கடந்து போதல் – மா.சிவக்குமார்

கடந்து போதல் (சாமியாட்டம் – பாலபாரதி)

தூங்கிய பிறகு எளிதில் எழுந்து விடாதவரையும் எழுப்பி விடும் ஓலம். ஒரே அலுவலகத்தில் வேலை செய்து காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர்.  மும்பைக்கு மாற்றலாகி வந்ததும் ஊர்க்கார அண்ணாச்சிக்கு சொந்தமான வீட்டு வாடகைக்கு கிடைத்து விட்ட நிம்மதியில் இருந்தவர்களை நடு இரவில் எழுப்பி உட்கார வைக்கிறது பயங்கரமான அந்த அலறல்.

அலறல் மர்மமாக இல்லை, இவர்களைத் தவிர குடியிருப்பில் வேறு யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. மும்பையில் பணிக்குப் போக வர செலவாகும் நேரத்தையெல்லாம் தாண்டி அடுத்த நாள் மாலையில் விசாரிக்கப் போகிறார்கள். வாட்ச்மேன், வீட்டு சொந்தக்கார அண்ணாச்சி என்று சுற்றி வந்து உண்மை தெரிந்து கொள்கிறார்கள். எப்படிப்பட்ட உண்மை!

நம்முடைய தினசரி வாழ்க்கை, போக்குவரத்து கவலைகள், இரவில் நிம்மதியாகத் தூங்கக் கூட விடாத சத்தத்தின் மீது வரும் கோபம், கணவன்/மனைவி விவாதங்கள், இரவுச் சமையலுக்கு காய்கறி வாங்குதல் இவற்றை எல்லாம் தாண்டி இன்னொரு உலகம் இயங்குகிறது. நாம் அமைதியாக உட்கார்ந்து இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கும் போது நான்காவது வீட்டில் நமக்குத் தொடர்புடையை வடுக்கள் ஆழமாக பதிந்திருக்கலாம் என்ற உண்மையை உறைக்கச் சொல்லும் கதை.

படிக்க ஆரம்பிக்கும் போது ஆரம்பிக்கும் மர்மம், கதாநாயகர்களுடனேயே நம்மை பயணிக்க வைத்து மறக்க முடியாத பதிவை மனதில் ஏற்படுத்துகிறது.

கோட்டிமுத்து
பாரதியின் ஒரு பாட்டு
பொம்மை

This entry was posted in சிறுகதை, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.