விடுபட்டவை 09.10.08

பொது இடங்களில் புகைப்பது குறித்து அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்திருத்தம் குறித்து பல்வேறு கருத்துக்கள்.. பேசப்பட்டு வருகிறது. வலை உலகில் கூட பலரும் இது பற்றி பேசி விட்டார்கள். இதில் எனது கருத்து ஒன்றுதான்.(சிலர் பதிவில் பின்னூட்டமாகக்கூட போட்டு விட்டேன்)

பொது இடங்கள் தொடங்கி, சாலையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் சிறுநீர் கழிவறை போல ( அதுவே ஒழுங்க இல்லைன்னு யாரும் சொல்லக்கூடாது) புகைப்பவர்களுக்குமான தனி இடத்தை அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.அரசு/தனியார் என அனைத்து அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பவர்களுக்கு தனி இடம் வைக்க அனுமதி கொடுக்க வேண்டும். இதற்கு மறுக்கும் பட்சத்தில்.. இந்தியாவில் புகையிலையையே அரசு தடுக்க வேண்டும்.

எது வசதியோ.. அதை செய்து தரட்டும்.

நம்ம அதிஷா தமிழ்படுத்தி இருந்த ஒரு விளம்பரம் ரொம்ப நல்லா இருந்தது. ஆனா.. இது எத்தனை சதவீதம் % அளவுல நிஜம்னு தெரியலை.

🙂

~~~~

என்னமோ தெரியலை.. எனக்கு wordpress-க்கு மாறின பிறகும் கூட.. Spam பின்னூட்டங்கள் விளம்பரங்களாக வந்துகிட்டு இருக்கு. 🙁 எப்படி தடுக்குறதுன்னு தெரியலை. எல்லாமே மேலைநாடுகளில் இருந்து வரும் ஆங்கில ஸ்பேம்கள். என்ன எழவுக்கு வந்து விளம்பரப்படுத்துறதுன்னே இல்லையா..? சொந்த தளம் வைத்து வேர்ட்ப்ரஸ் பயன்படுத்துகின்றவர்கள்.. கொஞ்சம் இதை எப்படி சமாளிப்பதுன்னு சொன்னால்.. நல்லா இருக்கும்.

~~~

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதனும்னு நெனைச்சு தொடங்கினேன். ஆனால். என் சோம்பேறித் தனத்தால்.. உடனடியாக முடிக்க முடியவில்லை. எழுதிக்கொண்ண்ண்ண்ண்…ண்டே இருக்கிறேன். எப்படியும் இவ்வருடத்திற்குள் முழுமையாக்கி விடுவேன்னு நினைக்கிறேன். பார்க்கலாம். இணையத்தில்.. பெரியாரே அவர் கைப்பட எழுதின வாழ்க்கை வரலாறு (சுருக்கம்) இணையத்தில் கிடைக்கிறது. அதன் சுட்டி இதோ.. பெரியார் எழுதிய வாழ்க்கை வரலாறு.

~~~
எனக்கு எப்போதும் சுண்டல் பார்த்தால் நினைவுக்கு வருவது.. நவராத்திரி – கொலுதான். சிறு வயதில் பல வீடுகளுக்கு கூட்டமாக போய் இருக்கிறேன் – சுண்டல் வாங்க! இவ்வருட நவராத்திரி முடிவுக்கு வந்து விட்டது. அது போல எனக்கு எப்போதுமே இந்த சீசனில் நினைவுக்கு வரும் ஒரு கவிதை இது. (வார்த்தைகள் மறந்து போனதால்.. பிழை இருக்கலாம். நினைவில் இருந்து எழுதுகிறேன்.)

ஒரு கொத்து
சுண்டல் கூட கிடைக்கும்
என்பதற்காக
தங்கச்சிக் குழந்தையை
தூக்கமுடியாமல்
தூக்கி வரும்
அக்கா குழந்தை!
-கலாப்ரியா
~~~

This entry was posted in விடுபட்டவை and tagged . Bookmark the permalink.

15 Responses to விடுபட்டவை 09.10.08

  1. அதிஷாவின் விளம்பரம் சூப்பர்.

    பெரியாரின் சுயசரிதைக்கு நன்றி.

  2. prabhu says:

    Bala use akimset spam plugin for wordpress to control spam, u can download it from below link

    http://wordpress.org/extend/plugins/akismet/

  3. தலை Akismet-spam plugin ஐ எனேபிள் செய்திருக்கிறீர்களா? இதில் பெரும்பாலான ஸ்பாம் பின்னூட்டங்கள் தடுக்கப்பட்டு விடும்.

    //பொது இடங்கள் தொடங்கி, சாலையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் சிறுநீர் கழிவறை போல ( அதுவே ஒழுங்க இல்லைன்னு யாரும் சொல்லக்கூடாது) புகைப்பவர்களுக்குமான தனி இடத்தை அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.அரசு/தனியார் என அனைத்து அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பவர்களுக்கு தனி இடம் வைக்க அனுமதி கொடுக்க வேண்டும். இதற்கு மறுக்கும் பட்சத்தில்.. இந்தியாவில் புகையிலையையே அரசு தடுக்க வேண்டும்.//

    பாலா, நான் கேட்பது விதண்டாவாதமா என்று தெரிய வில்லை.இப்போ விஸ்கி உள்ளிட்ட சாராய வஸ்துக்களும் கூடத்தான் அரசாங்கத்தாலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால் அதற்காக எல்லா அரசாங்க மற்றும், தனியார் இடங்களில் இதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர அரசு உறுதுணை செய்ய வேண்டும் எண்று சொல்லலாமா?

    அதேபோல் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதை தடுப்பதை ஏதோ மத்திய வர்க்கத்து மற்றும் ஏழை மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைப்பது போன்றதொரு தோற்றத்தை உருவாக்க முயல்வதும் ஒரு வகையான அடிப்படை அறமற்ற செயலே.

    இதில் இருக்கும் ஒரு தவறைச் சொல்லுவதென்றால் ஏன் ஏர்போர்ட்டில் மட்டும் அப்புறம் கட்டி வைத்திருக்கிறாய் என்பதாய் இருக்கலாம்.

    ஆனால் அதற்கும் வேறு சில பதில்கள் வந்து சேரலாம். கல்வெட்டு ஏற்கனவே சுந்தர் அவர்களின் பதிவில் தெளிவாய் சொல்லி விட்டுச் சென்றிருப்பார். காசுக்கேற்ற வசதிகளைத்தான் தனியாரும் சரி அரசாங்கமும் எப்போதும் செய்து தந்துக் கொண்டிருக்கின்றது. ஒன்றும் வேண்டாம் நம் ஊரில் பஸ்ஸில் போய் ஆக்ஸிடெண்ட் ஆகி செத்தா ஒரு காசு, ரயிலில் போய் செத்தா ஒரு காசு, விமானத்தில் போய் செத்தா ஒரு காசு. இந்த அடிப்படைதான் எல்லா விஷயங்களிலும் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது.

  4. எனக்கு wordpress-க்கு மாறின பிறகும் கூட.. Spam பின்னூட்டங்கள் விளம்பரங்களாக வந்துகிட்டு இருக்கு//

    அங்கின Akismet என்ற plugin இருக்குமே – அதை Actvie செய்திடுங்க – அப்புறம் அதுவாகவே spam களை தூக்கி தனியே போட்டு குறித்த கால இடைவெளியில் அழிக்கும்.

    நமக்கு வரும் மறுமொழிகள் தனியா அழகா வந்திடும். ஆனா நமது வலைப்பூவுக்கு வந்து பாருங்கள் என்ற விளம்பரங்கள் வந்து தான் தீரும். ஒண்ணும் பண்ண முடியாது 🙂

  5. Joseph says:

    பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு என தனி இடம் ஒதுக்குவது தான் சிறந்த முடிவு. இது ரயில்களில் கூட வேண்டும் என்பது என் கருத்து.

    உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

  6. ஆனா நமது வலைப்பூவுக்கு வந்து பாருங்கள் என்ற விளம்பரங்கள் வந்து தான் தீரும்//
    நான் சொல்றது தமிழில் வருகிறேதே.. அதுமாதிரியான விளம்பரங்களை 🙂 🙂

  7. கொழுவி says:

    நல்ல வேளை எனக்கு தம்பியோ தங்கையோ இல்லை. நான்தான் வீட்டில கடைசிப் பையன். அதனால நான் தாரளமாக புகைப் பிடிக்கலாம் – ஐ ஜாலி..

  8. சிகரெட்டால் ஆண்மை பாதிக்கப்படலாம்,
    நோட்: “லாம்” மட்டுமே.

    அதாவது விந்தணுவில் குறைவு ஏற்ப்படலாம்.
    இளநீர் “அதிகமாக” குடிப்பதால் விறைப்பு தன்மை பாதிக்கப்படும் என்று கூட இங்கே சொல்கிறார்கள். எதை நம்புவது.

  9. தல… அதிஷாவின் ப்ளாக்கில் இருந்த விளம்பரத்தை மிக ரசித்தேன். கலாப்ரியாவின் கவிதையும் சூப்பர்!!!

  10. அண்ணா எனது விளம்பரபடத்தை தங்கள் வலையில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி

    ஐ ஜாலி… ரொம்ப சந்தோசமா இருக்கு….

  11. எரிதத்தினை எதிர்கொல்ல அகிஸ்மெட்(akismet) மற்றும் கப்பாட்சா(CAPTCHA) போன்ற நீட்சியை பயன்படுத்திப்பாருங்கள்.

    – பாலச்சந்தர் முருகானந்தம்,
    http://balachandar.net சொந்த வலைப்பதிவு
    http://ulagam.net
    உலகம்.net – இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை

  12. தல

    சொந்த தளத்தில் வோர்ட்பிரஸ் என்பது வெள்ளையானை போல்.

    பராமரிப்பது கஷ்டம்

    நீங்கள் வெறும் பதிவு மட்டும் எழுதுவதென்றால் சொந்த தள வோர்ட்பிரஸ் தவறான தேர்வு

    உங்களுக்கு ஒரு content management system வேண்டுமென்றால் மட்டுமே சொந்த தளத்தில் வோர்ட்பிரஸ் வைக்க வேண்டும்

    இல்லை என்றால் (அதாவது வெறும் பதிவு மட்டுமென்றால் ப்ளாக்கரின் custom domain தான் சிறந்தது

    லக்கி, அதிஷா, பரிசல், நர்சிம், மக்கள் சட்டம், நான் போன்றவர்களெல்லாம் அப்படித்தான் வைத்திருக்கிறோம்

  13. பூர்ணா says:

    தலைவா,
    வூட்ல சொன்னாங்கன்னு சிகரட்ட கைகளுவிட்டதா கேள்விப்பட்டேன்.. மெய்யாலுமா?

  14. நல்ல பதிவு வாழ்த்துக்கள்;

    அழுக்கறத் தினம் குளித்தும்

    அழுக்கறாத மாந்தரே

    அழுக்கிருந்தது அவ்விடம் ?

    அழுக்கு இல்லாதது எவ்விடம் ?

    அழுக்கிருந்த அவ்விடத்தில்

    அழுக்கறுக்க வல்லீரேல்

    அழுக்கில்லாத சோதியோடு
    அணுகி வாழலாகுமே!”———சிவவாக்கியார்

  15. It is really nice Mr. Balakrishan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.