுடன் – அப்போதைய ஜனாதிபதி ஆட்சியை கலைத்தாரே.. இதுதான் சிங்கள அரசுகளின் இதய சுத்தியா.. சுத்திதான்..
தமிழர்கள் பங்கு கொள்ளாத ஜனாதிபதி தேர்தலில் எங்கே ரணில் புலிகளுக்கு சமஸ்டியை வழங்கிடுவாரோ என்ற எரிச்சலில் ரணிலை வீட்டுக்கு அனுப்பினார்களே சிங்கள மக்கள்.. இதுதான் இதய சுத்தியா..
புலிகள் அவ்நிறுவனத்தினூடாக பல வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்தும் நேரடியாக நிதியுதவியைப் பெற அனுமதியையும் வழங்கியிருந்ததுடன் ஏகப்பட்ட விட்டுக்கொடுப்புகளுக்கு இணங்கியிருந்தது.//
இணங்கினால் மட்டும் போதாது. அவற்றை செயற்படுத்தும் எண்ணம் இருக்க வேண்டும். சிரான் என்ற உள்ளூர் உதவி பெறும் அமைப்பை நிறுவினார்கள். அதாவது இணங்கினார்கள். பிறகு கைவிட்டார்கள்.
கடைசியாக சுனாமி நிதியினை பங்கிடுவது தொடர்பான பொதுக்கட்டமைப்பில் – மனித அவலம் தொடர்பான ஒரு விடயத்தில் சிங்கள அரச தேசத்தில் எத்தனை இழுபறிகள் – கடைசியாக சிங்கள நீதிமன்றே அதை தடுத்து நிறுத்தியதே – தெரியாதா –
இணக்கங்களும் தீர்மானங்களும் பிரச்சனைக்கு முடிவல்ல. செயல்வடிவம் வேண்டும் – சமஸ்டி – நிதி பங்கீடு – அது – இது இதெல்லாவற்றிற்கும் முதலில் இயல்பு வாழ்வு மக்களுக்கு கிடைக்க வேண்டும். அகதி முகாம்களில் உள்ள மக்கள் தம் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். தொழில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் – அடிப்படைபிரச்சனைகள்தான் முதலில் தீர்க்கப் படவேண்டியவை.
புலிகளை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். கேட்டுகொண்டிருக்கிறோம். ஆனால் அதற்காக சிங்கள அரசுகளின் வாயில் தேனும் பாலும் வடிகிறது என்று சொன்னால் –
புலிகள் குறித்து சொன்னதையும் நம்ப மாட்டோம்