இளமையான ஞாநி அவர்களுக்கு..

வணக்கம்.

பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு மடல் எழுத நினைத்ததுண்டு, ஆனால்.. அப்போதெல்லாம் எழுத முடியாமலேயே போய் விட்டது. அந்த சமயங்களை நினைத்துப்பார்த்தால்.. பல பாராட்டுக்களும், சில சண்டைகளுக்குமான சமயமாக நினைவு வருகிறது. பரவாயில்லை. இப்போதாவது எழுதி விடுவது என்ற எண்ணத்துடனே அமர்ந்திருக்கிறேன். அனேகமாக வழமை போல இதையும் பாதியில் விட்டு விட மாட்டேன் என்றே நினைக்கிறேன்.

அக்டோபர் 10,2007 தேதி ஆனந்த விகடன் இதழில் பக்கம் 148-ல் தங்களின் தொடர் பத்தியான “ஓ…பக்கங்கள்” படித்ததும் இம்மடல் எழுதுகிறேன்.

தமிழக முதல்வர் மு.கருணாநிதி மீது தாங்களுக்கு இருக்கும் கருணை(!) பொங்கும் அன்பைக்கண்டு அளவிட முடியாத மகிழ்ச்சி அடைந்தேன் என்றால் அது மிகையல்ல. 84 வயதில் தமிழகத்தில் தொடர்ந்து 18 மணி நேரம் உழைக்கக்கூடிய ஒரு கிழவன் மீது தாங்கள் காட்டக்கூடிய அன்பை எத்தனை வார்த்தைகள் எழுதி பாராட்டினாலும் தகும்.

பெற்ற பிள்ளைகளை விட, தன் தலைவனுக்காக தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி தொண்டனை விட, இந்த தலைவனுக்காக தன்னூயிர் நீத்த விசுவாசிகளை விட உங்கள் லாவகமான எழுத்து மூலம்.. மு.கருணாநிதி என்ற மனிதருக்கு வயதாகி விட்டது என்பது தங்களுக்கு மட்டுமேனும் தெரிந்திருப்பது மகிழ்ச்சியானது.

வயதாகிப்போன ஒருவர் ஓய்வு தான் எடுக்க வேண்டும்.. உழைக்கக்கூடாது. அப்படி அவர் உழைத்தால்.. பிள்ளைகள் கல் நெஞ்சக்காரர்கள், தொண்டர்கள் இதயமில்லாதவர்கள், விசுவாசிகள் போலியானவர்கள்.. என்று உங்களின் எழுத்து மூலம் தமிழக மக்களின் மனதில் விதைக்கிறீர்கள். நல்ல காரியம் செய்தீர்கள். பாவம் அந்த கிழவன்.. ஓய்வு எடுக்கட்டும். நீங்கள் அடிமனதில் விரும்பும் அந்த கிழவனின் ஓய்வு எத்தகையது என்பதை நான் சொல்லி அறிய வேண்டியதில்லை.

தொன்னுற்று நான்கு வயதில் நடக்கக்கூட முடியாமல், அப்படியே தூக்கி வந்து வைத்துவிட்டுப்போவார்களாம்.. ஈரோட்டு ராமசாமியை. மூத்திரப்பையை தூக்கியபடி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் போய் வந்திருக்கிறார் அந்த கிழவர். வயது ஏற்றத்தின் காரணமாக அவரின் கை விரல்கள் கூட மடிந்து நீட்ட முடியாத போதும்.. அவரே எழுதி இருக்கிறார்.. பல கட்டுரைகளை. அந்த கிழவனோடு.. இவரை ஒப்பிட முடியாதெனினும்.. வயோதிகம் பாராமல் உழைக்கத் தயாராக இருக்க துணிந்தவர்கள் இருவரும். வயோதிகத்தை காரணம் காட்டி இவரை ஒதுங்கிக்கொள்ளச்சொல்லும் நீங்கள்.. முன்னெப்போதாவது இப்படி எழுதியதுண்டா என்று என்னையே கேட்டுப்பார்க்கிறேன்.

அது சரி ஞாநி.., உங்களின் சமீபத்திய எழுத்துக்கள் எல்லா வற்றிலுமே.. இந்த முதியவரையும் அவரின் முதுமையையும் குறிவைத்தே எழுதப்படுகிறதே ஏன்? நீங்கள் அறிவிக்கப்படாத பொருப்பாளராக இருக்கும் இதே விகடன் குழமத்தின் ஜூ.வி இதழிலும்(மட்டும்) இதே செய்தி.. மு.கருணாநிதிக்கு வயதாகி விட்டது என்ற செய்தி தொடர்ச்சியாக வெளிவருவது ஏன்? என்ன எதிர் பார்க்குறீர்கள் நீங்கள்?

இங்கே இந்த பெரியவரின் வயோதிகத்தை மட்டும் குறை சொல்லி, ஓய்வு எடுக்கச்சொல்லும் உங்களின் நுண்ணிய அரசியலை அறிந்து கொள்ள முடியாதவர்களாக தி.மு.கழகத்தினர் இருப்பது வருத்தமளிக்கும் செய்தி என்றாலும்.. நீங்கள் இது போன்று வயோதிகத்தை முன்னிருத்தி, ஓய்வு எடுக்கச்சொல்லி எவரையாவது, எப்போதாவது எழுதி இருக்கிறீர்களா? இல்லையெனில் மு.க-வின் மீது மட்டும் அந்த கருணை பொங்க என்ன காரணம்? ( ஒரு வாரம் முன்பு- இதே ஆனந்தவிகடன் வார இதழில்  “போலி பகுத்தறிவு வாதியும் போலி தேசபக்தரும் என்று எழுதிய தாங்கள் இன்று உங்கள் வார்த்தைகளில்.. அதே போலி பகுத்தறிவு வாதியாக கருணாநிதியை பகுத்தறிவு பிரச்சாரத்திற்கு போங்கள் என்று சொல்கிறீர்கள்? ஏனிந்த முரண்பாடு?! )

கால் முட்டு எழும்பு தேய்ந்து போய்.. அரசாங்க செலவிலேயே மருத்துவம் பார்த்து, படுக்கையில் ஓய்வெடுத்து.. அதன் பின்னும் இன்ஞ்..இன்ஞ்-ஆக நடந்து பாரதம் சுற்றிய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு விலகிக்கொள்ளுங்கள் என்பது போன்ற ஒரு கடிதம் தாங்கள் எழுதியதாக நினைவு எனக்கு இல்லை. உங்களுக்கு?

தமிழக அரசியலில் எனக்குத் தெரிந்து பொது மேடையில்.. பெரியார் ஈ.வே.ரா தன் கடைசி காலங்களில் அமர்ந்து பேசும் வழக்கத்தை கொண்டிருந்தார். அதன் பின் அவரின் வயது எட்டாத.. டாக்டர்.ராமதாஸ் அந்த வழக்கத்தை கொண்டு வந்தார். அதற்காக.. அவரை அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளுங்கள் என்று, நீங்கள் எங்கும் சொன்னதாக நினவு இல்லை எனக்கு. உங்களுக்கு?

இந்திய ஜனாதிபதிகளிலேயே மிகவும் சிரமப்பட்டு நடந்தவர் சங்கர் தயால் சர்மா. எனக்குத்தெரிந்து அவரையும் நீங்கள் ஓய்வு பெறச்சொல்லி எங்கும் அறிக்கை விடவில்லை என்றே நினைக்கிறேன். நினைவிருக்கிறதா உங்களுக்கு?

அதே சமயம்.. அதே ஆனந்த விகடன் இதழில் 92ம் பக்கம் வந்திருந்த செய்திக்கட்டுரையையும் தாங்கள் பார்த்திருக்கக்கூடும். ஆதரவற்ற சீராளன் என்ற 80 வயது கிழவன் இன்னும் வண்டி இழுத்து தன்வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் அவல வாழ்க்கை பற்றிய செய்திக்கட்டுரையைத் தான் சொல்லுகிறேன். சீராளன் போன்ற எண்ணற்ற கிழவர்களையும், கிழவிகளையும் என்னை விட அதிகம் ஊர் சுற்றிய நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.. அப்போதெல்லாம் அவர்களின் நிலைகண்டு.. 39 வயதில் செத்துப்போன பாரதியை துணைக்கிழுத்து நீங்கள் கட்டுரைகள் எழுதியதாக எனக்கு நினைவு இல்லை. உங்களுக்கு?

தொடர்ந்து ஒரே முகமுடியை பயன்படுத்த முடியாது. நைந்து போய் அது கிழிந்து.. கோர முகம் வெளிப்பட்டே தீரும்.

தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் வந்தால்.. மு.கருணாநிதியை தந்தையாக நினைத்தேன். தாத்தாவாக நினைத்தேன் என்று நீங்கள் பல்டி அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நீங்கள் பதில் சொல்லாவிட்டாலும்..காலம் பதில் சொல்லும்.

அந்த நம்பிக்கையுடன்
அன்பன்
யெஸ்.பாலபாரதி (6அக்டோபர்.2007)


Comments

47 responses to “ஒரு நிமிடம் ஞாநி..”

  1. karthikramas Avatar
    karthikramas

    சப்பா… சூடு பறக்குதே!

  2. //சூடு பறக்குதே//

    அப்படியா.. ரொம்ப பார்த்து பார்த்து தானே எழுதினேன். 😉

  3. […] ஞாநிக்கு, பாலபாரதி எழுதும் ஒரு திறந்த மடல். […]

  4. இணையத்தில் வாசிக்க இந்த வருஷம் விகடனுக்குப் பணம் கட்டலை. அதனால் அங்கெ என்ன நடக்குதுன்னே
    தெரியாம இருந்தது.

  5. அண்ணே.. முதல் எதிர்ப்பு உங்களுடையது தான்.
    நன்றி சொல்லி உங்களை கேவலப்படுத்த விரும்பவில்லை. உங்கள் கடமையை செய்திருக்கிறீர்கள்!!!

  6. பொன்ஸ் Avatar
    பொன்ஸ்

    சூடு பறக்குது என்பதை நானும் வழிமொழிகிறேன்.. பாலா, உங்களுக்கு இவ்வளவு சீரியஸா எழுதக் கூட தெரியுமா!?

  7. தமிழன் Avatar
    தமிழன்

    ஆனந்த விகடன் படித்து திகைத்து போனேன்……

    சரியான சாட்டையடி… நான் கேட்க நினைத்ததை கேட்டுள்ளீர்கள்

  8. சிவஞானம்ஜி Avatar
    சிவஞானம்ஜி

    ஆடு நனைந்தால் ஓநாய் அழத்தான் செய்யும்….
    அதன் காரணத்தைப் புட்டு புட்டு வைக்கும் பாலபாரதிகள்தான் இன்றையத்தேவை…….
    சபாஷ்!

  9. kusumban Avatar
    kusumban

    “தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் வந்தால்.. மு.கருணாநிதியை தந்தையாக நினைத்தேன். தாத்தாவாக நினைத்தேன் என்று நீங்கள் பல்டி அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”

    :))) சொன்னாலும் சொல்வார்கள்

  10. ஞாநிக்கு கலைஞர் மீது என்ன திடீரென்று அக்கறை….

    அவா கட்சியில் வாஜ்பாய், அத்வானி போன்ற பெரிய தலைகள் இருக்கின்றனவே…
    சங்கர மடத்து இளைஞர் (?) சங்கராச்சாரியை ஒதுங்கி ஒரமாக குறும்பு ஏதும் செய்யாமல் உட்கார சொல்லுங்கள்..அது நியாயம்..

    கலைஞரை ஒதுங்க சொல்ல ஞாநிக்கு எந்த உரிமையோ, நியாயமோ இல்லை..

    கலைஞர் மீது கரிசனம் காட்டும் இந்த ஞாநி இதுவரை அவரை திட்டாத வார்த்தைகள் இல்லை…..போன வாரம் கூட அவரை போலி பகுத்தறிவுவாதி என்று திட்டி எழுதிய இந்த ஞாநி இந்த வாரம் அய்யோ பாவம் என்று கவலைப் படுகிறது..

    எங்களுக்கு தெரியும் ஐயா…எங்கள் வீட்டு பெரியவர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என…

    எங்கள் வீட்டு தாடி வைத்த பெரியவர் ஏற்கனவே 94 வயது வரை வாழ்ந்து உங்களுக்கு ஆப்பு வைத்த பிறகே இறந்தார்…

    அதே போல் இந்த பெரியவரும் உங்களுக்கு, உங்கள் இனத்திற்கு ஆப்பு வைக்க
    100 வயதிற்கு மேல் வாழ்வார்.

    இவருக்கு பிறகும் உங்கள் இனத்திற்கு ஆப்பு வைக்க தொடர்ந்து எங்கள் பெரியவர்கள் வந்துக் கொண்டே இருப்பார்கள்…

    எங்கள் வீட்டு பெரிய மனிதரை நாங்கள் தமிழக முதல்வராக வைத்திருக்கிறோம்….

    நீங்கள் போய் தேடுங்கள் …உங்கள் வீட்டு பெரியவர்களை

    ஏதாவது முதியோர் இல்லங்களில்..

    இல்லையேல் ஏதாவது நடிகையிடம் குறும்பு செய்துக் கொண்டு ‘பெரியவாவாக’
    நடித்துக் கொண்டிருக்கும்..

  11. நண்பர்களே..

    தனிமனித தாக்குதலாக வரும் பின்னூட்டங்கள் வேண்டாமே! கருத்தை கருத்தால் எதிர்ப்போம்.

  12. சிவஞானம்ஜி Avatar
    சிவஞானம்ஜி

    பதவிப்பொறுப்பில் இருக்கும்வரை கலைஞர் தண்ணீரில் கிடக்கும் பாஸ்பரஸ்;
    தரையில் அது இருந்தால் தாங்குமோ ஞானிக்கூட்டம்?

  13. ஞாநி பல விசயங்களில் தொடர்ந்து ஒரு தலைபட்சமாகவே எழுதி வருகிறார்… அப்துல் கலாமைப் பற்றிய கட்டுரைகளிலும், கல்பாக்கம் பற்றிய அவர் கட்டுரையிலும், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் பற்றிய கட்டுரையிலும் ஞாநி ஒரு தலைபட்சமாகவே எழுதியுள்ளார்…

    இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் பற்றிய கட்டுரையில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை தேச விரோதி என்றார்… இந்த கட்டுரையில் இவர் கலைஞரின் வாரிசுகளையும், திமுகவினரையும் மக்களையும் மனித விரோதி என்கிறார்… இவரின் வார்த்தை ஜாலங்களில் மக்களை ஏமாற்றிவிடலாம் என எண்ணுகிறார் என நினைக்கிறேன்…

    முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் அவர்களையும், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கை அவர்களையும் தேசவிரோதி என்ற பொழுது மௌனமாக இருந்த தோழர்கள் இன்று பொங்கி எழுகின்றீர்களே!! அப்பொழுது உங்களுக்கு ஆதரவாக எழுதினார் என்று மௌனமாக இருந்தீர்களா??

  14. கலக்கியிருக்கிறியள்.
    ஞானியின் வயித்தையும் பதிவர்களின் வாசிப்பையும். சூப்பர்.

  15. //நன்றி சொல்லி உங்களை கேவலப்படுத்த விரும்பவில்லை. உங்கள் கடமையை செய்திருக்கிறீர்கள்!!!//

    ரிப்பீட்டேய்!!

  16. மழை காதலன் Avatar
    மழை காதலன்

    உண்மையை சொன்னால் சில மனிதர்களுக்கு உரைக்கும்… இது ஞாநி க்கு பொருந்துமா????

    செவுடன் காதில் சங்கு தான?

  17. பாலபாரதி,

    உடனடியாக அதுவும் சரியான சமயத்தில், சரியாக எழுதப்பட்ட கட்டுரை.

    உள்குத்து வேலை செய்யும் கும்பல் எப்பொழுதுமே அறிவதில்லை – தாங்கள் அணிந்து கொண்டிருக்கும் முகமூடிகள் கிழிந்து கொண்டிருப்பதை. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும் – அவர்களது முகமூடி கிழிவது.

    நன்றி, பாலபாரதி

  18. ஒரு பேச்சுக்காக…

    கலைஞர் விருப்பப்பட்டாலும் அவரால் இப்போது ஓய்வெடுக்க இயலுமா? அத்தகைய அரசியல் சூழல் உள்ளதா?

  19. விகடன் ஏன் இப்படி மலிவான வேலைகளில் இறங்கியிருக்கிறது எனப் புரியவில்லை. ஞானிக்கு அறிந்தும் அறியாமலும் மட்டும் தான் தெரிகிறது மற்றது எல்லாம் சுத்த சூனியமாக இருக்கிறது.

    கலைஞர் இவர்கள் அனைவரினதும் கிண்டல்களுக்கு நிச்சயம் ஒரு நாள் பதில் கொடுப்பார்.

    மாலன் சோ குருமுர்த்தி ஹிந்து ராம் ஞானி போன்றவர்களைத் திருத்த ஆயிரம் பெரியார் வந்தாலும் முடியாது. கலைஞருக்குப் பின்னர் இவர்களை அடக்கி ஆளப்போவது நம்ம தளபதிதான்.

  20. //சிறில் அலெக்ஸ் on 06 Oct 2007 at 5:01 pm # edit this

    ஒரு பேச்சுக்காக…

    கலைஞர் விருப்பப்பட்டாலும் அவரால் இப்போது ஓய்வெடுக்க இயலுமா? அத்தகைய அரசியல் சூழல் உள்ளதா?
    //

    சிறில்.. இப்படியான சந்தேகங்கள் கூட உருவாக்கிவதில்.. அந்த எழுத்துக்கு.. முக்கிய பங்கு உண்டு என்று நம்புகிறேன் நான். பொது புத்தி என்பார்களே..அப்படி! ஒரு செய்தியை திரும்பத்திரும்ப வலியுருத்தும் போது.. வலியுருத்தப்படும் அந்த கருத்து உண்மையோ.. என்று பொது புத்தித்தனமாக சிந்திக்க வைப்பதே இவர்கள் போன்றவர்களின் வேலை. (இந்தியாவில் மட்டுமல்லாது உலகிலேயே இஸ்லாமியர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்ற தோன்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்களே அது போலத்தான் இதுவும்) அதனால் உங்கள் கேள்வியில் எந்த உள்நோக்கமும் இல்லையென நான் நம்புகிறேன்.

  21. இதுல என்னங்க உள் நோக்கம். திமுக அடுத்து என்னவாகும் எனும் ‘பொதுப் புத்தி’ கேள்விதானே இது.

  22. ரொம்ப நாள் கழிச்சி யெஸ்பா பதிவு.

    ஞாநி நெனச்ச உள்ளர்த்தம் எனக்கு இல்லைன்னாலும் கருணாநிதி ஓய்வெடுக்குறது நல்லதுன்னு வயச மட்டும் வெச்சு எனக்குத் தோணுது. இப்பத்தான் மகேந்திரன் பதிவுல இப்பிடித்தான் சங்கர் தயாள் சர்மா நடக்க முடியாம நடந்தப்பயும் கஷ்டமா இருந்துச்சு. வாஜ்பாய வண்டீல உக்கார வெச்சித் தள்ளிக்கிட்டு வந்தாங்க. அப்பயும் கஷ்டமா இருந்தது. இப்ப இவரப் பாக்கைலயும் கஷ்டமாத்தான் இருக்குன்னு பின்னூட்டம் போட்டுட்டு வந்து பாத்தா நீங்களும் சங்கர் தயாள் சர்மாவையும் வாஜ்பாயையும் எடுத்துச் சொல்லிக் கேள்வி கேட்டிருக்கீங்க. நல்ல கேள்வி. வயதானவர்களுக்கு ஓய்வு வேணும்னா வயதான எல்லாருக்கும் ஓய்வு வேணுந்தான்.

  23. பாலா,

    நச் கேள்விகள்…ஞாநியின் கருத்தோடும் உள்நோக்கத்தோடும் உடன்பாடு இல்லை என்றாலும், இப்போதே ஆட்சியை ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு கலைஞர் முழுதாக பெரியார் பாதையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்பது என் தனிப்பட்ட அவா!

  24. டீஜே Avatar
    டீஜே

    நண்பரே…

    ஞாநியின் இந்த பாரபட்ச வியாதி ஒரு “கரடிப்பொம்மை” கடித்ததால் ஏற்பட்டிருக்குமோ?

    வலைப்பூவில் ஒரு முதியவர் எழுதியிருக்கிறார்: ‘ஞாநி சொன்னது என்ன’? என்ற தலைப்பில். உள்ளே போய் பார்த்தால் எம்.ஜி.ஆர் கருணாநிதி, தேர்தல் தோல்விகள் என்று கதையடிப்பு.
    சரி, ஒரு கேள்வியைக் கேட்டு வைப்போமென்று ‘ வாஜ்பாய், சங்கர்தயாள்சர்மா பற்றிய கேள்விகளை கேட்டுவைத்தால், அதுபற்றி பேசவில்லை என்று ஜகா வாங்குகிறார்.

    என்னத்தச் சொல்ல…

    ஞாநி ஆதிக்க சாதியினர் என்பது இப்போது தான் தெரிகிறதா என்று கேட்டிருக்கிறார்.

    இதை அவர் தனக்குத்தானேயும் கேட்டுக்கொண்டிருந்திருக்கலாம். இப்போது ஞாநிக்கு வலிய ஆதரவளிக்கும் இவர்கள் ஜெயேந்திரர் பற்றி எழுதியபோது, அதுவும் நாடறிந்த, ஏடறிந்த உண்மை எழுதியபோது ஞாநிக்கு ஆதரவாக எழுதியிருக்க வேண்டியது தானே?

  25. Venkatramanan Avatar
    Venkatramanan

    பாலா!
    இன்னும் நீங்கள் சிறில் அலெக்ஸின் கேள்விக்கு நேரடி பதில் அளிக்கவில்லை.
    மேலும், 1984ல் கலைஞர் கேட்ட கேள்விகள் ஞாநி கேட்டதை ஒட்டியே உள்ளளது!
    அதற்கும் தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

  26. வெங்கட்ராமன்,

    சிறில் கேட்ட கேள்விக்கு தெளிவாக பதில் சொல்லியதாகவே நினைக்கிறேன். அவர் என்னிடம் கேள்வி கேட்ட பின் சற்றுமுன் டாட் காம் தளத்தில் இந்த கேள்வி இல்லமலேயே ஒரு கருத்து கணிப்பு நடத்தி இருப்பதை பார்க்கும் போதே தெரிகிறது.. அவர் கேள்வி கேட்டதின் நோக்கம். 🙂 உண்மையில் என்னிடம் கேட்ட அதே கேள்வியும் அந்த கருத்துகணிப்பில் வந்திருக்க வேண்டாமோ.. வரலையே.. அப்படீனா?

    84-ல் கலைஞர் கேட்டது இருக்கட்டும்.. நான் ஞாநி அவர்களுக்கு இதில் சில கேள்விகளை கேட்டிருக்கிறேன். அதற்கு முதலில்.. பதில் கிடைக்கட்டும்.. மத்ததை அப்புறம் பார்க்கலாம். 🙂

  27. //அவர் என்னிடம் கேள்வி கேட்ட பின் சற்றுமுன் டாட் காம் தளத்தில் இந்த கேள்வி இல்லமலேயே ஒரு கருத்து கணிப்பு நடத்தி இருப்பதை பார்க்கும் போதே தெரிகிறது.. அவர் கேள்வி கேட்டதின் நோக்கம். உண்மையில் என்னிடம் கேட்ட அதே கேள்வியும் அந்த கருத்துகணிப்பில் வந்திருக்க வேண்டாமோ.. வரலையே.. அப்படீனா?//

    தல இதென்னது. எத்தனை கேள்விகள் கேட்டு ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவது?

    முதலில் இந்த விஷயத்தில் கலைஞர் முடிவுதான் சரியாயிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அந்த முடிவை அவர் எடுக்கும் உரிமையை மக்களும் தொண்டர்களும் அவருக்கு வழங்கவேண்டும். இது ஒருபுறமிருக்க கலைஞர் ஓய்வுபெற வேண்டுமா இல்லையா என மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியவே அந்த வாக்கெடுப்பு. ‘அது அவர் விருப்பம்’ என ஒன்றை வைப்பது தேவையற்றது ஏனெனில் அவர் விருப்பத்தை அறிய அந்த கருத்துக் கணிப்பு அல்ல. அது மக்கள் கருத்தத அறியவே.

    இதில் எந்த உள் நோக்கமும் இல்லை தலைவா.

    10/06/2007 07:36:00 AM க்கு நான் இட்ட பின்னூட்டம் இதோ..

    சிறில் அலெக்ஸ் said…
    என் கருத்து …

    இன்றைய முதியவர்கள் சும்மா ஓய்வில் இருக்கிறார்களா? நிச்சயமாயில்ல. பணி ஓய்வுக்குப்பின் காலத்தை ‘ஜாலியா’ கழிப்பதெல்லாம் நம்ம ஊர் பழக்கமா? முதியவர்கள் தங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை நிச்சயம் செய்துகொண்டுதானிருக்கிறார்கள் குறிப்பா சமூக சேவை.

    ஒருவர் ஓய்வு பெறவேண்டுமா இல்லையா என்பதை வாய்ப்பிருந்தால் அவரே தீர்மானிக்கலாமே.

    இத்தனை காலம் பொதுவாழ்க்கையில் இருந்து பழக்கப்பட்டவர் மக்களுக்காக உழைத்தவர் தனது ஓய்வைத் தானே முடிவு செய்யும் வாய்ப்பை மக்கள் தருவது சமூக அவலமா?

    காமெடி! ஞானியுடன் இதில் ஒத்துப்போக இயலவில்லை.

    உங்க கை வலிக்கும் இனிமேல் எழுதாதீங்கண்ணு ஞானியிடம் சொன்னா எப்டி இருக்கும்?

    10/06/2007 07:36:00 AM

    போதுமா? 🙂

  28. மேலுள்ள பின்னூட்டம் ஸ்னாப் ஜட்ஜிலிருந்து.

    http://snapjudge.blogspot.com/2007/10/karunanidhis-retirement-aged-advice.html

  29. //தல இதென்னது. எத்தனை கேள்விகள் கேட்டு ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவது?//

    :)))

    தல, உங்களின் இந்த கேள்வி சிரிப்பை வரவழைக்கிறது. காரணம் கடைசி வரியில் சொல்லுகிறேன்.

    உண்மையில் எந்த வித உள்நோக்கமும் இல்லாமல்.. நீங்களும் அப்படியானதொரு கேள்வியை முன் வைத்தீர்களேயானால்.. அதற்கான காரணம் இப்போ ஏன் வந்தது? இதற்கு முன் ஏன் வரவில்லை. அல்லது.. கலைஞர் மரணமடைந்தார் என்ற செய்தி ஊடகங்களில் உண்மையாக வெளி வரும் நிமிடம் இந்த கேள்வியை ஏன் எழுப்பக்கூடாது? அல்லது நடைப்பிணமாக படுக்கையில் அவர் விழுந்து விடுவாரேயானால்.. அதன் பின் ஏன் எழுப்பக்கூடாது?

    நான் முன்னமே சொல்லியது மாதிரி.. ஞாநி அவர்களுக்கு முன் சில கேள்விகளை முன் வைத்திருக்கிறேன். அவ்வளவே! எப்போதுமே அவரின் மாறுபட்ட சிந்தனைகளின் மூலம் தன்னை தனித்துவமாக அடையாளம் காட்டி வந்தவர் ஞாநி என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம்.. நான் முன் வைத்திருக்கும் கேள்விகளுக்கு அவரின் பதில்கள் (ஞாநியின் பார்வைக்கு இவை அனுப்பட்டுள்ளன) கிடைக்காத வரை அவரின் சிந்தனைகள் மீது நாம் சந்தேகப்பட்டே ஆகவேண்டி இருக்கிறது. தமிழினியன் எழுதிய பதிவை பார்த்த பின்.. இக்கட்டுரை.. விகடன் குழுமத்தின் தூண்டுதலுக்காக எழுதப்பட்டதாக இருக்குமோ என்ற ஐயம் கூடுதல் வலுவுடன் வந்து சேர்ந்து கொள்கிறது. எங்கும் தன்மானமிழக்காத ஞாநி போன்றோர் முதலாளிகளிடம் விலை போன முகமுடி கிழிக்கப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன். இதை சொல்லப்போனால்.. என்னை பார்ப்பனர்களை திட்டுகிறேன் என்ற கோணத்தில் கேள்வி எழுப்புகிறது ஒரு கோயிந்த்சாமி(கிளப் ஆசாமி)!

    சரி.. இப்போ முதலில் போட்ட ஸ்மைலிக்கு வருகிறேன்.

    http://satrumun.com/?cat=88 இது சற்றுமுன் கணக்கெடுப்பு பக்கம்.

    நீங்களே சொடுக்கிப்பாருங்கள்.. மொத்தம் ஐந்து கணக்கெடுப்புகள். அதில் இரண்டுக்கு மட்டுமே இரண்டு ஆப்சன். மற்ற மூன்றில்.. இரண்டு கணக்கெடுப்புகளுக்கு தலா மூன்று ஆப்சனும், ஒன்றிற்கு நான்கு ஆப்சனும் கொடுத்து இருக்கிறீர்கள். இப்போது முதலில் கேட்ட தங்களின் கேள்வியை இங்கே மீண்டும் பேஸ்ட் செய்தால் நன்றாக இருக்கும்…
    //தல இதென்னது. எத்தனை கேள்விகள் கேட்டு ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவது?// இப்போ இன்னொரு ஸ்மைலி போட்டுக்கிடலாம். :))

    சிறில்.. ப்ரியன் சொல்லுகின்ற மாதிரி எனக்கும் கூட அந்த கிழவர்.., பதவியை கை மாற்றி விட்டு தமிழகம் முழுக்க பெரியார் மாதிரி தொடர் சுற்றுப்பயணம் வந்தால் தான் இன்றைய இளைய சமூகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சுன மாதிரி இருக்கும்னு ஆசை இருக்கு.(நாம் அடியையாய் கிடந்த வரலாற்றை சொல்ல இவரை விட்டால் வேறு ஆள் கிடையாது இங்கு) நாம சொல்லி கேட்டவா போறானுங்க! 🙁

  30. //தல இதென்னது. எத்தனை கேள்விகள் கேட்டு ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவது?//

    இதன் அர்த்தம் என்னண்ணா ஒவ்வொருத்தரா சொல்ற ஆப்சனையெல்லாம் போட முடியுமா என்பதுதான்.

    //சிறில்.. ப்ரியன் சொல்லுகின்ற மாதிரி எனக்கும் கூட அந்த கிழவர்.., பதவியை கை மாற்றி விட்டு தமிழகம் முழுக்க பெரியார் மாதிரி தொடர் சுற்றுப்பயணம் வந்தால் தான் இன்றைய இளைய சமூகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சுன மாதிரி இருக்கும்னு ஆசை இருக்கு.//

    ம்ம்ம். இது லக்கி லுக்குக்கு தெரியுமா 🙂

  31. Bala Subra Avatar
    Bala Subra

    தேர்தல்களில் ஓட்டு போடும்போது,
    1) இவருக்கு என் வாக்கு
    2) இவருக்கு என் வாக்கு கிடையாது என்கிறோம்.

    அது போலத்தான் இதுவும்.

    —அதற்கான காரணம் இப்போ ஏன் வந்தது?—

    சூடாக எதைக் குறித்து பேசுகிறார்களோ, அதைக் குறித்து வாக்கெடுப்பு நடத்துவது இயல்பு.

    சந்திரமுகி படம் வெற்றி
    1) பெறுமா?
    2) பெறாதா?
    3) ரஜினி படத்தின் எதிர்பார்ப்பிற்கேற்ப ஓடாது

    என்று இட்டால் ஆறின கஞ்சி

    Kalainjar Karunanidhi on HR & CE: Quotable Quotes: Dinamalar என்னும் செய்தியை பின் தொடர்ந்து:

    ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தால்
    1) கொள்கையைத் தளர்த்திக் கொள்ள வேண்டும்
    2) கட்சியின் அடிப்படையான கோட்பாடுகளை பினபற்ற வேண்டும்

    என்று மட்டும் கருத்து கேட்கலாம்.

    மேற்சென்று…
    3) சில நம்பிக்கைகளுக்கு விதிவிலக்கு தரலாம்
    4) தனிப்பட்ட அமைச்சரவை மந்திரியின் முடிவுக்கு விட வேண்டும்
    5) நீதிமன்றத்தின் ஆலோசனையை கருத்தில் கொள்ள வேண்டும்
    6) சட்டசபையில் வாக்கெடுப்பு விடலாம்
    7) மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்
    8) உலக அரங்கில் ஆராய்ந்து, பிற நாடுகளை சீர்தூக்கி முடிவெடுக்கலாம்

    என்று கேட்டால், கட்டுரை போல் ஆகிவிடும்.

  32. MAHARAJA Avatar
    MAHARAJA

    Mr.Balaparathy,

    ஞாநி kurumoorthi poonra avaal ellaam namathu muthalavar seekkarame maranamadaiya vendum enru aasai padukinranarkal. evarkazhukku muthalver avarkal 100 vayathaiyum thandi vazhnthu vaippaar aappu.

    anbudan
    maharaja.
    Abu Dhabi
    u.a.e

  33. கொஞ்சம் தருமி அய்யா பதிவை பாருங்க…

    http://dharumi.blogspot.com/2007/10/238.html

    அவர் தெளிவா உங்களுக்கு பதில் சொல்லியிருக்கார்… இத விட தெளிவா விளக்கம் கொடுக்க ஞாநியால கூட முடியாது…

    நீங்க உணர்ச்சிவசப்பட்டு கோவமா பதிவு போட்ட மாதிரி இருக்கு…

  34. உண்மை Avatar
    உண்மை

    கலைஞர் ஓய்வு பெறச்சொன்னனால், வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா என பலரை உதாரணம் காட்டுகிறீகள். ஏன் முன்னால் சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் யூவை உதாரணம் காட்டவில்லை?

    அல்லது கலைஞர் ஓய்வு பெற்று மற்ற இந்தியத் தலைவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கட்டுமே!

    ஓய்வு பெறச்சொல்வதால் அவரது திறமையை குறைத்து மதிப்பிடவில்லை. மற்றவர்களுக்கு வழி விட்டு புதியவர்கள் ஆட்சியை நடத்த வழி காட்டலாமே.

  35. Buy cialis generic online cialis cheap cialis….

    Generic cialis cheap….

  36. நற்கீரன் Avatar
    நற்கீரன்

    nakkiran அவர்களே! தருமி அய்யாவை அங்கே பின்னூட்டங்களில் கழட்டி பின்னி பிடலெடுத்து கொண்டிருக்கிறார்கள் கார்த்திக்ராமாசும், திருவும். பதிவை படித்தால் மட்டும் பத்தாது. பின்னூட்டங்களையும் படிக்க வேண்டும். நன்றி!

  37. Prabhu Avatar
    Prabhu

    பாலா, உங்களுக்கு பெரியார் பற்று சற்று அதிகம்தான் இருப்பினும் என்னுடைய பார்வையில்.. அவரை மூத்திர பையோடு மக்கள் சேவை செய்த மகான் என்று என்னால் ஏற்று கொள்ள இயல வில்லை. இருப்பினும், மூ. கவும் அந்த அளவுக்கு செல்ல வேண்டும் என்பது உங்கள் ஆசையா?? ஒரு தா.கீ, ஒரு தினகரன் போதாதா?? போதும். கலைஞர் (தங்கள் பாணியில்) ஓய்வெடுக்கட்டும்..

    மாறாக.. “அவனை நிறுத்த சொல் நா நிறுத்தறேன்” அப்படின்னு நாயகன் Dialogue மாதிரி சொல்வது.. தமாசு தான்..

  38. Dravidan Avatar
    Dravidan

    We cannot compare Karunanithi with Eroad Ramasamy.

  39. பாரதி Avatar
    பாரதி

    இதை விட அவருக்கு ஒரு செருப்படி வேண்டாம்

  40. SUTHIRAN Avatar
    SUTHIRAN

    Thiru Prabu, Ungal parvail periyar maganaga illamal irukkalam, Anal JADHIKODUMAI galal badhikka pattavar galukku avar endrum MAGAN dhan Avar illai endral kalvi arivinal kidaikkum payanai ellorum adaindhirukka mudiyadhu

  41. nandhu Avatar
    nandhu

    daer bala

    why r u admiring karunanidhi? getting money from them or u r in their party.mr karunanidhi working for his family only fully selfish. but u campare with periyar? he was doing social service in tht age not a family service.everybody knows abt kalainar family sharing spectrum matter. alagiri also in murder case lot. now he s in ministry. u r crazy. do u think everybody s fool. knani has real courage this matter. congrates.n nandhuzn@yahoo.com

  42. Prabhu Avatar
    Prabhu

    i want to say onething that who critisize the gnai’s religon all they easily forgot onething that is he strongly speak and write against shankarachariya and very strongly opposite against him. mr. karunanithi is not a good person or good leader. he is working only for his family not for the country. he want to all are prizing him only. i hate karunanithi and also jaya. mr.MK is a brilliant criminal. jaya is a stupid rowdy. Mr. MK foucus himself as a good but all are know what he is example is srilankan issue.

  43. PRABA Avatar
    PRABA

    ர்ச்சைக்கும் இளையராஜாவுக்கும் அதிக தூரம் என்றும் இருந்ததில்லை, சில உதாரணங்கள்:

    ABCL இன் மிஸ் இந்தியா பிரம்மாண்டக் கொண்டாட்டங்களுக்கு இசையமைக்கச் சென்ற போது ஞாநி கூறியது:

    “இளையராஜா போன்றவர்கள் இந்த அவமான நிகழ்ச்சிக்கு இசை அமைக்கச் செல்வது கொள்கை சார்ந்த முடிவல்ல. பெண்ணியம் பற்றிய அவர் கொள்கைகள் இருவேறு எல்லைகளில் இருக்கிறது. ஒன்று “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” அல்லது “வாடி என் கப்பக்கிழங்கே”.

    (நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகத்தைத் தேடி ஒரிஜினல் வார்த்தைகளைப் போட முடியுமென்றாலும், உள் கருத்து இதுவே)

    1980-90களில் திரை உலகத்தைச் சார்ந்த எல்லாரையும் கிழித்துக் கொண்டிருந்த பாமரன் இளையராஜாவிடம் மட்டும் தழைந்துபோய் சொல்கிறார் -“என் ராசா.. சினிமாப்பாட்ட விட்டு இங்கே கஷ்டப்படுற மக்கள் அவலத்தைப் போக்க பாட்டு பாட மாட்டியா” (இதுவும் நினைவிலிருந்துதான்).

    திருவாசகம் (Symphony-யா Cultural Crossover-ஆ, யாராச்சும் சொல்லுங்கப்பா) வெளியானபோது மீண்டும் ஞாநி அதன் பின்புல அரசியலையும், மேற்கத்திய பிரபல பாடகர்களின் பாடுபொருளை எடுத்துக்கொள்ளாமல், ஆன்மீகத்தில் நுழைந்த இளையராஜாவின் புனித பிம்பத்துவத்தை அலசினார். ஆன்மீகவாதிகளோ, “சர்ச்சில் பாடுவது போலிருக்கிறது” என்றும், விட்டுப்போன வரிகளைச் சுட்டிக்காட்டியும் விமர்சித்தனர். “ஏன் திருவாசகம்? ஏன் காஸ்பர்? ஏன் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா” என்றெல்லாமும் ஆயிரம் கேள்விகள்.
    இப்போது, பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பு என்பதை போற்றிப்பாடடி பெண்ணேவுக்கு இசையமைத்தவர் சொல்வதால் அவருக்குள் அடிமைப்புத்தி ஊறி யிருக்கிறது என்பது ரோஸாவின் வாதம்.

    இத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மற்ற எல்லாரையும் தாக்குவது போல இளையராஜாவை யாரும் தாக்குவதில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது இளையராஜாவின் ஆளுமை – இசையில். எதிர்ப்பவரும் மறுக்க இயலாத value addtion அவர் இசை செய்யும் மாயம்.

    பாரதியாருக்கு யார் வேண்டுமானாலும் இசை அமைத்திருக்கலாம் – அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் பாட்டின் கருத்தை ரிதம் மற்றும் இசைக்கருவிகளால் மட்டும் மொழி அறியாதவருக்கும் உணர்த்தியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறி.

    http://penathal.blogspot.com/2006/11/11nov-06.html

    ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டுக்கு பாங்கு சொல்லும் (தொழுகைக்கு அழைக்கும்) மெட்டில் போட்டு, படத்தின் கருத்தை ஒரு வரியில் விளக்கியதை வேறெந்த இசையமைப்பாளரும் யோசித்திருப்பாரா என்பது சந்தேகமே.

    இந்தப் போர்வாளை வெங்காயம் மட்டுமே வெட்ட பல இயக்குநர்கள் உபயோகித்திருந்தாலும், (நேத்து ராத்திரி யம்மா), திறன் உள்ள இயக்குநர்கள் சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    இளையராஜாவின் திறமை மேல் அதீதக் காதல் கொண்டதால் அவர் மீது அதீத எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள். இளையராஜா ஒரு கலைஞன், சமூகப் போராளியல்ல என்பதை சொல்லில் அல்லாமல் செயலில் பலமுறை காட்டி வந்தவர்தான் – இருந்தாலும் பாமரன் அவரிடம் மக்கள் அவலத்தைப் போக்கும் பாட்டை எதிர்பார்க்கிறார், ஞாநி பெண்ணிய சிந்தனையை எதிர்பார்க்கிறார், ரோஸாவசந்த் அடிமைப்படுத்தியவர்களைப் போற்றிப்பாடியதை சுட்டிக்காட்டுகிறார். எனக்குத் தெரிந்தவரை ரோஸா இளையராஜாவின் டை-ஹார்டு விசிறி. மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பது ஊகம்.

    தற்போதைய சர்ச்சை – பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது என்ற ஒரு வரித் தகவல் –

    “I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job’ என்று இந்தியா க்ளிட்சில் வந்துள்ள தகவல்.

    இதில் என்ன தவறு இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை. தேவர் மகன் என்ற திரைப்படத்துக்கு இசையமைக்கும் மனப்பான்மைக்கும், பெரியார் படத்துக்கு இசையமைக்கும் மனப்பானமைக்கும் உள்ள வித்தியாசம் – “நான் பொல்லாதவன்” எனப் பாடல் போடும் மனப்பான்மைக்கும், “நாடு பார்த்ததுண்டா” என்று காமராஜரைப் பற்றிப் பாடல் போடும் மனப்பான்மைக்கும் உள்ள வித்தியாசம். பின்னதில் வேலை செய்பவர் முழுதாக ஊன்றிச்செய்யவேண்டும் என்பது இளையராஜாவின் கருத்து – அந்த Conviction தனக்கு வராது என்பதால் விலகுகிறேன் என்கிறார்.

    அவருடைய கடவுள் கொள்கை, பெரியார் கொள்கை, ஜாதீயத்தைப் பற்றிய பார்வை எதையும் உள்ளே கொண்டுவராமல், இசைத்தொழிலுக்கும், பெரியார் படத்துக்கு இசையமைப்பவர் கொள்ளவேண்டிய ஆத்மார்த்தமான ஈடுபாடு பற்றிய அவர் கருத்தாகவும் இதைப்பார்த்தால் எந்தத் தவறும் தெரியாது.

    நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

  44. sundar babu Avatar
    sundar babu

    Dear Balabarathi,

    There is right to say, about the gnani s wrttings for everybody in the nation.But there is no right to hit a particular community.You can see, in this page itself a person says, ORU PERIYAVAR UNGA INATHUKU VECHAARU AAPU… wats this??? on one side you say, there
    is no caste and other side encouraging people like this.

    Like gnani is hitting one only, our CM, THAT IS VERY WRONG, I KNOW, but at the same time
    our nation wide leaders should not hit one and only group, the group which cant oppose
    you, if you say anything.

    There is no meaning of hitting a person, who cant oppose you

  45. போங்கடா..நீங்களும்.. உங்க தத்துவமும்..சங்கர் தயாள் சர்மா ஊரைக் கொள்ளை அடிக்கலை..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *