மானம் கெட்ட தமிழன்..

இவனுங்களை எதைக் கொண்டு அடிக்கலாம்?

மும்பையில் நடந்த தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என கிரிக்கெட் வாரியம் ஏகபோகமாக அறிவித்தது நினைவிருக்கலாம். அப்போது இம்முடிவுக்காய் உணர்ச்சி வசப்பட்டு ஆமாம் சொன்ன அத்துணை தமிழர்களின் கவனத்திற்கும்…

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி பிப்ரவரியில் இலங்கை செல்கிறது – இது மிகச் சமீபத்திய செய்தி.

இலங்கை பேரினவாதத்தால் கொல்லப்பட்டு அழிந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வராத மத்திய அரசுக்கும், பெரும்படை கொண்டு உள்நாட்டுக்குள்ளேயே மனிதர்களை கொன்று குவித்து வரும் இலங்கைக்கு பயணம் போகவிருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கே என் முதல் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.

விளையாட்டுத் தனமான செய்தி என இதனை விட்டுவிடாமல் ஒட்டுமொத்த தமிழர்களும் தமிழினத் தலைவர்களாய் சொல்லிக் கொள்பவர்களும் இந்தப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும் நம்புகிறேன்.

வெளிப்படையாக பேசுங்க… இந்த எதிர்ப்பு உங்கள் வாயிலாகவும் பரவட்டும்.

இவனுங்களை எதைக் கொண்டு அடிக்கலாம்?

This entry was posted in சமூகம்/ சலிப்பு, பதிவர் சதுரம் ;-)) and tagged , , , . Bookmark the permalink.

12 Responses to மானம் கெட்ட தமிழன்..

 1. /இலங்கை பேரினவாதத்தால் கொல்லப்பட்டு அழிந்தி கொண்டிருக்கும் தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வராத மத்திய அரசுக்கும், பெரும்படை கொண்டு உள்நாட்டுக்குள்ளேயே மனிதர்களை கொன்று குவித்து வரும் இலங்கைக்கு பயணம் போகவிருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கே என் முதல் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.//

  எனது எதிர்ப்புகளையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றேன் :-((

 2. நா ஜெயசங்கர் says:

  அட போங்க தல…. ராணுவ உதவிகளே போகும் போது இது ஒரு பெரிய மேட்டரா??

  இதுக்கெல்லாம் ஒரு பதிவா… உங்களால் சாரி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது! முடிந்தால் இந்த நிலையை நினைத்து நம் செருப்பை கொண்டு நாமே அடுத்துக்கொள்ளாம்…

 3. தமிழ் நாட்டு பிறந்து வளர்ந்த தமிழ் மீன்வர்கள் கொன்றதை பெட்டி செய்தியாய் கூட போடாதாவர்கள்… இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கா கவலைப்பட போகிறார்கள். ‘தமிழன்’ பற்றி சிந்திக்கும் போது நமது அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் ‘இந்தியன்’ இறந்துவிடுகிறான். அதான் இத்தை பிரச்சனை….

 4. நானும் எனது கண்டனங்களை இங்கு பதிகிறேன்.

 5. மயூ says:

  நன்றாகச் சொன்னீர்கள். மத்திய அரசு இனியாவது தமிழர்களை மதிக்கட்டும்.

 6. ஜெகதீசன் says:

  எனது எதிர்ப்புகளையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றேன் :-((

 7. Raveendran Chinnasamy says:

  I agree with you but seems to be over reation .

  I have seen advt for Tamil cinema screening in Columbo .

  what we are trying to do just oppose India Cricket team whereas MUralitharan is not even wearing black band while playing for srilanka .

  We can not do anything until LTTE leader come out and say what is his plan for future not just day -day statement.

 8. s. zacharias says:

  mathiya arasin intha bokku mikaum kandikkathakkathu, tamilarhaze
  ontu badukkngal nam inam azhihirathu

 9. sai ram says:

  நண்பா,
  நேற்று பேசியதை இன்று மறக்கடிக்கும் யுக்தியை வெகு சாமர்த்தியமாக அரசியல்வாதிகள் நடைமுறைபடுத்துகிறார்கள். சடசடவென எழும் உணர்வு போராட்டம் சட்டென எதோ சினிமா ஸ்டாருக்காக நடந்த படம் ஓபனிங் தின ஆர்ப்பரிப்பு போல காணாமல் போகும் போது மானம் கெட்ட இந்த சமூகத்தில் மானம் கெட்ட மனிதனாய் உலவி கொண்டிருப்பதை நினைத்து…

 10. Surya says:

  ஆம். கண்டனங்கள்..

 11. M.Thulasiraman says:

  I condemn the Politicians who play with the name Tamil. They only play for their political profit. If they have instinction of Tamil, they should have to resign totally from their posts and stand in one line to protest Tamil
  BUT THEY DO NOT DO.BZE THEY ARE POLITICIANS (BEGGERS)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.