Tag: சமூகம்

  • மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரின் சுயமரியாதை

      அரங்கில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுசார் பலவீனங்கள்(Intellectual Impairment) எனும் குடையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. பொதுவாக சமூகம் “லூசு” என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடும் இந்தப் பட்டியலில் இருக்கும் எண்ணற்ற குறைபாடுகளைப் பற்றி இங்குள்ள நண்பர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கற்றல் குறைபாடு, ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், செரிபரல் பால்சி, மனவளர்ச்சிக் குறைபாடு என நீளும் பட்டியல் சற்றே பெரியது. இந்த உலகில் இருக்கும் எல்லாக்…

  • பெற்றோரின் கனவுகளை பிள்ளைகள் சுமக்கத்தான் வேண்டுமா?

      கண் விழித்தபோது, படுக்கையில் இருந்தாள் பவித்ரா. கை, கால் எல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. எட்டு வயதான பவித்ரா மயங்கி விழுந்துவிட்டாள். அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள்.  இத்தனை பேர் முன்னிலையில் இப்படி ஆகிவிட்டதே என்பதைவிட,  அம்மா அப்பா என்ன சொல்வார்களோ என்று நினைக்கையிலேயே பயம் அதிகரித்தது. அதே சமயம், அம்மாவும் அப்பாவும் டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக பவித்ராவுக்கு நல்ல ஓய்வு தேவை என்று மருத்துவர் சொல்லிக்கொண்டிருந்தார். “இவ்வளவு சின்னக் குழந்தைக்கு மன அழுத்தம் வந்திருக்கிறது. அதனால்தான் மயங்கி…

  • நான் மட்டும், ஏன் இப்படி? -நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன்

    கிருஷ்ணா என்றொரு அற்புதமான மனிதர், எழுத்தாளர், இளைஞர், வித்தியாசமானவர். அண்மையில் “ஒய் மீ?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகம் ஆளுநர் கே. ரோசய்யாவால் வெளியிடப்பட்டது. “சரி…. இது என்ன புத்தக விமர்சனமா?’ என்ற கேள்வி உங்கள் கண்களில் எழுவது தெரிகிறது. விமர்சனம் இல்லை. வித்தியாசம். கிருஷ்ணாவுக்கு “ஆட்டிசம்’. “ஆட்டிசம்’ என்ற சொல்லுக்கு “மன இறுக்கம்’ என்று தமிழாக்கியுள்ளார்கள். “மதியிறுக்கம்’ என்றும் கூறுகிறார்கள். ஆட்டிசத்தின் பாதிப்பு ஒருவரைத் தன்னுள்ளே அமிழ்ந்து போகவைக்கும், வெளி உலகத்துடன் தொடர்பு…

  • எச்சரிக்கை: ON LINE FRAUD

    கடந்த ஆகஸ்ட் மாதம் http://www.indiavarta.com/ இணையதளத்தின் மூலம் ஒரு பொருள் வாங்க ஆடர் செய்தேன். பொருளின் விலை ரூ. 1.799.00/-. ஐசிஐசிஐ வங்கி மூலம் பணம் செலுத்தினேன். பணம் செலுத்திய சில நிமிடங்களியேயே ஏதோ எரர் காட்டி, அந்த பக்கம் வேலை செய்ய வில்லை. அதனால் இன்னொரு முறை http://www.indiavarta.com/ தளத்தில் குறிப்பிட்ட பொருளுக்கு இன்னோரு முறை பணம் செலுத்தி, ஆடரை உறுதி படுத்தினேன். (இதற்குள் முதல் தடவையே வங்கில் இருந்து பணம் எடுக்கப் படிருந்தது. )…

  • விடுபட்டவை 08-11-11

    கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் தில்லு முல்லு, முல்லு தில்லு என்று ஏகப்பட்டது நடந்திருப்பதாகக்கூறி, ஸ்டார் ஹெல்த் இன்சூயரன்ஸுக்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா. பலரும் எதிர்ப்பு காட்டிய நிலையில், கொஞ்ச நாளுக்கு பிறகு அத்திட்டம் எம்.ஜி.ஆர் பெயரில் தொடரும் என்று அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டது. நம் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் நான்கும் களத்தில் குதித்தன. கடந்த முறை தனியாரிடமிருந்து கிடைத்த, அனுபவத்தில் இம்முறை…