Tag: poem

  • கவிதைகள்..

    பார்வைகள் கத்தியின் பிடிகளை ஆராய்கிறாய் நீ அது பட்டுப்போய் வந்திருக்குமா பச்சையாய் வந்திருக்குமாவென யோசிக்கிறதென் மனம். ~~~~ இருப்பு மடக்கிய குடையுடன் பேசியபடியடைந்தோம் மரத்தடியை மழை இப்போது தூறலாய். ~~~ அடையாளம் தூசுகளால் நிறைந்த கண்ணாடி கதவில் பெயரெழுதிச் செல்கிறது கோடைச்சாரல். ~~~ இலக்கு உனக்கும் எனக்குமான பாதை ஒன்றுதான் ஆனால் எதிரெதிர் திசைகளில் போய்க்கொண்டிருக்கிறோம் நான் வாருவதற்குள்ளாக நீயும் நீ வருவதற்குள்ளாக நானுமென என்றாவதொரு நாள் நேரெதிராய் சந்திக்க நேரும் போது ஒரே திசையை நோக்கியிருக்கும்…