Archive for the tag 'பதிவர் சதுரம் ;-))'

Jul 21

கென்னுக்கும், சாந்தாமணிக்கும் டும் டும் டும்

வெகு நாட்களாக டபாய்த்துக் கொண்டிருந்த சாந்தாமணியை கிட்னாப் செய்து வந்து இன்று கென் தலையில் கட்டியாகிவிட்டது. ஸ்ஸப்ப்ப்ப்ப்….பா… இனியாவது அவனின் புலம்பல்கள் குறையுமென்று நம்புகிறேன். இனி விழும் அடிகளெல்லாம் வெறும் உள்காயங்களையே தரும் என்பதாலும், கென்னும் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்பதாலும் வெளிப்படையாக புலம்பும், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்கும் அவனது உரிமை இன்று முதல் ரத்து செய்யப் படுகிறது.
இனிமேல் சுந்தரும், ஆசிப்பும் பப்ளிக்கா கென்கிட்ட ஐ லவ் யூ சொல்ல முடியாது… சொல்லிட்டு தப்பிக்கவும் முடியாது…. [...]

Jun 03

பதிவர் சந்திப்பு: அலைகடலென திரண்டு வாரீர்!! (ஜூன் 5.2010)

எதிர் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள பதிவர் சந்திப்பில் பிரபல பதிவரும், ஜெமோ தள நிர்வாகியும்.. எனக்கு ஆங்கில ஆசானுமாகிய.. நண்பர் சிறில் அலெக்ஸ் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்கிறார்.
நீண்ட நாள் கழித்து சென்னைக்கு வரும் சிறில் இனி சென்னை வாசியாக மாறப்போகிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.
வாய்ப்பு இருக்கும் பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்வோம்! வாருங்கள்!!
இது பற்றி டாக்டர்.புருனோ எழுதிய இடுகை:- http://www.payanangal.in/2010/06/05-2010-5.html

இடம்: காந்திசிலை அருகில், மெரினா.
நாள்: 05/06/2010
நேரம்: மாலை 05.30 முதல் 7.30 வரை.
அனைவரும் வரலாம்… அனுமதி [...]

May 30

சாதனை: தன்னம்பிக்கையும், தமிழும் தந்த வெற்றி! (ஒரு பதிவரின் வெற்றிக் கதை)

தன்னம்பிக்கையும், லட்சிய வேட்கையும் கொண்ட எவரொருவரையும் வறுமையும், சூழ்நிலையும் அடிமையாக்கி வெற்றிகண்டிட இயலாது என்பதற்கு கார்த்திக் ஒரு உதாரணம். யார் அந்தக் கார்த்திக்?
ஐ.ஏ.எஸ். தேர்வில் 4 முறை நேர்முகத் தேர்வுக்குச் சென்று தோல்வியே மிஞ்சிய நிலையில் தொடர்ந்து உறுதியுடன் போராடி, தனது கடைசி வாய்ப்பில் (7-வது வாய்ப்பு) வெற்றி பெற்ற கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர்தான் கார்த்திக்.
தமிழைப் பேசுவதும், படிப்பதும் இழிவு என்று எண்ணும் இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்து வெற்றிக் கொடியை நாட்டியுள்ள [...]

Older Entries »

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly