எச்சரிக்கை! எச்சரிக்கை !!
சென்னை வாழ் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. சென்னையில் மட்டும் சுமார் இருபதாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அத்தனையும் ரூ 500/- மற்றும் ரூ 1000/ ரூபாய் நோட்டுக்கள். அதனால் வெளியிடங்களில் எவர் 500& 1000 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தால்.. ஒன்றுக்கு பலமுறை சோதனை செய்த பிறகே வாங்கவும். இல்லாவிட்டால்.. நஷ்டம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
சென்னையில் இன்று கள்ள நோட்டை மார்க்கெட்டில் விட்ட ஒரு வட இந்திய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 20 ஆயிரம் ரூபாய் நல்ல நோட்டுக்களையும் போலீசார் எடுத்துள்ளனர். விசாரணையில் அந்த நல்ல நோட்டுக்கள் எல்லாம் கள்ள நோட்டை மார்கெட்டில் விட்டு, மாற்றியது என்பது தெரியவந்திருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
————
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான உ.ர. வரதராஜன் காணமல் போய் இருக்கிறார். அவரது மனைவி சரஸ்வதி சென்னை காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக.. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் சார்ந்திருக்கும் கட்சி அறிவித்திருக்கிறது. கையெழுத்திடாத அவரது கடிதத்தில் ‘தனது மரணத்திற்கு பிறகு மருத்துவ ஆராய்ச்சிக்காக தம் உடலை தானமாக கொடுக்க வேண்டும் என்றும் எழுதி வைத்திருப்பது தான்… கட்சிக்காரர்களும் பொதுமக்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
—-
ரேடியோ ஜாக்கி சுச்சி- தற்போது ஹலோ எம்.எமில் இருக்கிறார். காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான ஒரு நிகழ்ச்சியை தொகுத்து அளிக்கிறார். கடந்த சில நாட்களாக அதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏதாவது ஒரு டாப்பிக் எடுத்துக்கொண்டு விவாதிப்பது இவரின் வழக்கம். ஒரு நடுநிலையானவராக இல்லாமல்.. ஒரு பக்கம் சார்புடையவராகவே சுச்சி நிகழ்ச்சியை நடத்துகிறார். இவர் முடிவு செய்து வைத்திருக்கும் நிலைக்கு எதிராக எவராவது பேசினால்.. அவ்வளவுதான் உண்டு இல்லை என்றும் செய்துவிடுகிறார். ஏனோ எனக்கு மட்டும் தான் இப்படி தோன்றுகிறதா.. அல்லது நிகழ்ச்சியை கேட்ட எவருகேனும் இதே போல தோன்றுகிறதா என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
—
பர்மா பஜாரில் இருந்து சில தமிழ் பேசும் ஆங்கிலப்படங்களை வாங்கி வந்திருக்கிறேன். உண்மையில் செம சுவாரஸ்யம் தான்.. நேரடியாக ஆங்கிலத்தில் பார்த்த டாவின்ஸி கேர்டு படத்தை பார்த்த போது மையமாய்.. தலையாட்டி விட்டு வந்தேன். அதையே தமிழில் பார்க்கும் போது எளிமையாக கதையுடன் ஒன்ற முடிகிறது. ஏதோ.. என்னையமாதிரி கைநாட்டுக்காக.. தொடர்ந்து ஆங்கிலப்படங்கள் தமிழ் பேசவேண்டும் என்பதே என் இப்போதைய ஆசை!
—-
//தொடர்ந்து ஆங்கிலப்படங்கள் தமிழ் பேசவேண்டும் என்பதே என் இப்போதைய ஆசை!//
நல்ல தமிழா (அ) ஜுனூன் தமிழா தலை?
ஐயா,
ஆங்கிலப்படங்களை விடுங்கள். காப்பீட்டு பத்திரங்களில் பொடிப்பொடியாக எழுதியிருக்கிறதே அதுவும், வங்கியில் பல சமயங்களில் நிரப்பச் சொல்கிறார்களே, பாரங்கள் அதுவும் வந்தாலே போதும்!