Category: விளம்பரம்

  • ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் – 2015

    *எதற்காக இந்த ஒன்றுகூடல்?* இன்றைய பரபரப்பு மிக்க வாழ்க்கையில் எல்லோருக்குமே மன அழுத்தங்கள் அதிகம். அதிலும் சிறப்புக்குழந்தையின் பெற்றோருக்கு இன்னும் அதிகம். இதுமாதிரியான ஒன்றுகூடல் வழி, மற்ற பல பெற்றோரின் அறிமுகமும், வழிகாட்டுதலும் குழந்தை பற்றிய அச்சத்தை போக்க உதவக்கூடும் என்பதால் இது அவசியப்படுகிறது.  தொடர்ச்சியான இவ்வகை சந்திப்புகளின் மூலம் எதிர்காலத்தில் பெற்றோருக்கான அமைப்பு ஒன்றையும் உருவாக்குவது நீண்டகால திட்டமாகும். *யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?* ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு கலந்துகொள்ளலாம். பார்வையளர்களுக்கோ மற்றவர்களுக்கோ கண்டிப்பாக அனுமதி…

  • டிஸ்லெக்ஸியாவா? அச்சம் வேண்டாம்!

    பிள்ளைகளுக்கு எழுத்தில் பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய குறைபாட்டினை டிஸ்லெக்ஸியா என்று சொல்கிறது மருத்துவ உலகம். இந்தப் பிரச்சனை உள்ள குழந்தைகளின் பெற்றோர், தேவைக்கு அதிகமாகவே அச்சப்படுகின்றனர். ஆனால் அது தேவையில்லை என்கிறது மருத்துவம். உலகம் வியக்கும் பல பெரியமனிதர்களும் சிறுவயதில் இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது பலர் அறியாத செய்தி. இப்பிள்ளைகள் எழுத்தை மாற்றிப்போட்டு எழுதுவதும், மாற்றிப்போட்டு வாசிக்க இயலாமல் திணறுவதுமாக இருப்பார்கள். மற்ற குறைபாடுகளைப்போல பார்வைக்கு நேரடியாக தெரியாத குறைபாடு இது என்பதால் இதனை உணர்ந்துகொள்வதில் சிக்கல் இருக்கிறது.…

  • ஆட்டிசம் என்னும் ஞான நிலை – மதுமிதா

    அனைவருக்கும் இனிய அன்பான மாலை வணக்கம். குழந்தைகள் திரைப்படமோ, குழந்தைகளைக் குறித்த கதையோ அல்லது கவிதையோ எப்போதும் நம் மனதை உடனே லகுவாக்கும் வித்தையை தனக்குள் வைத்திருக்கும். நாமும் குழந்தையோடு குழந்தையாகி மகிழும் வாய்ப்பை அந்த நேரங்களிலாவது பெற்றுக் கொள்வோம். ஒரு பயணம், அது பேருந்து பயணமோ அல்லது இரயில் பயணமோ, தொடர் பயணத்தின் வறட்சியான ஒரு பொழுதை ஏதோ ஒரு குழந்தையின் புன்சிரிப்பு சட்டென வசந்தமான மனநிலைக்கு மாற்றிவிடும். ஏதோ ஒரு பயணத்தில், ஏதோ ஒரு…

  • பாலா ஹாப்பி அண்ணாச்சி..

    ஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்.. ஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். ஆனால் அவர்கள் பகிரத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் இங்கே விஷயம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த பல பெற்றோரிடமும் சலிக்காமல் இந்த என் எண்ணத்தை வெளிப்படுத்தி…

  • உதவி தேவை:- எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்

      நண்பர்களே, எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் இன்று மாலை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். ஒருபக்கம் உடல் செயலிழந்துள்ளதாகவும் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி செய்யப்படுவதாகவும் கவிஞர் மனோமோகன் தெரிவித்தார். மேல்சிகிட்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். புது எழுத்து ரூ.2,000/-ஐ அனுப்பி உதவியைத் துவக்கியிருக்கிறது. தனியரான ரமேஷிற்கு இந்த சந்தர்பத்தில் அனைவரும் முன் வந்து உதவ வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறது. மேலும் புது எழுத்து வெளியீடான ரமேஷின் பெருந்தொகைக் கவிதை நூலின் விற்பனைத்…