விடுபட்டவை 17 செப் 08

இந்த தளத்தின் பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்க முடியாமல் போனதால்.. சில பதிவுகளை.. இங்கே பதிவு செய்திருந்தேன். அதனை பார்க்காத பலர் போனில் பதிவு எழுதுவதில்லையா என்று கேட்டார்கள். அவர்களைன் பார்வைக்காகவே இதனை எழுதுகிறேன். அதில் விடுபட்டவை 12 செப் 08 என்று கூட ஒரு பதிவு எழுதிவிட்டேன். தகவல் தராமல் அங்கே போய் பதிவு போட்டமைக்கு மன்னிக்கவும். அவ்வப்போது அங்கேயும் கும்மிகள் தொடரலாம்!!

-=000=-

அரசு இயந்திரம் தாமதமாக செயல்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால்.. அந்த தாமதத்தினால்.. எத்தனை பேர் அவதிக்குள்ளாகிறார்கள் என்று நேரடியான அனுபவம் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழக அரசு ஓர் ஆணை பிறப்பித்ததாக செய்தி வெளியானது. வெளியூரில் இருந்த தால் உடனடியாக செயலில் இறங்க முடியவில்லை. இன்று சமயம் கிடைத்தது. இண்டேன், பாரத் கியாஸ் இரண்டு ஏஜென்ஸிகளுக்கும் போய் பார்த்து விட்டேன். ரேஷன் கார்டு இல்லாமல் கியாஸ் கிடையாது என்றார்கள். அரசின் ஆணை குறித்து கேட்ட போது, “ அரசாங்கம் ஆயிரம் சட்டம் போடும் சார், எங்க மேலிடத்திலிருந்து(IOC) எந்த தகவலும் இல்லாமல் நாங்க புக்கிங் செய்யமுடியாது” என்று விரட்டியடித்து விட்டார்கள். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணிக்கேட்டால்.. நாங்க ஆடர் பாஸ் பண்ணிவிட்டோம். சீக்கரம் அவங்களும் பாஸ் பண்ணுவாங்கன்னு நெனைக்கிறோம்னு பதில் கிடைத்தது.

இரண்டு ஏஜென்ஸியிலும் மக்க்கள் கூட்டம் அலை மோதுகிறது, தினமும் புதிதுபுதிதாக வந்து விசாரித்து விட்டுப் போகிறார்கள். சரி.. நிலைமை இப்படி என்றால்.., ரேஷன் அலுவலகம் போனால் கார்டு கிடைக்க குறைந்தது 45 நாட்கள் ஆகும் என்கிறார்கள். சைடில் பணம் கொடுத்தால் விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்யலாம் என்று சிலர் அலைகிறார்கள். வரும் போது வரட்டும் என்று வந்து விட்டேன். ஊழல் அதிகரிப்பது இப்படித்தான் போலும். 🙁

எனக்கு ரேஷனில் கொடுக்கும் எந்த பொருளும் தேவையில்லை. குடிமகன் அடையாளத்திற்கு மட்டும் போதும். அது இருந்தால் தான் என்னால் கியாஸ், வங்கிகணக்கு, டிரைவிங் லைசன்ஸ் போன்ற மற்ற எல்லா காரியங்களையும் செய்ய முடியும். இதற்கு வழி இருக்கிறதா தெரியவில்லை. கடந்த ஆட்சியில் “H-முத்திரை” கார்டு என்று ஒன்று இருந்தது. இப்போது இருக்கிறதா தெரியவில்லை. யாராவது தகவல் சொன்னால் மகிழ்வேன்.

=-000-=

நம்ம ஆளுங்க செய்ற அலும்புக்கு அலவே இல்லாம போயிடுச்சி.. கே.வி. தங்கபாலுவை தலைவராக்கினதுக்கு சென்னையின் பல இடங்களில் நன்றி தெரிவிச்சு.. சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு, இன்னும் அப்படியே இருக்கு. அதில் ஒண்ணு தான் இது.  திருமதி. சோனியாகாந்தி எப்போது தியாகத்தலைவி ஆனாங்க? பிரதமர் பதவிக்கு நேரடியாக அமரவில்லை என்பதற்காக.. தியாகத் தலைவின்னு சொல்லுறது எல்லாம் கொஞ்சம் ஓவரத்தெரியலை. 🙁

-=000=-

ஏதாவது பிரச்சனையா 100க்கு கால்பண்ணு! சேதாரமா 102க்கு கால் பண்ணு! விபத்தா 103க்கு கால் பண்ணு! என்று காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத் துறை போன்றவற்றுக்கு தனித்தனியா எண்கள் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது  அரசு எல்லாவற்றுக்கும் சேர்த்து “108” என்ற  என்ற எண்ணை அறிமுகம் செய்திருக்கிறது. இனி.. எல்லோரும் இந்த எண்ணை நினைவில் வைத்திருங்கள்.

அது போல ரயில் பயணம் செய்யும் போது (தமிழகத்திற்குள்) எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு போன் செய்தால் போதும், உங்கள் வண்டி அடுத்த நிறுத்தத்தில் நிற்கும் போது ரயில்வே காவலர்கள் உதவிக்கு வந்து நிற்பார்கள். இந்த எண்ணை அறிமுகம் செய்து வைத பின், முக்கியமான குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனக்குத்தெரிந்த சிலர் இச்சேவையை பயன்படுத்தி பார்த்துவிட்டு ரயில்வே போலீசை புகழ்ந்து தள்ளினார்கள். நீங்களும் எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் எப்போதாவது உதவலாம்..! Rail Help:- 9962 500 500

=-000-=

கூகிள் குரோம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது போல.. மைக்ரோசாப்ட் தனது CODE-ஐ குரோமில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். விபரத்திற்கு இங்கே போகவும்!

This entry was posted in விடுபட்டவை and tagged , , , , , . Bookmark the permalink.

8 Responses to விடுபட்டவை 17 செப் 08

 1. விரைவாக கேஸ் கனெக்ஷன் பெற ரேசன் கார்டிற்காக புரோக்கரிடம் சென்று 1000 ரூபாய் கொடுத்து, இருந்தும் 6 மாதம் கழித்து ரேஷன் கார்டு வாங்கி, கேஸ் வாங்கியபின், இரண்டே வாரத்தில் கேஸ் இணைப்பிற்கு ரேஷன் கார்டு தேவையில்லை என்ற அரசின் விளம்பரத்தால் மனம் நொந்த ஒருத்தன் இங்கதான் சென்னையில இருக்கான் (எங்கியா? நாந்தானுங்க அது) 🙁

 2. இன்றைக்கு தங்கபாலு ஒரு பேட்டியில் இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதமோ, ராடாரோ, ஆள் உதவியோ தரவில்லை என்று உளறியிருக்கிறார்…

  இவர் தலையில் ஒன்றும் இல்லை (முடி).

 3. வடுவூர் குமார் says:

  கார்டு கிடைக்க குறைந்தது 45 நாட்கள் ஆகும்

  விண்ணப்பித்து 2 வருடங்களுக்கு மேலாகிறது,இன்னும் கண்ணில் பார்க்கமுடியவில்லை.
  கார்டுக்கு விண்ணப்பித்தது ரேஷன் சாமான்கள் வாங்க அல்ல. 🙂

 4. பெரியநாயகி says:

  //ரேஷன் அலுவலகம் போனால் கார்டு கிடைக்க குறைந்தது 45 நாட்கள் ஆகும் என்கிறார்கள். சைடில் பணம் கொடுத்தால் விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்யலாம் என்று சிலர் அலைகிறார்கள்.//

  பணம் கொடுத்தாலுமே கூட ரேஷன் கார்டு வாங்க இன்னொரு நிபந்தனையும் உண்டு – தனி நபருக்கு ரேஷன் கார்டு கிடையாதாம். திருமணமாகாத /பெற்றோரில்லாத/ பெற்றோருடனிருக்க விரும்பாத அனைவரும் காசு கொடுத்து கடையில் வாங்கித்தான் சாப்பிட வேண்டுமென்று அரசாங்கத்துக்கு என்ன அக்கறை என்று எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் எனக்கு சொந்த வீடு, அந்த வீட்டு முகவரியோடு கூடிய டிரைவிங்க் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை என பல சான்றுகளிருந்தும் இன்னமும் பல இடங்களில் (கேஸ் கனெக்‌ஷன் போல) ரேஷன் கார்டு உள்ளோரே மனிதர் பிறரெல்லாம் மண்ணைத் தின்றும் காற்றைக் குடித்துமே உயிர் வாழத் தகுதியானவர் என்பது போல நடந்து கொள்ளும் கொடுமை பெருங்கொடுமை.

  இங்கே தனியாக ரேஷன் கார்டு வாங்குவதற்காக என் பெற்றோரின் கார்டிலிருந்து வேறு என் பெயரைத் நீக்கித் தொலைத்துவிட்டு இப்போது அந்தரத்தில் தொங்குகிறேன்…. திரைப்படங்களில் அடிக்கடி திருமணப் பேச்சு வரும்போதெல்லாம் ஒரு வசனம் வரும் – குவார்ட்டருக்காக ஒரு ஒயின் ஷாப்பையே வாங்க முடியுமா என்று. போகிற போக்கைப் பார்த்தால் ரேஷன் கார்டுக்காகவே திருமணம் செய்து தொலைத்தாகவேண்டும் போலிருக்கிறது…:)

 5. இன்றைக்கு தங்கபாலு ஒரு பேட்டியில் இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதமோ, ராடாரோ, ஆள் உதவியோ தரவில்லை என்று உளறியிருக்கிறார்…//

  அவர் சரியாத்தானே சொல்லியிருக்கிறார்..
  அது ராடர் இல்லைத்தானே ?
  ராடர்ன்னா என்னா பண்ணணும்.. ? விமானங்களை கண்காணிக்கணும். அதுதானே ராடர்..
  அத விட்டுட்டு தன்மேலேயே குண்டு போடும் வரை பார்த்திருந்த ராடரை வெறும் இரும்பு என்றுதானே சொல்லணும்.

  தங்கபாலுசார் யூ ஆர் ரைட் சார்..

 6. //இப்போது அரசு எல்லாவற்றுக்கும் சேர்த்து “108” என்ற என்ற எண்ணை அறிமுகம் செய்திருக்கிறது. இனி.. எல்லோரும் இந்த எண்ணை நினைவில் வைத்திருங்கள்.//

  தல

  இது குறித்த சில விபரங்களை இங்கு பார்க்கலாம்
  http://www.payanangal.in/2008/09/108.html

 7. சிவஞானம் ஜி says:

  ஹெச் அட்டை போலவே இப்பொழுதும் உண்டு.
  வெள்ளை நிற அட்டை தருவார்கள்; அது ஓர் அடையாள அட்டை மட்டுமே;குடிமைப்பொருளெதுவும் வாங்க முடியாது

  அவசரப்பட்டு வெள்ளை அட்டை வாங்கி விடாதீர்கள்
  குடும்பம்னு இப்போதானே ஆரம்பித்திருக்கீர்கள்…..போகப்போக நான் சொல்வதன் உண்மை புரியும்

 8. ஆரவிந்தன் says:

  அன்பின் பாலா…

  உங்களுக்கு என் இனிய திருமண வாழ்த்துக்க்ள்!!!..

  நேரம் கிடைத்தால் பெங்களூர் வந்து போங்களேன்…

  அன்புடன்
  அரவிந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.