சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

சென்னை பட்டறை குறித்த தகவல்களையும், படங்களையும் தொடர்ந்து பார்த்தும் படித்தும் வந்திருப்பீர்கள். இந்த பட்டறைக்காக வேலை பார்த்தவர்களில் அடியேனும் ஒருவன் என்பதால் என் சார்பாகவும் சொல்லவேண்டிய ஒன்று இருக்கிறது!

அதற்கு முன், இன்னொரு செய்தியை சொல்லி விடுகிறேன். இந்த பட்டறையில் இன்று மட்டும் புதியதாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவுகள், மின்னஞ்சல்கள் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை மிகுந்த மகிழ்வோடு சொல்லிக்கொள்கிறேன். அந்த புதியவர்களின் வரவை.. நிச்சயம் வலை உலகம் இருகரம் நீட்டி வரவேற்கும் என்றும் நம்புகிறேன்.

இப்போ நான் சொல்ல வந்த செய்தி:-

உங்களால் தான் இது சாத்தியமானது.

பதிவர்களின் ஆதரவு இல்லையெனில் இந்த (கனவு)பட்டறை இப்படி நடந்தேறி இருக்குமா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

பட்டறைக்கு விளம்பரம் கொடுத்தவர்கள் முதல்.. பண உதவி செய்தவர்கள் வரை.. அத்தனை வலை உலக தமிழர்களுக்கும்..

என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

நன்றி

பட்டறையின் செய்தி தொகுப்புக்கு:- தொடர்புகொள்ள.. சொடுக்கவும் பாபாவின் வலைசேகரிப்பு பக்கததை! 🙂

This entry was posted in பதிவர் சதுரம் ;-)), பதிவர் பட்டறை. Bookmark the permalink.

15 Responses to சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!

 1. says:

  தலை அதுக்குள்ள போஸ்ட் போட்டாச்சா…. கலக்குங்க. உண்மைதான். நன்றிகளைப் பங்குப் போட்டுக்கொள்ள வேண்டியவகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

 2. says:

  🙂 🙂 🙂

 3. says:

  உங்கள் அனைவரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி.வெறும் கைதட்ட மட்டுமே முடிகிறது என்னால்.

 4. Pingback:

 5. says:

  எல்லாப் பத்திரிகை செய்திகளும் எல்லோருக்கும் கிடைக்கவாய்ப்பில்லை.
  எனவே செய்திதொகுப்புகளையும்
  பதிவிடவும்

 6. says:

  வாழ்த்துக்கள்! இதில் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் …

  தஞ்சாவூரான்

 7. says:

  நன்றி பாலா. நானும் வலைக்குள் வந்துவிட்டேன். http://aishwa.blogspt.com
  இதை பரவலாக்க என்ன செய்யவேண்டும்? பதிவுகள் இடுகையில் ‘பட்டறை’ என்று ஏதோ குறியீடு கொடுக்க சொன்னது. புரியவில்லை. உதவுங்கள். மறுபடியும் நன்றி..இப்புது அனுபவம் பெற காரணமாக இருந்தமைக்கு!
  ஐஷ்வா

 8. says:

  தலை வாழ்த்துகள், நேற்றே பேசனும்னு நினைட்தேன் முடியல…

  நல்ல படியா முடிந்ததைப் ப்ற்றி 6 மணிக்கே தெரிஞ்சுகிட்டேன். எனக்கும் ரொம்ப சந்தோஷம். ஆனா என்னால் தான் எந்த முறையிலும் உதவ முடியலையேன்னு வருத்தம். பரவாயில்லை இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போயிடும்.

 9. says:

  சிஜி,
  பதிவர் பட்டறை தளத்தில் செய்திகளில் என்ற லிங்கில் எல்லா பத்திரிக்கை செய்திகளையும் தொகுக்கிறோம்..

 10. says:

  நன்றி பொன்ஸ்

 11. says:

  நான் கடைசி நிமிடம் வரையிலும் வரலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தேன்…ஆனால் வர இயலவில்லை…..

  பதிவர் பட்டறை இனிதே நடந்து முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கின்றது…. இனி நிறைய பதிவர்கள் வரலாம் இந்த பட்டறையின் மூலமாக….உங்களின் கூட்டு முயற்சிக்கு பாராட்டுக்கள்..

 12. says:

  http://botd.wordpress.com/2007/08/06/top-posts-467/

  அனைத்துலக wordpress சூடான இடுகையிலயே வந்துடுச்சு 🙂 கலக்குறீங்க 🙂 தமிழ்99 விளம்பரத் தட்டிக்கும் நன்றி

 13. says:

  தல! சாதிச்சிட்டீங்க! வேற எதுவும் சொல்றதுக்கில்ல!

 14. says:

  அன்புள்ள அண்ணன் பாலபாரதிக்கு,

  உங்களின் சென்னை வலைப்பதிவர் பட்டறைபற்றிய செய்திகள் ரொம்ப நல்லா இருக்கு. ஆனா, கடைசியில Thanks – னு எழுதுனது எனக்குப் பிடிக்கல. உங்கள மாதிரி உள்ளவங்ககிட்ட முடிந்த மட்டும் தமிழில் எழுதுவதையும் பேசுவதையுமே என்னைப் போன்றவர்கள் எதிர்பார்க்கிறோம். ஒன்னு சொல்லட்டுமா!! என்னைப் போன்ற பல இளம் தமிழ் ஆய்வாளர்களை கணினியின்முன் தொடர்ந்து உக்கார வைத்த உங்களுக்கு எங்களின் நன்றிகள்.

 15. says:

  You have done a great job Balanna..Weldone

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.