பேச்சிலர்களின் சுதந்திரம் பறிபடப் போகிறது. ஆம்! பேச்சிலர் பேரடைஸ் என்று அழைக்கப்பட தகுதி வாய்ந்த திருவல்லிக்கேணி மேன்சன்களில் CCTV பொருத்தப்போகிறார்கள். இரவு 12 மணிக்கு மேல் இந்த ஏரியாக்களில் வாகனங்களில் சுற்ற கெடுபிடி அதிகரிக்கப்போகிறது. இனி இங்கு தங்கி இருப்பவர்களை இருப்பவர்களை காவல்துறை தீவிரமாக கண்காணிக்கப்போகிறதாம்… இப்பகுதியில் புதிய சட்டமன்ற கட்டிடம் வர இருப்பதால் இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாவம்.. தி.கேணி பேச்சிலர்கள்.

ஒரு பழைய பதிவு..

http://chennapattinam.blogspot.com/2006/10/blog-post_06.html

—————–

முன்பு ஒரு சமயம் டொரெண்ட் பற்றிய எனது சந்தேகங்களை எழுதி இருந்தேன். அதன் சூட்டோடு சூட்டாக பதிவர் சுடுதண்ணீ டொரெண்ட் குறித்து மூன்று தொடர் பதிவுகளை எழுதி அசத்தி இருந்தார். அவர் எழுதிய பதிவுகள் இதோ..

பாகம்1http://suduthanni.blogspot.com/2009/11/1.html ,
பாகம்2,
பாகம்3.
இத்தனைக்கும் பிறகு என்னால் சுயமாக ஒரு டொரெண்ட் ஃபைலை உருவாக்க முடியவில்லை என்பது தான் சோகம். இன்னும் விளக்கமாக யாரேனும் டொரெண்ட் ஃபைல் உருவாக்கும் விதம் குறித்து எளிமையாக எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.

இருப்பதிலேயே மிகவும் மோசமான வாழ்க்கை எங்கள் பத்திரிக்கையாளர்களின் வாழ்க்கை தான். மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி என்பது போல போகின்ற இடமெல்லாம் அடிவாங்குவது எங்கள் ஆட்கள் தான். அதே சமயம் உள்ளே உட்கார்ந்துகொண்டிருக்கும் (மேசை) பத்திரிக்கையாளர்களுக்கு தெருவில் அலையும் எங்களில் பாடு தெரியாததல்ல.. அவர்கள் படி அளக்கின்ற தேவதைகளின் கைக்கூலிகளாக மாறிப்போய் இருப்பதால் ஏதும் சொல்ல முடியாமல் இருக்கின்றனர். ஊதிய உயர்வு, சம்பள பாக்கி, போனஸ் என்று எல்லாதரப்பு தொழிலாளர்களின் தேவைகளை எழுதும் எங்களால்.. ஒரு போதும் எங்கள் சம்பளத்துக்காக குரல் எழுப்ப முடியாது. ஒரு அலுவலகத்திலிருந்து ஒன்னொரு அலுவலகம் மாறும் போது, பழைய அலுவலகத்தில் பிடிக்கப்பட்ட பி.எப் பணத்தை திரும்பப்பெற பல மாதங்கள் நடையாக நடக்கவேண்டியதிருக்கிறது. இப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல் தான் எங்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இதோ.. இன்று மதுரையில் எங்களவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.. ச்சே.. என்ன வேலை இது என்று சலிப்பு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. பத்திரிக்கை துறையில் வேலைக்கு வரும் அனேகர் விரும்பியே வருகின்றனர். ஆனால்.. அப்படியானவர்களுக்கே.. சிலகாலம் கழித்து.. மனச்சேர்வு ஏற்படுத்திவிடுகிறது என்றால்.. என்ன வாழ்க்கை இது! 🙁


Comments

2 responses to “விடுபட்டவை -17/பெப்ரவரி/2010”

  1. நான் ஆதவன் Avatar
    நான் ஆதவன்

    //பத்திரிக்கை துறையில் வேலைக்கு வரும் அனேகர் விரும்பியே வருகின்றனர். ஆனால்.. அப்படியானவர்களுக்கே.. சிலகாலம் கழித்து.. மனச்சேர்வு ஏற்படுத்திவிடுகிறது என்றால்.. என்ன வாழ்க்கை இது!//

    🙁

  2. பாலா,

    டோரண்ட் என்பது ஓர் அற்புதமான தொழில்நுட்பம் என்றாலும், அனேகமாக எல்லா டோரண்ட்டுமே சட்டதிற்கெதிராகவோ தார்மீகமாக/அநியாயமாக கோப்புக்களைப் பகிர்ந்துகொள்ளத்தான் பயன்படுத்தப்படுகிறது…. என்பதும் உங்களுக்குத் தெரியாததல்ல.

    லினக்ஸ் ISO போன்ற ஒருசிலவற்றை பகிர்ந்துகொள்ள இது ஏதுவாக இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக மற்றவையெல்லாம் சரியில்லை. நீங்களும் அவ்வாறே பயனுள்ளவற்றை பைரசியின் பக்கம் சாராமல் டோரண்ட்டைப் பயன்படுத்துவீர்கள் என்று தெரியும்… ஆனால் எனக்கான சுயநினைவூட்டலுக்காக இந்த மறுமொழி. உங்கள் கமெண்ட் பொட்டி காலியாக இருந்ததால் இட்டுவிட்டேன்… மன்னிக்க. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *