Category: பெரியார் வரலாறு

  • 3. யாருடா இந்த தாசி..?- பெரியார் போட்ட நாடகம்.

    ராமசாமி சொன்ன பெண் நாகம்மை. அவரின் மாமா ரெங்கசாமி நாயக்கரின் மகள். சேலம் மாவட்டம் தம்மாப்பட்டியில் வசித்து வந்தவர். மாமா என்றால் நெருங்கிய சொந்தமெல்லாம் கிடையாது. சின்னத்தாயம்மையாரின் ஒன்று விட்ட சகோதரன் ரெங்கசாமி நாயக்கர். வெங்கட்டநாயக்கர் குடும்பம் ரெங்கசாமி நாயக்கர் வீட்டுக்கும், ரெங்கசாமி நாயக்கர் குடும்பம் இவர்கள் வீட்டுக்கும் போய் சில நாட்கள் தங்குவதும் உண்டு. அப்போதே ராமசாமிக்கு நாகம்மையை பிடித்துப் போனது. இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்று தோன்றலாம். ரெங்கசாமி நாயக்கரின் குடும்பம்…

  • 2. மைனர் ராமசாமி

    கடைக்கு இளைய மகன் வரத்தொடங்கி, வியாபாரத்திலும் கெட்டிக்காரனாக இருப்பதும் ஆண்டவன் அருளினால் தான் என்று நம்பினார், பக்தி மார்கத்தில் அதிக ஆர்வம் கொண்ட வெங்கட்டநாயக்கர். தன் பிராத்தனைக்கு இறைவன் செவி சாய்த்து விட்டான் என்று நம்பிய காரணத்தால்.. முன்னை விட அதிக ஆர்வத்துடன் பக்தி மார்கத்தின் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கினார். அவ்வப்போது வீட்டில் தொடர்ந்து கொண்டிருந்த விரதம், பூஜை போன்றவை அடிக்கடி நடக்கத்தொடங்கின. பஜனையும், பாகவதர்களின் வருகையும் முன்பை விட அதிகமாகிப்போனது. எப்போது பார்த்ததாலும் ஏதாவதொரு பூஜை…

  • ஈரோடு ராமசாமி- வாழ்க்கை வரலாறு

    நண்பர்களுக்கு வணக்கம்! நீண்ட நாட்களாக.. எனக்குள் பெரியார் ஈரோடு ராமசாமியின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அதற்கான சிறு முயற்சியே இது. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றினை என்னால் சுவை பட சொல்ல முடியுமா.. என்பதை நான் அறியேன். இருந்தாலும் முயற்சித்து பார்க்கிறேன். சமயம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுவேன். குறிச்சொல்லாக பெரியார் வரலாறு என்று கொடுத்திருப்பதால் ஒரு சேர வாசிக்கவும் முடியும். இனி… ********* 1. மிகுந்த தெய்வநம்பிக்கையும் பக்தியையும் உடையவர் ராமநாதன்…