விடுபட்டவை 04/03/10

கேள்வி :- அய்யா நீங்கள் ஏற்கனவே கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்று  சொல்லியிருக்கிறீர்கள்.    இப்போதெல்லாம் மடாதிபதி களால்  ஆசிரமங்களில் அத்துமீறல் நடப்பதாக  அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே?

(திருச்சியில் 03/03/10 அன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு முதல்வரின் பதில் கீழே)

கலைஞர் :- சமீப காலமாக  அத்தகைய செயல்கள் அதிகமாகத் தான் நடக் கின்றன.    அது பற்றி ஆலோசித்து,  எத்தகைய நடவடிக்கையை  அரசு மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுக்க  அரசின் சார்பிலும் அறநிலையத் துறையின் சார்பிலும் அமைந்துள்ள  குழுவினைக் கூட்டுவோம்.

%

மடாதிபதிகளே கொஞ்சம் உஷாரு..! 🙂

%%%%%%%%

இது எங்கள் ஊர் செய்தி..

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள வடகாடு கிராமத்திற்கு, 34 ஆண்டுகளுக்குப்பின் பஸ் விடப்பட்டுள்ளதால், இங்குள்ளோர் மகிழ்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்த நிலையில், ராமநாதசுவாமி கோயிலில் 1975 ல் நடந்த கும்பாபிஷேகத்தையொட்டி, ராமேஸ்வரம் தீவுப்பகுதிக்குள் மட்டும் இயங்கும் வகையில், தமிழக அரசால் டவுன் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.

அன்றைய நாளில் தனுஷ்கோடி துறைமுகப்பகுதி வரை ரோடு வசதியும் இருந்ததால், ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனுக்குமாக 10 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. 1988ல் பாம்பன் கடலில் ரோடு பாலம் திறக்கப்பட்டு, வெளியூர் பஸ்போக்குவரத்தும் துவங்கியது. நாளடைவில் தீவு பகுதியில் டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால், ராமேஸ்வரத்திலிருந்து ஏழு கி.மீ., தூரத்தில் உள்ள வடகாடு கிராமத்திற்கு மட்டும் பஸ் இயக்கவில்லை. இந்த கிராமத்தினர் பல இன்னல்களுக்கு ஆளாகினர் . இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் இங்கு ரோடு வசதியே ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், 34 ஆண்டுகளுக்குப்பின் தற்போதுதான், இக்கிராமத்திற்கு(மார்ச் 1 முதல் ) டவுன் பஸ் விடப்பட்டுள்ளது. “தினம் மூன்று முறை பஸ் சென்று வருவதால்  மகிழ்ச்சி தருவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.

இராமேஸ்வரத்தின் வடக்கு பகுதில் இந்த கிராமம் உள்ளது. 2000ம் ஆண்டில் காலையில் 
ஒரு பேருந்து, மாலையில் ஒரு பேருந்து என சில மாதங்கள் இயக்கினார்கள். ஆனால்.. 
தங்களின் தேவைக்கு ஏற்ற நேரத்தில் பேருந்துகள் வருவதில்லையென.. அப்பகுதி மக்கள் 
பேருந்துகளை புறக்கணித்தனர். இதோ.. இப்போது கூடுதல் பேருந்துகள் விடப்படுவது என்பது 
மகிழ்ச்சியானது.
-----------------
பத்திரிக்கைகளுக்கு மட்டுமல்ல.. வலை உலகில் கூட கொஞ்ச நாளுக்கு நித்தியானந்தா தான் 
விற்பனை பொருள் போல தெரிகிறது. என்சாய்ய்ய்ய் மக்கள்’ஸ்!
---------
எதுவும் செய்யத்துணியுங்கள்.. ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை மட்டும் 
பார்க்க துணிய வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். 
சரியான, மகா, மோசமான மொக்கைப் படம் அது.
ஏ.ஆர். ரகுமான் ஆஸ்காருக்கு பிறகு இசையமைத்த முதல் படம் என்றார்கள். 
ஏனோ எனக்கு ரகுமானும் ஏமாற்றிவிட்டதாகவே தோன்றுகிறது. பின்னனி இசை 
நாராசமாக இந்தது. இந்த படத்தை பார்ப்பதற்கு நீங்கள் பல மொக்கை படங்களைப் பார்த்து 
என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பண்ணலாம்.
பதிவர் பினாத்தல் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.. இந்தப் படம் பத்தி நான் நினைத்தை பாதி 
அளவு சொல்லியிருந்தீங்க. அப்புறம்.. தல, வசந்தம்ல வந்த உங்க மழை பத்தின கதை குட்! 
ஆனா நோ யுவர் டச்!!)

--------------

This entry was posted in சமூகம்/ சலிப்பு, தகவல்கள், விடுபட்டவை and tagged , . Bookmark the permalink.

3 Responses to விடுபட்டவை 04/03/10

  1. reader says:

    //ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள வடகாடு கிராமத்திற்கு, 34 ஆண்டுகளுக்குப்பின் பஸ் விடப்பட்டுள்ளதால், இங்குள்ளோர் மகிழ்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்த நிலையில், ராமநாதசுவாமி கோயிலில் 1975 ல் நடந்த கும்பாபிஷேகத்தையொட்டி, ராமேஸ்வரம் தீவுப்பகுதிக்குள் மட்டும் இயங்கும் வகையில், தமிழக அரசால் டவுன் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.

    அன்றைய நாளில் தனுஷ்கோடி துறைமுகப்பகுதி வரை ரோடு வசதியும் இருந்ததால், ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனுக்குமாக 10 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. 1988ல் பாம்பன் கடலில் ரோடு பாலம் திறக்கப்பட்டு, வெளியூர் பஸ்போக்குவரத்தும் துவங்கியது. நாளடைவில் தீவு பகுதியில் டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால், ராமேஸ்வரத்திலிருந்து ஏழு கி.மீ., தூரத்தில் உள்ள வடகாடு கிராமத்திற்கு மட்டும் பஸ் இயக்கவில்லை. இந்த கிராமத்தினர் பல இன்னல்களுக்கு ஆளாகினர் . இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் இங்கு ரோடு வசதியே ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், 34 ஆண்டுகளுக்குப்பின் தற்போதுதான், இக்கிராமத்திற்கு(மார்ச் 1 முதல் ) டவுன் பஸ் விடப்பட்டுள்ளது. “தினம் மூன்று முறை பஸ் சென்று வருவதால் மகிழ்ச்சி தருவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.
    //
    ***
    பஸ் விடப்பட்டுள்ளதால்
    ரோடு வசதியும்
    பஸ் போக்குவரத்தும்
    டவுன் பஸ்களும்
    பஸ் இயக்கவில்லை
    ரோடு வசதியே
    டவுன் பஸ் விடப்பட்டுள்ளது
    பஸ் சென்று வருவதால்
    ***

    தினமலர் ஏன் ஆங்கிலச் சொற்களை வலிந்து திணிக்கிறது ?
    அதன் எந்தப் பதிப்பிலும் பேருந்து, சாலை போன்ற சொற்களைப் பயன்பாட்டில் கண்டதில்லை.

  2. //தினமலர் ஏன் ஆங்கிலச் சொற்களை வலிந்து திணிக்கிறது ?
    அதன் எந்தப் பதிப்பிலும் பேருந்து, சாலை போன்ற சொற்களைப் பயன்பாட்டில் கண்டதில்லை.
    //

    அவர்களுக்கு தமிழ் மொழி வளர்வது கண்டால் பிடிக்காதோ 🙁 தினமலர் தான் தெரிவு படுத்த வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.