விடுபட்டவை 20 நவம்பர் 2008

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதல் குறித்து அனேகர் தம் சொந்தக் கருத்துக்களை வைத்து விட்டார்கள். அதில் ஏகத்துக்கும் தவறாக கருத்துக்களோடு வந்த பதிவுகள் அதிகம். வன்முறைக்கு வன்முறை சரியான தீர்வு ஆகாது எனினும்.. பாரதிகண்ணன் என்ற மாணவனால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி ராயப்பேட்டை மருத்துவமணையில் சிகிக்கை பெற்று வரும் சித்திரைச்செல்வன் பற்றிய எந்த செய்தியையும் மீடியாக்கள் சொல்லவே இல்லை என்பது விளங்காத புதிர். ஒரு வேளை மீடியாக்களில் தலித் அல்லாத உயர்சாதி மக்கள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். மாணவன் சித்திரைச்செல்வனை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட செய்தியை மீடியாக்களும் வெளியே சொல்ல வில்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் வந்து அவர்களுக்கும் அனுமதி மறுக்கப் பட்டது. அதையும் கூட அவர்கள்  வெளியே சொல்லாதது தான் ஆச்சரியம். கல்லூரிக்குள் அரசியல் புகுவது சரியல்ல என்று அறிக்கை விடும் தங்கபாலு போன்றவர்கள் கல்லூரிக்குலும் சாதியக்கொடுமைகள் நுழைவது பற்றி ஏனோ ஒன்றும் சொல்லுவதில்லை. 🙁

எது எப்படியோ.. எதிர்வரும் தேர்தலில் ஆளும் தி.மு.கழக கூட்டனிக்கு எதிராக ஒரு விஷுவல் ஆயுதம் எதிர்கட்சிகளுக்கு கிடைத்து விட்டது. தேர்தல் சமயத்தில் அந்த மாணவர்கள் ஊடகங்கள் வாயிலாக மீண்டும் அடிபடுவார்கள்.

~~ 000 ~~

தமிழகத்தில் அண்ணன் வைகோவுக்கு செல்வாக்கு நிறைய சரிந்து விட்டதை பார்க்க முடிந்தது. இம்மாதம் 19ம் தேதி காலை எட்டு மணிக்கு தொடங்கிய à®®.தி.மு.கழகம் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மதியம் 12 மணி வரை கூட்டமே இல்லை. 🙁

9 மணிக்கே வைகோ வந்து விட்டார். ஆனாலும் மதியம் 1 மணிக்குப் பின் தான் அணி அணியாக மக்கள் வரத்தொடங்கினார்கள். வழமை போல கொதித்துப் பேசினார் வைகோ. கொஞ்சம் 1996-ம் வருட நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.

~~ 00 ~~

கூகிளின் ஜிமெயில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. லேப் பகுதியில் போய் ஆக்டிவேட் செய்துகொண்டால் சோதனை முயற்சியில் இருக்கும் வசதிகளை அனுபவிக்க முடியும். மெயிலில் இடது பக்கம் இருக்கும் சாட் விண்டோ எனக்கு வலது பக்கத்தில் இருக்கிறது. அது போல மெயிலில் இருக்கும் ஜிடாக் வழியாக இப்போது விடியோ சாட்டும் செய்து கொள்ள முடியும். இது பற்றி யாராவது எழுதினார்களா என்பது தெரியாது. நான் சமீபத்தில் தான் பார்த்தேன். அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.

~~ 00 ~~

இலங்கையில் தொடர்ந்து நடைப்பெறுகிற இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த
வலியுறுத்தி, கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் சார்பில் வருகிற *டிசம்பர் 07
( 07.12.2008)* அன்று சென்னையில் மாபெரும் கண்டன கவிதைகள் கவியரங்கம்
நிகழவிருக்கிறது. பதிவு செய்ய விரும்புவோர்,
தம்பி கென் போட்ட பதிவினைப் பார்க்கவும்… http://www.thiruvilaiyattam.com/2008/11/blog-post_20.html

~~ 000 ~~

தமிழ்ச் செய்தி மையம் – என்றொரு தளம். தமிழகச்செய்திகளை கொஞ்சம் முந்தி தருகிறது. இன்னும் அபிசியலாக லான்ச் ஆகவில்லை என்ற போதிலும்.. அத்தளத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி இருப்பதாக அறிவிக்கிறது. செய்திப் பிரியர்கள் அவ்வப்போது இங்கேயும் ஒரு விசிட் அடிக்கலாம்.

முன்பு போல அடிக்கடி இணையத்தின் பக்கம் வரமுடியவில்லை. அதனால் இங்கு வலை உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எல்லாம் நானறியேன்.  நிறைய கரண்ட் விசயத்தைப் பற்றி அறியமுடியவில்லை என்பதை பதிவர் சந்திப்பின் போது தான் உணர முடிந்தது. மீண்டும் பழைய படி கும்மிக்கு தயாராகி விடுவேன் என்றே நம்புகிறேன். அதுவரை பதிவர்களே.. என்சாய் பண்ணிக்கொள்ளுங்கள்.

–000–

ஒரு கிசு கிசு.. மாறன் பிரதர்ஸ் மீது இன்னும் முதல்வர் கருணாநிதிக்கு கோபம் போகவில்லை என்கிறது ஒரு பட்சி. காட்டமான செய்திகளை விரைவில் முரசொலியில் எதிர் பார்க்கலாம் என்ற தகவலையும் அது சொல்லி விட்டுப் போனது. பொறுத்திருந்து பார்ப்போம்.

கடைசி அப்டேட்:-

இன்று 21 நவம்பர்  தினசரிகளில் கருணாநிதி எழுதிய கடிதத்தை பார்த்து இருப்பீர்கள். அறிவாலையத்தை உடைத்து விட்டார்கள் என்று தாத்தாவும், உடைக்கவில்லை என்று தயாநிதி மாறன்- செய்தியாளர்களிடம் சொல்லியது மீடியாவில்  அல்லோகலப்படுகிறது.. விரைவில் இணைந்தும் காட்சி தருவார்கள் என்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன!


Comments

10 responses to “விடுபட்டவை 20 நவம்பர் 2008”

  1. தலை அப்பப்ப இப்படி வந்து கும்மிய கொட்டீட்டுப் போங்க.

    கிசு கிசு ந்னா இவ்வளோ ஈசியாவா இருக்கும்?

  2. NicePyg Avatar
    NicePyg

    கடைசியில் சொல்லப்பட்டிருப்பது ஒரு செய்தி.. கிசு கிசு அல்ல..

    அதையே கிசு கிசுவாக எழுதினால்

    மூத்த தலைவருக்கு கதிரவ சகோதரர்களின் மீது இன்னும் காட்டம் தீரலையாம். ஒலிக்கும் பத்திரிக்கையில் இன்னும் காரசாரமான செய்தி இடம் பெறலாம் என்று பாபா பட்சி தெரிவிக்கிறது..

  3. //நிறைய கரண்ட் விசயத்தைப் பற்றி அறியமுடியவில்லை என்பதை பதிவர் சந்திப்பின் போது தான் உணர முடிந்தது//

    கரண்ட் தானே இப்ப முக்கிய விசயமா இருக்கு. அதான் கரண்ட் இல்லாததால் கரண்ட் விசயத்தைப் பத்தித் தெரிஞ்சுக்க முடியலைன்னு…….:-)))))

    நலமா பாலா?

  4. krishnakavithai Avatar
    krishnakavithai

    ayyaa vaNakkam… satta kalloori maaNavarkaL dhiodarpaana ungkaLudaiya padhivai pardhen…
    //பாரதிகண்ணன் என்ற மாணவனால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி ராயப்பேட்டை மருத்துவமணையில் சிகிக்கை பெற்று வரும் சித்திரைச்செல்வன் பற்றிய எந்த செய்தியையும் மீடியாக்கள் சொல்லவே இல்லை என்பது விளங்காத புதிர். ஒரு வேளை மீடியாக்களில் தலித் அல்லாத உயர்சாதி மக்கள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்//
    sampavam nadantha anRu naanum angku irunthavan enRa muRaiyil siriya viLakkam… adhu enna entha oru sampavam nadanthaalum, dhalidh kaL purakkaNikkappadukinRaarkaL enpadhu oru karudhdhaaka irunthu varukiRadhu…
    anRaikku saddakkalluri vaLaakadhdhil nadaipeRRa sampavangkaLil vaasalil nadanthadhu maddume media kalukku kidaidhdhana… 2 maaNavarkaL dhaakkappaduvadhu maddume appodhu dheriyum.. avarkaL dhalidhu kaLaa? avarkaLin jadhi enna enpadhellaam dheriyaadhu.. avvaLave, adhaRkaaka media kaL dhalidhkaL enpadhaRkaaka puRakkanidhdhu viddaarkaL enRu solvadhu dhavaRu…
    intha sampavadhdhiRku kaaraNangkaL jaadhi veRi.. adhu 2 pakkadhdhil uLLa maaNavarkaLidam irunthadhu.. adhai viddu dhalidh enpadhaRkaaka puRakkaNidhdhu viduvadhaaka solla kuudaadhu.. rayapeta vil anumadhikkappaddirukkum sidhdhirai selvan enRa maaNavar meedhu vazakkuppadhivu seyyappaddu avar police kaavalil vaikkappadduLLaar. appadi irukkumpodhu avarai eppadi paarkka anumadhippaarkaL…
    dhalidh kaLukkaaka ivvaLavu vakkaaladhdhu vaangkukireerkaLee, avarkaLukku kural kodukkavaavadhu ungkaLai ponRavarkaL, jaadhi dhalaivarkaL irukkiRaarkaL.. aanaal innamum nakarangkaLil kooda nasukki vaikkappaddu koNdirukkum naavidhar, vaNNaar ponRa makkaLukkaaka idhuvarai yaarumee kural kodukkaadhadhu een?
    uNmaiyil paardhdhaal avarkaL eNNikkaiyil kuRaivu. avarkaLukku poraaddam nadadhdhinaal entha media vume kaNdu koLvadhillai… idhai padhi enna ninaikkiReerkaL.

  5. சித்திரைசெல்வனை பற்றி இந்த வார ஆனந்தவிகடனில் கூட ஒன்றுமே போடவில்லை

  6. தல…

    பதிவர் சந்திப்பைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே.. யார் எழுதினாலும் நீங்க என்னவாவது சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்.

    இணையம் அடிக்கடி வரலீன்னா என்ன,

    நீங்க இணையத்துல இருக்கறதைவிட எங்க இதயத்துல அதிகமா இருக்கீங்களே..

    (யாரப்பா அங்க.. ஒரு சோடா குடு!)

  7. kadayam anand Avatar
    kadayam anand

    தமிழகத்தில் அண்ணன் வைகோவுக்கு செல்வாக்கு நிறைய சரிந்து விட்டதை பார்க்க முடிந்தது. இம்மாதம் 19ம் தேதி காலை எட்டு மணிக்கு தொடங்கிய ம.தி.மு.கழகம் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மதியம் 12 மணி வரை கூட்டமே இல்லை.

    9 மணிக்கே வைகோ வந்து விட்டார். ஆனாலும் மதியம் 1 மணிக்குப் பின் தான் அணி அணியாக மக்கள் வரத்தொடங்கினார்கள். வழமை போல கொதித்துப் பேசினார் வைகோ. கொஞ்சம் 1996-ம் வருட நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.
    //

    நானும் தான் தல,.
    ஹி,,,,ஹி,,,ஹி,,

  8. எந்த நேரத்துல கிசு கிசு எழுதுனீங்களோ.. அவங்க‌ ரெண்டு பேரும் மாத்தி மாத்தி லெட்டரை பொதுவுல எழுது நம்மள ஒரு வழி பண்ணிகிட்டு இருக்காங்க.. :)))

  9. veera Avatar
    veera

    vanakkam nalam nalam ariya aasai
    ungal valaipoo parthan rompa nalla erukku
    ungak kavithai kathai..enga eniya thalaththil
    veli eda anumathi tharuvingalaa??/
    nandri vanakkam…
    veerapathiran.
    dubai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *