கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நாள் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி, பத்திரிக்கைகளின் செய்தி பிரிவுகளுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. பார்சலை திறந்து பார்க்கும் வரை யாருக்கும் தெரியாது.. அது இவ்வளவு பெரிய சமாச்சாரம் என்பது. நான்கு பக்க கடிதமும், கூடவே ஒரு சிடியும் இருந்தன அதில். கடித வரிகளை வைத்து அதை எழுதியவர் ஒரு பெண் என்பதை யூகிக்க முடிந்தது. கூடவே சிடியில் இருந்தது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய அறைக்காட்சிகள். அதில் இருந்த சாமியாரும், தமிழ் திரைப்பட& சீரியல் நடிகையுமானவரும் தமிழகத்திற்கு மிகவும் அறிமுகமான முகங்கள்.

நம்ம அண்ணன் நித்தியானந்த சுவாமிகள்

’கதவை திற காற்று வரட்டும்னு’ சொன்ன.. சாமியார் நித்தியானந்தா கதவைத் திறந்து வைத்துக் கொண்டே குஜாலாக இருந்து விட்டார் போல 😉 சாமியாரின் குஜால் வேலைகளில் வெறுப்புற்ற யாரோ ஒரு பெண் பக்தர் சாமியார் நித்தியானந்தாவை ”க்ளோசா” வாட்ச் செய்து, படமாக்கி இருக்கிறார். செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கிறார்.

நன்றி தினகரன் நாளிதழ்
நன்றி தினகரன் நாளிதழ்

இதனை எப்படி வெளிக்கொண்டு வருவது.. என எல்லா நிறுவனங்களும் யோசித்துக்கொண்டிருந்த  நேரத்தில் முதலில் இறங்கி காரியத்தில் வெற்றி பெற்று விட்டது சன் டிவியின் நியூஸ் சானல்!

எது எப்படியோ.. பிரேமானந்தா, திரிவேதி, ஜெயேந்திரன் என தொடரும் பட்டியலில்.. இப்போது நித்தியானந்தா. அடுத்து யாரோ.. நாமும் காத்திருப்போம்.!

இது குறித்த

ரவியின் வீடியோ பதிவு இங்கே!

வால்பையன் எழுதிய பதிவு மிகவும் பிடித்திருந்தது. அதன் சுட்டி இங்கே!

—————–

போன வாரம் ரன்(RANN) என்ற இந்தி படம் பார்த்தேன். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பு. செய்தி சானல்கள் பற்றிய கதை. அவை GRP மற்றும் TRP போன்றவற்றிற்காக என்னவெல்லாம் செய்கின்றன என்பதை சொல்லும் கதை. செய்தி ஊடகங்களில் அரசியல் பின்னனி பற்றியும் அதில் வெளிவரும் பிரேக்@ பிளாஷ் நியூஸுக்கு பின்னால் இருக்கும் செய்திபற்றியும் தைரியமாக பேசுகிறது படம். அமிதாப் தான் பிரதான கேரட்டர். மனிதர் என்னமாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். செய்தி சானல்களில் செய்திகளை நிர்ணையிப்பவை விளம்பரங்கள் தான் என்ற உண்மையை சொல்லி இருப்பதாலேயே இப்படம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

சாதாரண மக்கள் செய்திகளை வெளிக்கொண்டு வரும் ஊடகங்களில் பணி ஏதோ சமூக சேவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சானல்கள் டாப் ஒன்னாக வர என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கிறது என்பதையும் இப்படம் கோடிட்டு காட்டுகிறது. மேலும் விளம்பரங்களே.. செய்திகளின் தன்மையையும் செய்தி நிகழ்ச்சிகளின் தலைப்பையும் தீர்மானிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.  என்னதான் எடிட்டர், சப்-எடிட்டர்.. ரிப்போர்ட்டர் என ஊடகவியலாளர்கள் இருந்தாலும், ஊடகவியல் படித்திருந்தாலும் செய்திகளை தீர்மானிப்பது அவர்கள் அல்ல.. எம்.பி.ஏ படித்த மார்கெட்டிங் மனிதர்களே! முதலாளிகளுக்கு வருமானம் தரும் இன்னொரு வேலை தான் செய்தி சானல்கள்.

படம் பற்றிய ஆங்கில விமர்சம் இங்கே!

படத்தின் டிரைலர்.. இங்கே!! இதில் பின்னால் பாடப்படும் பாடலை கவனமாக கேளுங்கள்.. 🙂

——————–

கடைகளில் கிரெடிட்கார்டு பயன்படுத்துபவரா.. நீங்கள்! கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளிநாடுகளைப் போல இங்கேயும் கிரெடிட் கார்டு திருடர்கள் அதிகரித்து விட்டனர். ஸ்வைப் செய்ய கொடுக்கும் போது உங்கள் கண் எதிரிலேயே கார்டை பயன்படுத்துமாறு கவனித்துக்கொள்ளுங்கள்.. உங்கள் டேட்டா திருடப்பட்டு வேறு எங்கோ உங்களில் கார்டு பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இது பற்றிய வீடியோ செய்தி ஒன்றை விரைவில் வலையேற்றுகிறேன்.

—————


Comments

9 responses to “விடுபட்டவை 03-03-2010”

  1. கிரெடிட் கார்ட் – பயனுள்ள தகவல்
    ரான் படம் – டிவிடி வாங்கியாச்சு. பார்க்கனும்.
    சாமியார் – சுவாமி நித்யானந்தரை சன் டிவியில காட்டினதுக்கு பின்னாடி அரசியல் ஏதும் இருக்கா?

  2. தல!

    சூப்பர் தல!

    இவண்,
    பா.க.ச – கோவை மாவட்ட செயலாளர்!

  3. குசும்பன் Avatar
    குசும்பன்

    அண்ணே நீ ஒரு பொழைக்க தெரியாத ஆளுன்னே, சீடி கைக்கு வந்ததும், ஒரு காப்பி எடுத்து மார்க்கெட்டி விட்டுருந்தீங்கன்னா இன்னேரம் கோடிஸ்வரன் ஆயிருக்கலாம். போன்னே:(

    அடுத்த முறை ஏதும் சீடி வந்தா முன்னாடியே சொல்லுன்னே:)))

    ஆவலுடன் வெயிட்டிங்:)

  4. ரொம்ப நன்றி தல!

  5. ’கதவை திற காற்று வரட்டும்னு’ சொன்ன.. சாமியார் நித்தியானந்தா கதவைத் திறந்து வைத்துக் கொண்டே குஜாலாக இருந்து விட்டார் போல

    ரசித்தேன்.

  6. உடன்பிறப்பு Avatar
    உடன்பிறப்பு

    ’கதவை திற காற்று வரட்டும்னு’ சொன்ன.. சாமியார் நித்தியானந்தா கதவைத் திறந்து வைத்துக் கொண்டே குஜாலாக இருந்து விட்டார் போல//

    🙂

  7. சென்ஷி.. நான் ஏதாவது சொல்லப்போய்… என்னைத்தேடி ஆட்டோ வருவதற்கா.. ஆளைவுடு சாமி!


    சிபி.. உனக்கு பயந்தே வேற பெயரில் பதிவு தொடங்கனும் போல இருக்கேப்பா! 🙁

    குசும்பா… கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


    வாங்க வாலு.. உண்மையில் உங்கள் எழுத்து நடை தேறி இருக்கிறது. கொஞ்சம் கவனித்து எழுதினால்.. நீங்களும் ‘writer’ வாலுபையன் ஆகிடலாம். 🙂


    சுரேஷ்கண்ணன், உடன்பிறப்பு வருகைக்கு நன்றி நண்பர்களே!

  8. நாமக்கல் சிபி Avatar
    நாமக்கல் சிபி

    /சிபி.. உனக்கு பயந்தே வேற பெயரில் பதிவு தொடங்கனும் போல இருக்கேப்பா! :(//

    அப்பவும் வேற பெயரில் ஐடி கிரியேட் பண்ணி வேற பேர்ல சங்கம் ஆரம்பிப்பம்ல!

    உம்ம எழுத்து நடை எங்களுக்குத் தெரியாதாக்கும்!

    “வாங்க தல”, “சூப்பர் சூப்பர்”, “ங்கொய்யால” இந்த மாதிரி பா.க.ச டிரேட் மார்க் எங்கியாச்சும் தானா வந்துடும்.

  9. //“வாங்க தல”, “சூப்பர் சூப்பர்”, “ங்கொய்யால” இந்த மாதிரி பா.க.ச டிரேட் மார்க் எங்கியாச்சும் தானா வந்துடும்.//

    இது மட்டும் தானா..

    ”அப்புறம் மாப்ள”, ”எலேய்”, “இருடா.. நான் சொல்றதக் கேளுடா”

    இன்னும் யோசிச்சா ஒரு களஞ்சியமேக் கிடைக்குமே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *