வெல்கம் 2014!

Welcome 2014

முந்தைய ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் நிறைய அனுபவப் பாடங்களையும், சில நல்ல நட்புகளையும் அடையாளம் காட்டியுள்ளது.

என்னால் ஆனா காரியங்கள் என இதுவரை இயன்றதை இச்சமூகத்திற்கு செய்தி வந்திருந்தேன். ஆனால் கடந்த ஆண்டில் இருந்து ஆட்டிசம் விழிப்புணர்வுக்குத்தான் முதலிடம் என்று முடிவெடுத்து செயலில் இறங்கினேன்.

கனிக்கு என் அருகாமை தேவை என்பதால், அலுவலகம் விட்டதும் வேறு எந்த கூட்டங்களுக்கும் செல்லமுடியாமல், வீட்டுக்கு ஓடிவந்து கொண்டிருக்கிறேன். இனியும் சில ஆண்டுகள் இப்படித்தான் போகுமென நினைக்கிறேன். நூல்வெளியீடு, இலக்கியக்கூட்டம் என எங்கு அழைத்தும் நான் வராமையின் காரணம் இதுதான். (நண்பர்கள் மன்னிப்பீர்களாக)

எப்போதும் துணை நிற்கும் லக்ஷ்மியின் உறுதுணையோடு செயல்கள் தீவிரமானது.

பிட்நோட்டீஸ் அடித்து விநியோகித்தது. போகிற வருகிற எல்லோரிடமும் ஆட்டிசம் பற்றிய உரையாடலை எப்படியாவது தொட்டுவிடுவது என தொடரும் எங்களின் செயல்களினூடே,

ஆட்டிசம் நூலாக்கப்பட்டு பலரையும் சென்றடைந்த மாதிரி, அதன் கட்டுரைகளையும், பிடிஎப்-ஐயும் பரவலாக்கிய பங்கு இணைய நண்பர்களாகிய உங்களையே சாரும். அதற்கு என் இதயப்பூர்வ நன்றிகளை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

இதன் மூலம் இந்த ஆண்டு மட்டும் சுமார் 48 குழந்தைகளின் பெற்றோர்கள் ஆலோசனை கேட்டு வந்திருந்தனர். அதில் மூன்று குழந்தைகளுக்கு ஆட்டிசம் இல்லை, வெறும் ’டெவலப் மெண்ட் டிலே’ என்று,  என் சந்தேகத்தை மருத்துவர்களும் உறுதி படுத்தினர். மற்ற ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் அத்தனைபேரும் முறையான சிகிச்சையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.  அதன் மூலம் அக்குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றம் கிடைத்து வருகிறது என்று அப்பெற்றோர் பகிர்ந்த மகிழ்ச்சியான தகவலையும் இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது.

கடந்துவந்த பாதையை திரும்பிப் பார்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

எதிர்வரும் ஆண்டில் இன்னும் தொடர்ந்து, ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வுக்கு என சில திட்டமிடல்கள் உள்ளன. சமயம் வரும் போது அதைப் பற்றி சொல்கிறேன்.

இப்போதைக்கு கொசுவர்த்தியை முடித்துக்கொண்டு, எல்லோருக்கும் ஹாப்பி நியூ இயர் சொல்லிக்கொள்கிறேன்.

எல்லோருக்கும் நல்ல ஆரோக்கியமும், நம்பிக்கையும், வெற்றிகளும் அமைந்திட வாழ்த்துகிறேன்.

வெல்கம் 2014!

This entry was posted in அனுபவம், வாழ்த்து, விளம்பரம். Bookmark the permalink.

4 Responses to வெல்கம் 2014!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.