அங்காடி தெரு- நிச்சயம் ஒரு நல்ல படம். கடைநிலை மனிதர்களின் வாழ்க்கையை பிரபதிலிக்கும் முயற்சி. படத்தின் நீளம் சில இடங்களில் பாடல்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்திற்கு பின்னனி இசையும் கூட ஏனோ சரியாக இல்லை என்றே தோன்றுகிறது. ஜெயமோகனின் வசனம் மிக கூர்மையாக எழுதப்பட்டுள்ளது. தனது நான்காவது படத்திலேயே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் ஜெமோ. நிச்சயம் நல்ல எதிர்காலம் அவருக்கு சினிமா உலகில் உண்டு!
வசந்த பாலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. இதுமாதிரியான ஒரு கதைக் கருவை எடுத்தமைக்காக..! அதே சமயம்.. அவர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்வதும் இச்சமயத்தில் நல்லது என்றே தோன்றுகிறது. ஓர் அழகான கதையை திரைக்கதையாக்கும் போது, தேவையில்லாமல்.. மூலக்கதைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல்.. இரண்டுக்கும் மேற்பட்ட கிளைக்கதைகள் ஓடிக்கொண்டிருப்பதை படம்பார்த்தவர்கள் உணர முடியும். இது தன் படைப்பின் மீதான சந்தேகத்தின் வெளிப்பாடே! எதிர்வரும் காலத்தில் இதனை கொஞ்சம் கவனிஞ்சுக்கொள்ளுங்கள் வசந்தபாலன்.
ஆனாலும்.. நிச்சயம் தமிழ் சமூகம் இப்படத்தை கொண்டாடவேண்டும். வெயில் படம் போல இதும் வெளிநாடுகளின் திரைப்படவிழாவுக்கு போகும் வாய்ப்பு ஏற்படலாம்.
—-
பையா- என்றொரு படம். ஆனந்தம் எடுத்த லிங்குசாமி தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். கார்த்தி-தமன்னா ஜோடி. நடிகர் கார்த்தி இப்படியே தொடர்ந்து நடித்து வந்தார் எனில் சீக்கிரம் சின்னத்திரை நடிகராகி விடுவார் என்று நம்பலாம். அதே போல.. லிங்கு சாமியும் இப்படி சொந்த படங்களில் இருந்தே காப்பி அடிப்பாரேயானால்.. சின்னத்திரையில் செட்டிலாகிவிடுவார் என்பது உறுதி. அனேகமாக லிங்கு சாமி அடுத்தபடத்தை குடும்ப கதையாக எடுப்பார் என்று தெரிகிறது.
இவ்வளவு மொக்கையான ஒரு படத்தை நான் சமீபத்தில் பார்க்கவில்லை. மிலிந்த் சோமனை இப்படி வீணடித்திருக்க வேண்டாம். படம் முழுக்க கார்த்தியும் தமன்னாவும் அனேக காட்சிகளில் க்ளோசப்பில் வந்து… பயப்புடுத்துறாய்ங்கப்பா..!
——

குணக்குடி ஹனீபா
1997ல் ரயில் குண்டு வெடிப்பு வழக்கி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள குணங்குடி ஹனிபா வழக்கு இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வெறும் குற்றம்சாட்டப்பட்டே.. (இன்னும் நிறுபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) பத்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ளேயே இருந்து வருகிறார்கள் ஹனிபாவும், மற்ற தோழர்களும். இன்றைக்கு வழக்கவிருக்கின்ற தீர்ப்பு சமூக ஆர்வளர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பார்க்கலாம். இவரை பிணையில் விடுவிக்க பலமுறை கோரியும் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. எவ்வித ஆதரங்களும் இன்று ஒருவரை இத்தனை ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க முடியுமா.. என்பது தான் வியப்பாக உள்ளது.
—

அ.முத்துலிங்கம்
என்க்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம் ஒருவர். ஏற்கனவே இணையத்தில் கிடைக்கும் இவரது மின்னூல்களின் நூலகம் டாட் நெட் தளங்களில் இடைக்கிறது என்று சிறுகதையின் சுட்டியை ஒன்றை முன்பு கொடுத்திருந்தேன். இப்போது தான் இவரின் இணையப்பக்கத்தினை பார்க்க முடிந்தது. என்னை மாதிரியே பலருக்கும் இவரது எழுத்துக்கள் பிடிக்கலாம். அதனால் அன்னாரின் வலைப்பக்கத்தின் முகவரியை தருகிறேன்.. நீங்களே படித்துப்பாருங்கள்.
—–
ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமைக்கு அதாவது வரும் 10ம் தேதிக்கு சந்திப்பை வைத்திருக்கிறோம்… மொக்கை போட விரும்பும் நபர்கள் வரலாம்.
—
அ.முத்துலிங்கம் எனக்கும் மிகப்பிடித்தமான எழுத்தாளர். அவரது ’அங்கே இப்ப என்ன நேரம்’ தொகுப்பு நேர்த்தியான எழுத்துக்களை விரும்புபவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ஊடாடும் நகைச்சுவையும் துல்லிய தகவல்களுமாய் அவரது எழுத்துத்தளம் உற்சாகமூட்டுபவை. இணைய தளப் பகிர்விற்கு நன்றி தல..
nice to know about the site of a.muthulingam.. i can have a through look at his works from now on… thanks na
குசும்பரை இன்னும் காணுமே :))
//ஓர் அழகான கதையை திரைக்கதையாக்கும் போது, தேவையில்லாமல்.. மூலக்கதைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல்.. இரண்டுக்கும் மேற்பட்ட கிளைக்கதைகள் ஓடிக்கொண்டிருப்பதை படம்பார்த்தவர்கள் உணர முடியும்.//
ஆமா.. எனக்கும் இதுதான் தோணியது…
//மொக்கை போட விரும்பும் நபர்கள் வரலாம்//
அப்போ.. மொக்கை போட விருப்பமில்லாத நபர்களை வரகூடாதுன்னு சொல்லுறீங்களா..?!!!
யாராவது வந்து தட்டி கேளுங்கப்பா…
//சின்னத்திரை நடிகராகி விடுவார் என்று நம்பலாம். அதே போல.. லிங்கு சாமியும் இப்படி சொந்த படங்களில் இருந்தே காப்பி அடிப்பாரேயானால்.. சின்னத்திரையில் செட்டிலாகிவிடுவார் என்பது உறுதி.//
சின்னத்திரையில் செட்டில் ஆன சின்ன சிங்கம் உங்களுக்கு போட்டியாக யாரையும் உள்ளே விடமாட்டோம்.
இப்படிக்கு தல அழகை ரூம் போட்டு ரசிக்கும்
பா.க.ச உறுப்பினர்கள்.
//இவ்வளவு மொக்கையான ஒரு படத்தை நான் சமீபத்தில் பார்க்கவில்லை.//
என்னது உங்க படம் வீட்டில் எங்கும் இல்லையா? அய்யகோ!
அட்லீஸ்ட் தலை சீவ கண்ணாடி கூடயா தல பார்க்கவில்லை?
//இதுமாதிரியான ஒரு கதைக் கருவை எடுத்தமைக்காக.வசந்த பாலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.! //
சத்துணவு முட்டையில் இருந்து மஞ்சல் கருவை மட்டும் எடுத்து ஆட்டைய போட்ட என்னை பாராட்ட மாட்டீயா தல?
// ஜெயமோகனின் வசனம் மிக கூர்மையாக எழுதப்பட்டுள்ளது.//
ஒருவேளை பேனா வைத்து எழுதாமல் ஆணி வெச்சி எழுதியிருப்பாரோ,வள்ளுவர் மாதிரி??
இப்படி சொந்த படங்களில் இருந்தே காப்பி அடிப்பாரேயானால்.. // excellent… நேர்காணல் ஒன்றை சானலில் பார்த்தேன்… தமிழ் சினிமாவையே புரட்டினாற் போல பேசினார் லிங்கு. ‘ஆனந்தம்’ தவிர மத்ததெல்லாம் போங்கு!
ஒருவேளை பேனா வைத்து எழுதாமல் ஆணி வெச்சி எழுதியிருப்பாரோ // லேய் ராஸ்கல்! சிரிச்சி சிரிச்சி வலிக்குதுடே வயிறு…