Tag: சிறார் இலக்கியம்

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -10]

    வீட்டு வாசலில் ஷாலுவை இறங்கிவிட்டு வேன் கிளம்பிப்போனது. வாசலில் எப்போதும் நிற்கும் அம்மாவைக் காணவில்லை. வெளிக்கதவைத் திறந்து உள்நுழையும் போதே யாரோ விருந்துனர்கள் வந்துள்ளனர் என்று தெரிந்துவிட்டது. வாசலில் கிடக்கும் செருப்புகளை வைத்து யார் வந்துள்ளனர் என்பதை யூகிக்க முடியவில்லை. வீட்டுக்குள் இருந்து பேச்சும் சிரிப்புமாகச் சத்தம் பலமாகக் கேட்டது. அதை வைத்து கண்டுபிடிக்கவும் முடியவில்லை. தனது ஷூக்களைக் கழட்டி, ஓரமாக வைத்துவிட்டு, தயக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்தாள் ஷாலு. “ஹாய்… ஷாலு” என்று எல்லோரும் ஒருமித்தக் குரல்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 9]

    வகுப்பறைக்குள் வந்து தனது இருக்கையில் அமர்ந்த பின்னும் நேத்ராவுக்கு மரப்பாச்சி நினைவாகவே இருந்தது. ஆசிரியர் எழுதிப் போட்டுக் கொண்டிருந்த கணக்குப் பாடத்தில் மனது செல்லவே இல்லை. என்னமோ வித்தியாசமாக நடப்பதாகத் தோன்றியது. மைதானத்தில் மரப்பாச்சி கைநழுவி விழுந்ததா? அல்லது கை நழுவி விழுந்ததா? மைதானத்திற்குள் அது உண்மையில் ஓடியதா, இல்லை காற்றில் பறந்ததா எதுவுமே புரியவில்லை. கேள்வி கேட்ட மிஸ்ஸிடமாவது எதையாவது சொல்லி இருக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்லி, இப்படி மாட்டிக்கொண்டோமே என்பதை நினைக்க நினைக்க அழுகையாக…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 8]

    பள்ளியில் வந்து இறங்கியதும், நேராகப் பூஜாவின் வகுப்பறைக்குச் சென்றாள் ஷாலு. அவளது இருக்கை காலியாக இருந்தது. யாரிடமும் பேசாமல் தன்னுடைய வகுப்பறையில் வந்து அமர்ந்து கொண்டாள். ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தாலும் ஷாலுவின் கவனம் அதில் பதியவே இல்லை. பூஜா அமரவேண்டிய இடம் காலியாக இருப்பதையே நினைத்துக் கொண்டிருந்தாள். முதல்நாள் பயந்த அவளது முகம் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. அவள் இல்லாத வெற்றிடம் மனதை சங்கடப்படுத்தியது. யாரிடம் விசாரிப்பது என்றும் தெரியவில்லை. பூஜாவின் வீட்டிற்கு அருகில் இவள்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 4]

    நடன வகுப்பு முடிந்தது. சுவரில் சாய்ந்து ஓரமாக அமர்ந்திருந்த பூஜாவை அழைத்துக்கொண்டு, மண்டபத்தில் இருந்து வெளியே வந்தாள் ஷாலு. ஷாலுவின் ஷோல்டர் பேக் அவளின் முதுகில் சவாரி செய்தது. மரப்பாச்சி பொம்மையைக் கையில் வைத்திருந்தாள். பூஜாவும் தனது ஸ்கூல் பேக்கை முதுகில் மாட்டி இருந்தாள். மறுகையில் அவளது சாப்பாட்டுக்கூடை இருந்தது. “ஆமா… இன்னிக்கு சுடிதார் போடாமல், ஸ்கூல் யூனிபார்ம்லயே ஏண்டி வந்துட்ட…” என்று கேட்டாள் ஷாலு. “அதுவா… ம்…” என்று சிறிது யோசித்த பூஜா, “ஸ்கூல் வேன்…

  • மரப்பாச்சி இனி மக்கள் சொத்து!

    நண்பர்களுக்கு வணக்கம். ஓர் புதிய அறிவிப்பு! உலக புத்தக நாளான இன்று இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் எழுதிய, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்னும் சிறார் நாவலை இன்றுமுதல் மக்களுக்கானதாக அறிவிக்கிறேன். குழந்தைகளின் மீது நிகழும் பாலியல் சுரண்டல்களை எதிர்ப்பதற்கு அக்குழந்தைகளை தயார்படுத்தவும், அவர்களுடைய உடல் மீதான அவர்களின் உரிமை என்ன என்பதை அவர்களுக்குக் கற்பிக்கவும் இச்சிறுபடைப்பின் வழியாக முயன்றுள்ளேன். தமிழ் கூறு நல்லுலகம் இப்படைப்பை இருகரம் கொண்டு வரவேற்று, விருதளித்து கௌரவித்தது. இன்னும் இன்னும்…