திண்ணை

நண்பர்களே..! திண்ணை. தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று என்று சொல்லிக்கொள்ள முடியும். திண்ணை பள்ளிக்கூடம், நாடோடிகளுக்கு ஓய்வறை, பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நீதிமன்றம், அரசியல் கட்சியை வளர்த்த கதை கூட திண்ணைகளுக்கு உண்டு. திண்ணை என்றோரு சமாச்சாரம் நம் வீடுகளில் முன்பு இருந்தது. இப்போது அடுக்குமாடி குடியிருப்புகளாகி வரும் நம் வசிப்பிடங்களில் திண்ணை என்ற ஒரு அம்சம் இல்லாமல் போய்விட்டது. 🙁

இப்போது நம் கண் முன் அழிந்து விட்ட (அ) அழிந்து வரும் அடையாளத்தினை மீட்டெடுக்க.. எல்லோரும்.. பணியிடம் தொடங்கி.. போகும் இடம், வருமிடம் என எல்லா இடத்திலும் திண்ணை நினைவுகளை பதிவு செய்து கொள்ளலாம். புதியதாக வீடு கட்டுபவர்கள்.. (ப்ளாட் வாங்குபவர்கள் அல்ல) திண்ணை வைத்து கட்டலாம். (அது கம்பௌண்ட் கேட்டுக்குள் இருந்தாலும் கூட!)

பதிவர்கள் தம் தம் திண்ணை அனுபவங்களை மீட்டு எடுக்கலாம். சுடர் விளையாட்டு மாதிரி (ஒருவரிடம்) திண்ணை பதிவை சுற்றி வரச்செய்யலாம். என்று அடியேன் எழுதிவைக்க.. அதனை உடனேயே செயல்வடிவம் கொண்டு வந்த.. நண்பர்களுக்கு.. நன்றி!

இங்கே அப்படி எழுதப்பட்ட பதிவுகளின் சுட்டியை பின்னூட்டமாக கொடுங்கள். நாளை யாரேனும் திண்ணை குறித்து இணையத்தில் தேடும் போது.. திண்ணை குறித்த பதிவுகள் ஒரே இடத்தில் கிடைக்க.. இந்த சேமிப்பு பக்கம் உதவலாம். பதிவு போடும் ஒவ்வொருவரும்.. இப்பக்கத்திற்கான சுட்டியையும் தங்கள் பதிவின் கடைசியில் இணைத்து.. விடுங்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

திண்ணை குறித்து (06.06.08வரை) பதிவு போட்டிருக்கும் இருவரின் சுட்டிகளை நானே இங்கு சேமிக்கிறேன். பின்னூட்ட பெட்டி வேலை செய்யாததால்.. நானே  கண்ணில் பட்ட திண்ணை சுட்டிகளை சேமித்திருக்கிறேன். (வரிசைப்படி இருக்காது..)

துளசியம்மாவின் பழைய பதிவு

முரளிக்கண்ணன்

முத்துலெட்சுமி

அதிஷா

ரிஷான் ஷெரீப்

ஜீவ்ஸ்..

மலர்வனம்- லக்ஷ்மி

ராமலக்ஷ்மி

”ஒற்றை அன்றில்” ஸ்ரீ

நாடோடி இலக்கியன்

தஞ்சாவூரான்

ஆயில்யன்

இரா. வசந்தகுமார்

நடராசன்

ரசிகவ் ஞானியார்

நானானி

1 Response to திண்ணை

  1. நன்றி நண்பர்களே! :))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *