விடுபட்டவை 27.மே.2008

‘கமல் கவிதை படிச்சு இருக்கீங்களா.. என்னமா யோசிக்கிறார்ண்ணே?’

“ம்..ஆமா..”

‘ஞாநிக்கு என்ன திறமைண்ணே.. நாமெல்லாம் ஏன் இப்படி சிந்திக்கக்கூட முடியல?’

” 🙂 ”

‘மதன் எழுதின இந்த வார பதில் படிச்சீங்களா? எவ்வளவு விசயம் தெரிஞ்சு வச்சு இருக்காங்க.. வியப்பா இருக்குண்ணே’

”ம்..”

‘சுஜாதா எழுத்து என்ன எழுத்துண்ணே.. இருபது வருசத்துக்கு முந்தியே இப்படி எழுதி இருக்காரே.., நாமெல்லாம் எப்ப இப்படி ஆகுறது?’

“ம்..ஆவலாம்.”

‘என்ன ஆச்சுண்ணே.. எல்லாதையும் சாதாரணமா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியுது! ஒங்களுக்கு ஆச்சரியமே வரலையா?’

”எப்படீடா.. ஆச்சரியாம் வரும்?”

‘ஏன்ணே?’

”ஒன்னோட அப்பா என்னடா வேலை பார்த்தாரூ?”

‘ஒரு கம்பெனியில பியூனா வேலை பார்த்தாரு’

“எங்க அப்பா.. ஓட்டல் வைச்சு இருந்தாரு. ஒன் அப்பாவோட அப்பா என்ன வேலை செஞ்சாருன்னு தெரியுமா?”

‘வேற என்ன செய்வாய்ங்க.. வெவசாயம் தான்’

”என்னோட தாத்தா மீன் பிடிச்சாரு. அவங்களோட.. அப்பாக்கள் என்ன வேலை பார்த்திருப்பாங்கன்னு சொல்ல
முடியுமா?”

‘வெவசாயக் கூலியா வேலை பார்த்து இருப்பாங்க’

“பரவாயில்லை. தெரிஞ்சு வச்சு இருக்க.. நீ சொன்னியே சுஜாதா, ஞாநி, மதன் இவங்களோட அப்பாக்களும் தாத்தாக்களும் என்ன வேலை பார்த்தாங்கன்னு தெரியுமா ஒனக்கு?”

‘எல்லாரைப் பத்தியும் தெரியாது. ஆனா.. ஒருத்தரோட.. அப்பா பெரிய வக்கீலா வேலை பார்த்து இருக்கார். அவரோட அப்பா வெள்ளைக்காரன் காலத்துல துபாசியாகவோ என்னவோ.. வெள்ளைக்காரங்க கூட வேலை பார்த்திருக்கார்’

“இப்ப புரியுதா.. அவங்க குடும்பம் எப்படி வந்திருக்கு.. நம்ம குடும்பம் எப்படி வந்திருக்குன்னு.. இதுல ஆச்சரியப்பட
என்ன இருக்கு சொல்லு?”

‘……….’

– oOoOoOo –

சென்னை நகரின் சாலைகளில் இரு சக்கர வாகனம் ஓட்டுகிறவரின் கவனம் குறைந்தால் மட்டும் ஆபத்தில்லை.

வண்டியில் உட்கார்ந்து போகிறவரும் உஷார் நிலையில் இல்லை என்றாலும் ஆபத்து தான் போல் இருக்கிறது. கடந்த வாரம் ஒரு நண்பருடன் போய்க்கொண்டிருந்தான். நல்ல வேகத்தில் போய்க்கொண்டிருந்த வாகனம் திடீரென ஒரு வேகத்தடையில் ஏற.. வண்டியோட்டியும் நானும் சில நிமிடங்கள் ஆகாயத்தில் மிதந்து.., மீண்டும் வண்டியில் வந்து பொருந்திக்கொண்டோம். அந்த பதட்டம் குறையும் முன் வண்டியோட்டி சொன்னான். “சாரிண்ணே.. முன்னாடி போன வண்டியை ஒரு பொண்ணு ஓட்டிகிட்டு போச்சு, ரியர்வியூ கண்ணாடியில அது முகத்தை பார்த்துடலாம்னு வந்த வேகத்துல.. ஸ்பீடு பிரேக்கை கவனிக்கல.” அவனின் பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால், நேற்றைய சம்பவம் எனக்கு ஹார்டட்டாக்கை வரவழைத்தது.

வேறு ஒரு நண்பருடன் ஒருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். ஒரு சிக்னலின் திருப்பத்தில் வலதுபக்கம் திரும்ப வேண்டிய எங்கள் வாண்டி மீது ஒரு லாரி மோதுவது போல வந்து நின்றது. சின்ன இடைவெளியில் அவசரமாக கால் ஊன்றி வண்டியை பின்னுக்கு இழுத்து தப்பித்தோம். லாரிக்காரன் திட்டிக்கொண்டே பறந்து போனான்.

எப்படி அந்த விபத்து ஏற்படவிருந்தது என்று எனக்குள்ளே நான் குழம்பிக்கொண்டே இருந்த போது, அந்த நண்பர், ‘முன்னாடி போன சிவப்பு சுடிதாரை பார்த்துக்கிட்டே.. வந்தேனா.. எதிரில் வந்த வண்டியை பார்க்கலை.

நல்ல வேலை. தப்பித்தோம்.’ என்றாரே பார்க்கலாம். அடப்பாவிகளா.. இனி ஒரு இரு சக்கர வாகனத்தின் பின் அமர்ந்து செல்லுபவர்களும் சாலையின் மீது கண் வைப்பது அவசியம் என்பது புரிந்து போயிற்று.

– oOoOoOo –

மிஸ்டர் A ஒரு பிரபல வலைப்பதிவர். அவர் பார்த்திராத இன்னொரு மதவெறி பதிவர் மிஸ்டர் B. இரண்டாம் நபர் முதல் நபரைப் பற்றி தவறான தகவல்களையும், அவர் வேலை செய்யும் பற்றியும் தன் பதிவில், பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டம் வாயிலாக சொல்லி இருப்பதால்.. அதனை சேமித்துகொண்டு, மிஸ்டர் A தன் வக்கில் ஒருவரிடம் பேசி, மிஸ்டர் B க்கு நோட்டீஸ் (அலுவலக முகவரிக்கு) அனுப்பும் முனைப்புடன் இருக்கிறார். எப்படியும் கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வந்து தானே ஆகும். வெயிட் அண்ட் ஸீ!

– oOoOoOo –

காதல் அல்லது கவிதை அல்லது காதல்கவிதை அல்லது காதல்கவிதை மாதிரியான ஒன்று. இதில் ஏதோ ஒன்றை பிடிக்காத ஹைத்ராபாத் நாய் ஒன்று, நான் எழுதிய “நீ நான் மற்றும் முத்தம்” பதிவை மிகுந்த ஆபாசம் என்று சொல்லி கெட்ட வார்த்தைகளால்.. திட்டி விட்டு போய் இருக்கிறது. எனக்கும் எத்தனை கெட்ட வார்த்தைகள் (ஒரு பத்தாயிரம் தமிழில் மட்டும்! 🙂 ) தெரியும் என்று சோதித்துப் பார்க்க ஆசையாக இருக்கிறது. அடேய்.. நாதாரி… தைரியம் இருந்தால் சொந்த முகத்துடன் நேரில் வாயேன்.

– oOoOoOo –

வெற்றிகரமாக இரண்டு மாத ஓய்வு முடிந்து விட்டது. வேலையில் இல்லாத நாட்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுத நினைத்தேன். சற்று பெரிதாகிக்கொண்டே வருவதால் கிடப்பில் போட்டு இருக்கிறேன். ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் புதிய அலுவலகம் ஒன்றில் வேலைக்கு சேரச்சொல்லி அழைப்பு வந்துள்ளது. சேர்ந்துவிடுவேன் என்றே நம்புகிறேன்.

– oOoOoOo –

This entry was posted in அனுபவம், விடுபட்டவை and tagged , , , , . Bookmark the permalink.

18 Responses to விடுபட்டவை 27.மே.2008

 1. ILA says:

  Puthiya paNikkAna vAzththukkaL!

 2. Kaviraj says:

  Sir, Oru sakkara vaganam appdinna?? 🙂

 3. தவற்றை சரி செய்து விட்டேன் கவிராஜ்! 🙂

 4. வாழ்த்துக்கள் தல…

  (நிறைய்ய ட்ரீட் வாங்க வேண்டியிருக்கும் போல) 🙂

 5. இப்பதிவு எளிமை கருதி.. சின்ன திருத்தங்களுடன் மீண்டும் அப்டேட் செய்யப்படுகிறது!

 6. தல,

  சில சமயங்களில் வண்டி ஓட்டும்போது எதுனா ஒரு சிவப்பு சுடிதாரைப் பார்த்தாலும் எதுக்கு தொல்லைன்னு நாம ரோட்டுல கண்ணை வச்சு ஓட்டினாலும் பின்னால் உட்கார்ந்திருக்கவன் உசுப்பேத்தி ஃபாலோ பண்ண சொல்லுவான்..அப்பவும் ஆபத்துதான் :))

  புதிய பணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! 🙂

 7. //“இப்ப புரியுதா.. அவங்க குடும்பம் எப்படி வந்திருக்கு.. நம்ம குடும்பம் எப்படி வந்திருக்குன்னு.. இதுல ஆச்சரியப்பட
  என்ன இருக்கு சொல்லு?”//

  நல்ல பாயிண்ட்.

 8. //“இப்ப புரியுதா.. அவங்க குடும்பம் எப்படி வந்திருக்கு.. நம்ம குடும்பம் எப்படி வந்திருக்குன்னு.. இதுல ஆச்சரியப்பட
  என்ன இருக்கு சொல்லு?”//

  இதில கொஞ்சம் மாறுபடுறேன். ஒருவருக்கான போதுமான வாய்ப்புகள், பின்புலம், கல்வி இல்லாதபோது மின்ன முடியாமல் போகலாம். ஒடுக்கப்பட்ட சாதியினர், ஏழ்மையில் உள்ளோருக்கு இது பொருந்தும். எனவே இவற்றின் காரணமாக மின்னுபவர்களைப் பார்த்து ஆச்சர்யப்பட வேண்டாம் என்று சொல்ல நினைக்கிறீங்க போல்.

  ஆனால், நீங்கள் சொன்ன எடுத்துக்காட்டில் உள்ளவர்களின் சாதியை மட்டும் பார்த்தால் அந்த சாதியில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் உடனடியாக மின்ன முடியாது என்பது போல் ஒரு தோற்றம். சாதியை விடுத்து அவர்கள் குடும்பப் பின்னணி, முன்னோர்களின் படிப்பு, வேலை – இவற்றை மட்டும் பார்த்தால், அப்படி உள்ளவர்கள் தான் மின்ன முடியும் என்பது போல் இருக்கு.

  எந்த சாதியில் பிறந்தவரும், முதல் தலைமுறையாக படிப்பு, நல்ல வேலையில் இருப்பவரும் கூட நிறைய சாதிக்கிறார்கள். எனவே, ஒருவரின் சாதனைக் குறைவுக்கு முன்னோரின் இயலாமையைக் குறை கூறுவது சரியா? சரியான பின்புலம் இல்லாமல் சாதித்த எத்தனையோ பேர் இருக்கிறார்களே? அதுவும் நீங்கள் சுட்டியுள்ள எடுத்துக்காட்டுகளில் உள்ள கவித் திறன், சிந்தனைத் திறன், உலகப் பொது அறிவு, எழுத்து வன்மை எவருக்கும் வரக்கூடியவை தானே? இதற்கு முன்னோர் பின்புலம் அவ்வளவு முக்கியமா?

  உங்கள் கருத்தை யாரும் தவறாகப் புரியக்கூடாது என்று கேட்கிறேன். நானே தவறாகப் புரிந்திருந்தால் விளக்கவும். நன்றி

 9. பாலா!
  இறையன்பு, வைரமுத்துன்னும் எதிர் உதாரணம் காட்ட முடியும்.
  இவ்விஷயத்தில் ரவியோடு உடன்படுகிறேன்.

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

 10. எனக்கு பின்னாடி இருசக்கர வாகனத்தில் கல்யாணமான ஒரு பெருசு வருவது உண்டு. ஏதாவது செம கட்டை ஒன்று ஹோண்டா ஆக்டிவாவிலோ, ஸ்கூட்டியிலோ கடந்து போனால், “டேய், அந்த பொண்ணைத் தாண்டி ஓட்டுடா. முகத்தை பார்க்கணும்” என்று தொல்லை செய்வது வழக்கம். இந்த மாதிரி பெருசுகளை என்ன பண்ண?

  இப்போ நான் செய்ய? (தம்பி மாதவன் ஸ்டைலில் கொலைவெறியோடு படிக்கவும்)

  /////“இப்ப புரியுதா.. அவங்க குடும்பம் எப்படி வந்திருக்கு.. நம்ம குடும்பம் எப்படி வந்திருக்குன்னு.. இதுல ஆச்சரியப்பட
  என்ன இருக்கு சொல்லு?”////

  கல்லூரி படத்தில் பாலாஜி சக்திவேல் ஒரு அற்புதமான காட்சியில் இதை விளக்கியிருப்பார். முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவி இதே கேள்வியை தன் பாட்டியிடம் கேட்பது போல அந்த காட்சி அமைந்திருக்கும். காதல் படத்தை விட கல்லூரி படம் பன்மடங்கு சிறப்பான படம். ஏனோ ஓடவில்லை. ஒருவேளை கல்லூரி மாணவிகள் அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம் போடுவது போல படமாக்கியிருந்தால் ஓடியிருக்குமோ என்னவோ?

  அப்புறம், வலையுலக கிசுகிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க போலிருக்கு! சூப்பர்!!!

  அந்த ஹைதராபாத் நண்பர் தன் தாயை பற்றி எனக்கும் ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுவதுண்டு 🙂

 11. /////எந்த சாதியில் பிறந்தவரும், முதல் தலைமுறையாக படிப்பு, நல்ல வேலையில் இருப்பவரும் கூட நிறைய சாதிக்கிறார்கள். எனவே, ஒருவரின் சாதனைக் குறைவுக்கு முன்னோரின் இயலாமையைக் குறை கூறுவது சரியா? சரியான பின்புலம் இல்லாமல் சாதித்த எத்தனையோ பேர் இருக்கிறார்களே? அதுவும் நீங்கள் சுட்டியுள்ள எடுத்துக்காட்டுகளில் உள்ள கவித் திறன், சிந்தனைத் திறன், உலகப் பொது அறிவு, எழுத்து வன்மை எவருக்கும் வரக்கூடியவை தானே? இதற்கு முன்னோர் பின்புலம் அவ்வளவு முக்கியமா?//////

  ரவிசங்கர்! வாசிக்க இந்த பத்தி நன்றாக இருக்கிறது. ஆனால் யதார்த்தம் என்ற ஒன்றிருக்கிறது இல்லையா?

  பாலாண்ணா சொல்லவந்த பிரச்சினைக்கு நானே சரியான ஒரு உதாரணம். என் தந்தையாருக்கு போதுமான கல்வியறிவு இல்லாததால் எனக்கு தேவையான நேரத்தில் சரியான வழிகாட்டுதலை அவரிடமிருந்து பெற இயலவில்லை. நானே எப்படியோ தட்டு தடுமாறி ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறேன் என்றாலும் கூட என் வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தில் என் தந்தையார் சரியான முறையில் வழிகாட்டியிருந்தால் இவ்வளவு சிரமப்பட்டு மேலே வந்திருக்க வேண்டியிருந்திருக்காது என்று பலநேரங்களின் தோன்றும்.

 12. லக்கி,

  //ரவிசங்கர்! வாசிக்க இந்த பத்தி நன்றாக இருக்கிறது. ஆனால் யதார்த்தம் என்ற ஒன்றிருக்கிறது இல்லையா?//

  கல்வி, வேலை போன்ற விசயங்களில் உங்கள் வாதப்படி பெரும்பான்மையினர் பாதிக்கப்பட்டிருப்பதை ஒப்புக் கொள்வேன். ஆனால், பாலா சுட்டியுள்ள கவித் திறன், சிந்தனைத் திறன், எழுத்து வன்மை ஆகியவைக்கு பின்புலம் அவ்வளவு முக்கியமா என்று தோன்றுகிறது. தன்னைச் செதுக்கிக் கொள்வதில் ஒவ்வொருவனும் குறிப்பிடத்தக்க முயற்சி செலுத்த வேண்டும். அது இல்லாமல் எவ்வளவு பின்புலம் இருந்தாலும் பயனில்லை. பாலா சுட்டியுள்ள பின்புலம் உள்ள எத்தனையோ பேர் இருக்கிறார்களே. ஆனால், ஒரு சிலர் தானே சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள்???

 13. சீனு says:

  //என் தந்தையாருக்கு போதுமான கல்வியறிவு இல்லாததால் எனக்கு தேவையான நேரத்தில் சரியான வழிகாட்டுதலை அவரிடமிருந்து பெற இயலவில்லை. நானே எப்படியோ தட்டு தடுமாறி ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறேன் என்றாலும் கூட என் வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தில் என் தந்தையார் சரியான முறையில் வழிகாட்டியிருந்தால் இவ்வளவு சிரமப்பட்டு மேலே வந்திருக்க வேண்டியிருந்திருக்காது என்று பலநேரங்களின் தோன்றும்.//

  என் தந்தை கூட கல்வி கற்காதவர். என் நண்பனின் தந்தையும் கல்வி கற்காதவர். இன்னும் இரு நண்பர்களும் இளம் வயதில் தந்தையை இழந்தவர்கள். அவர்களின் தாயும் கல்வி கற்காதவர்கள். ஆனால், நாங்கள் நால்வரும் இப்பொழுது படித்து ஒரு நல்ல உத்தியோகத்தில் இருக்கிறோம். காரணம் எங்கள் மூவரின் பெற்றோரும் பணம் சேர்த்து எங்களை படிக்க வைக்க முடிந்தது. இந்த விஷயத்தில் பொருளாதார வசதியே காரணமாக இருக்கிறது. நாண்காமவன் வீட்டில் கலை பேப்பர் போட்டு படித்து உயர்ந்தவன்.

  அதேபோல, படிக்கவைக்க வசதியிருந்தும் படிக்காமல் விட்ட என் மற்ற இரு நண்பர்கள் (ஒருவன் என் சித்தி பையன்) இன்று கஷ்டப்படுவதற்கு காரணம் அவர்களுடைய சொந்த விருப்பு வெருப்பே…இன்று வருந்திக்கொண்டிருக்கிறார்கள்.

  வழிகாட்டுதல் என்பது ஒரு விசிட்டிங் கார்டு போலத்தான். அதுவே காரணம் இல்லை.

 14. கும்மிக்கு வாய்ப்பிருக்கா?

 15. Pingback: வார்த்தை :: மே மாதம் - சிவிறுதல் « Snap Judgment

 16. //#
  சீனு May 28th, 2008 at 6:18 pm

  //என் தந்தையாருக்கு போதுமான கல்வியறிவு இல்லாததால் எனக்கு தேவையான நேரத்தில் சரியான வழிகாட்டுதலை அவரிடமிருந்து பெற இயலவில்லை. நானே எப்படியோ தட்டு தடுமாறி ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறேன் என்றாலும் கூட என் வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தில் என் தந்தையார் சரியான முறையில் வழிகாட்டியிருந்தால் இவ்வளவு சிரமப்பட்டு மேலே வந்திருக்க வேண்டியிருந்திருக்காது என்று பலநேரங்களின் தோன்றும்.//

  என் தந்தை கூட கல்வி கற்காதவர். என் நண்பனின் தந்தையும் கல்வி கற்காதவர். இன்னும் இரு நண்பர்களும் இளம் வயதில் தந்தையை இழந்தவர்கள். அவர்களின் தாயும் கல்வி கற்காதவர்கள். ஆனால், நாங்கள் நால்வரும் இப்பொழுது படித்து ஒரு நல்ல உத்தியோகத்தில் இருக்கிறோம். காரணம் எங்கள் மூவரின் பெற்றோரும் பணம் சேர்த்து எங்களை படிக்க வைக்க முடிந்தது. இந்த விஷயத்தில் பொருளாதார வசதியே காரணமாக இருக்கிறது. நாண்காமவன் வீட்டில் கலை பேப்பர் போட்டு படித்து உயர்ந்தவன்.

  அதேபோல, படிக்கவைக்க வசதியிருந்தும் படிக்காமல் விட்ட என் மற்ற இரு நண்பர்கள் (ஒருவன் என் சித்தி பையன்) இன்று கஷ்டப்படுவதற்கு காரணம் அவர்களுடைய சொந்த விருப்பு வெருப்பே…இன்று வருந்திக்கொண்டிருக்கிறார்கள்.

  வழிகாட்டுதல் என்பது ஒரு விசிட்டிங் கார்டு போலத்தான். அதுவே காரணம் இல்லை.
  //

  சீனு சொல்வது சரியே

  பெற்றோர் பின்புலம் எல்லோருக்கும் பொருந்திவராது.

 17. Ravanan P says:

  Nandraga sonneergal.
  Nandri
  Ravanan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.