கோடுகள் இல்லாத வரைபடம் – நூல் அறிமுகம்

+++++++++++++++++++++++++++

நூல் அறிமுகம்:

உலகை வலம் வந்தவர்களின் பயணக்குறிப்புகளில் இருந்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 11 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு நூல் இது. இதில் 10 கட்டுரைகள் மனிதர்களின் பயணக்குறிப்புகளை விவரிக்கிறது. அந்த பயணக்குறிப்புகள் விவரிக்கும் பண்டைய உலகை சுவாரஸ்யமாக நமக்கு அறிமுகம் செய்கிறார். அதிலும் அப்பயணக்குறிப்புகளில் அதிபுனைவாக கருதப்படும் தகவல்களையும் சேர்த்து எஸ்.ரா வாசகர்களுக்கு குறிப்பிட்டுச்சொல்கிறார்.

11வது கட்டுரை, ஒட்ட்கச்சிவிங்கி என்ற உயிரினம் எப்படி நாடுகள் கடந்து இங்கே வந்தது என்பதைப் பற்றி பேசுகிறது. முந்தைய கட்டுரைகளில் இருந்து இது மாறுபட்டது.

உலகை வலம் வந்த இந்த பயணிகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம் என்று எனக்குத்தோன்றியது. 1) ஐரோப்பியர்களின் பயணம் பெரும்பாலும் வணிகத்தில் தொடங்கி, காலனிகளை உருவாக்கும் பயணங்கள். 2) மதம் சார்த்து அறிந்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் (இபின் பதூதா-யுவாங் சுவாங்) 3) நவீன பயணிகளின் குறிப்புகள் – தனிமனிதப் பயணங்கள்- உலக அமைதி, உலக நன்மையை முன்னிறுத்திய பயணங்களாக உள்ளன.

உலகப் பயணம் மேற்கொண்ட பற்றிய குறிப்புகளின் அறிமுகம் என்ற விதத்தில் இந்நூல் தன்னளவில் வாசிக்க சுவாரஸ்யமாகவே உள்ளது.

+++++++++++

10க்கு 7 மதிப்பெண் கொடுப்பேன்.

+++++

ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம்

பதிப்பு: இரண்டாம் ஜனவரி 2019

வாசிப்பு: ஏப்ரல் 29.2019

பக்கம்: 88

விலை: ரூ.75/-

++++++++++++

குறைகள்:

  1. காலவரிசைப்படி கட்டுரைகள் தொகுக்கப்படவில்லை.
  2. எழுத்துப்பிழைகள்
  3. அச்சுப்பிழைகள் (தகவல் சரிபார்ப்பு பிழை)
  4. எழுத்துருவின் அளவு

+++++++++++++++

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *