ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்

 

 

நண்பர்களே..

முன்னர் கூறியிருந்தபடி,

//

ஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்..

ஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். ஆனால் அவர்கள் பகிரத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் இங்கே விஷயம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த பல பெற்றோரிடமும் சலிக்காமல் இந்த என் எண்ணத்தை வெளிப்படுத்தி வந்துள்ளேன். பெரிய அளவிலான ஒன்றுகூடல் சாத்தியப்படவில்லை என்றாலும், சின்னச்சின்ன அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஒன்றுகூடல் நடந்தது.

இப்போது அது கொஞ்சம் பெரிய அளவில் நடப்பதற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கி உள்ளது.

http://216.185.103.157/~balabhar/blog/?p=1503

//

வருகின்ற 2014 ஏப்ரல் 5ம் தேதி சென்னையில் ”ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்” நடத்துவது என்று திட்டமிட்டு பணிகள் நடந்துவருகின்றன.

நேரமும், இடமும் இன்ன பிற விபரங்களும் விரைவில் பகிர்கிறேன்.

செய்தியை பரவலாக்கி, உங்கள் வட்டத்திலிருக்கும் யாரேனுமொரு ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் இத்தகவல் சென்றடைய உதவுங்கள்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்

  1. M.Thangamarimuthu says:

    tamil, sir my native place tirunelveli nan oru textile 8000salaryku work pannikitu eruken my son 4years child avanuku autisam kurai padu ullathu avanai valarpathu patri book erunthal sollavum thanks

  2. M.Kumaravel says:

    Hello sir,

    I would like to join this semminar as well sharing session to meet and understand the next level of coaching to my son who has mild autisitc features and delay in intellegence quotient.

    Pl communicate venue and time for planning my day.

    Regards
    M.Kumaravel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.