Tag: சாதி

  • பதின்ம வயதினருக்கான நாவல்!

    பதின்ம வயதினர் படிக்க ஏதுவான புனைவு நூல்கள் தமிழில் வருவதில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு. ஒன்று அவர்கள் சிறுவர் நூல்களைப் படிக்கவேண்டும் இல்லையெனில் பெரியவர்கள் நூலினை படிக்கும் நிலைதான் உள்ளது. இதுபற்றி தோழி ஒருத்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மேலை நாடுகளில் பதின்ம வயதினருக்கான புவைவெழுத்துக்கள் அதிகம் வாசிக்கக்கிடைக்கின்றன என்றார். எனக்கு அந்த ஏக்கம் இங்கே எப்போதும் உண்டு. ஆனால் இக்குறையை போக்கும்படியாக, சமீபத்தில் பதின்ம வயதினருக்கான ஒரு கதையை வாசித்தேன். கொ.மா.கோ. இளங்கோ எழுதிய, ’சஞ்சீவிமாமா’என்ற…

  • இளையோருக்கான தொடக்க நூல்

    பதிம வயதை அடையும் பிள்ளைகளுக்கு நான் சொல்லிக்கொடுக்கவேண்டிய விஷயங்களின் பட்டியல் மிகவும் நீண்டது. அறவுணர்ச்சியை அடிப்படையானது என்றாலும் கூடவே, இச்சமூகத்தின் மீது அக்கறைகொண்ட குடிமகனாக நம்பிள்ளை வளரவேண்டும். நல்ல மனிதனாக வளருவதற்கு, அவர்களோடு நாம் உரையாடலைத்தொடங்க இந்த வயது சரியானது. மொட்டைத்தாத்தா குட்டையில் விழுந்தார் என்று பொருளற்று எதையும் தொடங்கிவிடுவதை விட, மேலானது ஒரு நூலை நாம் வாசித்து, பின் அவர்கள் கையில் அதனைக்கொடுத்து, அதன் வழியே உரையாடலைக் கொண்டுபோவதென்பது சிறப்பு. அந்த வகையில் ச. தமிழ்ச்செல்வன்…