Tag: அப்பா

  • சினேகிதனின் அப்பா

    அப்போது நான் தமிழகத்திலிருந்து வந்துகொண்டிருந்த அரசியல் வார இதழின் மும்பை செய்தியாளன். அப்படியே அங்கே வந்துகொண்டிருந்த தமிழ்ப் பத்திரிக்கைகளில் கதை, கவிதை, கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது தான் அவன் பழக்கமானான். அவனும் மும்பை நாளிதழ்களில் கதை,கவிதை எழுதிக்கொண்டிருந்தவன். பத்திரிக்கை வாயிலாக தொலைபேசி எண் கிடைத்து, கிங்சர்கிளில் உள்ள பூங்காவில் ஒரு ஞாயிறு மதியம் சந்திப்பதென்று முடிவாகிறது. அங்கே இருந்தவரை, ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்களை ஏதேனும் ஒரு இடத்தில் சந்திப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு ஞாயிறு மகேஸ்வரி பூங்காவுக்கு…

  • பக்கத்து வீட்டு ரவுசு…

    பக்கத்து வீடுல ஒரு பையன் இருக்கான். ஐந்திலிருந்து ஏழு வயசுக்குள் தான் இருக்கும். அவன் அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை. வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு போய் இருக்கிறான். சாமி கும்பிட்டு விட்டு அனுமார் இருந்த சன்னதியை வலம் வரத்தொடங்கி இருக்கிறான். கொஞ்ச நேரம் கழித்து அவை பார்த்த கோவில் அர்ச்சகருக்கு அதிர்ச்சி. வலமிருந்து இடமாக சுத்தாமல். பையன் இடமிருந்து வலமாக சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான். இவனது கோக்குமாக்கை பார்த்தவர் அவனை தடுத்து நிறுத்தி.. ’ஏண்டா இப்படி தலைகீழா சுத்தீண்டிருக்க?ன்னு…

  • குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு..

    என் பையனுக்கு மாதாந்திர தடுப்பூசி போடுவதற்காக குழந்தை நல மருத்துவரிடம் போய் இருந்தோம். டோக்கன் வாங்கி எங்கள் முறைக்காக காத்திருந்தோம். பலரும் தத்தம் குழந்தைகளுடன் அங்கே வந்திருந்தனர். எங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த தம்பதியினரின் கையில் இருந்த ஆறுமாத குழந்தை ‘கக்கா’ போய்விட்டது. குழந்தையை சற்று பிடிங்க என்று மனைவி சொன்னது தான் தாமதம். வந்ததே கணவனுக்கு கோபம். மனைவியை கண்டபடி திட்டி விட்டு எழுந்து வெளியே போய் விட்டார். அவர் போவதையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த மனைவிக்கு என்ன…

  • அப்பா!

    தலைக்கேறிய போதையில் அம்மாவை அடிக்கும் அப்பாக்களும், அதற்காக மகனிடம் அடிவாங்கிய அப்பாக்களையும் நிறைய பார்த்திருக்கிறேன். தன்னால் செய்யமுடியாமல் போன காரியங்களை தன் வாரிசு வடிவில் நிறைவேற்றிக்கொள்ள அவர்களை கட்டாயப்படுத்தும் தந்தைகளையும் நாம் அறிவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவ சிந்தனைகள் இருக்கும். தங்களின் குடும்பத்திற்காக அப்பா, அம்மா என்ற உறவுகளின் எண்ணங்களுக்காக அவற்றை இழந்தவர்களை பட்டியல் போட்டால் அது நீளும். நான் உன்னோட அப்பாடா.. எனக்குத்தெரியும் நீ என்ன படிக்கனும்னு என்று படிப்பு விசயத்தில் தொடங்கி, பல்வேறு கட்டங்களில்…