தனக்கு தானே விருது.. நன்றி அண்ணாச்சி!

பொதுவாக எனக்கு விருதுகள் மீது நாட்டமில்லை. இதற்கு காரணம்.. எனக்கு எவன் கொடுப்பான் என்ற உள்ளார்ந்த குமைச்சலின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.  அதனாலேயே எந்த போட்டிகளிலும் கூட அதிகம் ஆர்வம் காட்டியதுமில்லை. சமீபத்தில் தமிழ்மணம் விருதுகளுக்கு விண்ணப்பிக்கச் சொன்னபோது கூட நான் செய்யவில்லை. அப்புறம், கிடைக்கும் வாய்ப்புகளில் வலைப்பக்கம் வந்து எட்டிப்பார்த்தால், பட்டாம்பூச்சி விருது அநேக பதிவுகளில் சிறகடித்துக் கொண்டிருந்தது.

சிறகடிக்கும் பட்டாம்பூச்சியின் ரகசியம் குறித்து டாக்டர். புருனோ, லக்கி, முரளி கண்ணன், கேபிள் சங்கர், நர்சிம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் விபரமாக அறிந்து கொள்ள முடிந்தது. அப்படியே சிலிர்த்துப் போனேன்(கடற்கரையின் குளிர் காற்றுதான் சிலிர்ப்புக்கு காரணம் என்பதை சொல்ல வேண்டியதில்லை 🙂 ).

அண்ணாச்சி கூட விருது கடை திறந்திருக்கார்னு வீட்டுக்காரம்மா சொன்னதும் ஓடிப் போய் ‘யூ டூ அண்ணாச்சி?’ என்று உணர்ச்சிகரமாக கேட்டுவிட்டு வரலாம் என்று எட்டிப் பார்த்தேன்.

இன்ப அதிர்ச்சி… 

அண்ணாச்சி கொடுத்த விருதை எனக்கு நானே எடுத்து மாட்டிக்கொண்டேன்.  நன்றிக் கடனாய் விருது குறித்த அவரது பதிவின் சுட்டியையும் கொடுத்தாயிற்று.

என் போன்ற அபாக்கியவான்கள் என் வழியை பின் தொடரலாம். :)))))))) 

அண்ணாச்சி, நன்றிங்கோவ்…

This entry was posted in அனுபவம், நகைச்சுவை and tagged . Bookmark the permalink.

20 Responses to தனக்கு தானே விருது.. நன்றி அண்ணாச்சி!

 1. அன்பின் தோழருக்கு,

  உங்கள் தளத்தை காணும்போது கீழ்கண்டவாறு ஒரு எச்சரிக்கை செய்தி வருகின்றது என்னவென்று தெறியவில்லை எதுவும் PHP Function கோளாரா? சரி செய்யவும்.

 2. Warning: call_user_func_array() [function.call-user-func-array]: First argumented is expected to be a valid callback, ‘GA_Filter::spool_adsense’ was given in /home/bharathi/public_html/blog/wp-includes/plugin.php on line 339

 3. ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டீங்களா.. தல’ஏஏஏஏஏ போட்டுக்கிச்சின்னு தொண்டர்கள் எல்லாம் விருது கொடுத்துக்க போறாங்க…

  அண்ணாச்சிக்கிட்ட அப்பவே நான் சொன்னேன்.. இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க கரப்பான்ன் எப்படி பரவ போகுதுன்னு… .அதுக்கு அடிக்கல் நாட்டியா பாலா.. வாஆஆஅழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க!!

 4. பாகசவினருக்கு அனுமதி உண்டா 🙂

 5. //பொதுவாக எனக்கு விருதுகள் மீது நாட்டமில்லை. இதற்கு காரணம்.. எனக்கு எவன் கொடுப்பான் என்ற உள்ளார்ந்த குமைச்சலின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.//

  இது சங்கத்துல நோட்டிஸ் போர்டுல ஒட்டியிருந்ததே. அதை அப்படியே கிழிச்சு இங்க ஒட்டிட்டீங்களா தல.. 🙂

 6. //ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டீங்களா.. தல’ஏஏஏஏஏ போட்டுக்கிச்சின்னு தொண்டர்கள் எல்லாம் விருது கொடுத்துக்க போறாங்க… //

  தனக்குத்தானே விருது கொடுத்துக்கொண்ட தல வாழ்க வாழ்க

 7. //அதனாலேயே எந்த போட்டிகளிலும் கூட அதிகம் ஆர்வம் காட்டியதுமில்லை.//

  பின்ன எல்லாத்துலயும் உங்களுக்கு நடுவன் நாற்காலிதான் தர்றாங்களாமே 🙂

 8. கரப்பான்களின் இதய தெய்வம் அண்ணன் பாலபாரதியை வாழ்த்தி இந்த பின்னூட்டம் இடுவது

  ஷார்ஜா பாகச அடிப்ப(ட்ட)டை உறுப்பினர்

  சென்ஷி

 9. சுயேச்சையாக களமிறங்கும் எங்கள் அண்ணனின் நிரந்தர சின்னம் கரப்பான் கரப்பான் கரப்பான்

 10. அண்ணே…

  அண்ணிய பயமுறுத்துறதுக்காக இந்த விருத நீ எடுத்துக்கலையே 🙂

 11. சிவஞானம் ஜி says:

  வாழ்த்து சொல்ல அனுமதீங்கப்பா!

 12. //அன்பின் தோழருக்கு,

  உங்கள் தளத்தை காணும்போது கீழ்கண்டவாறு ஒரு எச்சரிக்கை செய்தி வருகின்றது என்னவென்று தெறியவில்லை எதுவும் PHP Function கோளாரா? சரி செய்யவும்.//

  கரப்பான் பூச்சி விருது கொடுத்துக்கறதுக்கு முன்னாடியா இல்ல அப்புறமா 🙂

 13. என்ன தல கும்முலாமுன்னு பார்த்தா சங்கத்த சிங்கங்கள காணோம் 🙁

 14. //#
  முகவைத்தமிழன் April 1st, 2009 at 11:10 pm

  Warning: call_user_func_array() [function.call-user-func-array]: First argumented is expected to be a valid callback, ‘GA_Filter::spool_adsense’ was given in /home/bharathi/public_html/blog/wp-includes/plugin.php on line 339
  //

  புதசெவி

 15. Warning: call_user_func_array() [function.call-user-func-array]: First argumented is expected to be a valid callback, ‘GA_Filter::spool_adsense’ was given in /home/bharathi/public_html/blog/wp-includes/plugin.php on line 339

 16. //அண்ணாச்சிக்கிட்ட அப்பவே நான் சொன்னேன்.. இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க கரப்பான்ன் எப்படி பரவ போகுதுன்னு… .அதுக்கு அடிக்கல் நாட்டியா பாலா.. வாஆஆஅழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க!!//

  கவிக்கா.. தலய கலாய்க்க இப்படி ஒரு பதிவு போட்டா சூப்பரா ஒர்க் அவுட் ஆகுமுன்னு அண்ண்ணாச்சி அப்பவே முடிவு செஞ்சுருப்பாரு.

 17. என்ன கொடும சார் இது.. சிபிக்கும் இதே தொல்லையா

 18. தல.. நீ இங்க என்ன சூனியம் செஞ்சு வச்சுருக்க.. கும்மி குருப்புக்கே இப்படித்தான் இருக்குதாம் 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.