கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் தில்லு முல்லு, முல்லு தில்லு என்று ஏகப்பட்டது நடந்திருப்பதாகக்கூறி, ஸ்டார் ஹெல்த் இன்சூயரன்ஸுக்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா. பலரும் எதிர்ப்பு காட்டிய நிலையில், கொஞ்ச நாளுக்கு பிறகு அத்திட்டம் எம்.ஜி.ஆர் பெயரில் தொடரும் என்று அறிவிப்பு வெளியானது.

சமீபத்தில் புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டது. நம் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் நான்கும் களத்தில் குதித்தன. கடந்த முறை தனியாரிடமிருந்து கிடைத்த, அனுபவத்தில் இம்முறை எப்படியும் பொதுத்துறை நிறுவங்களில் ஒன்றிற்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது. ஆனால்.. ஓப்பன் டெண்டரில் பங்கொள்ளும்படி ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸையும் அதிமுக ஆட்சியினர் அழைத்திருந்தார்கள். (ஏன் அழைச்சாங்க, எதற்காக அழைச்சாங்கன்னு எல்லாம் கேக்கப்பிடாது) இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றாலும், எப்படியும் 5ஆயிரம் கோடிக்கும் அதிகமான வியாபாரம் என்பதால் பிடித்து விடலாம் என்று நம்பின பொதுத்துறை நிறுவனங்கள்.

ஆனால் கடைசியில் ஸ்டார் ஹெல்த் இன்ஸூரன்ஸ் (ஆட்சிக்கு வந்ததும் உரிமம் ரத்து செய்யப்பட்ட அதே நிறுவனம்) ஒப்பந்தத்தை கைப்பற்றி இருக்கிறது. பொதுத்துறை நிறுவனக்கள் கொடுத்த, கொட்டேசனை விட இவர்கள் குறைவாக விலை நிர்ணயம் செய்திருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதெப்படி.. கடந்த ஆட்சியில் தில்லு முல்லு, முல்லு தில்லு எல்லாம் செய்த அதே நிறுவனத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது எனக்கு ஏற்படும் ஆச்சரியம். # என்னமோ போங்கடே!

————–

’…அணுகுண்டினால் ஏற்படும் கட்டுப்படுத்தப்படாத அணு கதிர் வீச்சு செயின் ரியாக்ஸனுக்கும், அணுஉலையினால் கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் பாதுகாக்கப்பட்ட அணுஉலையில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டி நிகழும் கதிர்வீச்சு நிகழ்வுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. 1945ல் ஜப்பான் ஹிரோஸிமா, நாகசாகியில் அமெரிக்கா போட்ட அணுகுண்டினால் ஏற்பட்ட அழிவிற்கு பின்பு நடைபெற்ற 60 ஆண்டுகால தொடர் ஆராய்ச்சியில் Atomic Bombing Casualty Commission (ABCC) மற்றும் Radiation Effects Research Foundation (RERF) என்ற அமைப்புகள் அணுகுண்டினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் கண்டரியப்பட்ட உண்மை என்ன வென்றால், கதிர்வீச்சு பாதிப்பு அந்த கதிர்வீச்சை அணுகுண்டு வெடிப்பினால் நேரடியாக ஏற்று பாதிக்கப்பட்டவர்களை மட்டும் தான் பாதித்து இருக்கிறதே தவிர, ஜெனிட்டிக் எபெக்ட் என்று சொல்லப்படுகிற மரபணுவை பாதித்து அது அடுத்த தலைமுறையையும் பாதிக்கவில்லை என்ற உண்மையை கண்டறிந்துள்ளார்கள்… இப்படியா கருத்தை முன் மொழிந்திருப்பது -மேதகு டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் தான். கூடங்குளம் சென்று வந்த பின் எழுதிய 39 பக்க அறிக்கையில் 25ம் பக்கம் மேற்கூறியவற்றை சொல்லி இருக்கிறார். (தடித்து காட்டப்படிருப்பது என் வேலை) தலைமுறை தலைமுறைக்கும் அணு வீச்சின் பாதிப்பு இருக்கும்ன்னு இது நாள் வரை எல்லா பயளுகளும் பொய் சொல்லி, நம்மளை ஏமாதிப்புட்டாய்ங்களேன்னு.. எனக்கு ஆற்று ஆமை, கடல் ஆமை எல்லாமுமாய் வருது.

—-

எவிடன்ஸ் என்ற அமைப்பின் கதிர் எழுதிய ஓர் ஆய்வறிக்கையில் இப்படி சொல்கிறார்,

“… தமிழகத்தில் கடந்த 2008 ஜனவரி முதல் 2011 செப்டம்பர் வரை 42 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 29 பேர் கொள்ளப்பட்டுள்ளனர்….., …. துப்பாக்கிச்சூடு பெரும்பாலும் தலித் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் அதிகளவு நடத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. அதுமட்டுமல்ல, கலவரம் குறித்த துப்பாக்கிச் சூட்டில் 90 விழுக்காடு தலித்துகள் மீது நடத்தப்பட்டிருப்பதும் கண்டறிய முடிகிறது…” (அணையா வெண்மணி இதழ் அக்-டிச2011- பக்கம்-21.)

என்ன சொல்லுறதுன்னு தெரியல. :((


இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற, தயாரிக்கபடவுள்ள அணுமின்சாரம் நம் நாட்டின் தேவைக்கே போதுமானதாக இல்லை என்று தன் 39பக்க அறிக்கையில் கலாம் சொல்கிறார். ஆனால் இந்திய அரசோ.. இங்கே இருந்து இலங்கைக்கு மின்சாரம் அனுப்ப.. முடிவு செய்திருக்கிறது என்ற செய்தி உண்மையில் பெரும் அதிர்ச்சியைக்கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு மக்கள்சட்டம் வழக்குறைஞர் சுந்தர ராஜன் பதிவைப் பாருங்கள்..

http://lawyersundar.blogspot.com/2011/11/blog-post.html

———–

08.11.11 இன்று இரவு 10.37 -கடைசியாக கிடைத்த தகவலின் படி:

ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வந்த மக்கள் நலப்பணியாள்ர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை வீட்டுக்கு அனுப்பிவிட தமிழக அரசு முடிவு பண்ணியதாக தகவல் வருகிறது. ஜெயலலிதா அரசு மீண்டும் ஆடத்தொடங்கி விட்டது. அறிவிப்பு ஓர் இரவில் வெளியாகலாம். காலையில் கண் விழித்துப் பார்த்தால் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். எத்தனை சாவுகள் விழப்போகிறதோ!
:((