About

முக்கிய அறிவிப்பு:- ”இங்கு எழுதப்படுபவை அனைத்தும் என் சொந்த கருத்துக்களே.. இங்கு எழுதப்படுபவைகளுக்கும் நான் பணியாற்றும் இடத்திற்கும் யாதொரு தொடர்புமில்லை. தொடர்பு படுத்தி பார்க்கவும் முடியாது”

இனி.. என்னைப்பற்றி..

“கவிதை எழுதுவதிலுள்ள கவுரவம்
நிலத்தை உழுவதிலும் இருக்கிறது என்பதை
உணர்ந்து கொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது” என்று சொன்ன புக்கார் வாஷிங்டன் கருத்தோடு ஒத்துப் போகிற ஆசாமி நான்.

ஈ.வெ.ராமசாமி என்ற மனிதரைப் பற்றி.. வியந்து கொண்டே இருக்கும் சராசரி நான்.

அதன்படியே வாழ்வையும் அமைத்துக்கொள்ள முனைந்து வருகிறேன்.
படிப்பது மிகவும் பிடித்த காரியங்களில் ஒன்று. அதை விட பேசுவது மிகவும் பிடிக்கும். எழுத்தை நேசிக்கத் தெரிந்த அளவுக்கு எழுதத்தெரியாத, எழுத்து ஏழை.

ஒவ்வொருவருக்கும் தன் எதிர்காலம் குறித்த கனவுகள் இருக்கும். ஆனால் எனக்கு அப்படி சொல்லிக்கொள்ளும் படி ஏதும் இல்லை. மரணம் என்னை நெருங்கும் வரை எம்மக்களின் சுயத்தினை அவர்களுக்கு அடையாளம் காட்டுவது தவிர.. வேறெந்த ஆசைகளும் கிடையாது.

ஒவ்வொரு மனிதனும் வாழ் நாளில், தான் வாழும் சமூகத்தில், தன்னோடு வாழும் மக்களுக்காக “ஏதாவது” செய்து விட்டுப் போகவேண்டுமென்பது அடியேனின் ஆசை. அதற்கான முயற்சிகளில் இருப்பவன்.

பெரும் பாறாங்கல்லை புரட்ட நெம்புகோல் அவசியம்… அந்த நெம்புகோலுக்கு கீழ் வைக்கும் சிறு அடைப்புக் கல்லாகவாவது என்னால் சமூக மாற்றத்தில் பங்கு பெற வேண்டிமென்பது என் ஆசை!

குழந்தை வளர்ப்பு என்பது ஆர்வமிகுந்த துறை.

அதனால் குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது, எழுதுவது, குழந்தைகளுக்கான  கல்வி குறித்து சிந்திப்பது எனும் பணியின் தொடர்ச்சியாக,  மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்காகவும் எழுதியும் இயங்கியும் வருகிறவன்.

****
நான் எழுதிய மரப்பாச்சி சொன்ன ரகசியம் சிறார் நாவல் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுவர் நூலுக்கான விகடன் விருதினைப் பெற்றுள்ளது. அதே நூலுக்கு வாசகசாலையும் விருது வழங்கி கௌரவித்தது.
***
புதையல் டைரி- எனும் சிறுவர் நாவல் 2018ஆண்டுக்கான சிறந்த சிறுவர் நூலுக்கான விருதினை தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக்குழுமத்தின் சார்பில் பரிசு பெற்றது. 

தகவலுக்காக:- கடல் சூழ்ந்த ராமேஸ்வரம் எனது சொந்த மண்.

தற்போது சென்னை வாசி. ஊடகவியலாளனாக பணியாற்றி வருகிறேன்.

பேச: +91-91766-13437 (திங்கள் முதல் சனிக்கிழமை வரை- காலை 10 மணி முதல் மாலை 5 வரை மட்டும் அழைக்கவும்)

மின்னஞ்சல்:-

balabharathi.blog AT gmail DOT com

(ஒருவேளை இந்த மின்னஞ்சல் பயன்பாட்டில் இல்லாது போனால், இத்தளத்தின் கடைசி பதிவுல் கமெண்ட் இடுங்கள். அதன்வழியே நாம் உரையாடலாம்)

 


—–

என்னை பற்றி அண்ணன் மா.சிவக்குமார்

http://masivakumar.blogspot.com/2009/01/blog-post_06.html

சிந்தாநதி எடுத்த பேட்டி..

http://valaimozhi.blogspirit.com/archive/2007/03/21/bala.html