Portable software’s அல்லது பெயரத்தகு மென்பொருட்கள்

நீண்ட நாட்களாகவே மென்பொருட்கள் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. உண்மையில் எனக்கு இவை பற்றி அதிகம் அறியாத போதும், பல நண்பர்கள் வழி சில செய்திகளை அறிந்திருந்தேன். இங்கே நான் சொல்லக்கூடிய மென்பொருட்கள் சிலவற்றை நான் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். இவற்றினால் நம் கணிணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அனுபவித்து இவற்றை உங்களுக்கும் அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன். எதற்கும் நீங்களும் கூட ஒரு முறை சோதித்த பின் பயன்படுத்துவது நல்லது.

பெயரத்தகு(Portable) மென்பொருட்களுக்கு என்றே ஒரு தளம் இயங்கி வருகிறது. திறவூற்று மென்பொருட்களை இவர்கள் பெயரத்தகு மென்பொருட்களாக கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வகை மென்பொருட்களை நாம் கணிணியில் உள்ளிறக்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் தேவையற்ற தொல்லைகளில்லை.

ஃப்யர்ஃபக்ஸ் தொடங்கி க்ரோம் வரையிலான இணைய உலாவிகள் கூட பெயரத்தகு மென்பொருட்களாக கிடைக்கின்றன என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.

ZIP

இன்று இணையவழி நமது பரிவர்த்தனைகளில் பல்வேறு கோப்புகளை அனுப்பும் போது அதன் கொள்ளவை சுருக்குவதற்காக அக்கோப்புகளை ஜிப் வடிவில் அனுப்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

அப்படி அனுப்பப்படும் ஜிப் கோப்புகள் அனேகரால் விண்ஜிப் என்ற மென்பொருள்கொண்டே திறக்கப்படுகிறது. இது ஒரு பணம்கொடுத்து வாங்கவேண்டிய மென்பொருளாகும். சோதனை வடிவம் இலவசமாக கிடைத்தாலும், பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் பணம் செலுத்தவேண்டியதை நினைவுபடுத்தியபடியே இருக்கும். சில நேரங்களில் அதிக நேரங்களையும் எடுத்துக்கொள்வதுண்டு. இதற்கு மாற்றாக நான் இந்த 7ஜிப் என்ற திறவூற்றுமென்பொருளை சிபாரிசி செய்கிறேன். ZIP, RAR, CAB, ISO, ARJ, LZH, CHM, Z, CPIO, RPM, என்று பல்வேறு வடிவங்களில் சுருக்கிய கோப்புகளையும் திறக்கவல்லது.

இதன் பெயரத்தகு வடிவம் இங்கே: http://portableapps.com/apps/utilities/7-zip_portable

CD & DVD Burner

சிடி மற்றும் டிவிடி-க்களை எழுதுவதற்கு பயன்படும் இம்மென்பொருள் இலகுவானது. மற்றும் இலவசமானதும் கூட.

இதன் பெயரத்தகு வடிவம் இங்கே:-  http://portableapps.com/apps/utilities/infrarecorder_portable

PDF Split

பிடிஎப் கோப்புகளை பிரிப்பது, சுழற்றுவது போன்ற தேவைகளை இந்த மென்பொருள் பூர்த்தி செய்கிறது.

இதன் பெயரத்தகு வடிவம் இங்கே :-  http://portableapps.com/apps/office/pdftk_builder_portable

VLC Media Player

கைபேசியில் எடுக்கப்படும் வீடியோக்கள் தொடங்கி பல வீடியோ கோப்புகளை பார்க்கக்கூடிய ஒரு இயங்கி தான் விஎல்சி ப்ளேயர்.

இதன் பெயரத்தகு வடிவம்:- http://portableapps.com/apps/music_video/vlc_portable

Audacity

ஆடியோ பைல்களை வெட்ட ஒட்ட, பதிவு செய்ய என பயன்படும் இதும் ஒரு திறவூற்று மென்பொருள் தான்.

இதன் பெயரத்தகு வடிவம்:- http://portableapps.com/apps/music_video/audacity_portable

இணைய உலாவிகள்

பயர்பாக்ஸ் :- http://portableapps.com/apps/internet/firefox_portable

கூகிள் க்ரோம் :- http://portableapps.com/apps/internet/google_chrome_portable

ஒபேரா:- http://portableapps.com/apps/internet/opera_portable

புகைப்படம்

IrfanView

கணினியில் இருக்கும் புகைப்படங்களை பார்ப்பதற்கு இது மிகவும் உபயோகமான மென்பொருள். புகைப்படத்தின் செய்திகளை அழிக்கவும் இது பயன்படுகிறது.

இதன் பெயரத்தகு வடிவம்:- http://portableapps.com/apps/graphics_pictures/irfanview_portable

GIMP

ஜிம்ப்-  மென்பொருள் போட்டோஷாப் செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் செய்யவல்லது. அதுபோல இது பணம் கொடுத்துவாங்கவேண்டிய அவசியமில்லாதது. ஆம் இதுவும் திரவூற்று மென்பொருள் தான். தொடக்கத்தில் இதை பயன்படுத்துவது, சிரமமாகத் தோன்றினாலும்.. பழகிய பின் இது போல எளிமையானதை நீங்கள் காணமுடியாது. (இதன் பயன்பாடு பற்றி எளிமையாக யாராவது புத்தகம் எழுதினால் நல்லா விற்பனையாகும்)

இதன் பெயரத்தகு வடிவம்: http://portableapps.com/apps/graphics_pictures/gimp_portable

தமிழ் எழுதி

இன்று எத்தனையோ எழுதிகள் இணையத்தில் கிடைத்தாலும் என்.எச்.எம் ரைட்டர் மட்டும் தான் பெயரத்தகு வடிவத்தில் கிடைக்கக்கூடியது என்று நம்புகிறேன். இதுவும் கூட என் தேவைகளுக்காக.. நண்பர் நாகராஜன் சிறப்பாக உருவாக்கிக்கொடுத்தது. அதுவும் உங்கள் பயனபாட்டிற்காக.. இங்கே:-

NHM WriterPortable கிளிக்-கவும்

என்.எச்.எம் ரைட்டர் தவிர ஏனைய பெயரத்தகு மென்பொருட்கள் எல்லாமே ஒரே இடத்திலிருந்து எடுக்கப்பட்டது. நான் பயன்படுத்தும் மென்பொருட்களை மட்டும்  இங்கே வரிசைப்படுத்தி இருக்கிறேன். யுடொரட், ஸ்கைப், மற்றும் பல விளையாட்டுப் பொருட்கள் என நிறைய பெயரத்தகு மென்பொருட்கள் அங்கே கிடைக்கும். அத்தளத்தின் சுட்டி இதோ:  http://portableapps.com/apps